பட்டினத்தார் பாடல்கள்

Friday, July 16, 2010
அன்னை எத்தனை எத்தனை அன்னையோ?
அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ?
பின்னை எத்தனை எத்தனை பெண்டீரோ?
பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ?
முன்னை எத்தனை எத்தனை சன்மமோ?
மூடனாயடி யேனும றிந்திலேன்,
இன்ன மெத்தனை யெத்தனை சன்மமோ?
என்செய் வேன்? கச்சியேகம்ப நாதனே?

நினைமின் மனனே! நினைமின் மனனே!
சிவபெரு மானைச் செம்பொனம் பலவனை
நினைமின் மனனே! நினைமின் மனனே!
அலகைத் தேரி னலமரு காலின்
உலகப்பொய் வாழ்க்கையை யுடலையோம் பற்க! 5

பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்;
தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்;
பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்;
உணர்ந்தன மறக்கும், மறந்தன வுணரும்;
புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்; 10

அருந்தின மலமாம், புனைந்தன அழுக்காம்;
உவப்பன வெறுப்பாம், வெறுப்பன உவப்பாம்;
என்றிவை யனைத்து முணர்ந்தனை, அன்றியும்
பிறந்தன பிறந்தன பிறவிக டோறும்
கொன்றனை யனைத்தும், அனைத்துநினைக் கொன்றன, 15

தின்றன யனைத்தும், அனைத்துநினைத் தின்றன;
பெற்றன யனைத்தும், அனைத்துநினைப் பெற்றன;
ஓம்பினை யனைத்தும், அனைத்துநினை யோம்பின;
செல்வத்துக் களித்தனை, தரித்திரத் தழுகினை;
சுவர்க்கத் திருந்தினை, நரகிற் கிடந்தனை, 20

இன்பமும் துன்பமும் இருநிலத் தருந்தினை;
ஒன்றென் றெழியா துற்றனை, அன்றியும்;
புற்பதக் குரம்பைத் துச்சி லொதுக்கிடம்
என்ன நின்றியங்கு மிருவினைக் கூட்டைக்
கல்லினும் வலிதாக் கருதினை, இதனுள், 25

பீளையு நீரும் புலப்படு மொருபொறி;
மீளுங் குறும்பி வெளிப்படு மொருபொறி;
சளியு நீருந் தவழு மொருபொறி;
உமிழ்நீர் கோழை யழுகு மொறிபொறி;
வளியு மலமும் வழங்கு மொருவழி 30

சலமுஞ் சீயுஞ் சரியு மொருவழி;
உள்ளுறத் தொடங்கி வெளிப்பட நாறுஞ்
சட்டக முடிவிற் சுட்டெலும் பாகும்
உடலுறு வாழ்க்கையை யுள்ளுறத் தேர்ந்து,
கடிமலர்க் கொன்றைச், சடைமுடிக் கடவுளை 35

ஒழிவருஞ் சிவபெரும் போகவின் பத்தை;
நிழலெனக் கடவா நீர்மையடு பொருந்தி,
எனதற நினைவற இருவனை மலமற
வரவொடு செலவற மருளற இருளற
இரவொடு பகலற இகபர மறஒரு 40

முதல்வனைத் தில்லையுண் முளைத்தெழுஞ் சோதியை
அம்பலத் தரசனை, ஆனந்தக் கூத்தனை,
நெருப்பினி லரக்கென நெக்குநெக் குருகித்
திருச்சிற் றம்பலத் தொளிருஞ் சிவனை
நினைமின் மனனே! நினைமின் மனனே! 45

சிவபெருமானைச் செம்பொனம் பலவனை,
நினைமின் மனனே! நினைமின் மனனே!



காடே திருந்தென்ன? காற்றே புசித்தென்ன? கந்தைகற்றி
யோடே யெடுத்தென்ன? உள்ளன்பி லாதவ ரோங்குவிண்ணோர்
நாடே யிடைமரு தீசர்க்கு மெய்யன்பர் நாரியர்பால்
வீடே யிருப்பனு மெய்ஞ்ஞான வீட்டின்ப மேவுவரே. 1

தாயும்பகை; கொண்ட பெண்டீர் பெரும்பகை; தன்னுடைய
சேயும்பகை; யுறவோரும் பகை; யிச்செகமும் பகை;
ஆயும் பொழுதி லருஞ்செல்வம் நீங்கில்! இக்காதலினாற்
தோயுநெஞ்சே, மருதீசர் பொற்பாதஞ் சுதந்திரமே. 2

திருக்கழுக்குன்றம்

காடோ? செடியோ? கடற்புறமோ? கனமேமிகுந்த
நாடோ? நகரோ? நகர்நடுவோ? நலமேமிகுந்த
வீடோ? புறத்திண்ணையோ? தமியேனுடல் வீழுமிடம்,
நீடோய் கழுக்குன்றி லீசா, உயிர்த்துணை நின்பதமே.


ஐயிரண்டு திங்களாய் அங்கம் எல்லாம் நொந்துபெற்றுப்
பையல் என்ற போதே பரிந்து எடுத்துச் - செய்ய இரு
கைப்புறத்தல் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி.

முந்தித் தவம்கிடந்து முந்நூறு நாள் சுமந்தே
அந்திபகலாச் சிவனை ஆதரித்துத் - தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்.

வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்து என்னைக் காதலித்து - முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டு வேன்.

நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்தி முலை
தந்து வளர்த்து எடுத்துத் தாழாமே - அந்திபகல்
கையிலே கொண்டு என்னைக் காப்பாற்றும் தாய் தனக்கோ
மெய்யில் தீமூட்டு வேன்.

அரிசியோ நான் இடுவேன் ஆத்தாள் தனக்கு
வரிசை இட்டுப் பார்த்து மகிழாமல் - உருசி உள்ள
தேனே அமிர்தமே செல்வத் திரவியப்பூ
மகனே என அழைத்த வய்க்கு.

அள்ளி இடுவது அரிசியோ தாய்தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் - மெள்ள
முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்
மகனே என அழைத்த வய்க்கு.


விருத்தம்:
முன்னை இட்ட தீ முப்புரத்திலே
பின்னை இட்ட தீ தென் இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்க மூள்கவே.

வெண்பா:
வேகுதே தீ அதனில் வெந்து பொடிசாம்பல்
ஆகுதே பாவியேன் ஐயகோ - மாகக்
குருவி பறவாமல் கோதாட்டி என்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை.

வெந்தாளோ சோணகிசி வித்தகா நின்பதத்தில்
வந்தாளோ என்னை மறந்தாளோ - சந்த்தமும்
உன்னையே நோக்கி உகந்து வரம்கிடந்து
என்தன்னையே ஈன்று எடுத்த தாய்.

வீற்றிருந் தாள் அன்னைவீதி தனில் இருந்தாள்
நேற்று இருந்தாள் இன்று வெந்து நீறு ஆனாள்- பால் தெளிக்க
எல்லாரும் வாருங்கள் ஏது என்று இரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம்.

உடற் கூற்று வண்ணம்:
ஒருமடமாதும் ஒருவனும் ஆகி
இன்ப சுகம் தரும் அன்பு பொருத்தி
உணர்வு கலங்கி ஒழுகிய விந்து
ஊறு சுரோணித மீது கலந்து

பனியில் ஓர்பாதி சிறுதுளி மாது
பண்டியில் வந்து புகுந்து திரண்டு
பதுமம் அரும்பு கமடம் இதென்று
பார்வை மெய்வாய்செவி கால்கைகள் என்ற

உருவமும் ஆகி உயிர் வளர் மாதம்
ஒன்ப்தும் ஒன்ற்ம் நிறைந்து மடந்தை
உதரம் அகன்று புவியில் விழுந்து
யோகமும் வாரமும் நாளும் அறிந்து

மகளிர்கள் சேனை தராணை ஆடை
மண்பட உந்தி உடைந்து கவிழ்ந்து
மடமயில் கொங்கை அமுதம் அருந்தி
ஓர் அறிவு ஈர் அறிவாகி வளர்ந்து

ஒளிந்கை ஊறல் இதழ்மடவாரும்
உகவந்து முகந்திட வந்து தவழ்ந்து
மடியில் இருந்து மழழை மொழிந்து
வா இரு போ என நாமம் விளம்ப

உடைமணி ஆடை அரைவடம் ஆட
உண்பவர் தின்பவர் தங்களொடு உண்டு
தெருவில் இருந்து புழுதி அளைந்து
தேடிய பாலரொடு ஓடி நடந்து
அஞ்சு வயதாகி விளையாடியே

உயர்தரு ஞான குரு உபதேச
முந்தமிழின் கலையும் கரைகண்டு
வளர்பிறை என்று பலரும் விளம்ப
வாழ்பதினாறு பிராயமும் வந்து

மயிர்முடி கோதி அறுபத நீல
வண்டு இமிர் தண்தொடை கொண்ட புனைந்து
மணிபொன் இலக்கு பணிகள் அணிந்து
மாகதர் போகதர் கூடிவணங்க

மதனசொரூபன் இவன் எனமோக
மங்கையர் கண்டு மருண்டு திரண்டு
வரிவிழி கொண்டு கழிய எறிந்து
மாமயில் போல் அவர் போவது கண்டு

மனது பொறாமல் அவர் பிறகு ஓடி
மங்கல செங்கல சந்திகழ் கொங்கை
மருவமயங்கி இதழ் அமுதுண்டு
தேடிய மாமுத்ல் சேர வழங்கி

ஒருமுதல் ஆகி முதுபொருளாய்
இருந்த தனங்களும் வம்பில் இழந்து
மதன சுகந்த வதனம் இது என்று
வாலிப கோலமும் வேறு பிரிந்து

வளமையும் மாறி இளமையும் மாறி
வன்பல் விழுந்து இருகண்கள் இருண்டு
வயதுமுதிர்ந்து ந்ரைதிரை வந்து
வாதவிரோத குரோத்ம் அடைந்து
செங்கையினில் ஓர் தடியுமாகியே

வருவது போவது ஒருமுதுகூனு
மந்தி எனும்படி குந்தி ந்டந்து
மதியும் அழிந்து செவிதிமிர் வந்து
வாய் அறியாமல் விடாமல் மொழிந்து

துயில் வரும் நேரம் இருமல் பொறாது
தொண்டையும் நெஞ்சும் உலர்ந்து வறண்டு
துகிலும் இழந்து கணையும் அழிந்து
தோகையர் பாலகர்கள் ஓரணி கொண்டு

கலியுகம் மீதில் இவர் மரியாதை
கண்டிடும் என்பவர் சஞ்சலம் மிஞ்ச
கலகல என்று மலசலம் வந்து
கால்வழி மேல்வழி சாரநடந்து

தெளிவும் இராமல் உரைதடுமாறி
சிந்தையும் நெஞ்சும் உலைந்து மருண்டு
திடமும் அழிந்து மிகவும் அலைந்து
தேறிந்ல் ஆதரவு ஏது என நொந்து

மறையவன் வேதன் எழுதியவாறு
வந்தது கண்டமும் என்று தெளிந்து
இனியென கண்டம் இனி என தொந்தம்
மேதினி வாழ்வு நிலாதினி நின்ற

கடன்முறை பேசும் என உரைநாவு
தங்கிவிழுந்து கைகொண்டு மொழிந்து
கடைவழி கஞ்சி ஒழுகிடவந்து
பூதமுநாலு சுவாசமும் நின்று
நெஞ்சு தடுமாறி வரும் நேரமே

வளர்பிறை போல எயிரும் உரோம
முச்சடையும் சிறுகுஞ்சியும் விஞ்சு
மகதும் இருண்ட வடிவும் இலங்க
மாமலை போல் யமதூதர்கள் வந்து

வலைகொடு வீசி உயிர்கொடு போக
மைந்தரும் வந்து குனிந்தழ நொந்து
மடியில் விழுந்து ம்னைவி புலம்ப
மாழ்கினரே இவ காலம் அறிந்து

பழையவர் காணும் எனும் அயலார்கள்
பஞ்சு பறந்திட எஇன்றவர் பந்தர்
இடும் எனவந்து பறையிடமுந்த
வேபிணம்வேக விசாரியும் என்று

பலரையும் ஏவி முதியவர்தாம்இ
ருந்தசவம்கழு வுஞ்சிலர் என்று
பணிதுகில் தொஞ்கல் களபம் அணிந்து
பாவகமே செய்து நாறும் உடம்பை

வரிசை கெடாமல் எடும் எனஓடி
வந்து இளமைந்தர் குனிந்து சுமந்து
கடுகி நடந்து சுடலை அடைந்து
மானிட வாழ்வென வாழ்வென நொந்து

விறகுஇடை மூடிஅழள் கொடுபோட
வெந்து விழுந்து முறிந்துநிணங்கள்
உருகி எலும்பு கருகி அடங்கி
ஓர்பிடி நீறும் இலாத உடம்பை
நம்பும் அடியேனை இனி ஆளுமே
Read more ...

சிவ ஸ்தோத்திரம்

Friday, July 16, 2010
ஓம் சிவாய நம

ஓம் மஹேச்வராய நம

ஓம் சாம்பவே நம

ஓம் பிநாகினே நம

ஓம் சசிசேகராய நம

ஓம் வாமதேவாய நம

ஓம் விரூபாக்ஷாய நம

ஓம் கபர்த்தினே நம

ஓம் நீலலோஹிதாய நம

ஓம் சங்கராய நம

ஓம் சூலபாணயே நம

ஓம் கட்வாங்கினே நம

ஓம் விஷ்ணுவல்லபாய நம

ஓம் சிபிவிஷ்டாய நம

ஓம் அம்பிகாநாதாயநம

ஓம் கண்டாய நம

ஓம் பக்தவத்ஸலாய நம

ஓம் பவாய நம

ஓம் சர்வாய நம

ஓம் த்ரிலோகேசாய நம

ஓம் சிதிகண்டாய நம

ஓம் சிவாப்பிரியாய நம

ஓம் உத்தராய நம

ஓம் கபாலினே நம

ஓம் காமாரயே நம

ஓம் அந்தகாஸூரஸூதனாய நம

ஓம் கங்காதராய நம

ஓம் லலாடாஷாய நம

ஓம் காலகாலாய நம

ஓம் க்ருபாநிதயே நம

ஓம் பீமாய நம

ஓம் பரசுஹஸ்தாய நம

ஓம் ம்ருகபாணயே நம

ஓம் ஜடாதராய நம

ஓம் கைலாஸவாஸினே நம

ஓம் கவசினே நம

ஓம் கடோராய நம

ஓம் த்ரிபுராந்தகாய நம

ஓம் வ்ருஷாங்காய நம

ஓம் வ்ருஷபாரூடாய நம

ஓம் பஸ்மோத்தூலித-விக்ரஹாய நம

ஓம் ஸாமப்ரியாய நம

ஓம் ஸ்வரமயாய நம

ஓம் த்ரயிமூர்த்தயே நம

ஓம் அநீச்வராய நம

ஓம் ஸர்வஜ்ஞாய நம

ஓம் பரமாத்மனே நம

ஓம் ஸோமஸூர்யாக்னிலோசனாய நம

ஓம் ஹவிஷே நம

ஓம் யஜ்ஞ்மயாய நம

ஓம் ஸோமாய நம

ஓம் பஞ்சவக்த்ராய நம

ஓம் ஸதாசிவாய நம

ஓம் விஸ்வேஸ்வராய நம

ஓம் வீரபத்ராய நம

ஓம் கணநாதாய நம

ஓம் ப்ரஜாபதயே நம

ஓம் ஹிரண்யரேதஸே நம

ஓம் துர்த்தர்ஷாய நம

ஓம் கிரீசாய நம

ஓம் கிரிசாய நம

ஓம் அநகாய நம

ஓம் புஜங்கபூஷணாய நம

ஓம் பர்க்காய நம

ஓம் கிரிதன்வனே நம

ஓம் கிரிப்பிரியாய நம

ஓம் க்ருதிவாஸஸே நம

ஓம் புராராதயே நம

ஓம் பகவதே நம

ஓம் ப்ரமதாதிபாய நம

ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம

ஓம் ஸூக்ஷ்மதனவே நம

ஓம் ஜகத்வ்யாபினே நம

ஓம் ஜகத்குருவே நம

ஓம் வ்யோமகேசாய நம

ஓம் மஹாஸேனஜனகாய நம

ஓம் சாருவிக்ரமாய நம

ஓம் ருத்ராய நம

ஓம் பூதபதயே நம

ஓம் ஸ்தாணவே நம

ஓம் அஹயேபுத்ன்யாய நம

ஓம் திகம்பராய நம

ஓம் அஷ்டமூர்த்தியே நம

ஓம் அனேகாத்மனே நம

ஓம் ஸாத்வீகாய நம

ஓம் சுத்தசிக்ரஹாய நம

ஓம் சாச்வதாய நம

ஓம் கண்டபரசவே நம

ஓம் அஜாய நம

ஓம் பாகவிமோசகாய நம

ஓம் ம்ருடாய நம

ஓம் பசுபதயே நம

ஓம் தேவாய நம

ஓம் மஹாதேவாய நம

ஓம் அவ்யயாய நம

ஓம் ஹாயே நம

ஓம் பூஷ்தந்தபிதே நம

ஓம் அவ்யக்ராய நம

ஓம் தஷாத்வரஹராய நம

ஓம் ஹராய நம

ஓம் பகநேத்ரபிதே நம

ஓம் அவ்யக்தாய நம

ஓம் ஸகஸ்ரபதே நம

ஓம் அபவர்க்கப்ரதாய நம

ஓம் அனந்தாய நம

ஓம் தாரகாய நம

ஓம் பரமேஸ்வராய நம



திருச்சிற்றம்பலம்
Read more ...

தேரும் அதன் சிறப்பும்

Friday, July 16, 2010
வடமொழியில் இரதம் என்று சொல்லப்படுவதே தமிழில் தேர் என்று வழங்குகிறது. இது சிறப்பாக அரசர்களின் ஊர்தியைக் குறித்து நிற்கிறது.

தேர் பற்றி திருக்குறளிலும் பல்வேறு செய்திகள் உண்டு. உதாரணமாக “உருள்பெரும் தேர்க்கு அச்சாணி அன்னார்” (குறள் 667) என்று வள்ளுவர் உவமை கூறக்காணலாம். எனினும் இரதம் என்ற சொல்லாட்சி; பொலிவும், விரைந்த செயலும் உள்ள அனைத்தையும் குறிக்கும் சொல்லாக உள்ளது. ஆனால் தமிழ் இலக்கிய வழக்கில் கானல் நீரை, ‘பேய்த்தேர்’ என்றும் ரோகிணி நட்சத்திரத்தை ‘தேர்’ என்ற வினைச் சொல்லாலும் சூடாமணி நிகண்டு குறிப்பிடக் காணலாம்.

வானில் பறக்கும் விமானங்களை ஆகாசரதம் என்றும் மனவியல் கற்பனைத்திறனை மனோரதம் என்றும் அறிவாற்றலை ஞானரதம் என்றும் சிறந்த தர்க்கத்தை வாதரதம் என்றும் கூறுவர். எருதுகளால் இழுக்கப்படுவதை ‘கோரதம்’ என்றும் குறிப்பிடுவர். இதனை கொல்லா வண்டி என்றும் கூறுவர். ஸ்ரீமந் நாராயணன் எழுந்தருளும் கருடத்தாழ்வாரை ‘விஷ்ணுரதம்‘ என்றும் முருகனின் மயிலை ‘ஸ்கந்தரதம்’ என்றும் அழைக்கும் வழக்கமும் உண்டு. மஹாதிரிபுர சுந்தரியாகிய அம்பாள் எழுந்தருள்வது ‘ஸ்ரீ சக்ரரதம்’ என்பர். தமிழிலுள்ள ஆண்பாற் பிள்ளைத்தமிழில் ‘சிறுதேர் உருட்டல்’ என்று ஒரு பருவம் இருப்பதும் சித்திரக்கவி மரபில் ‘இரதபந்தம்’ என்ற ஒரு வகை இலக்கியம் இருப்பதும் ஈண்டு சிந்திக்கத் தக்கது.

இலக்கியங்களில் தேர்
கடோபநிஷதத்தில் மனிதனின் உடலைத் தேராகவும் உயிரைத் தேர்த்தலைவனாகவும் புலன்களைக் குதிரைகளாகவும் புத்தியைத் தேர்ப்பாகனாகவும் புலன் சார் விடயங்களைத் தேரோடும் வீதியாகும் உவமித்திருக்கும் முற்றுருவகம் ஒன்றைக் காணலாம். இது போலவே கிரேக்க உரோம நாகரிகங்களிலும் தேர் சிறப்பிடம் பெறுவதை அவர்களின் இலக்கியங்களினூடே அவதானிக்க முடிகின்றது.

ஸ்ரீ ருத்திர பூர்வ பாகமாகிய நமகத்தில்
ரதிப்யோ ரதேப்யச்ச வோநமோ நமோ ரதேப்ய:
ரதபதிப்யச்ச வோநமோ நமோ

என்று வருவதும் குறிக்கத்தக்கது.
அதாவது, “தேர்களாகவும் (ரதேப்ய:) தேர்வலவர்களாகவும் (ரதபதிப்யச்ச) உள்ள ஸ்ரீ பரமேஸ்வரனாகிய பகவானுக்கு முன்னும் பின்னும் நமஸ்காரம்,” என்கிறது.

சங்ககாலத்தில் மன்னர்கள் புலவர்களுக்கு தேர்களைப் பரிசாக வழங்கியதாகச் செய்திகள் உண்டு. இத்தகு செயல்கள் தேர்வண்மை எனப்படும்.
கறங்கு மணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த
புரந்தோங்கு சிறப்பிற் பாரி (புறம் 200)

“பொலந்தேர் மிசைப் பொலிவு தோன்றி” (புறம் 4)
இதைத் திருமூலர் தனது திருமந்திரத்தில்
அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்
முப்புரமாவது மும்மலக் காரியம்
அப்புரம் எய்தமை ஆரறிவாரே. என்கிறார்.

இது தொடர்பில் அழித்தல் தொழிலை வெளிப்படுத்தும் தேர்த்திருவிழாவில் புதுமணத்தம்பதியர் கலந்து கொள்ளக் கூடாது என்றோர் மூடநம்பிக்கை சாதாரண மக்களிடம் புரையோடிப் போயிருக்கவும் காணலாம். ஆனால் அழித்தல் என்பது மும்மலங்களாகிய எம்மிடமுள்ள கெட்ட ஆணவாதி மலங்களையே என்பது நினைவில் கொள்ள வேண்டியது. (மலங்கள்தான் எமது ஆசைகளைத் தூண்டி எமையெல்லாம் இம்மையில் ஆட்டிப் படைக்கின்றன. அவை அற்றுப் போய்விட்டால் இல்லற வாழ்கை சிறக்காது என்பதனால் போலும்)

மஹாபாரத்தில் ஸ்ரீ கிருஷ்ணன் அர்ஜுனனின் ரதசாரதியாக இருந்து உபதேசித்த பகவத்கீதை பிரஸ்தானத்திரயங்களுள் ஒன்றாகும் பெருமை பெற்றுள்ளது. காஞ்சி கச்சியப்ப சிவாச்சாரியார் பாடிய கந்தபுராணத்தில் தேர் பற்றிய பலஅபூர்வ செய்திகள் உண்டு. சூரபத்மனுக்கு அவனது தவத்தின் பொருட்டு சிவபெருமான் வழங்கிய தேரின் பெயர் ‘இந்திரஞாலம்’. இது “உண்ணிலா மாயை வல்ல ஒரு தனித்தேர்” என்று சிவாச்சாரியார் குறிப்பிடுவார். அதாவது தானியங்கி நிலையில் மிகுந்த சாமர்த்தியமுடையது இப்பெரும் தேர் என்று குறிக்கப்படுகிறது. பாரத்வாஜர் எழுதிய ‘யந்திர சர்வாஸ்தா’ என்ற இந்து சிற்ப இயந்திர சாஸ்திரம் இருப்பதாகக் கூறுப்படுவதும் சிந்திக்கத் தூண்டுகிறது

தேரின் பாகங்கள்
தேரின் சில்லிலிருந்து இறைவன் எழுந்தருளும் பீடம் வரையான பகுதி மூன்று பிரிவாகவோ ஐந்து பிரிவாகவோ வகுக்கப்பட்டு சிற்பங்கள் அமைக்கப்பட்டிருக்கும். இறைவன் காட்சிதரும் பகுதிக்கு மேலுள்ள சிகரம் தமிழகத்தில் ஆண்டு தோறும் வண்ணத்துணிகளால் அலங்கரிக்கப்பட்டு மூலாலய விமானத்தின் மறுவடிவம் போல அழகுறக்காட்சி தரும். இலங்கையில் இவ்வாறு வருடாந்தம் அமைக்காமல் நிரந்தரமாகவே மரக் கூட்டுவேலைப்பாடுகளால் மேல்த்தளத்தை அமைக்கும் வழக்கமும் இருப்பது குறிக்கத்தக்கது.

தேரை ஆக்கவல்லவர் ஸ்தபதி எனப்படுவார். திராவிட உத்தரமட்டம் மற்றும் முகபத்திரம் முதலிய கலை மரபுகள் இவற்றுக்கு உண்டு. பார்விதானம், உபபீடம், அதிஷ்டானம், கமலாகார பண்டிகை நராசனமட்டம், தேவாசனமட்டம், உபசித்தூர்மட்டம் போன்ற அங்கங்கள் இறைவனின் இருக்கைப்பகுதிக்குக் கீழும் இருக்கைப்பகுதியில் தேர்ச்சாரதி தேர்க்குதிரைகள் மற்றும் பவளக்கால்களும் மணிமண்டபமும் மேல்விதானம் யாளிகளாலும் சிம்மங்களாலும் தாங்கப்பெறுவதாய் முகபத்திரமடக்கை முதலிய அம்சங்களுடனும் அமைக்கப்படுவதைக் காணலாம்.
இவற்றை தமிழ் இலக்கண இலக்கியங்களில் முறையே தேரின் அச்சிலிருந்த பீடம் வரையான பாகங்களை ஆரக்கால் உருள் (சில்லு- சக்கரம்) கிடுகு (தேர்த்தட்டைச் சுற்றி அமைக்கப்படும் மரச்சட்டகம்- நிகண்டு) என்றெல்லாம் அழைப்பர். பீடப்பகுதியிலுள்ள தாமரை மொட்டு வடிவிலுள்ள அமைப்பை ‘கூவிரம்’ என்றும் தேரின் நுகக்காலையும் சிகரத்தையும் இணைக்கும் பகுதியை ‘கொடிஞ்சி’ என்றும் தேரின் வெளிப்பாகத்து நீண்டமேல் வளைவை ‘கொடுங்கை’ என்றும் தேரை அலங்கரிக்கக் கட்டும் சீலையை ‘தேர்ச்சீலை’ என்றும் தேரின் நடுவிடம் தேர்த்தட்டு அல்லது ‘தேர்த்தளம்’ என்றும் சில நிகண்டுகளில் ‘நாப்பண்’ என்றும் அழைப்பர்.

தேரின் மேற்றட்டைச் சுற்றியுள்ள மரக்கைப்பிடிச்சுவர் ‘பாகர்’ என்றும் தேரின் நடுவிலுள்ள பீடம் ‘பார்‘ என்றும் ‘வேதிகை’ என்றும் தேரில் ஏறுவதற்காக அமைக்கப்பட்ட மேடையை ‘பிரம்பு’ அல்லது ‘தேர்முட்டி’ என்றும் அழைப்பர். இதை வடமொழியில் ‘ரதாரோஹணமண்டபம்’ என்பதும் குறிப்பிட வேண்டியது. இது போலவே தேர்ச்சில்லை ‘தேர்வட்டை’ என்றும் குறிப்பிடப்படுகின்றது. தேர் ஓட்டுபவரை ‘தேர்ப்பாகன்’ என்றும் ‘தேர்வலவன்’ என்றும் கூறும் வழக்கம் உள்ளது.
தேர் - சைவ சித்தாந்த விளக்கம்

மந்திர கேசரி மலைகள் அச்சு: சூரிய சந்திரர் சில்லுகள்: ஷட்ருதுக்கள் சந்திகள்: பதினான்கு உலகங்கள் தட்டுகள்: ஆகாச ஆசனம்: நதிகள் கொடிகள்: மோட்ச உலகம் மேல்விரிவு: யாகங்கள் சட்டம்: நாள் திதி நட்சத்திரம் போன்றன குறுக்கு மரங்கள்: அஷ்ட பர்வதங்கள் தூண்கள்: அஷ்ட திக்கஜங்கள் தாங்கும் ஆதாரங்கள்: ஏழு கடல்கள் திரைச்சீலைகள்: உபவேதங்கள் மணிகள்: வாயுக்கள் படிகள்: நால்வேதங்கள் குதிரைகள்;: உச்சிக்குடை பிரம்மரந்திரம்: கலசம் சோடஷாந்தத்தானம்: ஆக தேரானது சிவரூபம்… என்கிறது சைவ சித்தாந்திகளின் கருத்து. அகோர சிவாச்சாரியார் பத்ததியின் அடிப்படையில் ‘ரதப்பிரதிஷ்டா பத்ததி’ என்ற ஒரு கிரந்த நூலும் அபூர்வமாக வழக்கில் இருப்பதாகத் தெரிகின்றது.

அதே போலவே தேர் பிண்டஸ்வரூபமாக
சக்கரங்கள் - தசவாயுக்கள்
முதலாம் அடுக்கு - கீழண்டம்
அச்சு - மூலாதாரம்
அதன் மேலே - சுவாதிஷ்டானம்
அதன் மேலே - மணிபூரகம் - நாபித்தானம்
பீடம் - அநாகதம் - ஹிருதயஸ்தானம் - பகவான் எழுந்தருளும் இடம்
மேலே - விசுத்தி –கழுத்துப்பகுதி
32 குத்துக்கால்கள் - 32 தத்துவங்கள்
மேலே - ஆஞ்ஞா
முடிப்பகுதி - பிரம்மரந்திரம் – சஹஸ்ரகமலம்

அமைகின்றது.
Read more ...

ஸ்ரீ வில்வம் 26

Monday, July 12, 2010
Read more ...

ஸ்ரீ வில்வம் 27

Monday, July 12, 2010
Read more ...

ஸ்ரீ வில்வம் 28

Monday, July 12, 2010
Read more ...

ஸ்ரீ வில்வம் 21

Monday, July 12, 2010
Read more ...

ஸ்ரீ வில்வம் 22

Monday, July 12, 2010
Read more ...

ஸ்ரீ வில்வம் 23

Monday, July 12, 2010
Read more ...

ஸ்ரீ வில்வம் 24

Monday, July 12, 2010
Read more ...

ஸ்ரீ வில்வம் 25

Monday, July 12, 2010
Read more ...

ஸ்ரீ வில்வம் 20

Monday, July 12, 2010
Read more ...

ஸ்ரீ வில்வம் 19

Monday, July 12, 2010
Read more ...

ஸ்ரீ வில்வம் 18

Monday, July 12, 2010
Read more ...

ரத்த அழுத்தமா

Sunday, July 11, 2010
நிறைய தண்ணீர் குடிப்பதால் பல்வேறு பலன்கள் இருப்பது நமக்குத் தெரியும். லேட்டஸ்டாக, ரத்த அழுத்தத்தை சீராக வைக்க, நரம்பு உறுதி, சக்தி அதிகரிப்புக்கு தண்ணீர் உதவுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவில் உள்ளது வண்டர்பில்ட் பல்கலைக்கழக மருத்துவ மையம். அதன் ஆராய்ச்சியாளர்கள் குழு, தேவையான அளவு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் மருத்துவ நன்மைகள் பற்றி ஆராய்ந்தனர். தண்ணீர் குடித்ததும் அது ரத்த தமனிகளில் அடைப்புகளை கரைந்து ஓடச் செய்வது ஆய்வில் தெரிய வந்தது. அதன்மூலம், உடலில் ரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப்படும்.

எனவே, ரத்த அழுத்த நோயாளிகள் மயக்கம், தலைசுற்றல், வாந்தி உணர்வு போன்ற அறிகுறிகளை உணர்ந்தால், ஒரு டம்ளர் குளிர்ந்த தண்ணீர் குடிப்பது நல்லது. அத்துடன், நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டையும் தண்ணீர் உறுதிப்படுத்துகிறது. அன்றாட வேலைகளின்போது ஏற்படும் சக்தி இழப்பை குறைக்கிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதுபற்றி வண்டர்பில்ட் பல்கலைக்கழக மருத்துவ மைய பேராசிரியர்கள் கூறுகையில்,

‘‘ரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வை தண்ணீர் ஏற்படுத்துவதும், நரம்பு மண்டலத்தை உறுதியாக்குவதும் தெரிய வந்துள்ளது. இந்த பிரிவில் கடந்த 10 ஆண்டுகளாக நடந்த ஆராய்ச்சிகளுக்கு வெற்றி கிடைத்துள்ளது’’ என்றனர்.
Read more ...

குருவின் அவசியம்

Sunday, July 11, 2010
குருவுக்கு மரியாதை செய்வோம்!


குருவே சிவமெனக் கூறினன் நந்தி குருவே சிவம் என்பது குறித்து ஓரார் குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும் குருவே உரை உணர்வு அற்றதோர் கோவே.

ஒரு வருடம் தவமிருப்பார் திருமூலர். ஒரு பாடலைப் பாடுவார். மீண்டும் தவத்தில் மூழ்குவார். ஒருவருடம் முடிந்ததும் தவத்தால் தாம் பெற்ற அனுபவத்தை ஒரு பாடலாகப் பாடுவார். அப்படி மூவாயிரம் ஆண்டுகள் தவமியற்றி மூவாயிரம் திருமந்திரப் பாடல்களை அருளிச் செய்தார்கள் திருமூல நாயனார்.

குருவின் அவசியம் பற்றி நாயனார் வழி நின்று மேலே உள்ள் பாடலைச் சிந்திப்போம்.

கடவுள் , மனித உருவத்தில் தம்மைத் தெரிவித்துக் கொள்ளும் பெரிய அவதாரங்களே குருமார்கள். அவர்களைக் கடவுளாகவே நினைத்துப் போற்ற வேண்டும்.குருமார்கள் எல்லாம் கடவுளின் பிரதிநிதிகள் என்றே கொள்ள வேண்டும். சிவபெருமானின் ஆணையை ஏற்று யிவ்வுலகிற்கு நலம் செய்வதற்காகவே பிறப்பெடுக்கும் புண்ணிய மூர்த்திகளே குருமார்கள். பழகிய யானையைக் கொண்டு புதிய யானையைப் பிடிப்பது போல, நம்மைப் போலவே மானிட வடிவம் தாங்கிக் கடவுளே நம்மை உய்விக்கக் குருவடிவில் வருவதாகக் கொள்ள வேண்டும்.

திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள், மணிவாசகப் பெருமான் போன்றவர்களில்லை என்றால் உலகில் அன்பு நெறி காணப்படுமா ?

கட்டையில் நெருப்புள்ளது. அந்த நெருப்பினை (ஒளியை) வெளியே கொண்டுவர, வேறு ஒரு கட்டை வேண்டும். வேறு ஒரு கட்டையுடன் சேர்த்து உரசும் பொழுது, கட்டையினுள்ளிருக்கும் நெருப்பு (ஒளி) வெளியே வருகிறது. அதைப்போல நம் உள்ளேயிருக்கும் ஆன்ம ஒளியை, வேறு மனித வடிவம் தாங்கி வரும் குருவால்தான் வெளியே கொண்டுவர முடியும்.

பசுவிடம் பால் பெறுவதற்கு கன்றுக்குட்டி அவசியமாதல் போல, சிவ பெருமானது திருவருளைப் பெறுவதற்குக் குருவருள் அவசியமாகும்.

சூரிய காந்தக் கல்லின் மீது சூரிய ஒளி பட்டவுடன் நெருப்பு எழுவது போல, குருவின் அருட்பார்வை நம்மீது பட்டவுடன் மெய்ஞானம் தோன்றும். குருவினால் யிப்பிறவியில் பெறும் ஞானம் (அறிவு) எடுக்கின்ற பிறவிகள் தோறும் தொடர்ந்து வருவதாகும்.

குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்க

"கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்ளுக" என்றும் திருமூல நாயனார் அறிவுறுத்துகின்றார். போலிகளைக் கண்டு ஏமாற வேண்டாம் என்பதேயிதன் உட்பொருள். பிறகு குருடும் குருடும் கூடிவிளையாடி குழியில் விழுந்தாற் போலாகிவிடும்.

குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார் குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர் குருடுங் குருடுங் குருட்டாட்டம் ஆடிக் குருடுங் குருடும் குழிவிழுமாறே

(குருட்டினை நீக்குதல்=அறியாமையை நீக்குதல்; குருடு=அறிவிலி; குழிவிழுதல்=துன்பத்திற்குள்ளாதல்)

அறியாமையைப் போகும் நல்லாசிரியரையே தேர்ந்தெடுக்க வேண்டும். அவர் தெளிவு பெற்றவராக யிருத்தல் வேண்டும். குரு என்பவர் வாழ்ந்து காட்டுபவர் ஆவார். அவர் வாழும் வாழ்க்கையே பாடமாக அமையும். குரு உலகத்தின் மீது பற்றற்றும், சிவத்தின் மீது மாறாத அன்பும் உடையவராகத் திகழ்வார். அவரால் உலகம் பல நன்மைகளை அடையும். அத்தகைய குருவின் திருமேனியைக் கண்டாலே புண்ணியம் என்கிறார் திருமூலர்.

தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமம் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தைக் கேட்டல் தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே.

மாதா, பிதாவால் நம் ஜனனம் நிகழ்கிறது. இந்த பிறப்பை அர்த்தமுள்ளதாகச் செய்பவர்கள் நம் ஆசிரியர்களே! குருவருளால் தான் திருவருள் – இறைவனின் அருள் கிடைத்து நிம்மதியாக வாழ முடியும்.

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு, “அ’வில் துவங்கி, உயர்கல்வி வரை கற்றுத் தந்து அவர்களை சீர்திருத்தும் சிற்பிகள் ஆசிரியர்களே! ஆசிரியர்கள் சொன்னதைக் கேட்டு எந்த ஒரு மாணவன் தன்னை சீர்படுத்திக் கொள்கிறானோ, அவன் பிற்காலத்தில் நிம்மதியாக இருப்பான்.

பகவான் கிருஷ்ணரும், குசேலரும் பள்ளிக்கூட நண்பர்கள். அக்காலத்தில் குருகுலத்தில் படிக்கும் மாணவர்கள், அங்கேயே தங் கிப் படிக்க வேண்டும்; பள்ளி நேரம் தவிர, மற்ற சமயங்களில் குரு இடும் கட்டளைகளைச் செய்ய வேண்டும். ஒருநாள், இவர்களது குரு சாந்தீபனி முனிவரின் மனைவி, கிருஷ்ணரையும், குசேலரையும் சமைப்பதற்கு விறகு பொறுக்கி வரச்சொல்லி விட்டாள்.

குருவின் மனைவியின் கட்டளையை ஏற்ற அந்தக் குழந்தைகள், காட்டில் சென்று விறகு பொறுக்கினர். மழை வந்துவிட்டது. விறகு நனையாமல் இருக்க, ஒரு மரப்பொந்தில் அதை வைத்துவிட்டு, மழையில் நனைந்தபடி நின்றனர். இருட்டி விட்டது. குழந்தைகளைக் காணாத குரு, மனைவியைக் கடிந்து கொண்டு குழந்தைகளைத் தேடிச்சென்றார்.

குரு பத்தினியின் கட்டளையை நிறைவேற்ற விறகை மறைத்து விட்டு, மழையில் அவர்கள் நனைந்தது கண்டு கண்ணீர் வடித்தார். “நீங்கள் மிக நன்றாக இருப்பீர்கள்… என ஆசிர்வதித்தார். அவரது ஆசிர்வாதம் பலித்தது. துவாரகையின் மன்னரானார் கிருஷ்ணர்; ஏழையான குசேலர், தன் நண்பனின் உதவியால் பெரும் செல்வந்தரானார்.

குருவின் சொல்லை இளமையில் கேட்டு நடப்பவர்கள் எதிர்காலத்தில் செல்வந்தர்களாக விளங்குவர்.

நம்மில் குரு அருள் நிரம்புவதை எப்படி கண்டறிந்து கொள்வது?

நினைத்த மாத்திரம் நம்மில் பொங்கும் பிரபஞ்ச ஒர்மை உணர்வு,
எண்ணங்களில் சீர்மை, அகத்தாய்ந்த எண்ணங்களே சொல்லாய் செயலாய் வெளிப்படல்,
புலனின்ப உணர்வுகளில் அளவு முறை, தவறாது அனைத்திடமும் பொங்கும் அன்பு,
நிறை மனம், உள்ளுணர்வு, விளைவை ஆராய்ந்த செயல் முறை, சினமின்மை, கவலையின்மை,
இன்ன பிற பண்புகளால் அறியப் படுவார் குரு வழி நின்ற ஒரு நற்பண்பாளர்.
"சத்குருவின் அருளால் மனதைச் சும்மா இருக்க செய்தாலன்றி எல்லாரும் விரும்பும் அமைதியை எவராலும், எவ்வழியிலும், எவ்வேளையிலும், எவ்விடத்திலும் எவராலும் அடைய முடியாது" என்பார் ரமணர்.

தகப்பனுக்கே உபதேசம் செய்து குருசுவாமியாகியவர் முருகன். ஆகவே குருவுக்கு வயது என்பது இல்லை. குருவானவர் எந்த வயதினராகவும் இருக்கலாம். எந்தப் பாலினத்தவராகவும் இருக்கலாம்.

போலிக் குருவை அடையாளம் கண்டு கொண்டால் உண்மைக் குருவை யார் என்று தெரிந்து கொள்ளலாம்.

"குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்கா குருவினை கொள்ளுவார்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடி
குருடும் குருடும் குழி விழு மாறே"

- திருமந்திரம் -

"ஆமாது அறியாதோன் மூடன் அதிமூடன்
காமாதி நீங்காக் கலதி கலதிகட்கு
ஆமாறு அசத்துஅறி விப்போன் அறிவிலோன்
கோமான் அலன்அசத் தாகும் குரவனே"

- திருமந்திரம் -

'வீணான நினைவுகளை விடாமல் எண்ணுபவர் செய்யும் உபதேசத்தில் சிவத்தியானம் சிறந்து வெளிப்படாது தீமைகளே வெளிப்படும். அவுபதேசத்தைக் கேட்பவர் அறிவு கெடும். அக்குருவால் வாழும் நாட்டுக்கும் அரசுக்கும் தீங்கு வரும்' என்கிறார் போலிக் குரு பற்றி திருமூலர்.

குரு ஒளியாயிருக்கிறார், சீடனுக்கு ஒளியை வழங்குகிறார், சீடனின் மனதில் இருக்கும் இருளை போக்குகிறார், சீடனை ஒளிமயமாக்குகிறார். ஆகவே எவர் சிந்தனைகள், சொற்கள் உன்னை தெளிய வைக்கிறதோ அவரே உனது குரு ஆவார் என்கிறார் சட்டைமுனி.

ஆகவே, உங்களைத் தெளிய வைப்பவரை உணர்வது உங்கள் உள்ளுணர்வேயாகும். அந்த உள்ளுணர்வு உங்கள் குருவை உங்களுக்கு அடையாளம் காட்டும் என்கிறார் சட்டைமுனி.
Read more ...

ஸ்ரீ வில்வம் 16

Saturday, July 10, 2010
Read more ...

ஸ்ரீ வில்வம் 17

Saturday, July 10, 2010
Read more ...

ஸ்ரீ வில்வம் 14

Saturday, July 10, 2010
Read more ...

ஸ்ரீ வில்வம் 15

Saturday, July 10, 2010
Read more ...

ஸ்ரீ வில்வம் 13

Saturday, July 10, 2010
Read more ...

ஸ்ரீ வில்வம் 11

Saturday, July 10, 2010
Read more ...

ஸ்ரீ வில்வம் 12

Saturday, July 10, 2010
Read more ...

ஸ்ரீ வில்வம் 10

Saturday, July 10, 2010
Read more ...

ஸ்ரீ வில்வம் 9

Saturday, July 10, 2010
Read more ...

ஸ்ரீ வில்வம் 8

Saturday, July 10, 2010
Read more ...

ஸ்ரீ வில்வம் 7

Saturday, July 10, 2010
Read more ...