மஹா சிவராத்திரி ------- 2

Saturday, January 30, 2010
அமாவாசை, பெளர்ணமி நாட்களில் பூமி-சந்திரன்- சூரியன் ஆகியவை ஒருவிதமான கிரக நிகழ்வுகளில் அமைகிறது. இதனால் மனிதன் எந்த விதமான சுயமுயற்சியிம் இன்றி உள்முகமாகிறான். இத்தகைய நாட்களில் மனிதன் தனது உடல் செயல் மூலம் வெளிமுகமாக திரும்ப முயற்சி செய்தால் அவனது உடலும், மனமும் சமநிலை தவறுகிறது.

மனிதன் சமநிலை தவறாதவண்ணம் அவனை உள்முகமாகவே வைத்திருக்க ஆன்மீக செயலில் ஈடுபடுத்த நமது முன்னோர்கள் ஏற்படுத்தியது தான் இந்த கொண்டாட்டங்கள். ஒவ்வொரு மாதமும் வரும் பெளர்ணமியை கவனியிங்கள், சித்திரா பெளர்ணமி - வைகாசி விசாகம் என அனைத்து பெளர்ணமியும் ஏதோ இரு விசேஷ தினமாக கூறி அன்று கோவிலுக்கு செல்லும் சூழலை அமைத்தார்கள். ஆனால் இன்று நடப்பதோ வேறு பெளர்ணமி நல்ல நாள் என திருமணம், தொழில் துவங்குதல் என வெளிமுகமான விஷயங்களை மக்கள் செய்கிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டியது.

அமாவாசை, பெளர்ணமியில் ஏற்படும் நிகழ்வுகள் போன்று பிற நாட்களிலும் சூரியன் சந்திரன் பூமியின் நிலை மனிதனை உள்முகமாக செயல்படுத்தும் நிலை ஏற்பட்டால் அன்றும் மனிதன் உள்முகமாக இருக்க முயல வேண்டும். மாதா மாதம் வரும் ஏகாதசி, திரயோதசி காலங்கள். வருடத்தில் வரும் கிரகண காலம் மற்றும் மஹாசிவராத்திரி தினங்கள் ஆகியவை மனிதனை உள்முகமாக்க தன்னிச்சையாக செயல்படும்.

ஆன்மாவை குறிக்கும் சூரியனும், மனதை குறிக்கும் சந்திரனும் இன்று மட்டும் தான் தங்களின் சுயராசிகளை நேரடியாக பார்ப்பார்கள். யோக சாஸ்திர ரீதியாக சூரியன் மற்றும் சந்திரன் இடா, பிங்கள நாடிகளை குறிப்பதால் நாடிகளின் சலனமும் அன்றைய தினம் ஏற்படும்.




சூரியனும் சந்திரனும் இன்று இரவு தங்களில் நிலையை படிப்படியாக மாற்றி சூரியனை சந்திரன் தழுவிய வண்ணம் இடமாற்றம் அடையும். சூரிய மண்டலத்தின் ஆன்மாவும் , மனதும் தங்களின் நிலையில் மாற்றம் அடைவதால் மனிதனின் ஆன்மாவும் - மனமும் மாற்றம் அடையும். அன்றைய தினம் உடலுக்கு (பூமிக்கு) வேலை கொடுக்காமல், உடலை இயற்கையாக விட்டு உள்நிலையை கவனித்தால் ஆன்மீக மேன்மை ஏற்படும்.

உணவு உண்ணாமல், உறங்காமல் இருப்பது உடல் செயலை தவிர்க்கவே மேற்கொள்ளப்பட்டது. இன்றைய காலகட்டத்தில் பலர் இரவில் சினிமாவுக்கு செல்லுவதும், கொண்டாட்டங்களில் ஈடுபடுவதும் செய்கிறார்கள். அது தவறான செய்கை என நீங்களே புரிந்து கொள்வீர்கள்.

சிவ எனும் சொல் அழகு அல்லது இயற்கை என்றும் பொருள்படும். அன்று இரவு உண்ணதமான இயற்கை நிலையை காண உடல் தயார் நிலையில் இருப்பதால் சிவ ராத்திரி என அழைக்கப்படுகிறது.

சூரியன் சந்திரன் பூமி என்பது தனி ஒரு மனிதனுக்கோ, மதத்திற்கு செயல்படுவதில்லை. அதுபோலவே மஹாசிவராத்தரி “இந்துக்கள்” பண்டிகை அல்ல.


ஆன்மாவை உணர இன்றைய நாளை பயன்படுத்தி ஆன்மீகனாகுங்கள்.
Read more ...

மஹா சிவராத்திரி ------- 1

Saturday, January 30, 2010
மனித உடல் இயற்கையானது. மனிதனின் மனம் மற்றும் செயல்களும் இயற்கையை ஒட்டியே செயல்படுகிறது. அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் உள்ளது என கேள்வி பட்டிருப்பீர்கள். அது போல பிரபஞ்சத்தில் என்ன நிகவுகள் இருந்தாலும் அந்த நிகழ்வு நமக்குள்ளும் நடக்கும்.

பிரபஞ்சத்தின் ஒரு புள்ளியில் நடக்கும் நிகழ்வு தனிமனிதனுக்கு உள்ளும் நடைபெறும். வேண்டுமானால் காலங்கள் வேறுபடலாம். ஆனால் கண்டிப்பாக நடைபெறும்.

மனிதன் பூமியில் வாழ்வதால், பூமி - சந்திரன் - சூரியன் எனும் இந்த மூன்று பிரபஞ்ச பொருட்களும் மனித வாழ்வில் முக்கிய நிகழ்வுகள் ஏற்படுத்துகிறது. முப்பரிமாண நிலையில் பூமி-சந்திரன்-சூரியன் ஆகிய கிரகங்கள் மனிதனுக்கு முறையே உடல், மனம் மற்றும் ஆன்மா எனும் நிலையில் செயல்படுகிறது.

பூமியில் இருக்கும் நெருப்பு- காற்று - நீர் - மண் மூலம் நமது உடல் வளர்ச்சி அடைகிறது. உடலுக்கு பூமியே ஆதாரம். சூரியன் ஆன்மாவிற்கு ஆதாரம் என கூறலாம். காரணம் அது சுயமாக பிராகாசிக்கிறது. சந்திரன் தனது நிலையற்ற தன்மையால் மனதை குறிக்கிறார்.

பிரபஞ்ச நிலைக்கும் மனித உடலுக்கும் இருக்கும் தொடர்பை அறிந்த ரிஷிகள், கிரகநிலையில் ஏற்படும் மாற்றத்திற்கு ஏற்ப மனிதனை செயல்படுமாறு வழிநடத்தினார்கள். இந்த வழிமுறையை ஜோதிடம் என்கிறோம்.

மனிதனின் செயல்கள் இரு நிலையில் செயல்படுகிறது. ஒன்று உள் முகமாக, மற்றது வெளிமுகமாக. தியானம், யோக பயிற்சி மூலம் உள்முகமாகவும், உணர்வு-செயல் மூலம் வெளிமுகமாகவும் இருக்கலாம். மனிதர்கள் அதிக சதவிகிதம் வெளிமுகமாகவே இருப்பார்கள்.

மனிதன் உடலின் கட்டுப்பாட்டில் இருந்தால் வெளிமுகமாகவும், ஆன்மாவின் கட்டுப்பாட்டில் இருந்தால் உள்முகமாகவும் செயல்படுகிறான். சூரிய மண்டலத்தில் ஏற்படும் சில கிரக நிகழ்வுகள் மனிதனை தன்னிச்சையாக உள்முகமாக்குகின்றன.
Read more ...

யோகா செய்யப் போகிறேன்

Saturday, January 30, 2010
“யோகா செய்யப் போகிறேன்”, “யோக பயிற்சி கற்றுத் தருகிறார்கள்” என நாம் கூறும் ”யோகா” எனும் வாசகம் கூறும் பொருளும் , நாம் மனதில் வைத்திருக்கும் அர்த்தமும் வேறு வேறு.

யோகம் என்றால் ஒன்றிணைதல் என அர்த்தம். யோக சாஸ்திரம் மதம், கலாச்சாரம் கடந்த ஒரு மெய்ஞானம். ஒன்றிணைதல் என்றால் இரு விஷயங்கள் ஒன்று சேருதல் என கொண்டால் பரமாத்மாவுடன், ஜீவாத்மாவா என ஆத்திகர் நினைக்கலாம். மனமும் உடலும் என நாத்திகர் நினைக்கலாம். யோக சாஸ்திரம் முழுவதும் கடவுள் என்ற கோட்பாடு இல்லை. நீ, உனது, உன் உள்நிலை என மூன்று தன்மையை பற்றியே யோகசாஸ்திரம் கூறுகிறது.

பதஞ்சலி யோக சூத்திரம் எனும் யோக நூல் கடவுள் கொள்கையை கொண்டிருந்தாலும், இன்ன கடவுள் இன்ன உருவ நிலை என சொல்லாமல். இறைவன் எனும் சொல்லை மட்டுமே பயன்படுத்துகிறது.

யாமம்,நியமம்,ஆசனம், ப்ராணாயாமம், ப்ரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி. என யோக சாஸ்திரத்தில் எட்டு நிலைகள் இருக்கிறது. இதில் எட்டாவது நிலையை நீ அடைந்தால் இறைவனை காணலாம் என்றே பதஞ்சலி கூறுகிறார்.

உடலை வளைத்து செய்யும் ஆசனா எனும் அஷ்டாங்க யோகத்தின் உள்பிரிவு யோகா என தற்காலத்தில் தவறாக கூறப்படுகிறது. சில யோக பயிற்சி பள்ளிகள் வெறும் ப்ராணாயமத்தையோ, ஆசனத்தையோ சொல்லி கொடுத்துவிட்டு அதை யோகா என பிரச்சாரம் செய்கிறார்கள்.

யோகா செய்தேன் என்றால் ஆசனம் செய்தேன் என்றோ, ப்ராணாயமம் செய்தேன் என்றோ அர்த்தம் கொள்ள வேண்டி இருக்கிறது.
Read more ...

யோகம் பலவகை --- 3

Saturday, January 30, 2010
உடல் என்பது உயிரை தாங்கும் பாத்திரம். உடல் அழிந்தால் உயிர் அதில் தங்கமுடியாது. மேலும் ஞானம் அடைய எந்த ஒரு யோக முறையையும் பயன்படுத்த முடியுது. இதில் திருமூலர் 'உடம்பை வளர்க்கும் உபயம் அறிந்தே' என ஹதயோகத்தை குறிக்கிறார். ஹதயோகத்தில் உடம்பு வலு பெறும் அதனால் உயிர் அழியாது ஞானத்தை நோக்கி செல்லலாம் என கூறிகிறார். இதைவிட எளிமையாக ஹதயோக சிறப்பை கூறமுடியுமா?

உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன்.
உடம்புளே உத்தமன் கோயில்கொண்டான் என்று
உடம்பினை யானிருந்து தோம்புகின் றேனே.

தனது நிலையை தெள்ளத்தெளிவாக்கி ஹதயோகத்தின் அவசியமும் உடலை நன்மையாக காக்க வேண்டியதின் அவசியத்தையும் கூறுகிறார். உடலின் உள்ளே இறைவன் வசிக்கிறார். அதனால் உடலை பேணிக்காப்பது அவசியம். உடல் இறைவன் வசிக்கும் கோவில் என்பதால் உடலை கவனிக்க தவறுவது கோவிலை சரியாக பராமரிப்பு இல்லாமல் வைத்திருக்கும் பாவத்திற்கு சமமானது. திருமூலர் இதனால் உடலை நான் இங்கே மேம்படுத்துகிறேன் என்கிறார்.

இதற்கு எல்லாம் முத்தாய்ப்பாக ,

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிவார்க்கு சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்துங் காளா மணிவிளக்கே.

உள்ளமும் உடலும் ஆலயத்திற்கு ஒப்பாகும் நமது உணர்வு உறுப்புக்கள் அதில் இருக்கும் விளக்காகவும், ஆன்மா சிவலிங்கத்திற்கு சமமாக சொல்லி ஹதயோகத்திற்கான அவசியத்தை வலியுறுத்துகிறார்.

ஹதயோகம் பல உட்பிரிவை கொண்டது. ஆசனம், பிராணாயாமம், முத்திரை, பந்தங்கள் மற்றும் கிரியா என அவற்றை வகைப்படுத்தலாம்.
Read more ...

யோகம் பலவகை --- 2

Saturday, January 30, 2010
ஹத யோகம் என்ற பெயர் காரணத்திற்கான விளக்கம் பார்ப்போம். ஹட யோகம் என்ற பெயரே சரியானது. ஹட என்றால் இருபுலம் என மொழிபெயர்க்கலாம். காந்தம் எப்படி இரு புலத்துடன் செயல்படுகிறதோ அது போக நமது உடல்,மனம் ஆகியவை இரு புலத்திற்கு இடையே ஊசலாடிய படி இருக்கும். அதை ஒருநிலைப்படுத்தி இரு துருவங்களுக்கு நடுவில் இருக்க வைப்பது ஹட யோகம் ஆகும்.

அர்த்தனாரிஸ்வர தத்துவம் போல நம் உடல் சூரியனுக்கு உண்டான அக்னி தன்மை வலது பக்கமும் சந்திரனுக்கு உண்டான குளிர்ச்சி இடது பக்கமும் கொண்ட அமைப்பால் ஆனது. இருதன்மைகளில் ஏதாவது ஒன்று மிகும் சமயம் நமது வாழ்க்கை தன்மை சமநிலை தவறுகிறது. சூரிய-சந்திர மையத்தில் இருக்க செய்வது ஹடயோகம். ஹ என்றால் வெப்பம் - டா என்றால் குளிர்ச்சி என்றும் வழங்குவார்கள்.


உடலை பாதுகாத்து ஆசனங்கள் செய்வது நமது ஆன்மீக வாழ்க்கையில் நன்மையை கொடுக்கமா என கேட்கலாம். திருமூலர் கூறும் அருமையான கருத்துக்களை கேளுங்கள்.

உடம்பார் அழியில் உயிரார் அழிவார்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.

எனைய யோக முறை இருந்தாலும் அதை பின்பற்றும் மனிதனுக்கு அவற்றை சிறப்பாக செய்ய உடலும் உயிரும் அவசியம்.
Read more ...

யோகம் பலவகை --- 1

Saturday, January 30, 2010
யோகம் என்றால் ஒன்றிணைதல் என பொருள். பிரிந்த ஒன்று மீண்டும் அத்துடன் இணைவது யோகம் என்கிறோம். யோக் எனும் சமஸ்கிருத வார்த்தையின் தமிழ் வடிவம் தான் யோகம். பரமாத்ம சொரூபத்தில் இருந்து பிரிந்து ஜீவாத்மாவாக இப்பிறவியை எடுத்த நாம் மீண்டும் பரமாத்மாவுடன் ஐக்கியமாவதை யோகம் என கூறலாம்.

யோகம் என்றவுடன் ஒரே ஒரு யோக முறைதான் இருப்பதாக நினைக்கவேண்டாம். யோகம் பலவகையாக இருக்கிறது. யோக முறைகளில் முக்கியமானது ஜப யோகம், பக்தி யோகம், ஞான யோகம், ஹத யோகம், கர்ம யோகம். பகவான் ஸ்ரீகிரிஷ்ணர் பகவத் கீதையில் ஞான யோகம், கர்ம யோகம் மற்றும் பக்தியோகத்தை பற்றி விளக்குகிறார்.

நமது ஆன்மீக நூல்களில் ஒரே நேரத்தில் மூன்று யோகமுறையை கையாண்ட தன்மை பகவத் கீதை பெறுகிறது. பகவத் கீதையில் எத்தனையோ சிறப்புகள் இருந்தாலும் அதில் முக்கியமானது யோக விளக்கம் எனலாம்.

தன்னில் மனிதன் ஐக்கியமாகிவிட இறைவன் உபதேசித்த வழி யோக மார்க்கம். இறைவனை அடைய எத்தனையோ வழிகள் உண்டு. அதில் யோகமும் ஒருவழி என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஞான யோகம் : தன்னை முழுமையாக அறிதல் ஞான யோகம், தான் யார் என்றும் தனது இருப்பி நிலையை உணர்வது ஞான யோகம் என்று கூறுகிறோம். ஞான யோக வழிவந்தவர்கள் ஆதி சங்கரர் மற்றும் பகவான் ஸ்ரீ ரமணர்.

பக்தி யோகம் : இறைவனை பக்தி செய்வதை காட்டிலும் வேறு செயல் இல்லாமல் பக்தியாலேயே இரண்டர கலப்பது பக்தி யோகம். பக்த மீரா, புரந்தர தாசர்,திரு ஞானசம்பந்தர் போன்றவர்கள் பக்தி யோகம் செய்தவர்கள்.

கர்ம யோகம் : கடவுளுக்கு சேவை செய்வதையே வாழ்க்கையாக கொண்டு சேவையிலேயே தன்னை ஐக்கியப்படுத்தி கொள்ளுதல். அப்பர், சிவனடியாருக்கு சேவை செய்த நாயன்மார்கள்.

ஜபயோகம்: கடவுளைக்காட்டிலும் கடவுளின் நாமத்தில் தம்மை ஐக்கியமாக்கிக்குள்ளுதல் ஜபயோகம். இடைவிடாது மந்திரத்தை ஜபம் செய்வதால் இறைவனுடன் இரண்டறகலத்தலை ஜெபயோகம் குறிக்கிறது. நாரதர், வால்மீகி என பலர் நாம ஜபத்தால் ஜபயோகத்தை செய்தவர்கள்.

ஹதயோகம் : பிற யோக முறைகள் மனம், விழிப்புணர்வு நிலை மற்றும் குணம் சார்ந்து இருக்கிறது. ஹதயோகம் உடல் சார்ந்தது எனலாம்.உடல் இறைவனின் இருப்பிடமாக எண்ணி , உடலை தூய்மையாகவும் சக்தியுடன்னும் பராமரிப்பது ஹதயோகம். சீரடி சாய்பாபா மற்றும் ஏனைய யோகிகள்.

மேற்கண்ட யோக முறைகளில் எந்த யோகமுறை சிறந்தது என கேட்டால் அவரவர் வாழ்வியல் சூழலுக்கும், தன்மைக்கும் ஏற்ப யோகமுறையை பின்பற்றவேண்டும்.

யோகத்தில் முக்கியமான இந்த ஐந்து யோக முறைகளும் பஞ்சபூதத்தின் வடிவங்களாக இருக்கிறது. ஆகயத்தின் தன்மையை ஞான யோகமும், நீரின் தன்மையை கர்ம யோகமும், காற்றின் தன்மையை ஜபயோகமும், அக்னியின் தன்மையை பக்தியோகமும், மண்ணின் தன்மையை ஹத யோகம் கூறிப்பிடுகிறது.இவ்வாறு யோக முறைகள் பஞ்சபூதத்தின் தன்மையை கூறுவதால் ஏதாவது ஒரு பூதத்தின் தன்மை இல்லை என்றாலும் பிரபஞ்ச இயக்கம் செயல்படாது. அது போல அனைத்து யோக முறையும் இன்றியமையாதது.

பிற யோக முறைகளை விளக்க அனேக நூல்கள் மற்றும் மஹான்கள் இருக்கிறார்காள். ஆனால் ஹதயோகம் பற்றி விளக்க சரியான நூல்கள் இல்லை என கூறவேண்டும். உடல் நிலையை பராமரிப்பது. நோயின்றி இருப்பது என பல விஷயங்கள் நமக்கு தேவையான விழிப்புணர்வு இல்லை எனலாம். கர்ம வினை என்ற சித்தாந்தத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் நோய்வருவதற்கு முன்வினை கர்மம் காரணம் என்கிறார்கள். வினை எவ்வாறு இருந்தாலும் சிறப்பான நிலையில் ஹதயோகம் பயிற்சி செய்து வந்தால் உடல், மனம் மற்றும் ஆன்மாவில் பலம் ஏற்படும்.
Read more ...

ருத்ராக்ஷம்

Saturday, January 30, 2010
உலக நிகழ்வுகள் அனைத்தும் இரு தளங்களில் செயல்படுகிறது. இயற்கையனவை மற்றும் செயற்கையனவை என இரு பரிமாணங்களில் செயல்படும் நிகழ்வுகள் உலக இயக்கத்திற்கு மூலமாக அமைந்துள்ளது. வேதாந்தம் இதையே புருஷத்துவம் மற்றும் ப்ரகிருதி என விளைக்குகிறது. இருவகையன செயல் அனைத்து நிகழ்வுகளில் பிரதிபலிக்கிறது என்பது பலருக்கு தெரியாது. வேதாந்த உண்மையான இந்த இரு செயல்களை புரிந்துகொண்டோமேயானால் இயற்கையின் செயல்படுகளை புரிந்துகொள்ளமுடியும்.

Angry face

இயற்கையின் தன்மை சாஸ்வதமானது. இயற்கை என்பது உருவக்கப்பட்டது அல்ல இயற்கை என்னும் சொல் இருக்கிறது, இருந்தது மற்றும் எப்பொழுதும் இருக்கும் என்பதயே குறிக்கும். ப்ரகிருதி என்பது செயற்கை தன்மையை குறித்தாலும், இது தற்காலிகமானது மற்றும் இதன் உருவாக்கத்திற்கு மூலம் புருஷத்துவமே ஆகும்.



அறிவியலை எடுத்துக்கொண்டோமானால் சக்கரம் கண்டுபிடித்தது என்பதுதான் முதல் அறிவியல் கண்டுபிடிப்பு என கூறமுடியும் . சக்கரத்தின் செயல்கள், வடிவம் மற்றும் தன்மை இயற்கையில் உள்ள பொருளை சார்ந்து இருப்பதை அறிவோம்.செயற்கை என்பது இயற்கையின் பிரதிபிம்பம் என கூறலாம். ஆனால் இயற்கை தன்னிகரற்றது.

ஆயுர்வேதத்தில் இந்த உலகம் மூன்று முக்கியமான குணத்தால் இயங்கிவருகிறது என கூறுவார்கள். முக்குணத்தை (தோஷங்கள்) வாத, பித்த, கப குணம் சொல்லுவதை கேள்விப்பட்டுள்ளோம். இந்த இயற்கையன மூன்று குணங்கள் மனித உடலில் சமநிலை தருவதால் நோய் ஏற்படுவதாக ஆயுர்வேத சாஸ்திரம் கூருகிறது. மனித உடலில் தோஷத்தில் ஏதவது ஒன்று ஓங்கி நிற்கும்.

இயல்பான மூன்று தோஷங்கள் புருஸார்த்தம் (இயற்கையானது) என்றும் மனித உடலில் ஏற்படும் தோஷ ஏற்றத்தாழ்வுகள் ப்ரகிருதித்துவம் (செயற்கையானது) என்றும் வகைபடுத்துகிறார்கள். உபவேதமானஆயுர்வேதத்தில் வேதாந்த சாரமான புருஷ, ப்ரகிருதி தத்துவம் செயல்படுவதற்கான சான்றை விளக்கியுள்ளேன்.

நமது வாழ்க்கையில் இயற்கை,செயற்கை தத்துவம் எவ்வாறு செயல்படுகிறது என பார்ப்போம். மனித உடல் என்பது இயற்கை யின் படைப்பு, இதை புருஷார்த்தம் என கூரலாம் . ஆணும் பெண்ணும் இணைந்து உருவாக்கும் பொழுது புருஷத்துவம் கொண்ட மனித உடல் ப்ருகிருதித்துவம் பெருகிறது. நமது இயற்கையான (புருஷார்த்த) குணம் என ஒன்று உண்டு. ஆனால் சமூக நடத்தைக்காக நாம் உருவாக்கிய குணதிசயங்கள் ப்ருகிருதித்துவம் எனும் செயற்கைத் தன்மையை சாரும். நான் கூறும் இது போன்ற உதாரணங்களால் புருஷத்துவம் மேலானது ப்ருகிருதித்துவம் கீழானது என எண்ணுதல் கூடாது. புருஷத்துவமும், பிருகிருதித்துவமும் இணைந்தால் மட்டுமே வாழ்வியல் சிறப்பாக இயங்கும்.

இறைதன்மையை விளக்கும் மதங்கள் இயற்கை தன்மையான புருஷத்துவமே மூலம் என கூருகிறார்கள். புருஷத்துவமே அனைத்து விஷயங்களுக்கும் ஆதாரமானது என்பது அனைத்து மதத்தின் விளக்கம். அதனால் தான் சில மதங்கள் ஒரே கடவுள் எனும் கொள்கையை கொண்டுள்ளது. பாரதத்தில் தோன்றிய மதங்கள் மட்டுமே புருஷ-ப்ருகிருதி இணைவே உண்மையான இறை நிலை என ப்ரகடனப்படுத்தியது. புருஷ நிலையை சிவன் என்றும்,ப்ருகிருதி நிலையை சக்தி என்றும் விளக்கினார்கள். சிவன் ஆண் தன்மை சக்தி பெண் தன்மை என விளக்க காரணம் சிவநிலை என்பது அசைவற்றது, சக்திநிலை என்பது அசையக்கூடியது.(இயங்கும் தன்மை) என்ற வேறுபாட்டால் தான்.

சிவ-சக்தி நிலை என்பதை சீனர்கள்(யாங்-யன்) என வகைப்படுத்தினார்கள். இயற்கையில் செயற்கை தன்மையும், செயற்கையில் இயற்கைத் தன்மையும் கலந்துள்ளது என்பதன் கருத்தே யாங்-யன் தத்துவம் ஆகும். இத்தத்துவத்தின் அடிப்படையிலேயே நமது சாஸ்திர சம்பிரதாயங்கள் அமைந்துள்ளன. பருத்தி என்பது இயற்கையன ஒரு தாவரம், இதை பயிரிட்டு,நூலாக்கி ஆடை அணிதல் என்பது செயற்கையான செயல்பாடு.

இயற்கையான பருத்தியில் எதிர்காலத்தில் உருவகப்போகும் ஆடையும், ஆடையில் இயற்கையான பருத்தியும் கலந்திருப்பது சிவசக்தி நிலையை குறிக்கும். இதனால்தான் சக்தி வழிபாடு செய்பவர்கள் அதிக ஆடை அணிகலன் அணிவதும், இயற்கையான சிவநிலையில் இருப்பவர்கள் ஜடாமுடியுடன் நிர்வாணமாக இருப்பதும் ஆன்மீக இயல்பாக இருக்கிறது.

சிவ தத்துவத்தில் இருக்கும் முனிவர்கள் வைத்திருக்கும் பொருட்களை கவனித்தால் சங்கு, ஜடாமுடி, மண்டை ஓடு, ருத்ராஷம்,மிருக தோல் அனைத்தும் இயற்கையாக கிடைத்த பொருட்கள்.

இந்த பொருட்களை செயற்கையாக உருவாக்க முடியாது. சில பொருட்களை உருவாக்கினாலும் செயற்கை என தெரிந்துவிடும். ப்ரபஞ்சத்தின் படைப்புத் தன்மை புருஷ தன்மையிலிருந்து துவங்குகிறது. புருஷ தன்மை என்பது இயக்கமற்றது. புருஷத் தன்மைக்கு கால தேச வித்தியாசம் இல்லை. பிரகிருதிக்கு கால பரிமணமும் உண்டு. பிறந்த குழந்தை புருஷ தன்மையில் தேச, கால வித்யாசம் இன்றி இருக்கிறது. வளர்ந்த மனிதன் புருஷ நிலையில் இருந்து பிரகிருதி நிலைக்கு மாற்றமடைந்து தனக்குள் கால மற்றும் தேச வித்தியாசத்தை அடைகிறான்.

ப்ரகிருதி நிலையை அடைந்த மனிதன் மீண்டும் புருஷத்துவத்தை அடையவே மீண்டும் ஜபம், தியானம் மற்றும் யோகம் எனும் ஆன்மீக வழிகள் உருவாக்கப்பட்டுள்ளன. செயற்கை நிலையில் இயங்கக்கூடிய மனிதன் இயற்கை நிலை எனும் நிர்விகல்ப சமாதியை அடைய அவனுக்கு இயற்கையன பொருட்கள் உதவுகிறது. இயற்கை பொருட்கள் மூலம் மனிதன் தனது சுயதன்மையான புருஷ நிலையை அடைய முயற்சிக்கும் பொழுதுஅதிகம் பயன்படுவதும் எளிமையாக கிடைப்பதும் ருத்ராஷம் எனும் இயற்கையானமணிகள் ஆகும்.

சைவ சம்பிரதாயத்தில் மட்டும் ருத்ராஷம் பயன்படுத்துவதாக அனைவரும் நம்புகிறார்கள். ஆனால் சனாதான தர்மம் என அழைக்கப்படும் பாரத தேசத்தின் அனைத்து ஆன்மீக மார்க்கமும் ருத்ராஷத்தை பயன்படுத்திய சான்றுகள் உண்டு. குறிப்பாக ருத்ராஷத்தை மட்டும் நான் இங்கு விளக்க காரணம் உண்டு. பிற ஆன்மீக வஸ்துக்களை காட்டிலும் ருத்ராஷத்தை பற்றி நிறைய முரண்பாடான தகவல்கள் உலவுகிறது. தெரியவேண்டிய விஷயம் மறைக்கப்பட்டும், தேவையற்ற விஷயங்கள் உண்மையாக்கப்பட்டும் மக்களிடையே குழப்பத்தை உண்டு செய்கிறது. இந்த தெய்வீகம் நிறைந்த ருத்ராஷத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் இதனாலேயே ஏற்பட்டது.

ருத்ராஷம் எனும் இயற்கையில் விளையும் இந்த காய் (விதை) கனி வடிவம் பெருவதில்லை. அத்தி பூக்காது விதை அளிப்பது போல ருத்ராஷம் விதை தன்மை கொண்டது.மித வெப்பமும் மிதமான குளிரும் கொண்ட பகுதிகளில் ருத்ராஷம் விளைகிறது.

நேபாள தேசம் மேலே குறிப்பிட்ட தட்ப வெட்ப நிலையில் இருப்பதால் அதிகமான ருத்ராஷத்தை விளைவிக்கும் நாடாக திகழ்கிறது. இந்தியாவில் அதிக அளவில் ருத்ராஷம் கிடைப்பதில்லை. மேலும் ருத்ராஷத்தை பயிர் செய்து விளைவிக்க முடியாது. ருத்ராஷ மரக்கன்று நம் தோட்டத்தில் வளர்க்கும் பொழுது இயல்பான வளர்சியையோ, ருத்ராஷத்தின் வடிவத்தையோ பெறுவதில்லை. நேபாள தேசத்தில் பெரும்பாலும் ருத்ராஷ மரத்தோட்டம் வைத்திருப்பவர்கள் கூட அதை ஒரு இயற்கையான வன பகுதியாக வைத்திருக்கிறார்கள். நேபாளத்திற்குப் பிறகு இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ருத்ராஷம் இயற்கையாக கிடைக்கிறது.

ருத்ராஷத்தின் வடிவம், அதில் உள்ள துளை அனைத்தும் இயற்கையானது. பார்க்கும்பொழுது எந்த வித செயல்படும் இல்லாத பொருளாக தெரிந்தாலும் ருத்ராஷத்திற்குள் புதைந்திருக்கும் ஆற்றல் விவரிக்க முடியாத ஒன்று. சாதாரண ஒரு மரத்தின் விதையில் என்ன ஆற்றல் இருக்க முடியும் என எதிர்வாதம் செய்பவர்கள் கேட்பதுண்டு.

மணல் துகள்கள் மூலம் செய்யப்பட்டு தாமிர கம்பிகளால் இணைக்கப்பட்ட கணிப்பொறியின் சில்லு(Chip) வேலை செய்வதையும், உலகின் பல கிலோ மீட்டர் தூரம் இடைவெளியில் இருக்கும் இருவரையும் தொடர்பு கொள்ள செய்வதை நாகரீக மக்கள் நம்மில் அனேகர் உண்டு. உயிரற்ற மணல் இது போன்ற செயலை செய்யும்பொழுது உயிருள்ள தாவரவிதை ஏன் இதைக்காட்டிலும் அதிக செயல்களை செய்ய முடியாது ? என சிந்திப்பதில்லை.

கணிப்பொறி சிப்பை மட்டும் கையில் வைத்திருந்தால் அது வேலை செய்யாது. அதற்கு தேவையான இணைப்புகள், மின்சாரம் வழங்கி தகுந்த நிபுணர்களை நியமித்தால் அவர்கள் அந்த கணிப்பொறி சிப்பை வேலை செய்ய வைப்பார்கள். அது போல சிறந்த ருத்ராஷத்தை தேர்ந்தெடுத்து, ஆன்மீக ஆற்றல் கொண்டவர்களிடம் சக்தியூட்டப் பணிந்தோம் என்றால் அத்தகைய ருத்ராஷம் பிரஞ்சத்தின் சிறு மாதிரி வடிவமாகி உங்களை பிரபஞ்சத்தை கையில் வைத்திருப்பவராக மாற்றும்.
Read more ...

பதஞ்சலி

Tuesday, January 12, 2010
யோகாசனங்கள் எப்படி உருவாயின என்பது பற்றிய கேள்வி ஆசனங்களைப் பயிற்சி செய்யும் பலருக்கும் தோன்றியிருக்கும். “இலக்கியத்திற்குப் பின் இலக்கணம்” என்பது போல, யோகத்தின் முதல் நூல் என்று கருதப்படும் பதஞ்சலி யோக சூத்திரங்கள் வரையறுக்கப்படுவதற்கு முன்பே யோகம் பற்றிய பல நுட்பங்கள் அறியப் பட்டிருந்திருக்க வேண்டும் என்றே யோக அறிஞர்கள் பலரும் கருதுகிறார்கள். இந்த நூலில் ஆசனம் பற்றி ஒரே ஒரு சூத்திரம் தான் உள்ளது: “உறுதியானதும், சுகமாயிருப்பதும் ஆன நிலை ஆசனம்”.

ஆசனங்கள் வெளி உறுப்புக்களையும், தசைகளையும் மட்டுமல்ல, உடலின் பல உள் உறுப்புக்களையும், நாடி நரம்புகளையும் உறுதியாக்குகின்றன.
பல யோகாசனங்கள் பார்ப்பதற்குக் கடினமாகத் தோன்றினாலும், பயிற்சி செய்பவர்களுக்கு இவை மிக இயல்பானதாகவே தெரியும். பயிற்சி இதற்குக் காரணம் என்றாலும், யோக ஆசனங்களின் தன்மையே அப்படிப் பட்டதாயிருக்கிறது. 2-3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வளரும் பருவத்தில் தாங்களாகவே பல ஆசனங்கள் போடுவதைப் பார்க்கலாம். உட்காருவதற்கு வந்து நிற்கத் தொடங்கும் சமயம் பல குழந்தைகளுக்கு வஜ்ராசனம் தானாக வரும். தவழ்வதற்காக அமரும் தோற்றமே ஒரு ஆசனம் தான்! ஆசனங்களின் இந்த இயற்கைத் தன்மை அவற்றுக்கு இன்னும் அழகு சேர்க்கிறது.

மனித உடலின் இயக்கம் பற்றிய ஆழ்ந்த நுண்ணறிவு பெற்றிருந்தனர் பண்டைக் கால யோகிகள். காட்டில் விலங்குகள், பறவைகள் இவற்றின் வாழ்வைக் கூர்ந்து கவனித்த அவர்கள் அவை எப்போது அமைதியடைகின்றன, ஆக்ரோஷம் கொள்கின்றன இவற்றையெல்லாம் ஆராய்ந்து பல ஆசனங்களை உருவாக்கியிருக்கலாம் என்று ஒரு கருத்து உள்ளது.

புகழ்பெற்ற யோக குரு ஸ்ரீஸ்ரீரவிசங்கர் அவர்களிடம் இந்தக் கேள்வி கேட்கப்பட்ட போது அவர் கூறினார் “யோகத்தின் ஒரு உயர்ந்த நிலையில் செல்லும்போது பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கும் ஆன்மாவை யோகிகள் உணர்ந்தார்கள். அந்த உணர்ச்சியின் வெளிப்பாடாக அவர்கள் உடல் தானாகவே பல விதமான தோற்றங்கள் கொண்டது. இப்படித்தான் ஆசனங்கள் தோன்றின. பின்னர் அவை ஆய்வுக்கு உட்பட்டு நெறிப்படுத்தப் பட்டன. பிராணாயாம முறைகள் தோன்றியதும் இப்படித்தான்.” ஸ்ரீஸ்ரீ அவர்களது உருவாக்கம் என்று கருதப்படும் புகழ்பெற்ற “சுதர்ஷன் க்ரியா” என்ற பிராணாயாம முறையும் பரிசோதனைகளாலோ, புறவயப்பட்ட முயற்சிகளாலோ தோன்றவில்லை. மாறாக, ஆழ்ந்த தியானத்தின் போது தானாகவே அது சித்தித்ததாக அவர் பலமுறை கூறியுள்ளார். உலகெங்கும் உள்ள யோக ஆசிரியர்கள் அடிப்படை யோகப் பயிற்சிகளில் புதிய புதிய பரிமாணங்களை இன்றும் ஆக்கம் செய்து வருகிறார்கள். இவற்றில் எத்தனை முயற்சிகள் அகவயப்பட்டவை என்பது கேள்விக்குரியது. இருந்தாலும் யோகம் என்பது “கணந்தோறும் புதிதாகத்தோன்றும்” ஒரு வாழும் கலை என்பதில் ஐயமில்லை.

யோகாசனங்கள் உருவாக்கும் உடல் தோற்றத்தோடு, அவை தரும் உணர்வு நிலையையும் கருத்தில் கொண்டு பின்னர் பெயர்கள் இடப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.

“புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகி
பல் மிருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகி
வல் அசுரராகி முனிவராய்த் தேவராய்
கல்லாய் மனிதராய்ப் பேயாய் கணங்களாய்
செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்!”

என்று திருவாசகம் கூறும் அதீத அனுபவம் பரிணாம அறிவியல் கூறும் வளர்ச்சிப் படிநிலைகளை மட்டுமல்ல, அனைத்து உயிர்களாகவும் ஆகும் ஆன்மாவின் தன்மையையும் குறிக்கிறது.
Read more ...

காயத்ரீ மந்திரம்

Friday, January 8, 2010
ஆவணியாவட்டத்தின் மறு நாள் காயத்திரி ஜபம் என்ற நாள் வருகிறது .அதாவது யக்ஞோபவீத தாரணம் செய்தபின் மறு நாள் இது வரும். அந்த நாளுக்கே ஒரு தனி சிறப்பு உண்டு. காயத்திரி ஜபம் அன்று மட்டும் தான் செய்ய வேண்டும் என்பதில்லை. தினமும் எப்போதும் ஜபித்துக் கொண்டே இருக்கலாம். அது மிகுந்த சக்தியான மந்திரம். .ஆதவன் நம் கண்னிற்குத் தெரியும் பிரும்மம். அந்த சூரியன் இல்லை என்றால் ஒரு புல் பூண்டு கூட இருக்காது, .அப்படிப்பட்ட பிரும்மத்தை வழிப்பட்டு வாழ்க்கையில் மேன்மை பெற ராஜரிஷி விசுவாமித்திரர் என்னும் க்ஷ்த்திரியர் நமக்கெல்லாம் கண்டு பிடித்துத் தந்த வரப் பிரசாதம், வேதமே காயத்திரி.

"காயத்திரி பரமோ ம்ந்த்ர: ந்மாதூர் தைவதம் பரம்" என்கிறது சாஸ்திரம். ந மாதுர் அதாவது தாயை விடச் சிறந்த தெய்வமில்லை காயதிரியை விடச் சிறந்த மந்திரமில்லை. காயத்திரி தேவி உலகத்திற்கே பராசக்தி ஆவாள். வேதத்தில் வரும் சத்வ, ரஜ, தமஸ் என்ற முக்குண்ங்களுக்கும் காரணமாகவும், பரமேஸ்வரியின் சக்தியாகவும் சொல்லப் பட்டிருக்கிறது.

மந்திரம் என்றால் என்ன? மன்னா த்ராயதே இதி மந்திர:

அதாவது மனதைக் கடைவது, தயிரை மத்தால் கடைய வெண்ணெய் திரண்டு வரும். அது வந்தபின் மேலே ஒன்றிலும் ஒட்டாமல் மிதக்கும். இதே போல தயிர் என்ற மனத்தை மந்திரம் என்ற மத்தால் கடைய எண்ணங்க்ளே இல்லாத மனம் ஆன்மாவில் மிதக்கும், இத்தனைச் சிறப்பு மந்திரங்களுக்கு உண்டு, அதிலும் கீதை நாயகன்' மந்திரங்களில் நான் காயத்ரியாக இருக்கிறேன்." என்கிறார். இதிலிருந்தே அதன் சிறப்பு தெரிய வருகிறது.

உபநயனம் போது உபதேசம் நடக்கும். அந்தப் பையன் தன் தந்தையின் காதில் ஒம் "என்ற ப்ரணவ மந்திரம் ஒதுவதை நாம் பார்திருக்கிறோம். பின் காயத்திரி மந்தரம் ஆரம்பிக்கிறது. இதில் ஒம் பூர்புவஸ்ஸுவ: என்று ஆரம்பம். இதில் மூன்று வேதமும் வருகிறது. மனு அவர்க்ள் கூறுகிறார், "த்ரீப்ய; ஏவது வேதேப்ய; பாதம் பாத மதாது ஹத்" பிரும்மதேவன் வேதத்தின் சாரததைக்காண எண்ணி பின் ரிக் வேதத்திலிருந்து "பூ" என்பதையும் யஜுர் வேதத்திலிருந்து "புவ:" என்பதையும் சாமவேதத்திலிருந்து "ஸுவ:" என்றும் கண்டு பிடித்தாராம். அதன் பின்னரும் அதை மேலும் ஆராய்ந்தார். பிரணவம் என்ற ஒங்காரம் ஒளிர்ந்தது. ஒம் என்பதைப் பிரித்தால் அ+உ+அம் என்று வெளிப்படும், அது படைத்தல், காக்கல், அழித்தல் அதாவது பிரும்மா, விஷ்ணு, சிவன் என்ற மூவரையும் தன்னகத்தே கொண்டது.

காயத்திரி என்பதைப் பிரித்தால் காயந்தம்+த்ராயதே என்று வரும், அதாவது ஜபிப்பவனைக் காப்பாற்றுகிறது. நான் வேதங்களில், மந்திரங்களில் காயத்திரியாக் இருக்கிறேன் என்கிறார் கிருஷ்ணபரமாத்த்மா. நாரதர் சொல்லுகையில், "த்வமேவ சந்த்யா காயத்ரி சாவித்ரி ஸரஸ்வதி பிரும்மாணி வைஷ்ணவி ரகதஸ்வேதா, ஸிதேதரா" என்று புகழுகிறார்.

பின் சொல்லுகிறார், "ஒ காயத்ரியே! உன் புகழை என்ன என்று சொல்வது? மஹான்கள் சரீரத்தில் நாடியாகவும், ஹ்ருதயத்தில் பிராண சக்தியாகவும் கண்டத்தில் ஸ்வப்ன நாயகியாகவும் பிந்து ஸ்தானத்தில் இருப்பவளாகவும் மூலாதாரத்தில் குண்டலினி சக்தியாகாவும் பாதாதி கேசம் வரை வியாபித்தவளாகவும் சிக மத்யத்தில் அமர்ந்த்திருப்பவளாகவும் உச்சியில் மனோன்மணியாகவும் எல்லா வஸ்துக்களிலும் நிறைந்து இருக்கும் சக்தியாகவும் ஆகிறாள். காலையில் காயத்ரியாகவும் உச்சிப் பொழுதில் சாவித்ரியாகவும் மாலையில் சரஸ்வதியாகவும் இருக்கிறாள்..

ஒம் பூர்பவஸ்வ: ஒம் தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன: ப்ரசோதயாத்

இதுதான் காயத்ரி மந்திரம்

இதன் பொருள் எல்லா பிராணிகளின் இதயத்தில் அந்தர்யாமியாய் இருந்துகொண்டு புத்தியைத் தீட்டிக்கொடுப்பவளும் சூரியமண்டலத்தில் இருந்துகொண்டு வெளிச்சம் கொடுப்பதால் யாவரும் சேவிக்க வேண்டியவளாகவும் விள்ங்குகின்ற காயத்ரியைத் தியானம் செய்கிறேன்.

இனி அதன் மகிமையைப் பார்க்கலாம்:

காயத்ரி ப்ரோச்யதே புதை" பாபங்களிலிருந்து காக்கிறது, புத்தி தீர்க்கமாகிறது, சிறந்த சித்திகள் கிட்டுகின்றன. "ந தத்ர ம்ரியதே பால:" குழந்தைகள் அகால மரணம் அடைவதில்லை. சரவ பாபானி நச்யந்தி காயத்ரி ஜபதே ந்ருப: எல்லா பாபங்களையும் போக்கி விடுகிறது.

இத்தனை சிறப்புப் பெற்ற காயத்ரி மந்திரத்தை விடாமல் ஜபித்து வாழ்வை மேம்படுத்தலாமே. பேய் பிசாசு நம்மை அண்டாது. ஐந்து முகங்கள் பத்து கைகளுடன் சந்திரக் கலைத்தரித்த காயத்ரி நம்மை எல்லாம் ரக்ஷிப்பாளாகுக.

பின் குறிப்பு: எனக்கு தெரிந்த அளவு காயத்ரி ம்ந்திரத்தைப் பற்றி எழுதி உள்ளேன். ஒரு 108 தடவை இதைச் சபித்தால் நிச்சயம் ப்லன் தெரியும். இது ஒரு ரக்ஷைப் போல் காக்கும் கவசம்.
Read more ...

மந்திரம் - - - - - பொருள்:

Friday, January 8, 2010
( மந் – நினைப்பவன் -- திர -காப்பது ) நினைப்பவனைக் காப்பது என்பது பொருள். ஆகவே மந்திரம் என்னும் பெயர் நினைப்பவனைக் காக்கும் இயல்புடையது. வாச்சியமாகிய சிவத்துக்கும் சிவ சத்திக்குமே செல்லும். வாக்கியத்துக்கும், வாசகத்துக்கும் செல்லும். எனவே மந்திரம், வாச்சிய மந்திரம், வாசக மந்திரம் என இரு வகைப்படும் என்றபடியாயிற்று.

1.இலிங்கம் என்பதற்குப் பொருள்:
இதற்குக் குறி என்று பொருள். முகம் கை கால் போன்ற அவயவங்கள் இல்லாமல் இறைவனைக் குறிப்பாக உணர்த்துவதால் இத்திருமேனிக்கு இலிங்கம் எனப் பெயர். 2.சிவலிங்கம் இருவகைப்படும்:
1. பரார்த்த லிங்கம்
2. இட்ட லிங்கம் -- என இருவகைப்படும்.

பூஜைக்குரிய இலைகள்

துளசி, முகிழ், சண்பகம், தாமரை, வில்வம், கல்ஹாரம், மருக்கொழுந்து, மருதாணி, தர்ப்பம், அறுகு, அசிவல்லி, நாயுறுவி, விஷ்ணுகிரந்தி, நெல்லி முதலியவற்றின் இலைகள்பூஜைக்குரியன.
Read more ...

துளசிதேவியின் மகிமை

Friday, January 8, 2010
துளசியின் மகிமையை முழுவதும் வர்ணிக்க இயலாது என்றாலும்,
பத்ம புராணத்தில் கூறப்பட்டுள்ள ஒரு சில குறிப்புகள்...

ஸ்ரீ கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமான மற்றும் எல்லா வகையிலும் புனிதமான, துளசி தேவியை சாதாரணமாக தொடுவதாலும், பார்ப்பதாலும், உணரப்படுவதாலும், துளசியின் மண்ணை வணங்குவதாலும், துளசியைப் பற்றி கேட்டபதாலும், வளர்ப்பதாலும், நம் பாவங்கள் நீங்கப் பெற்று புனிதமடைவோம்.

துளசியை வணங்குவதால் விளையும் பயன்கள்


துளசி அனைத்து பக்தி தொண்டுகளின் சாரம். துளசி இலை பூ, வேர்கள், கிளைகள், நிழல் எல்லாம் ஆன்மீகமானவை. பக்தியுடன் துளசியின் இலையை கிருஷ்ணருக்கு அளிப்பவர் அவர் அருகிலேயே வாழ்வர்.

துளசியின் மண்ணை எடுத்து உடலில் பூசிக்கொண்டு ஸ்ரீ கிருஷ்ணரை வணங்குபவர், ஒவ்வொரு நாளும் நூறு நாள் பூஜை செய்த பயனை அடைவர்.

துளசி மஞ்சரியை கிருஷ்ணருக்கு அளிப்பவர் மற்ற எல்லா புஷ்பங்களையும் அளித்த பலனை பெறுவர். ஒருவர் துளசியை பார்த்தாலோ, அல்லது அது இருக்கும் வீட்டிற்கோ, தோட்டத்திற்கோ சென்றால் அவர் ஒரு பிராமணனை கொன்ற பாவத்தில் இருந்தும் கூட, விடுதலை பெறுகிறான்.

துளசி உள்ள காடுகள், வீடுகள் ஆகிய இடங்களில் கிருஷ்ணர் ஆனந்தமாக வசிக்கிறார். துளசி உள்ள வீடுகள் எந்த கேடான காலத்திலும் வீழ்ச்சி அடையாது. அதுவும் அல்லாமல் எல்லா புனித ஸ்தலங்களிலும் புனிதமானது.

துளசியின் வாசனை முகர்ந்து பார்க்கும் அனைவரையும் தூய்மையாக்கும். துளசி உள்ள இடங்களில் கிருஷ்ணரும், மற்ற எல்லா தெய்வங்களும் வசிப்பார்கள். துளசி இல்லாமல் கிருஷ்ணர் பூவோ, உணவோ அல்லது சந்தனத்தைலமோ ஏற்பதில்லை.

துளசியைக் கொண்டு கிருஷ்ணரை தினமும் வணங்கும் பக்தர்கள், எல்லா ஸ்தலங்களையும், தானங்களையும், மற்றும் தியாகங்களையும் செய்தவர் ஆகிறார். சொல்லப் போனால் அவருக்கு செய்ய வேண்டிய வேறு கடமைகள் இல்லை. அத்தோடு, அவர் எல்லா இலக்கியம் மற்றும் புராணங்களையும் படித்தவர் ஆகிறார்.

கிருஷ்ணருக்கு படைக்கப்பட்ட துளசியை தலையிலோ, வாயிலோ போட்டுக் கொண்டவர் கிருஷ்ணரின் திருநாட்டிற்குள் நுழைவர். கலியுகத்தில் ஒருவர் துளசியை நினைத்தாலோ, வளர்த்தாலோ, வணங்கினாலோ அவர் எல்லா பாவங்களிலிருந்தும் விடுபட்டு இறுதியில் கிருஷ்ணரை அடைகிறார்கள்.

துளசியை கொண்டு கிருஷ்ணரை பூஜிப்பவர் தன் முன்னோர் அனைவரையும் (பிறவித் தளையிலிருந்து) விடுவிக்கிறார். துளசியின் மகிமையை பிறருக்குச் சொன்னால் ஆன்மீக உலகில் நிலையான ஓரிடம் காத்திருக்கும் என்பது திண்ணம்.
ஸ்ரீ துளசி ப்ரணாம்

வ்ருந்தாயை துளசி தேவ்யாயை ப்ரியாயை கேஷவசஸ்ய
கிருஷ்ண பக்தி ப்ரதே தேவி ஸத்யவத்யை நமோ நம:

எம் பெருமான் கேசவனுக்கு மிகவும் பிரியமான, ஸ்ரீமதி துளசி தேவிக்கு விருந்தாவன ராணிக்கு மீண்டும் மீண்டும் எனது வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன். துளசிதேவி பகவான் கிருஷ்ணருக்கு பக்தி தொண்டு புரியக் கூடிய வரத்தை அளிக்கும் தாங்கள் மிகமிக உயர்ந்த ஸத்யத்தை உடையவர்.


நமோ நம : துளசி கிருஷ்ண ப்ரேயஸீ நமோ நம:
ராதா கிருஷ்ண ஸேவா பாபோ ஏய் அபிலாஷி
ஜே தோமார ஷரண லோய், தாரா வாஞ்ச பூர்ண ஹோய்
க்ருபா கோரி கோரோ தாரே, வ்ருந்தாவன பாஸீ
மோரர் ஏய் அபிலாஷ், பிலாஷ் குஞ்சே தியோவாஸ்
நயனே ஹேரி போ ஸதா ஜுக லரூப ராஷி
ஏய் நிவேதன தரோ, ஸகீர்; அனு கத கோரோ
ஸேவா அதிகார தியே, கோரோ நிஜ தாஸி
தீன கிருஷ்ண தாஸே கோய், ஏய் ஜனமோர ஹோய்
ஸ்ரீ ராதா கோவிந்த ப்ரமே ஸதாஜேன பாஸி

ஸ்ரீ கிருஷ்ணருக்கு பிரியமான துளசிதேவி தங்கள் முன் நான் மீண்டும் மீண்டும் வீழ்ந்து வணங்குகிறேன். ஸ்ரீ ஸ்ரீ ராதாகிருஷ்ணருக்கு பக்திதொண்டு செய்வதே எனது பூரணமான விருப்பம்.

தங்களை அடைக்கலமாகக் கொண்ட அனைவரின் விருப்பங்களும் பூர்த்தியாகிவிடும். தங்களது கருணையை அவர்பால் அருளி, அவரை விருந்தாவனவாசி ஆக்குகிறீர்கள்.

ஸ்ரீ விருந்தாவன திவ்ய தேசத்தின் இனிய வனங்களில் எனக்கும் ஓர் இருப்பிடத்தை தாங்கள் அளிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு ராதா மற்றும் கிருஷ்ணரின் அழகிய மதுர லீலைகளை நான் என்றும் எண்ணியிருப்பேன்.

விரஜபூமியின்; இடையர்குலச் சிறுமியரைப் பின்பற்றுபவனாக என்னை ஆக்கிவிடுமாறு நான் வேண்டுகிறேன். பக்தித் தொண்டெனும் உயர்ந்த வரத்தை எனக்கு அளித்து தங்களது தாஸனாக என்னை ஆக்கிக் கொள்ள வேண்டுகிறேன்.

ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணரின் பணிவான சேவகனாகிய நான் வேண்டுவது, ஸ்ரீ ராதா மற்றும் கோவிந்தரின் தூய பக்தி தொண்டு புரிய வேண்டும் என்பதே!


யானி கானிச பாபனி ப்ரஹ்ம ஹத்யாதிகானிச
தானி தானி ப்ரணஷ்யந்தி ப்ரதக்ஷணே பதே பதே

பிராமணனைக் கொன்றால் ஏற்படக்கூடிய ப்ரம்மஹத்தி என்ற பாபம் மட்டுமன்றி, ஒருவன் செய்த அனைத்து பாவங்களும் ஸ்ரீமதி துளசி தேவியை வலம் வந்து வணங்குவதால் அழிந்து போகும்.
Read more ...

சித்தர்களும், சமாதி அடைந்த தலங்களும்

Friday, January 8, 2010
1. கந்தாநத்தித்தேவர் -- வைத்தீஸ்வரன் கோயில்
2. தன்வந்திரி -- திருவனந்தபுரம்
3. பதஞ்சலி முனிவர் -- ராமேஸ்வரம்
4. கும்பமுனிவர் -- சப்தகிரி
5. கோரக்கர் -- போரூர்
6. நந்தீசர் -- காசி
7. குதம்பை சித்தர் -- மாயவரம்
8. கமலமுனிவர் -- திருவாரூர்
9. கொங்கணவர் -- திருப்பதி
10. போகர் -- பழநி
11. திருமூலர் -- சிதம்பரம்
12. பாம்பாடம்சித்தர் -- விருத்தாச்சலம்
13. இடைக்காட்டுச்சித்தர் -- திருவண்ணாமலை
14. சச்சிதானந்த சுவாமி -- வள்ளிமலை
15. வான்மீகர் -- எட்டக்குடி
16. சட்டமுனிவர் -- ஸ்ரீரங்கம்
17. மச்சமுனிவர் -- அழகர்கோவில்
18. ராமதேவர் -- மதுரை
Read more ...

கந்தர் சஷ்டி கவசம்

Friday, January 8, 2010
துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம்
நெஞ்சிற் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்
கதித்தோங்கும் நிஷ்டையுங் கைகூடும்
நிமலரருள் கந்த சஷ்டி கவசந்தனை

அமரரிடர் தீர வமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி

சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக் குதவுஞ் செங்கதிர் வேலோன்
பாத மிரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம்பாடக் கிண்கிணியாட
மையல் நடனஞ் செய்யும் மயில்வா கனனார்
கையில் வேலாலெனைக் காக்கவென் றுவந்து
வரவர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
இந்திரன் முதலா வெண்டிசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக
வாசவன் மருக வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக
சரஹண பவனார் சடுதியில் வருக
ரஹண பவச ரரரர ரரர
ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி
விணபவ சரஹண வீரா நமோநம
நிபவ சரஹண நிறநிற நிறென
வசர ஹணப வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
என்னை யாளும் இளையோன் கையில்
பன்னிரண்டாயுதம் பாசாங் குசமும்
பரந்த விழிகள் பன்னிரண்டிலங்க
விரைந்தென்னைக் காக்க வேலோன் வருக
ஐயும் கிலியும் அடைவுடன் சௌவும்
உய்யொளி சௌவும் உயிரையுங் கிலியும்
கிலியும் சௌவும் கிளரொளியையும்
நிலைபெற் றென்முன் நித்தமு மொளிரும்
சண்முகன் தீயும் தனியொளி யொவ்வும்
குண்டலி யாஞ்சிவ குகன்தினம் வருக
ஆறுமுகமும் அணிமுடி யாறும்
நீறிடும் நெற்றியும் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்
நன்னெறி நெற்றியும் நவமணிச் சுட்டியும்
ஈராறு செவியில் இலகு குண்டலமும்
ஆறிரு திண்புயத் தழுகிய மார்பில்
பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து
நண்மணி பூண்ட நவரத்தின மாலையும்
முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழகுடைய திருவயி றுந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்தினம் பதித்த நற்சீ ராவும்
இருதொடை யழகும் இணைமுழந் தாளும்
திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செகண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து
முந்து முந்து முருகவேள் முந்து
என்றனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா விநோதனென்
றுண்டிரு வடியை உறுதியென் றென்னும்
என்றனை வைத்துன் இணையடி காக்க
என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க
அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேலிரண்டும் கண்ணினை காக்க
விழிசெவி யிரண்டும் வேலவர் காக்க
நாசிக ளிரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனை பெருவேல் காக்க
முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
கன்ன மிரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை யிரத்தின வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க
வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க
பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க
வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க
நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
ஆண் குறியிரண்டும் அயில்வேல் காக்க
பிட்டமிரண்டும் பெருவேல் காக்க
வட்டக் குதத்தை வடிவேல் காக்க
பனைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
ஐவிர லடியிணை அருள்வேல் காக்க
கைக ளிரண்டும் கருணைவேல் காக்க
முன்கை யிரண்டும் முரண்வேல் காக்க
பின்கை யிரண்டும் பின்னவ ளிருக்க
நாவிற் சரஸ்வதி நற்றுணை யாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பா நாடியை முனைவேல் காக்க
எப்பொழுதும் யெனை எதிர்வேல் காக்க
அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பக றன்னில் வச்சிரவேல் காக்க
அரையிரு டன்னில் அனையவேல் காக்க
ஏமத்திற் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியி நோக்க
தாக்க தாக்க தடையறத் தாக்க
பார்க்க பார்க்க பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை யகல
வல்லபூதம் வலாஷ்டிகப் பேய்கள்
அல்லல் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைக டின்னும் புழக்கட முனியும்
கொள்ளிவாய் பேய்களும் குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமரா க்ஷதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலு மிருட்டிலும் எதிர்படு மன்னரும்
கனபூசை கொள்ளும் காளியோடனைவரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டா ளர்களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட
ஆனை யடியினில் அரும்பாவைகளும்
பூனை மயிரும் பிள்ளைக ளென்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைக ளுடனே பலகல சத்துடன்
மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும்
காசும் பணமும் காவுடன் சோரும்
ஓதுமஞ் சணமும் ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய்விட்டலறி மதிகெட்டோடப்
படியினில் முட்டப் பாசக் கயிற்றால்
கட்டுட னங்கம் கதறிடக் கட்டு
கட்டி யுருட்டு கைகால் முறியக்
கட்டுக் கட்டுக் கதறிடக் கட்டு
முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதிற் செதிலாக
சொக்கு சொக்கு சூர்பகைச் சொக்கு
குத்து குத்து கூர்வடி வேலால்
பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலது வாக
விடுவிடு வேலை வெகுண்டது வோடப்
புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித்தொடர்ந்தோட
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடுத்துய ரங்கம்
ஏறிய விஷங்கள் எளிதுட னிறங்க
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்
சூலைஷயங் குன்மம் சொக்கச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி
பக்கப் பிளவை படர் தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத் தரணை பருவரை யாப்பும்
எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லா தோட நீயெனக் கருள்வாய்
ஈரே ழலகமும் எனக்குற வாக
ஆணும் பெண்ணும் அனைவரு மெனக்கா
மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்
உன்னைத் துதிக்க உன்றிரு நாமம்
சரஹண பவனே சையொளி பவனே
திரிபுர பவனே திகழொளி பவனே
பரிபுர பவனே பவமொழி பவனே
அரிதிரு மருக அமரா பதியைக்
காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர்வேலவனே
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
இடும்பனை யழித்த இனியவேல் முருகா
தணிகா சலனே சங்கரன் புதல்வா
கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா
பழநிப் பதிவாழ் பால குமரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா
சமரா புரிவாழ் சண்முகத் தரசே
காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
என்னாவிருக்க யானுனைப் பாட
எனைத்தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்
பாடினே னாடினேன் பரவசமாக
ஆடினே னாடினேன், ஆவினன் பூதியை
நேசமுடன் யான் நெற்றி யிலணியப்
பாச வினைகள் பற்றது நீங்கி
உன் பதம் பெறவே உன்னரு ளாக
அன்புட னிரஷி அன்னமும சொன்னமும்
மெத்தமெத் தாக வேலா யுதனார்
சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைகுற மகளுடன்
வாழ்க வாழ்க வாரணத்துவசம்
வாழ்க வாழ்கவென் வறுமைக நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை யடியேன் எத்தனை செய்யினும்
பெற்றவ நீகுரு பொறுப்ப துன்கடன்
பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே
பிள்ளையென் றன்பாய் பிரிய மளித்து
மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித்
தஞ்சமென் றடியார் தழைத்திட வருள்செய்
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
பாலன் தேவ ராயன் பகர்ந்ததை
காலையில் மாலையில் கருத்துட னாளும்
ஆசா ரத்துடனே அங்கந் துலக்கி
நேச முடனொரு நினைவது வாகி
கந்தர் சஷ்டி கவச மிதனைச்
சிந்தை கலங்காது தியானிப் பவர்கள்
ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
ஓதியே nஐபித்து உகந்து நீறணிய
அஷ்டதிக் குள்ளொர் அடங்கலும் வசமாய்த்
திசைமன்ன ரெண்மர் சேர்ந்தங் கருளுவர்
மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர்
நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
நவமத னெனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளும் ஈரெட்டா வாழ்வர்
கந்தர்கை வேலாம் கவசத் தடியை
வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்
விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லாதவரைப் பொடிப்பொடி யாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்
சர்வ சத்துரு சங்கா ரத்தடி
அறிந்தென துள்ளம் அஷ்டலட்சுமிகளில்
வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்
சூரபத் மாவைத் துணிந்தகை யதனால்
இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த
குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி
எனைத்தடுத் தாட்கொள்ள என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவா போற்றி
தேவர்கள் சேனா பதியே போற்றி
குறமகள் மனமகிழ் கோவே போற்றி
திறமிகு திவ்விய தேகா போற்றி
இடும்பா யுதனே இடும்பா போற்றி
கடம்பா போற்றி கந்தா போற்றி
வெற்றி புனையும் வேலே போற்றி
உயர்கிரி கனக சபைக்கோ ரரசே
மயில்நட மிடுவாய் மலரடி சரணம்
சரணம் சரணம் சரஹண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்.
Read more ...

மன மாற்றம் அடைய !

Friday, January 1, 2010
மாபெரும் துறவி

அழகிய வன பகுதி. தெய்வீகமான ஆசரம குடில் முன்பு ஓர் அரச மரம்.

அதன் கீழ் தனது சிஷ்யர்களுடன் அமர்த்திருந்தார் வேத வியாசர்.
துறவறம் முலம் மக்கள் சேவை செய்ய சன்யாச தர்மத்தை விளக்கும் குருகுலம் அது.

வியாசர் தனது சிஷ்யர்களுக்கு துறவறம் பற்றி போதித்து கொண்டிருந்தார். எத்தனயோ விளக்கம் கொடுத்ததும் மாணவர்களுக்கு துறவறம் பற்றி விளங்க வில்லை.

ஆசிரமம் ஒட்டிய சாலையில்.... சிறிது தூரத்தில் ஒரு ஆணும் பெண்ணும் நடந்து சென்றார்கள்.அந்த ஆடவனின் வலது கையில் மது கிண்ணம் ,மறு புறம் பெண்ணின் தோள்பட்டையில் கைகளை போட்டிருந்தான். மது - மாது சகிதம் தள்ளாட்டத்துடன் வரும் அவனை கண்டார் வியாசர்.

பூமாலையுடன் அவர்களை நோக்கி சென்றார். இருவருக்கும் மாலை அணிவித்து, மூன்றுமுறை அவர்களை வலம் வந்து , அவர்கள் கால்களில் விழுந்து வணங்கினார்.

சிஷ்யர்களுக்கோ பெரும் அவமானமாக போய்விட்டது. வேத வியாசர் மாபெரும் மஹான் என எண்ணி இருந்தோம் , ரிஷியானவர் ஒரு கிழ்நிலை மனிதனை வணங்கி வழிபடுகிறரே என குழம்பினார்கள்.

சிஷ்யர்களின் குழப்பதை உணர்ந்த வியாசர் ," எனதருமை சிஷ்யர்களே , நாம் எல்லாம் சிற்றின்பத்தை துறந்து பேரின்பத்தை அடைய முயல்கிறோம், ஆனால் பேரின்பம் எப்படி பட்டதாக இருந்தாலும் தேவையில்லை என துறந்து சிற்றின்பத்தில் திளைக்கும் இவர்கள் தான் பெரும் துறவியாக எனக்கு தெரிகிறார்கள். பேரின்பத்தையே துறந்த இவர்கள் தான் சிறந்த துறவிகள் இல்லையா? " என்றார்.

சிஷ்யர்களுக்கு துறவு பற்றிய புரிதல் ஆரம்பமானது...



துறவி என்பவன் அனைத்தையும் துறப்பவன் அல்ல.
பொறுப்புகளை பார்த்து ஓடுபவன் துறவியாக இருக்க முடியாது. உலகத்தில் உள்ள அனைத்துக்கும் நானே பொறுப்பு என நினைக்க வேண்டும்.

எனது எனது என கூறாமல் , உலகம் அனைத்தும் நமது நமது என கூறுபவன் துறவி.

காவி உடையும் , கமண்டலமும் ஒருவனை துறவியாக்க முடியாது , "நான்" என்ற அகத்தை துறந்தவனே துறவியாவான்.
Read more ...

ஸ்ரீ வில்வம் 1

Friday, January 1, 2010
U.Vignesh Raj



T. Kathick



J.Rajesh


S.Senthikumar



D.G.Dinesh

Read more ...

இறைவன் படைப்புகள்

Friday, January 1, 2010
இறைவனது திருவுருவங்களை நின்ற, இருந்த, கிடந்த மற்றும் கூத்தாடிய கோலங்களில் படைக்கின்றனர். இவற்றில் நின்ற கோல இறையுருவை "ஸ்தானக மூர்த்தி" என்றும், ஒரு காலைக் கீழ்நோக்கி நீட்டியபடி அமர்ந்திருப்பதை "சுகாசன மூர்த்தி" என்றும், கிடந்த கோலத்தில் இருக்கும் இறையுருவை "சயன மூர்த்தி" என்றும் நடனமாடும் கோலத்தில் உள்ள இறையுருவை "நிருத்த மூர்த்தி" என்றும் அழைப்பார்கள். இந்த நான்கு நிலைகளில் நின்ற, இருந்த கோலம் எல்லா இறையுருவங்களுக்கும் பொதுவானதாக அமைகின்றது. இதில் அமர்ந்த கோலத்தில் சுகாசனம், வீராசனம், பத்மாசனம், அர்த்தபத்மாசனம், யோகாசனம், லலிதாசனம் என்ற ஆறு ஆசனங்கள் சிற்பங்களில் பயன்படுத்தப் படுகின்றன. அடுத்ததாகக் கிடந்த கோலம் விஷ்ணுவுக்கே பெரிது உரித்தான கோலமாக அமைகிறது. மேலும் கிடந்த கோலத்தில் முழுவதும் கிடத்தல் சமசயனம் என்றும், பகுதிக் கிடத்தல் அர்த்தசயனம் என்றும் இரு வகைகள் உண்டு. அடி முதல் முடி வரை உடல் முழுவதும் இருக்கையில் கிடப்பது முழுதும் கிடத்தலாகும். அடி முதல் இடை வரையுள்ள உடல் கிடந்து அதற்கு மேலுள்ள உடல் பகுதி சற்று நிமிர்ந்திருப்பது அர்த்த சயனம் எனப்படும். கூத்தாடிய கோலம் என்பது சிவபெருமான், காளி, பிள்ளையார், கண்ணனது காளிங்க நர்த்தனம் முதலிய சிற்பங்களுக்கு உரியதாக இருக்கிறது.

ஆசனங்களை "சிவாலயத் திருமேனிகள்" எனும் நூல் கீழ்கண்டவாறு வகைப்படுத்துகிறது.

1. சமபாத ஸ்தானகம்
2. வைதஸ்திக ஸ்தானகம்
3. அர்த்த வைதஸ்திக ஸ்தானகம்
4. காயோத் சர்க்கம்
5. சுகாசனம்
6. பத்மாசனம்
7. அர்த்த பத்மாசனம்
8. லலிதாசனம்
9. மகாராச லீலாசனம்
10. வீராசனம்
11. உத்குடியாசனம்
12. யோகாசனம்
13. ஸ்வஸ்திகாசனம் (அமர்ந்த)
14. கருடாசனம்
15. வைராக் ஸ்தானகம்
16. வைஷ்ணவம்
17. ஸ்வஸ்திகாசனம் (நின்ற)
18. ஆலிடாசனம்
19. பிரத்யாலீடாசனம்
20. ஊர்த்துவஜானு
21. ஏகபாதஸ்தானகம்
22. சயனாசனம்




எல்லாமே ஐந்து

நமசிவாய இது சிவனின் தாரக மந்திரம். இந்த ஐந்தெழுத்து மந்திரத்தை பஞ்சாட்சர மந்திரம் என்பார்கள். இதன் அடிப்படையிலேயே சிவனுக்கு அமைவது எல்லாமே ஐந்தாக அமைவது சிறப்பு. நடராஜரின் பஞ்ச சபைகள்
பொன்னம்பலம் - சிதம்பரம், வெள்ளியம்பலம் - மதுரை, தாமிரசபை - திருநெல்வேலி, ரத்தினசபை - திருவாலங்காடு, சித்திரைசபை - குற்றாலம்

பஞ்சபுராணங்கள்

தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு , பெரிய புராணம், ஆகும்.

பஞ்சபூத ஸ்தலங்கள்

பிருத்திவி (மண்) - காஞ்சிபுரம், வாயு (காற்று) - காளஹஸ்தி, தேயு (நெருப்பு)- திருவண்ணாமலை, அப்பு (நீர்) - திருவானைக்கா, ஆகாயம் - சிதம்பரம்
திருவண்ணாமலையில் கிரிவலம் சுற்றி வரும் போது உள்ள அஷ்ட லிங்கத்தை வணங்கினால் ஏற்படும் பலன்கள்

இந்திரலிங்கம் : புதிய வேலை, பணி மாற்றம், பதவி உயர்வு கிடைக்கும்
அக்னி லிங்கம் : கற்பு, சத்யம், தர்மம் தலை காக்கும்
எமலிங்கம் : எமபயம் நீங்கி, நீதி வழுவாமல் வாழலாம்
நிருதி லிங்கம் : தோஷங்கள், குழந்தை இல்லாமை, சாபங்கள் நிவர்த்தியாகும்
வருணலிங்கம் : ஜலதோஷம், சிறுநீரக வியாதி, சர்க்கரை வியாதி நீங்கும்
வாயு லிங்கம் : காசம், சுவாச நோய், மாரடைப்பு நோய் நீங்கும்
குரேப லிங்கம் : ஆக்கப்பூர்வமாக தரிசித்தால் கோடீஸ்வரர் ஆகலாம்.

புராணம் - 18

பிரம்ம புராணம், பதும புராணம், வைணவ புராணம், சைவ புராணம், பாகவத புராணம், பவிழிய புராணம், நாரதீய புராணம், மார்க்கண்டேய புராணம், ஆக்கினேய புராணம், பிரமபகைவர் புராணம், இலிங்க புராணம், வராக புராணம், காந்தப் புராணம், வாமன புராணம், கூர்ம புராணம், மற்ச புராணம், காருட புராணம், பிரமாண்ட புராணம்

பிரதோஷ பலன்

பதினொரு பிரதோஷங்கள் தரிசனம் செய்தல் ஒரு முழு கும்பாபிஷேகத்தை தரிசனம் செய்த பலன் கிடைக்கும் அதற்காக பாவமே செய்து கொண்டு பிரதோஷம் செய்வதால் புண்ணியமில்லை பிறர்க்கு உதவாமல் இருப்பினும், உபத்திரம் செய்யாமல் இருப்பது அதனினும் இனிது

சக்கரத்தாழ்வார்

எம்பெருமானின் நித்ய சூரிகளில் ஒருவரே சக்கரமாக மாறியுள்ளதால் சக்கரத்தாழ்வார் எனப்படுவார். பெருமாளுக்கு ஐந்து ஆயுதங்கள். சக்கரத்தாழ்வாருக்கு பதினாறு ஆயுதங்கள். சக்கரம், ஈட்டி, கத்தி, கோடரி, தண்டம், சதமுகாக்னி, மாவட்டி, சக்தி என்னும் எட்டு ஆயுதங்களை வலக்கையிலும் சங்கு, வில், கண்ணி, கலப்பை, உலக்கை, வஜ்ரம், சூலம், கதை ஆகிய எட்டு ஆயுதங்களை இடக்கையிலும் அணிந்திருப்பார்.
சொன்னது

1. கடவுள் மனிதனுக்குச் சொன்னது - கீதை
2. மனிதன் கடவுளுக்குச் சொன்னது - திருவாசகம்
3. மனிதன் மனிதனுக்குச் சொன்னது - திருக்குறள்
4. பகவத் கைங்கரியம் - இறைவனுக்குத் தொண்டு செய்தல்
5. பாகவத கைங்கரியம் - இறைவனுடைய அடியார்களுக்கு தொண்டு செய்தல்.

என்றும் சிரஞ்சீவி எனப் பெயர் பெற்றவர்கள்

அஸ்வத்தாமன், மஹாபலி, வியாசர், ஆஞ்சநேயர், விபீஷணன், கிருபாசார்யார், பரசுராமர்
காஞ்சி புராணப்படி காஞ்சி மாநகரத்தில் சிவனுக்கு 16,000 கோயிலும், விநாயகருக்கு 1,00,000 கோயிலும், காளிக்கு 5000 கோயிலும், விஷ்ணுவிற்கு 12,000 கோயிலும், முருகனுக்கு 6,000 கோயிலும், திருமகள், கலைமகளுக்கு 1000 கோயில்களும் இருந்ததாகத் தெரிகிறது.

நவவித பக்தி என்னும் ஒன்பது பக்தி முறை

சரவணம் - இறைவனது பெருமைகளை, லீலைகளை காதால் பக்தியுடன் கேட்பது
கீர்த்தனம் - இறைவனின் புகழைப் பாடுதல்
ஸ்மரணம் - எப்பொழுதும் பரமனையே நினைத்து அவன் நாமத்தை ஜபித்தல்
பாதஸேவனம் - இறைவனுக்கு தொண்டு செய்தல்
அர்ச்சனம் - மலரால் அவன் பாதத்தில் அர்ச்சித்தல்
வந்தனம் - நமஸ்கரித்தல்
தாஸ்யம் - ஆண்டவன் ஒருவனுக்கே நாம் அடிமை என்று கருதி செய்யும் செயல்களையெல்லாம் அவனது மகிழ்ச்சிக்காக அர்ப்பணிதல்
ஸ்க்யம் - இறைவனை நண்பனென எண்ணி தோழமை பூண்டு வழங்குதல்
அத்மநிவேதனம் - தன்னை முழுவதும் இறைவனிடம் அர்ப்பணித்து அவனே அனைத்தும் என்று வாழும் இறைவன் அடியார் பணி செய்தல்
மகாமகம் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் குரு சஞ்சாரம் செய்யும் ராசி ஊர்களும் விழாக்களும்

ராசி ஊர் விழா

சிம்மம் கும்பகோணம் மகாமகம்
கன்னி திருக்கழுக்குன்றம் சங்கு
கும்பம் ஹரித்துவார் கும்பமேளா
மேஷம் அலகாபாத் பிரயாகை
கடகம் நாசிக் பஞ்சவடி
துலாம் உஜ்ஜயினி மேளா (தீர்த்தம்)

விநாயகர் அர்ச்சனை

விநாயகருக்கு கண்டகங்கத்திரியால் அர்ச்சனை செய்தால் லட்சுமி கடாட்சமும், மாதுளை இலையால் அர்ச்சனை செய்தால் நற்புகழும், வெள்ளெருக்கால் அர்ச்சனை செய்தால் சகல பாக்கியமும், அரளிஇலையால் அர்ச்சனை செய்தால் அன்பும், அரச இலையால் அர்ச்சனை செய்தால் எதிரி நாசமும், எருக்கு இலையால் அர்ச்சனை செய்தால் குழந்தைப்பேறும் கிடைக்கும்.

8 ன் சிறப்பு:

8 என்ற எண் நலன் பயக்கும் எண்ணே ஆகும்.
பகவான் கிருஷ்ணன் 8வது மகனாக அஷ்டமி திதியில் பிறந்தார்.
8வது அவதாரம் தான் கிருஷ்ணர் அவதாரம்.
மனிதனின் உயரம் அவரது கையால் 8 சாண் ஆகும்.
சூரிய கதிர் பூமியை அடைய 8 நிமிடம் ஆகிறது.
ஜாதகத்தில் எட்டாம் இடம் ஆயுள் ஸ்தானமாகும்.
சிவனின் குணங்கள் 8 - எட்டு வீரச்செயல்கள் நடந்தன. 8 வீரட்டத் தலங்கள் ஆகும்.
முனிவர்கள் அடையும் சித்தி 8, ஐஸ்வரியம் 8, திசையும் 8, விக்ரகங்கட்கு சார்த்துவது அஷ்டபந்தனம் என்னும் 8 வகை மூலிகைகளால் ஆன மருந்து ஆகும்.
ஈஸ்வரன் என பின் பெயர் பட்டம் பெற்ற சனியின் ஆதிக்க எண் 8.

அஷ்டபந்தனம்

அஷ்டபந்தனம் என்பது கோயிலில் சுவாமி சிலைகளை பீடத்தில் பொருத்த பயன்படும் ஒரு கலவை ஆகும். இது மூன்று வகையாக உள்ளன.
1. ஏஜகபந்தனம் - என்பது வெள்ளி உலோகத்தால் செய்யப்பட்டவை
2. ஸ்வர்ணபந்தனம் - என்பது தங்கத்தால் செய்வது
3. அஷ்டபந்தனம் என்பது அரக்கு, சுக்காங்கல், குங்குலியம், ஜாதிலிங்கம், செம்பஞ்சு, வெண்ணை, மஞ்சள் மெழுகு, பச்சை கற்பூரம் ஆகியவற்றால் ஆனது.

16 செல்வங்கள்

பெரியவர்கள் வாழ்த்தும் போது 16ம் பெற்று பெருவாழ்வு வாழ்க என வாழ்த்துவார்கள். இது கீழ்கண்ட 16 வகையான செல்வங்களைக் குறிக்கும். வாழ்க்கையில் நமக்கு வழிகாட்டக்கூடிய கல்வி, நீண்ட ஆயுள், நம்பிக்கைக்கு உரிய நண்பர்கள், வாழ்க்கைக்கு தேவையான செல்வம், உழைப்புக்கு தேவையான ஊதியம், நோயற்ற வாழ்க்கை, எதற்கும் கலங்காத மனவலிமை, அன்புள்ள கணவன் மனைவி, அறிவு ஒழுக்கம் ஆற்றல் கொண்ட குழந்தைகள், மேன்மேலும் வளரக்கூடிய புகழ், மாறாத வார்த்தை, தடங்கலில்லாத வாழ்க்கை, வருவாயைச் சிக்கனமாக செலவழித்து சேமிப்பு அதிகரித்தல், திறமையான குடும்ப நிர்வாகம், நமக்கு உதவக்கூடிய பெருமக்களின் தொடர்பு, பிற உயிர்களிடம் அன்பு செலுத்துதல்.

பழந்தமிழரின் அளவு முறைகள்

கால அளவுகள்:

அறுபது வினாடி - ஒரு நாழிகை, இரண்டரை நாழிகை - ஒரு மணி, மூன்றே முக்கால் நாழிகை - ஒரு முகூர்த்தம், அறுபது நாழிகை - ஒரு நாள், ஏழரை நாழிகை - ஒரு சாமம், ஒரு சாமம் - மூன்று மணி, எட்டு சாமம் - ஒரு நாள், நான்கு சாமம் - ஒரு பொழுது, ரெண்டு பொழுது - ஒரு நாள், பதினைந்து நாள் - ஒரு பக்ஷம், ரெண்டு பக்ஷம் - ஒரு மாதம், ஆறு மாதம் - ஒரு அயனம், ரெண்டு அயனம் - ஒரு ஆண்டு, அறுபது ஆண்டு - ஒரு வட்டம்.
Read more ...

யோகாசனம்

Friday, January 1, 2010
யுஜ்" என்ற சமஸ்கிருத சொல்லில் இருந்தே யோகா என்ற சொல் பிறந்தது.

யுஜ் என்றால் மனம், உடல் மற்றும் ஆன்மாவின் ஒன்றிப்பு என்று பொருள்.
யோகாவின் தந்தை எனக் கூறப்படும் பதஞ்சலி "யோக சூத்திரங்கள் என்ற நூலில் யோகாவிற்கு 195 வழிகாட்டி நெறிகளை வழங்கியுள்ளார்.

யோகா என்ற சொல் வடமொழி வேர்ச்சொல்லான யுஜ் என்பதிலிருந்து வந்தது. இதன் அர்த்தம் இணைப்பது, சேர்ப்பது, பிணைப்பது, அதாவது ஒருவரின் கவனத்தை ஒருமுகப்படுத்துவது. இதற்கு சங்கமம் என்ற பொருளும் ஒன்று கலத்தல் என்ற பொருளும் உண்டு.

உடல்,மனம், உணர்ச்சிகள், ஆன்மா ஆகியவற்றை ஒன்றிணைப்பது அல்லது ஒருமுகப்படுத்துவதே யோகக் கலை. உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, மன அழுத்தங்களை குறைத்து அமைதி தருவது.

இலக்கின்றி அலையும் மானுட வாழ்வில் இலக்கை நிர்ணயித்து சேர வேண்டிய இலக்கில் கொண்டு போய்ச் சேர்க்க யோகா ஒரு சிறந்த ஆன்மீக மார்க்கமாகும். நாம் அறியாத சாலைகளில் நடந்து செல்லும்போது நம் இலக்கை அறிய சாலையில் உள்ள வழிகாட்டிகளை பின்பற்றிச் செல்வோம், அது போலவே ஆன்மீக வாழ்வில் இலக்கை எட்ட யோகாவின் குறிகளை பின்பற்றவேண்டியது அவசியம். அந்த குறிகளில் மூன்றுதான் சுகாதாரமான வாழ் நெறி, அற நெறி, ஒழுக்க ரீதியான சுயக் கட்டுப்பாடு ஆகியனவாகும்.

இந்த மூன்று விதிகளையும் கடைபிடிப்பதால் ஏற்படும் விளைவுகள் அசாத்தியமானது. இந்த கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும் எந்த ஒரு மனிதனும் தன் மனதை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும். இது நமது ஆன்மீகச் சிந்தனையை திறக்கும். மனமும், ஆன்மாவும் ஒத்திசைவு கொண்டால், உடலும் அதற்குக் கட்டுப்பட்டு இயங்கும்.

யோக மார்க்கத்தை கடைபிடிக்க துவங்கினால் நாளடைவில் ஒருவர் தனது மன நிலையில் ஏற்படும் அதிசய மாற்றங்களை நன்றாக உணர முடியும். மாறும் வாழ் நெறி இந்த மாற்றங்களை நமக்கு அறிவுறுத்தும்.

யோகாவின் அடிப்படை :

யோக மார்க்கத்திற்கு இரண்டு அசைக்க முடியாத அடிப்படைகள் உண்டு. அவை பௌதிகம் மற்றும் ஆன்மீகம். பெளதிக மட்டத்தில் ஆசனங்கள், கிரியைகள், பிராணாயாமங்கள் ஆகியவற்றுடன் 4 முத்திரைகளும் உள்ளது. இந்த யோகப் பயிற்சிகளை முறையாக பயிற்சி செய்தால் உடலையும் அதனுடன் மனத்தையும் ஆன்மீக முன்னேற்றத்திற்கு தயார்படுத்தும்.

ஆன்மீக வெளிப்பாடு என்பது சுய அறிதல் மற்றும் மனக் கட்டுப்பாடு. இவற்றை அடைந்ததற்கான மூர்த்திகரமே யோகா குரு என்பவர்.
Read more ...

மிகச் சிறந்த வழிதான் யோகா!!!

Friday, January 1, 2010
மருத்துவமனைப் பக்கம் பெரும்பாலும் போகாமலும், மருந்துகளை நாடாமலும் நலமுடன் வாழ்வதற்கு மிகச் சிறந்த வழிதான் யோகா.

பல்வேறு வகையான நோய்களுக்கும் கடைப்பிடிக்க வேண்டிய வெவ்வேறு வகையான யோகாசனங்கள் இருக்கின்றன. ஆனால், நாமாக ஓர் ஆசனத்தைக் கற்றுக் கொண்டு பயிற்சி செய்வது சரியல்ல; யோகாசனங்களுக்கு பல விதிமுறைகள் உள்ளன. எனவே சிறந்த யோகப் பயிற்சி ஆசிரியரையே அணுக வேண்டும்.

உணவில் கட்டுப்பாடு!

எல்லா நாட்களும் யோகாசனத்தைச் செய்வது மட்டுமின்றி, உணவிலும் கவனம் செலுத்துவதே சிறந்தது.

காலையில் யோகாசனம் செய்யும்போது மனதிற்கும் உடம்பிற்கும் கிடைக்கின்ற உற்சாகம், நம்முடைய அன்றாட வேலைகளை நன்றாகச் செய்ய வழிவகுக்கும்.

எனவே, சிறந்த யோகா பயிற்சி ஆசிரியரின் ஆலோசனைகளுடன் யோகப் பயிற்சியினை அன்றாடம் மேற்கொண்டு நலமுடன் வாழ்வதற்கு சிறந்த வழிதான் யோகா.
Read more ...

அதிகாலை

Friday, January 1, 2010
ஆயுள். ஆரோக்கியத்திற்கு யோகாசன பயிற்சி ஒரு அற்புத கலையாகும்

யோகாசன பயிற்சியின் மூலம் ஜீரண மண்டலம். கழிவு மண்டலம். இரத்த ஓட்ட மண்டலம். சுவாச மண்டலம். மூளை-நரம்பு மண்டலம். சுரப்பிகள் அனைத்தும் மிக துலóலியமாக இயங்குகின்றன, நாடி நரம்புகள். எலும்புகள். தசைகள் மற்றும் உடம்பில் உள்ள ஒவ்வொரு திசுக்களும் நன்கு வலிமை பெறுகின்றன,

யோகாசனம் அதிகாலை சூரியன் உதயம் ஆகும்போது செய்தால் நல்லது. சூரியன் அதிக உக்கிரமாக இருக்கும்போது யோகாசனம் செய்தால் பலன் கிடைக்காது. அதிகாலை 5 மணியிலிருந்து 7 மணிக்குள்ளும் மாலை 5.30 மணிக்குமேல் 7 மணிக்குள்ளும் செய்தால் நல்லது.

யோகாசனம் செய்வதற்கு வயது வரம்பு கிடையாது. எந்த வயதிலும் யோகாசனம் செய்யலாம். வயது அதிகமானவர்கள் நேரத்தை மிகவும் குறைத்து யோகாசனம் செய்யவேண்டும்.

சாப்பிட்ட பிறகு கண்டிப்பாக 5 மணி நேரமாவது சென்ற பிறகுதான் யோகாசனப் செய்யவேண்டும். அதிகாலை யோகாசனம் செய்வது நல்லது. புதிதாகப் பழகுபவர்கள் மாலையில் செய்யலாம். காலையில் செய்யும்போது காலைக்கடன்களை முடித்துவிட்டு அதாவது மலம் வெளியேறிய பின் செய்வது நல்லது.

காலையில் எழுந்து 2 டம்ளர் பச்சைத் தண்ணீர் குடிக்க வேண்டும். இப்பழக்கத்தை மேற்கொண்டால் காலையில் கண்டிப்பாக மலம் வெளியேறிவிடும். அப்படியும் வெளியேறாவிடில் யோகாசனம் செய்யலாம் ஆரம்பித்த சில விநாடிகளில் மலம் வெளியேற உணர்ச்சி வரும். அப்போது மலம் வெளியேறிய பின் மீண்டும் வந்து யோகாசனம் செய்யலாம்.
Read more ...