வரலாறு

Tuesday, September 28, 2010
இன்றைக்குச் சுமார் எண்ணாயிரம் ஆண்டுகளுக்கு முன், அரப்பா, மொஹஞ்சதாரோ காலத்தில் தமிழர்கள் இமயம் முதல் குமரிவரை ஒரு குடையின் கீழ் ஆண்டு வந்தார்கள் என்பதும் இந்திய துணைக் கண்டம் முழுவதிலும் தமிழர்களே வாழ்ந்தார்கள் என்பதும் வரலாற்று ஆசிரியர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மை.

அகழ்வாய்வு வல்லுநர்கள் அரப்பா மொஹஞ்சதாரோவில் தமிழர் பண்பாட்டுச் சின்னங்களே காணக் கிடக்கின்றன, அங்கு வாழ்ந்தவர்கள் தமிழர்களே என்பதில் ஐயமில்லை. அவை கி.மு.ஐயாயரம் ஆண்டுகட்கு முந்திய கால கட்டத்தைச் சேர்ந்தவை என்று கூறுகின்றனர்.

ஆரியப் படையெடுப்பில் தமிழர்கள் தெற்கே விரட்டப் பட்டனர். வந்தவர்களான ஆரியர்கள் இம்மண்ணில் பிறந்தவர்களான தமிழர்களை எவ்வாறு வெல்ல முடிந்தது? தமிழர்கள் எதனால் தோல்வியுற்றுத் தெற்கு நோக்கி ஓடினர்?

இக்கேள்விகளுக்குப் பதில் வெளிப்படையாகத் தெரிந்ததே!. ஆயினும் யாரும் அதைப்பற்றி எழுதவில்லை. கூறவில்லை.

தமிழர்கள் ஈட்டி, வேல், வாள் முதலிய போர்க் கருவிகளையே பெற்றிருந்தனர். கற்கள் மரங்களையும் பயன் படுத்தியிருக்கலாம் இக்கருவிகளை ஒருவன் ஒன்று தான் எடுத்துச் செல்ல முடியும். எதிராளியை நோக்கி எறிந்துவிட்டால் பிறகு அவ்வீரன் வெறும் கையனாகி விடுவான். களத்தில் கிடக்கும் ஆயுதம் வேறேதாவது கிடைத்தால்தான் உண்டு.

ஆனால் ஆரியர்கள் வில்களையும் அம்புகளையும் பயன் படுத்தினார்கள். ஒரு வில்லாளி பல அம்புகளை எடுத்துச் செல்லமுடியும். அவன் தேரில் செல்பவனாக இருந்தால் ஒரு ஆயுத கிடைங்கையே தன் தேரில் எடுத்துச் செல்லமுடியும்.

அம்புகளில் நஞ்சு தோய்ந்த அம்புகள் உடம்பில் இலேசான கீறலை உண்டாக்கிவிட்டால் கூட எதிரி மரணமடைவான். அத்தகைய நஞ்சு தோய்ந்த அம்புகள், ஒரே அம்பு எய்யப்பட்டவுடன் பலவாகப் பிரிந்து பலபேரைத் தாக்கும் படியாக அமைக்கப்பட்ட அம்புக் கட்டுகள். இப்படிப் பலவகையான அம்புகளைப் பயன்படுத்தும் திறன் பெற்றவர்களாக வில் வீரர்கள் இருந்தார்கள் தவிர அம்போடு அம்பு தொடுத்து பாலம் அல்லது தடுப்புக் கட்டக் கூடிய முறைகளையும் வில் வீரர்கள் கற்றிருந்தார்கள். இத்தகைய போராளிகளுக்கு எதிரே தமிழ்வீரர்கள் நிற்கமுடியாதது வியப்புக்குரிய தன்று.

இராமாயணத்தில் இராமன் ஒருவனாகக் கரதூஷணர்களோடு வந்த ஆயிரக் கணக்கான வீரர்களைக் கொன்று குவித்ததாக ஒருகதை உண்டு. அது பொய் அன்று.

இன்றைக்கு அணு ஆயுத வல்லரசைப் பார்த்து மற்ற அரசுகள் அஞ்சுவதைப் போன்றே அன்றைய தமிழர்கள் ஆரியர்களைக் கண்டு அஞ்சியிருக்க வேண்டும். இராமாயணப் போர்களைப் பற்றிச் சற்று ஊன்றிக் கவனித்தால் இந்த உண்மை புலப்படும்.

ஆரியர்கள் வடக்கே ஒரு நிலையான அரசை அமைத்துக் கொண்டார்கள். தமிழர்கள் தெற்கே ஆண்டார்கள், ஆரியர்கள் தெற்கே வர முடியாதபடி விந்தியமலை ஒரு பெரிய தடையாக இருந்தது.

விந்தியமலைக் காடுகளில் மனிதரை அடித்துத் தின்னக் கூடிய காட்டு மிராண்டிகள் வசித்தார்கள். புராணங்கள் கூறும் அசுரர்கள் அவர்களாகவே இருக்கலாம்.

தமிழர்களை விரட்டி விட்டு ஒரு நிலையான அரசை ஏற்படுத்திக் கொண்டபின் ஆரியர்கள் தமிழர்களின் உயர்ந்த பண்பாடு, கலை, கல்விச் சிறப்பு, மருத்துவம், வாதம், யோகம், ஞானம் முதலியவற்றில் தமிழர்கள் அடைந்திருந்த மேம்பாடு முதலியவற்றை அறிய வாய்ப்பு ஏற்பட்டது. தமிழர்களோடு தொடர்பு கொண்டு அவற்றைக் கற்றுக் கொள்ள விரும்பினர். தங்களில் மிகவும் புத்திசாலியும், மேதாவழியும் சாதுர்யம் கொண்வருமான அகத்திய முனிவரைத் தேர்ந்தெருத்து அனுப்பி வைத்தார்கள். முடிவு

அகத்தியர் மிந்திரா - வருணர்களின் வீரியத்தில் தோன்றி ஒரு குடத்திலிருந்து பிறந்ததாகப் புராணம் கூறும். சுப்பிரமணியரே ‘கும்பமுனியே’ என்று அகத்தியரை அழைக்கிறார்.

காதிலிருந்து (கர்ணன்) மூக்குத் துளைகளிலிருந்து (அசுவினி தேவர்கள்) தொடையிலிருந்து (வேனன்) கடைசியாகக் குடத்திலிருந்து (அகத்தியர்) இப்படியெல்லாம் பிள்ளைகள் உண்டாக்கப் புராணக் கதைகளால் மட்டுமே முடியும் என்பர் சிலர்(இது தான் test tube child).

புராணக் கதைகள் பொய்யானவை என்று சுப்பிரமணியர் கூறிவிட்ட பிறகு அதைப்பற்றி ஆய்வு செய்வது வீண்வேலை. ஆரியரான அகத்தியமுனிவர் தெற்கே வரவேண்டியதற்கான காரணம் எப்படி ஏற்பட்டது என்பதைச் சற்று சிந்தித்துப் பார்த்தால் உண்மை விளங்கும்.

சிவபெருமான் உமாதேவி திருமண வைபவத்தைக் காண்பதற்காகத் தேவர்கள் ரிஷிகள் அனைவரும் வடக்கே இமயத்தில் வந்து கூடி விட்டதால் வடக்கே தாழந்து விட்டதாகவும் அதைச் சரிப்படுத்த அகத்தியர் ஒருவரே போதும் என்று தெற்கே அனுப்பிவைக்கப்பட்டாதாகவும் கூறும் புராணக்கதை உண்மையாக இருக்க முடியாது. இந்தியா சீனாவில் உள்ள மக்கள் தொகை வடநாடான சைபீரியாவில் ஏற்றம்போல் மேலே தூக்கிக்கொள்ளவில்லை.
( ஒரு காலத்தில் இமயலை கடலடியில் இருந்ததாவும் இந்திய துணைக் கண்டம் ஆஸ்த்திரேலியா வரை பரவி இருந்ததாகவும் இமயமலையில் சங்கு போன்ற வைகள் காணப்படுவதாகவும் கேள்விப்பட்டதாக நினைவு)

எனவே சிவபெருமான் திருமணக்கதையை விட்டு விடுவோம். சித்த மருத்துவ வளர்ச்சிக் குழுவின் ஊறுப்பினரான திரு. கந்தசாமி பிள்ளை அவர்கள் எழுதி இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவ வரலாறு என்ற நூலில் எழுதியுள்ளதை இங்கே எடுத்துக் காட்ட விரும்புகிறோம்.

ஆயிர் வேதத்தைத் தொகுத்தவர்களும் அவர்களுக்கு ஆதரவாக விளங்கியவர்களும் தங்களுடைய ஆயுர்வேத மருத்துவ முறையில் சேர்த்துக் கொள்ளத் தக்க விஷயங்களைச் சேகரிப்பதற்காகத் தங்களுடைய ஆட்களைத் தெற்கேயும் கிழுக்கேயும்அனுப்பிவைத்தார்கள் என்பது நன்கு தெரிந்ததே. தமிழர் பாண்பாடு அவர்களுடைய உயர்வான தத்துவக் கொள்கைகள், எல்லாம் வடக்கே வந்து சேர்ந்த ஆரியர்களுக்கு நன்கு தெரிந்திருந்தன. அவற்றைத் தங்கள் பண்பாட்டுடன் சேர்த்து வளமைப்படுத்திக் கொள்வதற்காகத் தங்களில் மிகச் சிறந்த ஒருவரைத் தென்னாட்டுக்கு அனுப்பி வைத்தனர். அப்படி அனுப்பப்பட்டவர் அகஸ்தியர். இந்த உண்மை சிவன் - உமை திருமணக் கதையில் மறைக்கப்பட்டு இருக்கலாம்..

இவ்வாறு கந்தசாமிப் பிள்ளை அவர்கள்எழுதியுள்ளார்

அகத்தியர் முனிஒருவராக வரவில்லை. அவர் தலைமையில் பல ரிஷிகளும் அவர்களின் சீடர்களும் வந்திருக்க வேண்டும் . பின் நிகழ்ச்சிகள்அதையேசுட்டிக் காட்டுகின்றன.

எவ்வாறு நோக்கினும் அகத்தியர் தமிழகத்திற்கு வந்தது அரப்பா மொஹஞ்சதாரோ காரலத்திற்குப் பின்னர்தான். இராமாயண காலத்திற்குச் சற்று முன்னதாக என்று எடுத்துக் கொள்ளலாம்.

விந்திய மலைக் காடுகளில் வாதாபி வில்வலன் என்ற இரண்டு கொடிய அரக்கர்கள் வாழ்ந்தனர். மனிதர்களைத் தந்திரமாக வசப்படுத்திக் கொன்று தின்பதுஅவர்களது தொழில். தங்களில் ஒருவனை ஆடாக மாற்றி அதை வெட்டிக் கொன்று வந்தவனுக்கு உணவு படைப்பான் வில்வலன் அவன் உண்டு முடிந்ததும் “வாதாபி வெளியே வா” என்று அழைத்தால் உணவாக வியற்றுக்குள் சென்றவன் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளியே வந்துவிடுவான். பிறகு இருவருமாக வயிறு கிழிந்து இறந்து கிடப்பவனை அறுத்துத் தின்பார்கள், அப்படி ஒரு வரம் பெற்றிருந்தார்களாம் அவரகள்!( இதை ஒரு திரைப்படத்தில் படத்தில் மாங்கணி யாக காட்டினர் அகத்தியர் பிராமணர் என்பதால்)

வல்வலன் அகத்தியருக்கு விருந்து வைத்தான். அகத்தியர் உண்டு முடித்தபிறகு “வாதாபி வெளியே வா” என்று அழைத்தான். பலமாக ஒரு ஏப்பம் விட்டு விட்டு அகத்டதியர் “வாதாபி சீரணமாகி விட்டானே?” என்றார். (வரம் பலிக்கவில்லை) கோம் கொண்ட வில்வலன் அகத்ததியரைத் தாக்க அகத்தியர் அவன்மேல் பாசுபதாஸ்திரத்தை ஏவ, வில்வலன் அகத்தியருக்கு நிறையப் பொருள் கொடுத்து மன்னிப்புப் பெற்றுச் சென்றான்.

இதிலிருந்து ஆரிய ரிஷிகள் மாமிச உணவை விருமபி உண்டார்கள். மனித இறைச்சியையும் விட்டு வைக்கவில்லை என்று தெரிகிறது.

வாதாபி வில்வலன் சகோரர்கள் விந்திய மலைக்குத் தெற்கே அரசாண்ட மன்னர்களாக இருந்திருக்கவேண்டும்.. அகத்தியர் தன் மனைவி லோபா முத்திரைக்காக வில்வலனிடம் பொருள் பெற்றதாகக் கூறப்படுகிறது. ஆடாக மாற்றும் கதை வேண்டும் என்றே புளையப் பட்டதாகவும் இருக்கலாம்..

வில்லவன் தவிர, வதுவாதிபராசன், திராவிட பூபதி, கிருதபவன் என்பவர்களும் விந்திய மலைக்குத் தெற்கே அரசாண்ட மன்னர்கள் என்று தெரிகிறது. அகத்தியர் வில்வலனிடமிருந்து அவர்களுக்கும் பொருள் பொற்றுக் கொடுத்தாகக் கூறப்படுகிறது.

அகத்தியர் விந்திய மலையை எப்படிக் கடந்தார் என்டபதைக் கதையாக மட்டுமே கூறப்பட்டுள்ளது. தங்களைத் தெற்கு நோக்கிச் செல்ல விடாத விந்திய மலையை ஆரியர்கள் மிகவும் வெறுத்தனர். விந்தியன் மிகவும் கர்வம் கொண்டு ஆணவத்துடன் நின்றதாகக் கூறினர். இன்னொரு புராணக் கதை விந்தியனுடைய சிறகுகளை சிவபெருமானே வெட்டிவீழ்திதயதாகவும் கூறும்,

சூரிய சந்திரர்கள் கூட மேற்கே போக விடாமல் விந்திய மலை தடுத்துக் கொண்டு நிற்கிறது என்று தேவரகளும் ரிஷிகளும் போய்ச் சிவபெருமானிம் முறையிட்டார்களாம்,. விந்தியமலை எவ்வளவு இடைஞ்சலாக இருந்துள்ளது என்பது இதிலிருந்து புரிகிறதல்லவா?.

அகத்டதியரே முதன் முதலாக விந்தியத்தைக் கடந்து தெற்கே வந்த ஆரியர்,(அவரோடு பலரிஷிகளும் , வீரர்களும் வந்திருக்கவேண்டும்)

அகத்தியர் சிவபெருமானுடைய ஆசியுடனேயே வந்தார் என்பதை மறுக்கமுடியாது. சிவன் மைந்தரான சுப்பிரமணியர் அகத்தியரைச் சீடராக ஏற்றுக் கொண்டது அதை விளக்குகிறது.

தமிழர் கடவுளான சிவபிரான் அகத்தியருக்கு அனுகூலமானது எவ்வாறு?
தமிழர் கடவுளான சிவபிரான் அகத்தியருக்கு அனுகூலமானது எவ்வாறு?

சிவபெருமானும் ஆரியர்களும்

ஆரியர்கள் சிந்து கங்கைச் சமவெளியிலிருந்த தமிழர்களைத் தெற்கு நோக்கி விரட்டி விட்டார்கள். ஆனால் கயிலையில் வசித்த சிவபெருமானிடம் அவர்களுடைய கைவரிசை செல்லவில்லை.பூதகணங்களைப் படைகளாக உடைய சிவபெருமானை நெருங்கவே ஆரியப்படைகள் அஞ்சின.

அதனால் ரிஷிகள் ஒன்று கூடி ஒரு பெரிய யாகம் செய்து அதிலிருந்து கொடிய புலி, யானை,பாம்பு, எரியும் நெருப்பு முதலானவற்றை அனுப்பினார்கள். சிவன் அவற்றை வென்று புலித் தோலை ஆடையாகவும் , பாம்புகளை ஆபரணமாகவும் வடவாக்னியைக் கையிலும் ஏந்தி அடக்கிவிட்டார். ரிஷிகள் கடைசியாக ஏவிய நான்கு வேதங்களையும் காற் சிலம்புகளாக அணிந்து கொண்டார்.

சிவனைத் தங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று அறிந்த ரிஷிகள் அவரைத் தம் கடவுளாக ஏற்றுக் கொண்டு சமாதானம் செய்து கொண்டனர். ஆரிய மன்னனான தட்சன் தன் பெண்களில் ஒருத்தியாகிய சதியை சிவபொருமானுக்கு மணம் செய்து கொடுத்து உறவேற்படுத்திக் கொண்டான்

சிறிது காலத்திற்குப் பிறகு ஆரியர் நன்கு வேரூன்றிக் கொண்டது என்ற துணிவேற் பட்டவுன் தட்சன் சிவபொருமானை அழிப்பதற்காக ஒரு பெரிய யாகத்திற்கு ஏற்பாடு செய்தான். ஆரியர்களின் கடவுள்கள் எல்லோரும் அதில் கலந்து கொண்டார்கள். அதையறிந்த சதிதேவி துடித்தாள். எப்படியும் அந்த யாகத்தைத் தடுத்து விட வேண்டும் என்ற எண்ணத்துடன் பறப்பட்டாள்.

தட்சன் தன் மகளை ஏசினான் ,”சுடுகாட்டில் திரிபவளை மணந்து கொண்ட நீ வந்தால் யாக சாலையின் புனிதத் தன்மை கெட்டுப் போய்விட்டது ஓடிப்போய் விடு” என்று விரட்டினான்.

யாகத்தை நிறுத்துவதற்கு வேறு வழியில்லை என்பதை உணர்ந்த தாட்சாயணி யாக குண்டத்தில் விழுந்து தன்னையே அழித்துக் கொண்டாள். யாகம் தடைப்பட்டது.

நடந்ததை அறிந்த சிவபொருமான் மிகவும் கோபம் கொண்டு வீரபத்திரனை அனுப்பினார். வீரபத்திரன் ஆரியர் கடவுள்களை வென்று தட்சன் தலையையும் வெட்டி யாக குண்டத்தில் போட்டுப் பொசுக்கி விட்டார்.

சிவபெருமானைத் தங்களால் வெல்லவே முடியாது என்பதை உணர்ந்த ஆரியர்கள் அவரைப் போற்றித் தொழுது அடியார்காளகி விட்டனர். தங்களுடைய புராணக் கதைகளான மச்சபுராணம் , வராக புராணம், நரசிம்ம புராணம், வாமன புராணம் போன்றவற்றையும் சிவபெருமானுக்கே முதலிட மளிப்பவையாக மாற்றி விட்டார்கள்.

எல்லா மக்களையும் தம் மக்கள் போலவே பாவிக்கும் தமிழ்ப் பண்பால் சிவபெருமான் ஆரியரகளை ஏற்றுக் கொண்டார். ரிஷிகளும் சிவ பக்தர்களாய் மாறி விட்டார்கள். அவர்களால் அகத்தியரை சிவபெருமானுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனாலேயேஅகத்தியரை தென்னாட்டுக்கு அனுப்பி வைத்தார்

இங்கு பேரறிஞர் டி.வி.சாம்பசிவம் பிள்ளை அகராதியிலிந்து சில வரிகளை எடுத்துக் காட்டவிரும்புகிறோம்.

விந்திய பர்வதத்தைச் சுற்றிலும்துங்கபத்திரா நதிக்கு படபாரிசத்திலுள்ள வனாந்தரத்தில் அகஸ்தியர் நுழைந்து வந்ததன் பிறகே ஆரிய மக்கள் தென்னாட்டு எல்லையில் பிரவேசிக்க ஆரம்பித்தார்கள். ஆகவே ஆரியர்கள் அகத்தியரைத் தலைவராக் கொண்டுதான் தமிழ் நாட்டை அடைந்ததாக எண்ணப்படுகிறது. தன்வந்திரி மாணாக்கரென்று கருதப்படும் இவ்வகத்தியர்தான் ஆயுற்வேத்தையும் தென்னாட்டில் புகட்டினார் என்றும் கருதப்படுகிறது.

அகத்தியர் மலைகளைக் கடந்து வந்து கொணடிருக்கும் போதுதான் பறக்கும் விமானத்தின் மூலமாக வந்த இராவணன் அவரைக் கண்டான். விமானத்திலிருந்து இறங்கி வந்து அவர் எதிரே நின்றான். அகத்தியர் தன்னை வணங்காதது அவனுக்கு ஆத்திரத்தை உண்டாக்கிற்று. இரண்டு பேரில் யார் பெரியவர் என்ற சர்ச்சை உண்டாயிற்று. இசைப் போரில் அகத்தியர் இராவணனை வென்றார். இராவணன் அகத்தியரை வாழ்த்தி விடை பெற்றுச் சென்றான் இது கதை.

அகத்தியர் மேலும் தெற்கு நோக்கி நடந்து குடகு மலையை அடைந்தார். காவிரி ஆறு உற்பத்தியாகும் அழகான இடத்தைக் கண்டார். அங்கே தவம் செய்து கொண்டிருந்த ஒரு முனிவரின் மகளான லோபா முத்திரையை மணம் செய்து கொண்டார். (லோவா முத்திரை புலத்தியரின் தங்கை என்றும் கவேரன் என்பான் மகளாகையால் காவேரி எனப் பெயர் பெற்றாள் என்றும் விதர்ப்ப தேசத்தரசன் பெண் என்றும் பல கதைகள் உண்டு)

ஆரியர்கள் ஆட்சி செய்ய மாட்டார்கள் ஆட்சியாளரை ஆட்டுவிப்பார்கள் மாபெரும் புத்திசாலிகள் கல்வியறிவில் முன்னிலை வகிப்பர் நம்மைவிட இன்றும் திறமையானவர்கள் இதையெல்லாம் மறுக்க முடியாது
அகத்தியர் தன்மனைவியுடன் சிறிது காலம் அங்கே தங்கியிருந்தார். அக்காலத்தில் அவருடன் வந்திருந்த ரிஷிகளும் வீரர்களும் தமிழகத்தில் சென்று அங்குள்ள சூழ்நிலையை அறிந்து வந்தனர். சிவபெருமானால் அனுப்பப்பட்ட முனிவர் தமிழகத்திற்கு வருகிறார் என்றால் தமிழ் மக்களிடையே எப்படி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் அகத்தியர் தம்சீடர்களுக்கு நன்றாகவே அறிவுறுத்தி யிருக்கவேண்டும்..

பொதுவாகத் தமிழர்கள் புலால் உண்டபோதிலும் சைவத்திற்கே அதிக மதிப்புக் கொடுத்தார்கள், கொல்லாமை, புலால் உண்ணாமை, என்ற சிறந்த பழக்கங்கள் தமிழரிடை இருந்தன. தவிர தமிழ்க் குலப் பெண்டிர் கற்பு! நெறியில் சிறந்து விளங்கினர். இந்தப் பண்புகளை மதித்து நடக்கும்படி அகத்திய சீடர்கள் அறிவுறுத்தப் பட்டிருந்தனர்.

மேலும் தமிழ் மக்களுக்கு மருத்துவம் செய்தும், வேறுபல உதவிகளைப் புரிந்தும் சீடர்கள் ஒரு நல்ல எண்ணத்தை உண்டாக்கினர். வெள்ளைத் தோல் படைத்த ஆரியர்கள் மிகவும் நல்லவர்களாக இருக்கிறார்கள் என்ற எண்ணம் தமிழர்களிடையே ஏற்பட்டது. இந்த எண்ணம் தான் பிற்காலத்தில் ஆரியர்கள் பெரிய அளவு கூட்டம் கூட்டமாகத் தமிழ்நாட்டில் குடியேறவும் அரசர்களிடம் மான்யங்களாக நிலங்களைப் பெற்று வசதியோடு வாழவும் உதவியது. அதோடு நிற்கவில்லை. வெள்ளைத் தோல் படைத்த ஆரியர்கள் தங்களை விட மேலான குலத்தைச் சேர்ந்தவர்கள் என்று கருதித் தமிழர்கள் அவர்களுக்கு மரியாதை செலுத்தவும் ஆரம்பித்து விட்டார்கள்.

வெள்ளையர்கள் இந்திய நாட்டில் குடியேறுவதற்கு முன்னர் பாதிரிகளையும் தவ மகளிரையும் (nuns) அனுப்பி மதப் பிரசாரம் செய்தும், பள்ளிக்கூடங்கள் கட்டியும் , மருத்துவ விடுதிகள் ஏற்படுத்தியும் ஆங்காங்கு வாழ்ந்த மனித சமுதாயங்கின் ஆதரவையும் அபிமானத்தையும் பெற்றார்கள் அல்லவா? அதே போன்ற நிகழ்ச்சிதான் இது.

காவிரி தோன்றும் குடகு மலையிலிருந்து புறப்பட்ட அகத்தியர் நேராகச் சுப்பிரமணியரிடம் சென்று தமிழ் கற்றுக் கொண்டார். மொழியை அறிந்தால் மட்டுமே மக்களிடம் கலந்து பழக முடியும். அவர்கள் அன்பைப் பெறுவும் முடியும் என்பதை அகத்தியர் நன்கு அறிந்திருந்தார். இதே முறையைத் தான் வீரமாமுனிவரும் கையாண்டார்.
அகத்தியர் வருவதற்கு முன் தமிழே இல்லை என்பது போலும் அவர்தான் தமிழை உண்டாக்கினர் என்பது போலும் கதைகள் கட்டிவிடப்பட்டிருப்பது கொடுமையிலும் கொடுமை! முதற் சங்கத்தின் தலைவன் சிவன் அவனுக்குப் பின்தான் அகத்தியன்.

அகத்தியர் தெற்கு நோக்கி வருவதற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் இருந்தது. அது தான் உண்மை?சுப்ரமணியர் அகத்தியருக்கு ஞானத்தை உபதேசித்தார். தமிழ் மொழியால் உபதேசித்தார் அதனால் அகத்தியர் சுப்பிரமணியரிடமிருந்து தமிழையும் ஞானத்தையும் கற்றுக் கொண்டார்.

அகத்தியரே கூறுகிறார்.

ஒண்ணாது இன்னமொரு மார்க்கஞ் சொல்வேன்
உத்தமனே புலஸ்தியரே சொல்லக்கேளும்
நண்ணமுடன் வடிவேலர் தம்மிடத்தில்
நாட்டமுடன் வெகுகாலம் அடுத்திருந்தேன்
கண்ணபிரான் பெற்றதுபோல் அடியேன் தானும்
காசினியி லுபதேசம் பெறவே வந்தேன்
வண்ணமுடன் நாதாந்த சித்து தாமும்
வணக்கமுடன் வேலவரைக் கேட்டார் தாமே

அகத்தியர் சுப்பிரமணியரை நெடுங்காலம் அடுத்திருந்ததாகக் கூறுகிறார். கண்ணபொருமான் உபதேசம் பெற்றதைப்போல் நானும் தங்கிடம் உபதேசம் பெறவே வந்தேன். எனக்கு உபதேசம் செய்தருளவேண்டும் என்று வணக்கத்துடன் கேட்டுக் கொண்டார்.

கேட்டவுன் அடியேன்மேல் மனதுவந்து
கேள்வியின் உத்தாரச் சொற்படிக்கி
நீட்டமுடன் ஞானோப தேசந் தன்னை
நெடுங்காலம் போதிப்பேன் என்று சொல்லி
வாட்டமுடன் வடிவேலர் சந்தோஷித்து
வாகுடனே கெத்தியர்க்கு வுபதேசங்கள்
கூட்டமுடன் நந்தீசர் முன்னதாக
கூறுவார் உபதேசம் கூறுவாரே.

சுப்பிரமணியர் மனம் மகிழ்ந்தவராக அகத்தியருக்கு நெடுங்காலம் உபதேசித்தார். எழுத்துக்கு முதல்வனாக விளங்கும்படியாக அவ்வளவு தெளிவாக உபதேசித்தார். சகலகலை ஞானங்களையும் உபதேசித்தார். நந்தீசரையும் அருகில் வைத்துக் கொண்டு உபதேசித்தார். அதனால் அகத்தியர் சகல கலைகளிலும் வல்லவராக உயர்ந்த ஞானவானாக விளங்கினர்.

அகத்தியரால் தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியக் கண்டம் முழுவதிலுமே ஒரு கலாச்சாரப் பிளயமே ஏற்பட்டது எனலாம். வடக்கும் தெற்கும் ஒன்றுடனொன்று கருத்துகளை பரிமாறிக் கொண்டு முன்னேறிய போதிலும், பிற்காலத்தில் ஆரியர்கள் சமஸ்கிருத மொழியே முதல் மொழி என்பது போலும் அதிலிருந்துதான் மற்ற எல்லாம் தோன்றின என்பது போலும் எழுதி வைத்துக் கொண்டார்கள். ஆரிய இனம் மேலினமாக ஒப்புக் கொள்ளப்பட்டதால் அது எளிதாக முடிந்தது. ஆயினும் இந்திய நாடு முழுவதிலும் ஆரிய தமிழ் இனங்களிடையே சமரச மனப்பான்மையும் இணைந்து வாழும் பண்பும் ஏற்பட்டன. மொத்தத்தில் ஒரு கலாச்சாரப் பிரளயத்துக்கு இது வழி கோலியது எனலாம்.
Read more ...

சித்தர்

Tuesday, September 28, 2010
சித்தர்


பராபரத்தில் பரம், பரத்தில் சிவம், சிவத்தில் சக்தி, சக்தியிலிருந்துதான் பஞ்ச பூதம் உள்ளிட்ட அனைத்தும் தோன்றியது. இந்த சிவன் தான் சித்தன் எனவும் கூறப்படுவதுண்டு.

சித்தர் வழி தனி வழி ! யாம் பெற்ற பேறு பெறுக இவ்வையகம் என்ற உயரிய நோக்கு அவர்களுடையது. சித்தர்களின் விடா முயற்சியும், உழைப்பும், தன்னலமற்ற பணியும் நமக்கு எப்போதும் வேண்டும் வேண்டும்.

சீவனே சிவன் என்று துணிவதே சித்தர் தம் மதம்.

சித்தர் தம்மைக் காலங்கடந்தவராகக் கூறிக் கொளல் மிகையும் அன்று. பொய்யும் அன்று.

சித்தம் என்பது புத்தி, மனம்,

சித்து புத்தியால் ஆகிற காரியம்

சித்தர் புத்தியைக் கட்டுப்படுத்தியவர்.

சித்தர்கள் 18 பேர்.

1. கும்ப முனி, 2. நந்தி முனி, 3. கோரக்கர், 4. புலிப்பாணி, 5. புகண்ட ரிஷி, 6. திருமுலர், 7. தேரையர், 8. யூகி முனி, 9. மச்சமுனி, 10. புண்ணாக்கீசர், 11. இடைக்காடர், 12. பூனைக் கண்ணன், 13. சிவவாக்யர், 14. சண்டிகேசர், 15. உரோமருஷி, 16. சட்டநாதர், 17. காலாங்கி, 18. போகர் என்று கருவூரார் எழுதிய அட்டமாசித்து நூல் கூறுகிறது.

1. அகத்தியர், 2. போகர், 3. நந்தீசர், 4. புண்ணாக்கீசர், 5. கருவூரார், 6. சுந்தரானந்தர், 7. ஆனந்தர், 8. கொங்கணர், 9. பிரம்மமுனி, 10. உரோமமுனி, 11. வாசமுனி, 12. அமலமுனி, 13. கமலமுனி, 14. கோரக்கர், 15. சட்டைமுனி, 16. மச்சமுனி, 17. இடைக்காடர், 18. பிரம்மமுனி என்கிறது நிஜானந்த போதம்.

1. அகத்தியர், 2. போகர், 3. கோரக்கர், 4. கைலாசநாதர், 5. சட்டைமுனி, 6. திருமுலர், 7. நந்தி, 8. கூன் கண்ணன், 9. கொங்கனர், 10. மச்சமுனி, 11. வாசமுனி, 12. கூர்மமுனி, 13. கமலமுனி, 14. இடைக்காடர், 15. உரோமருஷி, 16. புண்ணாக்கீசர், 17. சுந்தரனானந்தர், 18. பிரம்மமுனி என்கிறது அபிதான சிந்தாமணி.

மரணத்தை வெல்வது சித்தர் பண்பாடு. ஒரு பொருளை இன்னொரு பொருளாக மாற்றுவதும், உறுமாறுவதும் சித்தர் சாதனையில் முக்கியமானவையாகும். சித்தர்கள் தங்கள் சாதனையை காய சாதனை (தேகத்தை மேம்படுத்துவது) என்றனர். அதன் முலம் காயசித்தி (தேகத்தை பூரணத்துவம் அடையச் செய்வது) பெறுவது அவர்கள் நோக்கம்.

ஓம் என்ற பிரணவ ஒலி உலகத்தின் முல ஒலி ஆகும். அ. உ. ம். முன்றும் சேர்ந்து ஓம் என்பர். அ. சூரியன், உ. சந்திரன், ம். அக்கினி ஒளிமயமான எஅ நாதம், உ விந்து, ம் கலை, நாத விந்து கலைகளின் தொகுப்பே ஓம் என்றும் கூறுவர். அ. கிரியா சக்தி (பிராமி), உ. இச்சா சக்தி (வைணவி), ம். ஞானசக்தி (ரௌத்ரி) என்பது சித்தர் கருத்து.

சீக்கிரமே தருமம் செய் கொஞ்சம்

திருப்பணிகளும் செய்.

என்றார் சித்தர்.

அறப்பணியும், இறைபணியும் இறந்தும் இறவாப் பெரு வாழ்வளிக்கும்.

உன்னிடம் இல்லை என்று கேட்டு நிற்கும் எளியோரிடம் இருந்தும் இல்லை என்று சொல்லாதே. நாளை வா என்று தள்ளாதே. இருந்தால் அப்போதே கொடுத்துதவு.

நலிவுற்றவரை நசித்து வாழ என்னாதே. வஞ்சனை செய்ய முயலாதே. உன்னைத் தஞ்சமென்று வந்தடைந்தவரையே கெடுப்பதற்கு துணியாதே. உன் கண்ணில் பட்டதையும், காதில் விழுந்ததையும் உண்மை என்று கொள்ளாதே.

கற்புறைப் பெண்டிர் மீது காமசிந்தை வையாதே. கட்டியவளே என்றாலும் உற்றது சொல்லாதே. பிள்ளைகளுக்கு அளவுக்கு மீறி இடம் கொடுத்து அவர்களுடைய அலட்சியத்துக்கு உள்ளாகாதே. கொலை, களவு, பொய் விலக்கு, தன்னை வியந்து கொள்கிறவனும் வலுச் சண்டைக்கு நிற்கிறவனும் காணாமல் போவான்.

சிந்தித்தால் தெளிவு வரும். சித்தர்களது பாடல்களைப் படித்தால் சிந்தனையும், தெளிவும் சேர்ந்து வரும்.

மனிதர்களுக்கு ஐம்புலன்களால் அறியப்படும் அறிவு ஐந்தும், ஆத்மா ஒன்றுமாக ஆறறிவு. மிருகங்களுக்கு நான்கு அறிவுகளும், சீவனுமாக ஐந்து. பறவைகளுக்கு அறிவு முன்றே. மார்பினால் நகரும் பிராணிகளுக்கு இரண்டு அறிவு. தாவரங்களுக்கு அறிவு ஒன்று என்று ஆராய்ந்து பின் மனித உடலின் சிறப்பை நன்கு உணர்ந்து அதை உலகுக்கு எடுத்துக் காட்டியவர்கள் சித்தர்களே!.

ப்பொருள் வடிவும் ஓம் ஆகும்.

பதினெண் சித்தர்கள்

சதுரகிரி மலையில் வாழ்ந்த சித்தர் கூட்டம் பற்றி அகத்தியர் ஆயிரத்து இருநூறு என்ற நூல் கூறும் வரலாறு இங்கே எண்ணற்பாலது.1. எக்கிய மா முனி என்பவர் அகத்தியருக்கு சிங்கி வித்தை கற்றுக் கொடுத்தார். அதனால் அகத்தியர் சிங்கி வித்தையில் குருமுடித்தார்.

2. சிங்கி வித்தை கருவூரார்க்கு உணர்த்தப்பட்டு அவர் சிங்கி வேதை முடித்து போகத்தில் இருந்து பூரணத்தில் மகிழ்ந்தார்.

3. கொங்கணர் வீரம் என்கிற பாடாணத்தால் வேதை முடித்து சிவயோக நிட்டையில் பலகாலம் இருந்து மேருகிரியில் பூரணத்தில் நின்று ஒடுங்கினார்.

4. போகர் ஏமரசம் கண்டு அதனை உண்டு ஒரு கோடி காலம் சிவயோகம் இருந்து பூரணத்தில் தங்கினார்.

5. கயிலாசச் சட்டைமுனி சவுக்காரச் சுண்ணம் கண்டு வேதை பார்த்து கோடி கற்பகாலம் இருந்து சிவயோகியாய் சாலோக பதிவியை அடைந்தார்.

6. கமல முனி அண்டச்சத்து கண்டு மெழுகுபண்ணி வேதை பார்த்து மதியமிர்தமுண்டு மேருவில் தவம் பண்ணி சதகோடி யுகாந்தம் இருந்து கமல மலரில் சென்று பரவெளியில் கலந்தார்.

7. மச்ச முனி கெந்தியில் சத்து எடுத்து வேதை பார்த்து செந்தூரம் செய்து சடம் அழியாமல் சிவயோகத்தில் இருந்து சிவமயமானார்.

8. திருமுலர் கௌரி சத்து எடுத்து வேதை பார்த்து செந்தூரம் செய்து கோடான கோடி காலம் பூரணமாய் நிட்டை கூடி மணி மகுட முடியில் சென்று பூரணத்தில் அடங்கினார்.

9. நந்தீசர் அயக்காந்த சத்து எடுத்து வேதைபார்த்து செந்தூரித்து பூரணத்தில் நின்று வெகு கோடி யுகாந்த காலம் இருந்து சோதியில் கலந்தார்.

10. சுந்தரானந்தர் களி உப்பு வாங்கி நீற்றி சுண்ணாம்பாக்கி நவலோக வேதை பார்த்து தன்னிலை அறிந்து பொற்கமலம் மீதேறி அனந்தகாலம் தவம் இருந்து பூரணத்தில் மகிழ்ந்தார்.

11. கோரக்கர் நவக்கிரக பூசை பண்ணி பூரணத்தில் சொக்கி கோடியுகம் நிட்டை கூடி கைலாயம் சென்று பூரணத்தில் இருந்து பரமபதம் அடைந்தார்.

12. காலாங்கி

13. புண்ணாக்கீசர்

14. வியாக்ரபாதர்

15. கூனக் கண்ணர்

16. சிவவாக்கியர்

17. இடைக்காடர்

18. சண்டிகேசர்

ஆகியோர் வாசியோகம் செய்து மௌனமாகி சோதியில் ஏழு பேரும் சிவபூசை செய்து மௌனமாகி சோதியில் கலந்தார். இதனால் பதினெண்சித்தர்கள் யாவர் என்பதும் அவர்கள் நவபாடாணங்களை வேதை செய்து குரு முடித்து காயகல்பம் உண்டு பன்னெடுங்காலம் வாழ்ந்து சோதியில் கலந்தார்.
Read more ...

ஆத்மா

Tuesday, September 28, 2010
ஆத்மா

“ சிலர் அதை உயிர் என்கிறார்கள், வேறு சிலர் அது உயிரை இயக்கும் சக்தி என்கிறார்கள், இது வாதம்தான் ஆனால் ஆத்மாவை உணர்ந்தவர்கள் அது விவரிக்க முடியாத மாபெரும் சக்தி என்கிறார்கள், ஆத்மாவால் உயிர் இயங்குகிறதா? அல்லது உயிரே தான் ஆத்மாவா? என்பதை அரிதியிட்டுக் கூற பலபேர் முயன்று வருகிறார்கள், ”


“ ஆனாலும் இன்னும் முடிவுக்கு யாரும் வந்தபாடில்லை, இனிமேலும் யாரும வரமுடியாது என்றே நான் கருதுகிறேன், என்னைப் பொருத்தமட்டில் ஆத்மா உயிராகவும் இருக்கிறது உயிரை இயக்குவதாகவும் இருக்கிறது, அதனால் தான் ஆத்மாவை நான் கடவுள் என்கிறேன், காணும் பொருள் எல்லாம்-மரம் செடி புழு பூச்சி இந்த மணல் அந்த ஆறு அங்கு நிற்கும் குதிரைகள் நீ நான் எல்லாமே கடவுள் என்ற பேரத்மாவின் சிறு அம்சங்களே என்றே நான் உணருகிறேன், ”


“ அதாவது கடவுளின் தன்மை உனக்குள்ளும் உள்ளது எனக்குள்ளும் உள்ளது மற்ற எல்லா உயிரினங்களிலும் அந்த தன்மை உறைந்து மறைந்து கிடக்கிறது, அதை உணர வேண்டும்,
Read more ...

இறைவன்

Tuesday, September 28, 2010
இறைவன்

இறைவன் ஒருவன். அவனே பரம்பொருள், அவன் ஆதியும் அந்தமும் இல்லாதவன். அவன் ஒருவனே மெய்ப்பொருள். அவனுக்கு ஈடான பொருள் ஒன்றும் இல்லை. இதனைத் திருக்குறள் ″தனக்குவமை இல்லாதான் ″ என்கிறது. ஒன்று அவன்தானே என்கிறது திருமந்திரம்.இதனை மாணிக்கவாசகர்

″முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே″ - திருவெம்பாவை

என்றார். இவை சைவ மரபின் இறைவன் ஒருவனே என்ற கோட்பாட்டை வலியுறுத்துவன.

இறைவன் பசுபதி எனப் போற்றப்படுகின்றான். பசு என்றால் ஆன்மா. பதி என்றால் தலைவன். எனவே ஆன்மாக்கள் அனைத்திற்கும் தலைவன் இறைவன். அவனைச் சிவம் எனப் போற்றுவது சைவ மரபு.

இறைவன் எங்கும் நிறைந்தவன். அவன் சத்து(உள்பொருள்) ஆகவும் சித்து(அறிவுடையபொருள்) ஆகவும், ஆனந்தம்(இன்பமயமானபொருள்) ஆகவும் விளங்குகின்றான். ஆதலால், இறைவன் சச்சிதானந்தன் எனவும் அழைக்கப்படுகின்றான்.

இறைவன் அருவம், அருவுருவம், உருவம் என்றும் மூன்று திருமேனிகளை எடுத்து ஆன்மாக்களுக்கு அருள் புரிவான்.

″கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை ″ - திருக்குறள்
தன்வயத்தனால்
தூய உடம்பினனாதல்
இயற்கை உணர்வினனாதல்
முற்றும் உணர்தல்
இயல்பாகவே பாசங்களில் நின்றும் நீங்குதல்
பேரருள் உடைமை
முடிவில் ஆற்றலுடைமை
வரம்பில் இன்பமுடைமை
ஆகிய எண்குணங்களையும் உடையவன்.

இறைவன் ஒருவனே அவனைப் பல்வேறு வடிவங்களில் வழிபடுகின்றோம். ஏனெனில் அவ்வடிவங்களில் இறைவன் எமக்கு அருள்பாலிக்கின்றான். பிரம்மா, விஷ்ணு, உருத்திரன், விநாயகன், முருகன், இலக்குமி, துர்க்கை, சரஸ்வதி போன்றவை அனைத்தும் அத்தகைய வடிவங்களே.

″யாதொரு தெய்வம் கொண்டீர் அத் தெய்வமாகி யாங்கே
மாதொரு பாகனார்தாம் வருவர் ″

எனச் சிவஞானசித்தியார் கூறுவது இவ்வுண்மையைத் தெளிவுபடுத்துகிறது

இறைவன் உருவமற்றவன். அவனை மனத்தில் நினைத்தற்காகவும், மனம், மொழி, மெய்யினால் வணங்குவதற்காகவும் திருவுருவம் தாங்குவதால் உருவ நிலையில் வைத்து வழிபடுகின்றோம்.

பல்வேறு மூர்த்திகளுக்கு ஆலயங்கள் அமைக்கப்பட்ட போதிலும் அனைத்தையும் சிவப்பரம்பொருளாகவே காணும் சிவநெறி எம்மிடையே ஆழமாக வேரூன்றியிருக்கிறது.
சம்பந்தரின் வாழ்த்து பெற்ற நாயன்மார்கள்


திருநாவுக்கரசர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகிய மூவரும் சிவனை பாடிய தலங்கள், பாடல் பெற்ற சிவத்தலங்கள் என அழைக்கப்படுகின்றன. 274 தலங்கள் இவ்வாறு பாடல் பெற்றுள்ளன. இதில் திருஞானசம்பந்தர் நாயன்மார்களில் இருவரைப் பற்றி பாடியிருக்கிறார். மதுரையை ஆட்சி செய்த பாண்டியன் நெடுமாறன், சமண சமயத்தை பின்பற்றினார். அவரை சைவ சமயத்தை பின்பற்றச்செய்வதற்காக, அவரது மனைவி மங்கையர்க்கரசியார், அமைச்சர் குலச்சிறையார் இருவரும் திருஞானசம்பந்தரை மதுரைக்கு வரும்படி அழைத்தனர். சம்பந்தரும் மதுரை வந்தார். அவரை குலச்சிறையார் வரவேற்றார். முதலில் திருவாலவாய் கோயிலை தரிசித்த திருஞானசம்பந்தர், மங்கையர்கரசியாரையும், அவரது அமைச்சர் குலச்சிறையாரையும் சிறப்பித்து சொல்லும் வகையில் மங்கையர்க்கரசி வலவர்கோன் பாவை என்னும் பதிகத்தை பாடினார். திருஞானசம்பந்தரால் வாழ்த்தப்பட்ட இவர்கள் இருவரும் சிவனருள் பெற்று நாயன்மார் வரிசையில் இணைந்தனர். குலச்சிறை நாயனாரை சுந்தரமூர்த்தி, ஒட்டக்கூத்தர் இருவரும் பெருநம்பி குலச்சிறையார் என்று பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிவராத்திரியும் பெருமாளும்


பெருமாளுக்கும் சிவராத்திரிக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறது என்றால் இருக்கிறது. நரகாசுரன் கொல்லப்பட்ட தேய்பிறை சதுர்த்தசி திதியே ஒவ்வொரு மாதமும் சிவராத்திரி நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது. பகவான் கிருஷ்ணன் ஐப்பசி மாத சிவராத்திரி முழுவதும் விழித்திருந்து அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்னால் நரகாசுரனைக் கொன்றார். இதில் இருந்து சிவராத்திரியன்று கண்விழித்து சிவனை வணங்குவோர் எடுத்த செயலில் வெற்றி பெறுவர் என்பது தெளிவாகிறது.

கோமாதா பூஜை

கோமாதாவில் (பசு) முப்பத்து முக்கோடி தேவர்களும் வாசம் செய்வதாக ஐதீகம். அதன் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். எனவே, கோமாதா பூஜை செய்யும் போது, பசுவை முன்புறமாக தரிசிப்பதைவிட, பின்புறம் தரிசனம் செய்வது மிகவும் நன்மை தரும். பசுவை வணங்கும்போது முன்நெற்றி மற்றும் வால் பகுதியில் சந்தனம், குங்குமம் வைத்து, மலர் அணிவித்து வழிபட வேண்டும். பசுவின் சாணமும் லட்சுமி அம்சமாகும். எனவேதான், அதிகாலையில் சாணத்தை வீட்டு வாசலில் தெளிக்கிறார்கள்.

திருநீறில் மருந்திருக்கு


திருநீற்றின் பெருமை அளவிடற்கரியது. நீறில்லா நெற்றி பாழ் என்று பெரியோர்கள் கூறியுள்ளனர். பாண்டிய மன்னனின் வெப்பு நோய் நீங்குவதற்காக திருஞான சம்பந்தர் திருநீற்றுப்பதிகம் பாடினார். சுத்தமான திருநீறு, வாதத்தினால் உண்டாகும் 81 நோய்களையும் பித்தத்தினால் உண்டாகும் 64 நோய்களையும், கபத்தால் உண்டாகும் 215 நோய்களையும் போக்கும் தன்மை கொண்டது.

தானமும் பலன்களும்

ஆடை தானம் செய்தால் ஆயுள்விருத்தியும், பூமிதானம் தானம் செய்தால் பிரம்மலோக வாழ்வும், நெல்லி தானம் செய்தால் ஞானமும், தீபம் தானம் செய்தால் பதவியும் கிடைக்கும். அரிசி தானம் செய்தால் பாவம் நீங்கும், பழம், தாம்பூலம் தானம் செய்தால் சொர்க்கம் கிடைக்கும், கடலை தானம் தானம் செய்தால் சந்ததி பெருகும், விதை தானம் செய்தால் தீர்க்காயுள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இறைவனுக்கு ஆடை

சிவனுக்கு எந்த நேரமாக இருந்தாலும் வெள்ளை பட்டு அணிவிக்க வேண்டும். ஆனால், அம்மனுக்கு காலையில் சிவப்பு பட்டும், மாலையில் நீலம் அல்லது பச்சை பட்டும், அர்த்த ஜாமத்தில் சிவப்பு அல்லது பச்சை கரையுள்ள வெள்ளை பட்டும் சார்த்த வேண்டும்.

லெட்சுமிக்கு வில்வ பூஜை

பெருமாள் கோயில்களில் தாயாருக்கு துளசியால்தான் அர்ச்சனை செய்வர். ஆனால், கோவை மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகிலுள்ள கொழுமம் கல்யாணப்பெருமாள் கோயிலில் உள்ள லட்சுமி தாயாருக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்கின்றனர். இக்கோயில் அருகில் சிவன் கோயில் ஒன்று உள்ளது. சைவமும், வைணவமும் வேறில்லை என்ற கருத்தின்அடிப்படையில் இவ்வாறு செய்கின்றனர்.

பிரதான லட்சுமி

விழாக்களின் போது, திருமால் முன்னே செல்ல தாயார் பின்பு தான் செல்வர். திருச்சி அருகிலுள்ள திருவெள்ளறை புண்டரீகாக்ஷ பெருமாள் கோயிலில், விழாக்களின் போது, லட்சுமி தாயார் முன்னே செல்கிறார். பின்னால் தான் பெருமாள் செல்கிறார்.
Read more ...

ஆன்மீக வழிகள்

Saturday, September 25, 2010
ஆன்மீக வழிகள்

1. பயமுறுத்துவதில் தவறில்லை
ஒரு கிராமத்தில் வசித்த 17 வயது இளைஞன் மகாகெட்டவன். வயதுக்கு மீறிய பேச்சு, நடத்தை... அவனைப் பார்த்தால் இளம்பெண்கள் நடுங்கி ஓடுவார்கள். இருந்தாலும், அவர்களை விரட்டிச் சென்று துன்புறுத்துவான்.
ஒருமுறை, ஒரு முனிவர் அவ்வூருக்கு வந்தார். இளைஞன் வசித்த தெருவுக்குள் சென்றார். ஊர் மக்கள் அவரை மறித்து, ""சுவாமி! அங்கே போகாதீர்கள். அங்கே ஒரு துஷ்டன் வசிக்கிறான். அவனைக் கண்டு பயந்து, அந்தத் தெருவையே காலி செய்துவிட்டு வேறு தெருக்களில் நாங்கள் குடியிருக்கிறோம். ""நான் வேறு தெரு வழியாக சுற்றி செல்வதானால், நேரம் அதிகமாகும். என்னிடம் என்ன இருக்கிறது! இம்சை செய்ய, நான் அவ்வழியிலேயே போகிறேன்,'' என்று சொல்லிவிட்டு நடந்தார். இளைஞன் அவரை மறித்தான்.
""யோவ், சாமி! ஊருக்குப்புதுசா! இந்த இடம் எனக்கு மட்டும் சொந்தம். நீர் சுற்றிச்செல்லும்,'' என்று சொல்லி கையை ஓங்கினான்.
""தம்பி! ஒன்றே ஒன்று கேட்பேன். நீ பதிலளித்து விட்டால் நீ சொன்னபடி செய்கிறேன்,'' என்றவர், ""நான் வழிமாறி சொல்வதால் உனக்கென்ன லாபம்!'' எனக்கேட்டார்.
"ஒன்றுமில்லை' என்றான் அவன்.
""எந்த லாபமும் இல்லாத ஒன்றைச் செய்யாதே. இறைவனை வணங்கு, நல்லதைச் செய்ய முயற்சி செய்,'' என்றார் முனிவர். இளைஞன் மனதில் எப்படியோ இந்த வார்த்தைகள் ஆழமாகப் பதிய, அன்றுமுதல் அவனும் சாந்தமாகி விட்டான்.
இதைப்பயன்படுத்தி ஊர்மக்கள் அவனைத் துன்புறுத்த ஆரம்பித்தனர். சிலர் அடிக்கவும் செய்தனர். உடலெங்கும் காயம் ஏற்பட்டாலும் அவன் அமைதி காத்தான். முனிவர் திரும்ப வந்தார்.
""என்னாச்சு உனக்கு?'' என்றார். நடந்ததை விளக்கிய அவனிடம்,""பிறரை நீ அடிக்க வேண்டாம் என்று தான் சொன்னேன். உன்னைத் தாக்க வந்தால் பயமுறுத்த வேண்டாம் என சொல்லவில்லையே!'' என்றார். அதன்பின் மீண்டும் அவன் பயமுறுத்தலை துவங்க மக்கள் விலகிச் செல்ல ஆரம்பித்தனர்.
நல்லவனாய் இருக்கலாம்; ஆனால், ஆபத்து வந்தால், அதைத்தடுக்கும் விதத்தில் பயமுறுத்துவதில் தவறில்லை.
Read more ...

பிரம்மோத்தர காண்டம்

Saturday, September 25, 2010
இனி உருத்திராட்சத்தின் முகங்களையும் அதன் அதிதேவதைகளையும் காண்போம். இருமுக உருத்திராட்சம் பரத்துவ சொரூபம்.

இதை அணிந்தால் பரத்துவத்தை அடையலாம்.

இருமுக உருத்திராட்சம் அர்த்தநாரிஸ்வரன் உருவம் உடையது. இதனை அணிந்தால் எப்போதும் இன்பம் உண்டாகும்.

மும்முக உருத்திராட்சம் மூன்று அக்னியின் சொரூபம் கொண்டது. இதனை அணிவது அக்னி தேவர்க்கு இன்பமூட்டும்.

நான்கு முக உருத்திராட்சம் பிரம்மனின் சொரூபம். இதை அணிந்தால் பிரம்ம தேவன் இன்பமடைகிறான்.

ஐந்து முக உருத்திராட்சம் பிரம்ம சொரூபம் கொண்டது. இதனை அணிவதால் நரஹத்தி அழிகிறது.

ஆறுமுக உருத்திராட்சம் அதிதேவதை சுப்ரமண்யர். இதை அணிந்தால் அதிக செல்வமும் ஆரோக்கியமும் கிடைப்பதுடன், பக்தியும், அறிவும், செல்வமும், சுத்தியும் எய்தும்.

அறுமுக உருத்திராட்சத்திற்கு விநாயகரை அதிதேவதை என்றும் சொல்வார்கள்.

ஏழு முக உருத்திராட்சத்திற்கு அதிதேவதை சப்தமாதா. இதனை அணிந்தால் ஞானமும், ஆரோக்கியமும், செல்வமும் கிடைக்கும்.

எட்டு முக உருத்திராட்சம் அணிந்தால் அஷ்ட வசுக்களும், கங்கை பலனும் அடையும். அதிதேவதை அஷ்டவசு.

ஒன்பது முக உருத்திராட்சத்தை அணிந்தால் நவசக்திகளும் இன்பமடையும். இதன் அதிதேவதை நவசக்தி.

பத்துமுக உருத்திராட்சத்திற்கு அதிதேவதை எமன். இதனை அணிந்தால் பாவங்களுக்கெல்லாம் பரிகாரம் ஏற்படும்.

பதினொரு முக உருத்திராட்சத்திற்கு அதிதெய்வம் பதினொரு உருத்திரர். இது சகல செளபாக்கியங்களையும் விருத்தியடையச் செய்கிறது.

பன்னிரண்டு முக உருத்திராட்சம் மகாவிஷ்ணுவின் சொரூபம். இது பன்னிரு ஆதித்ய சொரூபம் என்று அழைக்கப்படுகிறது.

பதின்மூன்று உருத்திராட்சம் போகத்தையும், சித்தியையும், சுகத்தையும் கொடுக்கிறது. இதனை அணிந்தால் காமதேவன் மகிழ்ச்சியடைகிறான்.

உருத்திர நேத்திரத்தில் உண்டாகிய பதினான்கு முக உருத்திராட்சம் சகலவிதமான நோய்களையும் நீக்கி என்றும் ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது.

108 உருத்திராட்சம் கொண்ட மாலையை எப்போதும் மார்பில் அணிந்திருப்பவன் அடுத்தடுத்து செய்த அஸ்வமேதயாக பலத்தை அடைகிறான்.

உருத்திராட்சத்தின் அடி பிரம்மா. நாளம் விஷ்ணு. முகம் உருத்திரர். பிந்து சமஸ்தேவர்கள். அர்ச்சனை, ஹோமம் முதலியவற்றின்போது இதனை அணிந்தால் அஸ்வமேத யாகத்தின் பலனைக் கொடுப்பதோடு, எல்லா பாவங்களிலிருந்தும் விடுதலை கிடைக்கிறது.

உருத்திராட்ச மாலையைக்கொண்டு ஜெபித்தால் அதிக பலம், அதிக புண்ணியம். தலையில் அணிந்து குளித்தால் கங்கையில் நீராடிய பலன் கிட்டும். குறிப்பாகச் சிவனடியார்களால் போற்றப்படும் இரு முகம், ஐந்து முகம், பதினொரு முகம், பதினான்கு முகம் கொண்ட உருத்திராட்சங்களை அன்போடு பூசித்து அணிகின்ற மானிடர்கள் தரித்திரம் உடையவராய் இருந்தாலும் எல்லாரையும்விட அவரே செல்வம் நிரம்ப உடையவராகிறார்.

தீட்சை பெற்ற பெண்களும் உருத்திராட்சத்தை அணியலாம். உருத்திராட்ச தரிசனம் பாவத்தைப் போக்கும். தொட்டால் சகல வெற்றிகளையும் கொடுக்கும். குவிக்கும்.

பிறப்பு – இறப்பு தீட்டுக்காலங்களில் உருத்திராட்சம் அணியக்கூடாது. சிவன் நாமத்தை இடைவிடாமல் உச்சரிப்போரும், புனிதம் மிக்க உருத்திராட்சத்தை அணிந்திருப்போரும் சிவ பக்தர்களில் தலைசிறந்தோர் என்று கூறுகின்றனர்.

‘ஆயமாமணி ஆயிரம் புனைந்திடில் அவரை
மாலயன் நான்முகன் புரந்தரன் வானவர் முதலோர்
பாயுமால் விடைப் பரமெனப் பணிகுவர் என்றால்
தூயமாமணி மிலைந்தவர் மனிதரோ சொல்வீர்’

என்று உருத்திராட்சத்தின் மேன்மையைப் பிரம்மோத்தர காண்டம் சிறப்பித்துக் கூறுகின்றது.
Read more ...

பிரம்மோத்தர காண்டம்

Saturday, September 25, 2010
உருத்திராட்சம்


உருத்திராட்சம் எப்படி உண்டானது? அதை மனிதர்கள் எவ்வாறு அணிய வேண்டும்? எந்த மந்திரங்களைக் கூறித் தரிக்க வேண்டும்? அதில் எத்தனை பேதமுகங்கள் உள்ளன என்று காலாக்னி உருத்திரரைப் பூதாண்டார் கேட்டார்.

இக்கேள்விக்கு காலாக்னி உருத்திரர். ‘ஆயிரம் திவ்ய வருஷங்கள் நான் கண்களை மலர்த்திக் கொண்டிருந்தேன். எனது மலர்த்திய கண்களிலிருந்து நீர்த்துளிகள் பூமியின் கண்ணே விழுந்தன. அக்கண்ணீர்த் துளிகள் அன்பர்களுக்கு அனுக்ரகம் செய்ய வேண்டிய காரணத்தால் ஸ்தாவரமாகிப் பொ¢ய உருத்திராட்சங்களாயின’ என்றார்.

உருத்திராட்சத்தை அக்குமணி என்றும் குறிப்பிடுவர். பெண்களுக்கு மாங்கல்யம் போலச் சிவத் தொண்டர்களுக்கு அணிகலனாகத் திகழ்வது இது. இதைக் கண்டிகை என்றும், தாழ்வடம் என்றும் கூறுவர்.

உருத்திராட்சத்தை தரிசித்தால் லட்சம் மடங்கு புண்ணியம். தொட்டால் கோடி மடங்கு புண்ணியம். அணிந்தால் நூறு கோடி புண்ணியம். ஜெபித்தால் நூறுகோடி மடங்கு புண்ணியம் அடைவதாகப் புராணங்கள் கூறுகின்றன.

நெல்லிக்காய் அளவுள்ள உருத்திராட்சம் உத்தமம். இலந்தைப்பழ அளவு மத்திபம். கடலை அளவு அதமம். புழுக்கள் குடைந்ததும், நசுக்கியதும், நோயுற்றதும் அணியக்கூடாத உருத்திராட்சங்கள்.

இரே அளவுள்ளதும், உறுதியானதும், பொ¢யதும், சம முத்துகள் பொன்றுள்ளதுமான உருத்திராட்சங்களைப் பட்டுக் கயிற்றில் கோத்து உடலில் அணிய வேண்டும்.
Read more ...

கேள்வி ---பதில்

Saturday, September 25, 2010
பகவான்: அர்ச்சுனா! நான் கர்மயோகம் குறித்துப் பல விஷயங்களைச் சொன்னேன். இப்போது கர்ம யோகத்தின் சாரத்தைச் சொல்கிறேன்.எந்த மனிதன் செய்வினைப் பயன்களை( தோன்றிமறையும் பொருட்களை) துய்க்காமல் தம் கடமைகளைச் செய்து வ்ருகிறானோ,அவன் தான் துறவி.அவன் தான் யோகி.தீமை சார்ந்த கருமங்களை துறந்தவன் சன்னியாசியோ யோகியோ இல்லை.
ஆகையால் அர்ச்சுனா! உலகோர் எதைச் சன்னியாசம் ( சாங்கிய யோகம்) என்கிறார்களோ, அதுதான் கர்மயோகமென்பதை உணர்ந்து கொள்.

அர்ச்சுனன்: சன்னியாசி, யோகி -இவர்களிடம் எந்த விஷயத்தில் மகிமை உள்ளது?

கண்ணன்: சங்கற்பங்களைத் துறக்கும் விஷயத்தில் தான் உள்ளது.ஏனெனில் சங்கற்பங்களை ( செயல் தீர்மானம்)துறக்காமல் அதாவது தம் மனத்தின் ஆதிக்கத்தை விடாமல் மனிதன் எந்த விதமான யோகியாகவும் முடியாதது.

அர்ச்சுனன்: யோகியாவதற்கு முக்கிய காரணம் என்ன?

கண்ணன்: எந்த மனிதன் யோகத்தில் ( சம நிலையில்) ஆதிக்கம் செலுத்த விரும்புகிறானோ, அத்தைகைய சிந்தனை கொண்ட யோகிக்குபற்றுதல் இல்லாமல் கடமையையைச் செய்வதுதான் யோக நிலையில் திடமாக இருப்பதற்குக் காரணம்.அந்த யோகியின் அமைதிதான் ( சாந்தி) பரமாத்ம தத்துவத்தை அடைவதற்குக் காரணம்.அதாவது,உலகியல் தொடர்புகளைத் துறப்பதால் கிட்டும் அமைதியை அனுபவிக்காமல் இருப்பதே பரமாத்துவத்தைப் பெறுவதற்குக் காரணம்.

அர்ச்சுனன்: யோகத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட யோகரூடன் எனும் சாதனையாளனுக்கு என்ன அடையாளம் பகவானே?

கண்ணன்: எந்த யோக சாதகனுக்கு புலன்களின் இலக்கான போகவிஷயங்கலும் செயல்களிலும் விருப்பமுள்ள ஈடுபாடுஇல்லையோ ,தன்னலம் வேண்டி எந்தச் சங்கற்பமும் இல்லயோ அந்தச் சிறந்த மனிதர் தான் யோகரூடர்.யோகத்திலேயே ஈடுபட்டிருப்பர்.

அர்ச்சுனன்: மனிதன் யோகரூடனாக விளங்குவதற்கு என்ன செய்ய வேண்டும் கண்ணா?

கண்ணன்: அம்மனிதன் தன்னைத் தானே உயர்த்திக் கொள்ளவேண்டும்.தன்னைத் தாழ்த்திக் கொள்ளக்கூடாது.மனிதன் அவனுக்கே நண்பனாகவும் பகைவானகாகவும் இருப்பவன் தனக்குத்தனே நட்பும் பகையும் ஆனவன்.

அர்ச்சுனன்: தானே தனக்கு நட்பாகவும் பகையாகவும் எப்படியாக முடியும் கண்ணா?

கண்ணன்: எந்த மனிதன் தன்னைத்தானே வெற்றி கொள்கிறானோ,அதவது எவன் “அஸத்”( உண்மையற்றது) நிலையுடன் தொடர்பு கொள்ளாமல் இருக்கிறானோ,அவனே அவனுக்கு நண்பன் எவன் தனக்குத்தானே தோல்வி அடைகிறானோ,அதாவது எவன் “அஸத்” கூட தொடர்பு கொண்டிருகிறானோ அவனே அவனுக்கு விரோதி.

அர்ச்சுனன்: மனிதன் தனக்குத்தானே நண்பனானால் என்ன ஆகும் பகவானே?

கண்ணன்: எவன் தன்னைதானே வென்றிருக்கிறானோ,அவன் முன்வினைப் பயனாக ஏற்படும் நன்மை தீமைகளிலும்,நடைமுறை வாழ்வில் செய்யப்படும் செயல்களின் வெற்றி தோல்விகளிலும்
பிறர் புரியும்,மானம், அவமானங்களிலும் இருக்கிறான்.ஆகையால் அந்தத் திடசித்தனான மனிதன் பரமாத்மாவை அடைகிறான்.

அர்ச்சுனன்: பகவானே! பரமாத்மவை அடைந்த மனிதனின் இலட்சணங்கள் என்ன?

கண்ணன்: அந்த மகாபுருஷர்களின் அந்தக்கரணம் ( உள் மனம்)எப்பொதும் ஞானம் விஞ்ஞானம் எனும் மெய்யறிவு சிறப்பறிவுகளல் நிரம்பி திருப்தியுடன் உள்ளது.அவனிடம் எல்லப் புலன்களும் அடங்கி ஒடுங்கி இருக்கின்றன. அவன் எல்லா சூழ்நிலைகளிலும் மனம் பேதலிக்கமால் விருப்பு வெறுப்புகளுக்கு இலக்காகாமல் நடுநிலையில் இருக்கிறான்.மண்ணாங்கட்டி, கருங்கல்,தங்கம் இம் மூன்றையும் சமமாக மதிக்கும் அறிவு பெற்றவன்.பொருள்களில் மட்டுமல்ல உற்றார்,உறவினர்,நண்பர்,பகைவர்,மதிப்பவர்,மதியாதவர்,பொதுவானவர்,வெறுக்கத்தக்கவர்.நல்லவர்,தீயவர்-இத்தைய எல்லோரிடமும் சமபுத்தியுடன் பழகுபவன்.இத்தைகைய சமபுத்தி உள்ளவன் மிகச்சிறந்த மனிதனாகிறான்.
Read more ...

சிவ மந்திரங்கள்

Saturday, September 25, 2010
Angry face

மனதைத் திடப்படுத்துவது எதுவோ அதுவே மந்திரம் எனப்படும். உரு(எண்ணிக்கை) ஏற திரு ஏறும் என திருமூலர் மந்திரத்தை ஜபிப்பதால் கிடைக்கும் நன்மையைப் பற்றிக் கூறுகிறார்.

திரு என்றால் பிரகாசமான என்று அர்த்தம். எல்லோரையும் கவரும் காந்தசக்தி என்றும் கூறலாம். வாழ்க வளமுடன் என்பதும் ஒரு சக்திவாய்ந்த மந்திரமே! நாம் சாதாரணமாக பேசும் வார்த்தைகளுக்கு சக்தி உண்டு; அதை விட திருமந்திரம், பெரிய புராணம், கந்த சஷ்டிகவசம், கந்தரலங்காரம், திருப்பாவை முதலான தமிழ் ஆன்மீகப் படைப்புகளுக்கு நாம் அவற்றை பாடும் போதும் மனதிற்குள் ஜபிக்கும் போதும் சக்தி அதிகம்.இதற்குச் சம்மான சக்தி கொண்டவையே சமஸ்கிருத மந்திரங்கள்.அவற்றில் பெரும்பாலான மந்திரங்களுக்கு அர்த்தம் கிடையாது.ஆனால், அவற்றை முறையாக உச்சரிக்கும்போது அது மனிதநலத்தை அதிகப்படுத்துகிறது.இது தொடர்பாக ஒலியியல் விஞ்ஞானம் என்ற புதிய அறிவியல்துறை உருவாக்கப்பட்டு இந்துக்களின் வேதமந்திரங்களுக்கு மனித கஷ்டங்களை நீக்கும் அல்லது மாற்றும் வலிமை உண்டு என கண்டறியப்பட்டுவிட்டது.மேலும் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.இத்தகு ஆராய்ச்சிகள் ஜெர்மனி,சுவிட்சர்லாந்து,இங்கிலாந்து நாடுகளில் நடைபெறுகின்றன.
Read more ...

மந்திரங்களும் பலன்களும்:

Saturday, September 25, 2010
ஹோம மந்திரங்களும் - ஹோமத்தின் பலன்களும்:

1. ம்ருத் ஸஞ்சீவினி – அகால, அபம்ருத்யு பயம் நீங்கல், ஆயுள் விருத்தி.
2. பஞ்சதசீ சிவ மந்த்ரம் – ஸகல கார்ய சித்தி, செயற்கரிய செயல் செய்தல், வாழ்வில் ஏற்றம்.
3. சுதர்ஸன மந்த்ரம் – செய்வினை, சத்ருக்களின் தொல்லை, வியாபாரத் தடை நீங்குதல், மனச்சாந்தி அடைய.
4. லக்ஷ்மி ந்ருஸிம்ஹ மந்த்ரம் – பணவரவு, கடன் நிவாரணம், பணப்புழக்கம், குடும்ப மகிழ்ச்சி.
5. சுதர்ஸன நரஸிம்ஹ மந்த்ரம் – எதிரிகள் தொல்லை, வழக்கு வியாஜ்யம், குடும்ப-தொழில் குழப்பங்கள் நீங்க.
6. வாஸுதேவ மந்த்ரம் – வறுமை, கிலேசம், சந்தேகம், தீவினைகள் அகன்று இம்மை மறுமை நலன்கள் கொழிக்க.
7. விஸ்வரூப மந்த்ரம் – சதுர்வித புருஷார்த்தங்கள், மனோபலம், ஜயம், அசைகள் பூர்த்தியாக.
8. கந்தர்வராஜ மந்த்ரம் – தடை நீங்கி திருமணம், குடும்ப சூழ்நிலைச் சிக்கல்கள் நிவர்த்தி, சுப கார்யங்கள் நடைபெற.
9. ஹயக்ரீவ மந்த்ரம் – புத்தியும் சக்தியும் தூண்டப்படுதல், கல்வியில் ஏற்றம், மஹாவித்வத்வம், இனிய சொல் மெய்யுணர்வு.
10. நாமத்ரயம் – அனைத்து பாப விமோசனம், சுமுக சூழ்நிலை ஏற்பட.
11. சுதர்ஸன அபரோ மந்த்ரம் – ரக்ஷா ப்ரதானம், அடிமன பயம் நீங்குதல், மனநிறைவு, நிம்மதி.
12. நரஸிம்ஹ மந்த்ரம் – பணவரவு, கடன் நிவாரணம், பணப்புழக்கம், குடும்ப மகிழ்ச்சி, நோய் வறுமை நீங்கி ஸகல சம்பத்துகள் அடைய.
13. கருட மந்த்ரம் – விஷம், ஸர்ப்ப தோஷம், துஷ்ட மிருக பயம் விலக.
14. மஹா கருட மந்த்ரம் - அதைர்யம், பாபம், விஷக்ரஹ தோஷங்கள், துஷ்டர் பயம் ஆகியன விலக.
15. தன்வந்த்ரீ மந்த்ரம் – முதுமை, நோய், பய உணர்ச்சி அகன்று யௌவனம், தைர்யம், தேகஒளி, தீர்க்காயுஸ், ரோகமின்மை ஏற்பட.
16. கருட காயத்ரீ மந்த்ரம் – தாமதம் நீங்கி எண்ணிய காரியம் முடிதல், சீக்ர கார்யசித்தி பெற.
17. சுதர்ஸன காயத்ரீ மந்த்ரம் – ஞானம், சக்தி, பலம், ஐஸ்வர்யம், வீர்யம், தேஜஸ் பெற்று சௌகர்யம் ஏற்பட.
18. தன்வந்த்ரீ காயத்ரீ மந்த்ரம் – முதுமை, நோய், பய உணர்ச்சி அகன்று யௌவனம், தைர்யம், தேகஒளி, தீர்க்காயுஸ், ரோகமின்மை, மன்மதஸ்வரூபம் ஏற்பட.
19. வித்யா கோபால மந்த்ரம் – வித்யா பிராப்தி, நினைவாற்றல், வாக்குவன்மை, மேதா விலாசம் கூடுதல்.
20. அன்ன கோபால மந்த்ரம் – அன்னபானாதி சம்விருத்தி, தன்னிறைவு பெற.
21. சௌபாக்யலக்ஷ்மீ மந்த்ரம் – லக்ஷ்மி கடாக்ஷம், தாபத்ரய நிவர்த்தி, அஞ்ஞான நிவர்த்தி.
22. க்ஷேத்ர ப்ராப்திகர மந்த்ரம் – பூமி லாபம், குபேர சம்பத்து ஸ்திர லாபம் பெற.
23. க்ஷேத்ர ப்ராப்திகர அபேரா மந்த்ரம் – இந்த்ர பதவி, பொன் விளையும் பூமிக்கு அதிபதி, லோக பிரசித்தி, ஸ்திரத்தன்மை அடைய.
24. த்ருஷ்டி துர்கா மந்த்ரம் – ஸர்வ திருஷ்டி தோஷ பரிகாரம், முன்னேற்றம்.
Read more ...

மந்திரங்களும் பலன்களும்:

Saturday, September 25, 2010
ஹோம மந்திரங்களும் - ஹோமத்தின் பலன்களும்:

1. ஸ்ரீ சக்தி பஞ்சாக்ஷரீ – சகல யோகமும் சௌபாக்யமும் உண்டாக.
2. சுத்த பஞ்சாக்ஷரீ – மனோரத இஷ்ட காம்யார்த்த அபிலாக்ஷைகள் நிறைவேற.
3. சிவ அஷ்டாக்ஷரீ - ஸர்வ சத்ரு, மிருக, ரோக உபாதிகள் நீங்க.
4. சிவ பஞ்ச தசாக்ஷரீ – அஷ்ட ஐஸ்வர்யப் பிராப்தி அடைய.
5. சிதம்பர பஞ்சாக்ஷரீ – ஞான வைராக்யம், சிவ கடாக்ஷம் பெற.
6. குரு தாரக பஞ்சாக்ஷரீ – ஸகல ஜன வசீகரணம், ராஜாங்க வெற்றி, தேவதா ப்ரீதி உண்டாக.
7. ம்ருத்யுஞ்ஜய த்ரயக்ஷரீ – அகால, அபம்ருத்யு பயம் நீங்க, ஆயுள் விருத்தியடைய.
8. சிதம்பர சபாநடன மந்த்ரம் – அனைத்து பாப தோஷ பரிகாரம், ரக்ஷா பந்தனம்.
9. நீலகண்ட மந்த்ரம் – எதிர்பாராத கொடிய ஆபத்தினின்று மீளல், தவிர்த்துக் கொள்ள.
10. மஹா நீலகண்ட மந்த்ரம் – பூதப்பிரேத பிசாச உபத்ரவம், ஸர்வாரிஷ்டம் நிவாரணம்.
11. த்வனி மந்த்ரம் – மன சாந்தி, சந்தி, சந்துஷ்டி, சிவானந்த அநுபூதி பெற.
12. சிவ காயத்ரீ – நினைவுத்திறன், சமயோசித புத்தி, புதிய யுக்தி, வாக்சாதூர்யம் கூட.
13. மார்கதர்சீ சிவ மந்த்ரம் – பிரயாண சௌகர்யம், எவ்வித ஆபத்துகளும் விபத்துகளும் நேராதிருக்க.
14. ருணமோசன சிவ மந்த்ரம் – கடன் நீங்க, தேவ, பித்ரு ரிஷி கடன் அடைதல், பணவரவு, சேகரிப்பு அதிகரிக்க.
15. பசுபதி காயத்ரீ – ஸகல வித திருஷ்டி விலக, வழக்கில் வெற்றி, குடும்ப மகிழ்ச்சி ஏற்பட.
16. சிவ நவாக்ஷரீ - கார்யா தடைகள், தேக்கநிலை தீர்வு, நிர்வாகத் திறன் கூடுதல், புது முயற்சிகள் பலிதம்.
17. பாசுபதாஸ்த்ரம் – பூதப்பிரேத பிசாச உபத்ரவம், ஸர்வாரிஷ்டம் நிவாரணம், ஆபிசார தோஷம், செய்வினைகள் அகல.
18. ருத்ர காயத்ரீ – பாப தோஷ விமோசனம், நிரந்தர ஜயம்.
19. வித்யாப்ரத சிவமந்த்ரம் – புத்திகூர்மை, மேதா விலாஸம், சொல் வசீகரணம், ஸரஸ்வதி கடாக்ஷம் பெற.
20. உமாமஹேஸ்வர மந்த்ரம் – குடும்ப ஒற்றுமை அன்யோன்யம், மட்டற்ற மகிழ்ச்சி, குதூகலம் பெற.
21. ஆபத்துத்தாரக கௌரீவல்லப மந்த்ரம் – எல்லா ஆபத்துக்களும் தடைகளும் நீங்கி, நிரந்தர ஜயம் உண்டாக.
22. ஸர்வபாபஹர பவ மந்த்ரம் – அனைத்து பாப தோஷங்களும், அனாசார பாதிப்பும் விலகுதல்.
23. ரக்ஷாப்ரத கௌரீ சிவ மந்த்ரம் – சீரான உடல் நலம், முகப்பொலிவு, மறுமலர்ச்சி, ஆரோக்கியம் கூடுதல்.
Read more ...

சித்தர்களின் காலமும்

Saturday, September 25, 2010
சித்தர்களின் காலமும் அவர்களின் பெயர்கள் பற்றிய உண்மையும்:

சித்தர்கள் பற்றி தெரிந்துகொள்ளும் முன் அவர்களின் காலம் பற்றி அறிய வேண்டிய கட்டாயமும் நம் முன்னே தோன்றுகின்றது. சித்தர்களில், அகத்தியரின் காலம் இன்னதென்று இதுவரை யாரும் அறுதியிட்டு கூறவில்லை. மேலும் அகத்தியர் இயற்றியதான நூல்களும், காலமும் பாடலுக்கு பாடல் வேறுபடுவதாயும் ஒருவரின் பெயரிலேயே பலர் இருந்திருக்கக்கூடும் என்ற ஐயத்தையும் எழுப்புகிறது. தொல்காப்பியரின் ஆசிரியரான அகத்தியருக்கும் அவரால் எழுதப்பட்டு கிடைக்காமல் போன “அகத்தியம்” என்ற தமிழின் மூல இலக்கண நூலும் இந்த சித்தர் பாடலோடு தொடர்புடையவை தானா என்பது ஆராயப்படவேண்டும்.

அகத்தியருக்குப் பின்னர் அறியப்பட்டதாக கூறப்படும் திருமூலரின் காலம் ஐந்தாம் நூற்றாண்டு என கூறுவாரும் உள்ளனர். வையாரையும் சித்தராக்கி அவரது பாடல் பல ‘சித்தர்பாடல்கள் ஞானக்கோவை’யில் காணக் கிடைக்கின்றன. இடைக்காடரைப்பற்றி தேடும்போது இவர் பதினைந்தாம் நூற்றாண்டை சேர்ந்த தொண்டை அல்லது சேர நாட்டவர் என்றும் குறிப்பு இருந்தபோதும் இடைக் காடர் “ஊசி முறி” என்ற நூலை எழுதியவர் என யாப்பெருங்கலக்காரிகை கூறுகிறது.

திருவள்ளுவ மாலையில் “கடுகைத் துளைத்த” எனப்பாடல் எழுதிய இடைக்காடருக்கும் இவருக்குமான தொடர்பு பற்றி எந்த குறிப்பும் இல்லை. இவர் இடையர் இனத்தை சேர்ந்தவர். போகரிடம் சித்து பயின்றவர். அதனாலேயே இவரை இடைக்காடரர் என்பவரும் உண்டு. இராமத் தேவர் என்பவர் 10ம் நூற்றாண்டை சேர்ந்தவர் என்றும் பூசை விதி என்று பத்து பாடல்களை எழுதியவர் என்றும் உரோம முனியைப் பற்றி கூறுகையில் இவரின் முதல் பாடலில் வரும் ஈற்றடியை வைத்து இவரை உரோம முனி என அழைத்தனர் என்றும் நூலாசிரியர்கள் கூறுகின்றனர்.

நந்தவனத்திலோர் ஆண்டி என்ற பாடலின் மூலம் அறியப்பட்ட கடுவெளிச் சித்தரின் காலம் 11ம் நூற்றாண்டு என்றும், இவரால்தான் ஆனந்தக்களிப்பு என்ற யாப்பிலக்கணம் தமிழுக்கு வந்தது என்றும் பல நூல்களின் வாயிலாக அறியமுடிகிறது. கருவூராரை போகரின் சீடர் என்றும் இவரை தஞ்சை பெரிய கோவிலின் பணியில் உடனிருந்தவர் என்றும் கூறுவதையொட்டி இவரின் காலம் பத்தாம் நூற்றாண்டின் பிற்பகுதி என அறியலாம். இவரின் பெயரும் ஊரை வைத்தே அறியப்பட்டுள்ளது. காகபுசுண்டரின் பெயரும் அவரின் பாடல் 12ல் முதலடியையொட்டி அவருக்கு அப்பெயர் கிட்டியுள்ளது. இவரின் காலமும் சரியாய் அறியப்படவில்லை. குதம்பை என்ற பெண்கள் அணியும் காதணியை அணிந்திருந்ததால் அவர் குதம்பைச்சித்தர் என்றும், கொக்கை எரித்த கொங்கணவர் என்று கொங்கணரும் அறியப்படுகின்றனர்.

கொங்கணரையும், திருவள்ளுவரையும் சமகாலத்தவர் என்று கூறும் புனைகதைகள் இன்றும் உண்டு. இதனால் திருவள்ளுவர் 2000ம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர் என்பதும் எவ்வளவு உண்மையானது என ஆராயப்பட வேண்டும். ஆசையை பாம்பு என உருவகப்படுத்திய சட்டைமுனியும் பாம்பாட்டிச் சித்தரும் சம காலத்தவர் என்ற கருத்து பல நூல்களில் காணப்படுகின்றது. அதேபோல் சிவவாக்கியரும்,கொங்கணரும் சமகாலத்தவர் என்ற கதைகளையும் சிவவாக்கியர் திரு மூலரின் பாடல்களை ஒத்து பலபாடல்களை எழுதியுள் ளதையும், அவரின் பாடல்களின் மூலம் அறியலாம். மேலும் சிவவாக்கியர் என்ற பெயர் அவரின் “சொல்லுவேன் சிவவாக்கியம்” என்ற காப்புப்பாடல் மூலமே அவருக்கு கிட்டியுள்ளது. பாம்பாட்டிச் சித்தரின் காலம் 10ம் நூற்றாண்டு எனவும்,அவர் பாண்டி அல்லது தொண்டை நாட்டவர் என்ற குறிப்பும் சித்தர் பாடல்களை தொகுத்த நூல்களிலிருந்து கிடைக்கும் செய்தி. பின்னால் வந்த சித்தர்கள் என்று அறியப்படும் பட்டினத்தார் பூம்புகாரை சேர்ந்தவர் என்றும் அவரை தொடர்ந்து வந்த பத்திரகியார் துளுவநாட்டு மன்னன் என்ற செய்தியும் அவர்கள் இருவரும் 14ம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்தவர்கள் என்றும் அறியப்படுகிறது.
Read more ...

சித்தர்கள்..

Saturday, September 25, 2010
சித்தர்கள்..சித்தர்கள் என்றவுடனே அவர்கள் பற்றிய பிரமையும்,அதனோடு கூறி வந்துள்ள புனைகதைகளுமே நினைவுக்கு வரும். சித்தர்கள் பற்றி நாம் அறிந்ததெல்லாம்,அவர்கள் ரசவாதம் செய்வதிலே வல்லவர்கள்,சாதாரண உலோகத்தையும் தங்கமாக்கும் திறன் கொண்டவர்கள், வைத்தியமுறைகளை தமிழுக்குக் கொணர்ந்தவர்கள்,காற்றிலும் நீரிலும் நடக்கத் தெரிந்தவர்கள் என்பவையே. உண்மையில் இதையெல்லாம் ஏன் அவர்கள் செய்தார்கள், இப்படிப்பட்ட செப்பிடு வித்தைகளை செய்ததன் நோக்கம் என்னவென்று ஆராய முற்பட்டால் அவர்களுக்கென்று ஒரு அடையாளமுமின்றி மக்கள் சேவையை குறிக்கோளாகக் கொண்ட வாழ்க்கை தெரியவரும். சித்தர்கள் பற்றி அறியும் முன்னர் சித்தர்கள் என்று தமிழுக்கு அறியப்பட்டவர்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பொதுவாக பதினென் சித்தர்கள் என்று பதினெட்டு சித்தர்களை முதன்மைப்படுத்தி பல நூல்கள் வெளிவந்தபோதும் இவ்வெண்ணிக்கை காலத்திற்குக் காலம் வேறுபடுவதாகவே உள்ளது.

சித்தருக்கான பொருளை சில சித்தர் பாடல்களிலிருந்தே கூட அறியலாம்: “ஆத்தாளை பூசித்தோன் அவனே சித்தர்” என்று கருவூராரும், “எழும்பாமல் வாசனையைக் கொன்றோன் ஞானி ஏகாமல்/ வாசனையை யடித்தோன் சித்தன்” என்று சட்டைமுனியும், “சிந்தை தெளிந்திருப்பவர் ஆர் அவனே சித்தன்” என்று வான்மீகரும், “யோகச் சமாதியின் உள்ளே அகலிடம்/ யோகச் சமாதியின் உள்ளே உளரொளி / யோகச் சமாதியின் உள்ளே உள சக்தி /யோகச் சமாதி உகந்தவர் சித்தரே” என்று திருமூலரும் விளக்கம் தருகிறார்கள். இவற்றின் மூலமே சித்தரின் குணநலன்களை அறியலாம்.

சாதி, சமயம், உருவ வழிபாடு மறுப்பின் மூலம் சமதர்மத்தை வலியுறுத்தியவர்கள் சித்தர்கள். இயற்கை வடிவங்களான மரம்,செடி,கொடி,போன்றவைகளின் இயல்பறிந்து மனிதஉடலின் நோய்த்தடுப்பும், குணமாக்கும் விதத்தையும் அறிந்தவர்கள். நோய்த் தீர்க்கும் மருத்துவராய் மட்டுமின்றி புலனடக்கம் பற்றியும் யோகம் பற்றியும் பேசித் திரிந்ததோடல்லாமல் பின் பற்றியும் வாழ்ந்தவர்கள். மக்களின் மன இருளைப் போக்கி ஞான ஒளிபரப்பச் சிந்தனைச் செல்வத்தை வாரி வழங்கினர்.
கோள்களின் நிலை,கால மாறுபாடு, சுடர்களின் இயக்கம் பற்றியும் கூறி பல சோதிட நூல்களையும் மருத்துவ நூல்களையும் எழுதியவர்கள் சித்தர்கள்.
Read more ...

திருமந்திரம்

Saturday, September 25, 2010
"பிராணன் மனத்தொடும் பேராது அடங்கிப்
பிராணன் இருக்கில் பிறப்பு இறப்பு இல்லை
பிராணன் மடைமாறிப் பேச்சு அறிவித்துப்
பிராணன் நடைபேறு பெற்று உண்டீரே.'

திருமந்திரம்- பாடல் எண்: 560

ஆன்மிகப் பாதையில் செல்பவர்களுக்கும், ஞானத் தேடலில் இறங்குபவர்களுக்கும் இறுதி யான குறிக்கோள் ஒன்றேயாகும். அது பிறப்பு- இறப்பு அற்ற முக்தி நிலை! வழிகள் வெவ்வேறாக இருந்தாலும் முக்தி நிலையை அடைவதே குறிக்கோளாக இருக்கிறது.

பிராணனும் மனமும் ஒன்றாக இணைந்து, ஒன்றில் ஒன்று அடங்கி ஒடுங்கும் நிலையை அடையும்போதுதான் பிறப்பு - இறப்பு இல்லாத நிலை உருவாகும் என்கிறார் திருமூலர்.

"பிராணன் மனத்தொடும் பேராது அடங்கிப்
பிராணன் இருக்கில் பிறப்பு இறப்பு இல்லை.'

"பேராது' என்ற சொல்லுக்கு "விலகாது' என்று பொருள். பிராணன் மனத்திலிருந்து விலகாமல் இரண்டும் ஒன்றாக இணைந்து அடங்க வேண்டும். பிராணாயாமம் எனும் மூச்சுப் பயிற்சியின் வாயிலாகவே இது சாத்தியமாகும் என்கிறார் திருமூலர்.

நாம் சுவாசிக்கும்போது மூச்சுக் காற்றானது (பிராணன்) மேலிருந்து கீழாகவே செல்கிறது அல்லவா? இதுவே இயல்பான மூச்சு. ஆனால் இத்தகைய இயல்பான சுவாச முறையினால் முக்தி நிலையை அடைய இயலாது. பிராணன் தனது இயல்பான பாதையை விட்டு மாறி (மடைமாறி) மேல்நோக்கிச் சென்று ஆக்ஞை, லலானம், சகஸ்ராரம் ஆகிய உயர்நிலைச் சக்கரங்களை அடைய வேண்டும். அப்போதுதான் பிறப்பு- இறப்பு இல்லாத முக்தி நிலை உருவாகும்.

"மடைமாறி' என்ற ஒரு சொல்லில் பல சூட்சுமங்கள் உள்ளன. தண்ணீர் செல்லும் சிறிய வாய்க்காலையே "மடை' என்பார்கள். மடை மாறி என்ற சொல்லுக்கு (மேலே கண்டபடி) கீழ்நோக்கிச் செல்லும் பிராணன் தனது பாதையிலிருந்து மாறி மேல்நோக்கிச் செல்ல வேண்டும் என்றும் பொருள் கொள்ளலாம். இது தவிர மேலும் இரு சூட்சுமங்கள் இந்த ஒற்றைச் சொல்லில் உள்ளன.

சுவாசம் என்பது இடது நாசி, வலது நாசி என மாறி மாறி வரும்; இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை இந்த மாற்றம் நிகழும்.
Read more ...

திருமந்திரம்

Saturday, September 25, 2010
"புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டால்
கள்உண்ண வேண்டாம் தானே களிதரும்
துள்ளி நடப்பிக்கும் சோம்பர் தவிர்ப்பிக்கும்
உள்ளது சொன்னோம் உணர்வுடை யோர்க்கே.'

திருமந்திரம்- பாடல் எண்: 559

"புள்' என்பது பறவையைக் குறிக்கும் சொல்லாகும். "புள்ளினும் மிக்க புரவி' என்றால் பறவையைவிட வேகமாகப் பறக்கக் கூடிய குதிரை என்பது பொருள். பிராணனைக் குறிக்க குதிரை என்ற குறியீட்டை சித்தர்கள் பயன்படுத்தினர் என்பதை ஏற்கெனவே கண்டோம். ஆக, பறவையைவிட வேகமாகச் செல்லக்கூடிய இந்த பிராண னாகிய குதிரையை நம்வசப்படுத்திக் கொண்டால் (மேற்கொண்டால்) என்னென்ன நிகழும்?

"கள் உண்ண வேண்டாம்; தானே களிதரும்.'

ஒருவித ஆனந்தமான மனநிலையை அடையவே மனிதர்கள் கள் முதலிய போதைப் பொருட்களை உண்கிறார்கள் அல்லவா? ஆனால் திருமூலரின் கூற்றுப்படி, பிராணா யாமம் எனும் மூச்சுப் பயிற்சியின் மூலமாக நமது பிராணனை நாம் வசப்படுத்திவிட்டால், கள் உண்ணாமலேயே கள் உண்ட ஆனந்த நிலை உடலிலும் மனதிலும் உருவாகிவிடும்.

மூச்சுப் பயற்சியின் மூலமாக குண்டலினி சக்தி தட்டி எழுப்பப்பட்டு நமது தலையின் மேற்பகுதி யிலுள்ள "லலான சக்கரம்' தூண்டப்பட்டால், அந்த சக்கரத்திலிருந்து உருவாகும் "அமிர்தம்' ஒரு எல்லையற்ற ஆனந்த நிலையை உருவாக்கும். இதையே "பேரானந்தம்' என்கிறார்கள். இந்த ஆனந்த நிலையும் ஒருவகையான போதையே. ஒருமுறை அனுபவித்தவர்களுக்கு அந்த நிலை யிலிருந்து வெளியில் வரவே மனம் வராது. மீண்டும் மீண்டும் அந்த ஆனந்த நிலையையே மனம் நாடும். எனவேதான் வடமொழியில் இந்த நிலையை "ஆனந்த லகரி' என்கிறார்கள்.

ஆக, பிராணனை வசப்படுத்துவதால் விளையும் முதல் பலன்- ஆனந்தமான மனநிலை உருவாகும். இது ஒரு பேரானந்த நிலை.

"துள்ளி நடப்பிக்கும், சோம்பர் தவிர்ப்பிக்கும்.'

ஒரு மனிதனின் முன்னேற்றத்திற்கு மிகப் பெரிய தடையாக அமைவது அவனிடத்தில் காணப் படும் சோம்பல்! பலர் பல நல்ல வாய்ப்புகளைத் தவற விட்டுவிடுவதற்குக் காரணமாக அமைவது மனதில் அல்லது உடலில் ஏற்படும் சோம்பல் தான்! பிராணன் எனும் குதிரையை நமது வசப்படுத்திக் கொண்டால் சோம்பல் மறையும். மனதிலும் உடலிலும் ஒரு புதிய உற்சாகம் பிறக்கும். சுறுசுறுப்பும் துள்ளலும் தானே ஏற்படும். வாழ்க்கை சிறக்கும்.

"உள்ளது சொன்னோம் உணர்வுடை யோர்க்கே.'

இதுவே உண்மை. அதைச் சொல்லிவிட்டோம். ஆனால் உணர்வுடையோர்க்கு மட்டுமே இந்த ரகசியம் புரியும் என்கிறார் திருமூலர். உயிரோடி ருக்கும் (மரம், செடி, கொடி, விலங்குகள் உட்பட) அனைத்துமே உணர்வு கொண்டவை தானே என்ற சந்தேகம் எழும். இந்தப் பாடலில் திருமூலர் குறிக்கும் உணர்வு என்பது "உள்ளுணர்வு' அல்லது "மெய்ஞ்ஞானம்' என்பதைக் குறிக்கிறது என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.
Read more ...

தியானமும் திருமந்திரமும்

Friday, September 24, 2010
அவையாவன தன்னைக் கட்டுப்படுத்தல், பிறர்துயர் தீர்த்தல், பிறர்நலம் பேணுதல், உலகெலாம் காக்கும் மகாசத்தியாகிய பரம்பொருளைப் போற்றுதல் என்பனவாகும். இக்கடமைகளால் மனிதஉயிர்கள் அடையும் பயன்கள் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் வாழ்க்கைத் தத்துவங்களாகும். இந்தவகையில் பரம் பொருளைப் போற்றித் தியானிக்கும் மரபை திருமூலர் தனது மந்திரத்தில் தியானம் என்னும் கருப்பொருளில் ஆங்காங்கே குறிப்பிட்டுள்ளார்.

தெளிவு அறியாதார் சிவனை அறியார்
தெளிவு அறியாதார் சீவனும் ஆகார்
தெளிவு அறியாதார் சிவமாக மாட்டார்
தெளிவு அறியாதார் தீரார் பிறப்பே.


தெளிவு என்பது எல்லாம் அவன்செயல் என்று உணரும் மெய்ஞ்ஞானத் தெளிவு ஆகும். மனத்தெளிவு உண்டாகும்போதுதான் ஒவ்வொரு ஆன்மாவும் இறைசக்தியைச் சிந்திக்கத் தொடங்குவதில் ஈடுபடத் தொடங்குகிறது. அப்போது ஒரு ஆன்மாவால் சன்மார்க்கம், சகமார்க்கம், சற்புத்திரமார்க்கம், தாசமார்க்கம், ஞானமார்க்கம் என்று பல வழிகளைக் கடைப்பிடிக்க முடியும். இதனால் ஒவ்வொரு உயிர்களும் அடையும் சிறப்பை சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம் என்ற உயர்நத தத்துவங்கள் கூறுகின்றன. இவை அனைத்தையும் பெறுவதற்கு ஆன்மாவானது மனக்குவிவுடன் பரம்பொருளுடன் ஒன்றியிருத்தலே முதன்மையாகும்.

சித்தம் யாவையும் சிந்தித் திருந்திடும்
அர்த்தம் உணர்வது ஆகும் அருளாலே
எத்தும் யாவையும் திண்சிவ மானக்கால்
அத்தனும் அவ்விடத்தே அமர்ந்தானே.

சிவத் தியானத்தின் மூலம் தருகின்ற பேறுகளை ஒரு ஆன்மா அடைகின்றபோது உலகத் துயரங்களில் இருந்துவிடுபட்டு பற்றுக்களும் அறவே அற்றுப் போகின்றன.

மந்திரம் ஆவதும் மாமருந்து ஆவதும்
தந்திரம் ஆவதும் தானங்கள் ஆவதும்
சுந்தரம் ஆவதும் தூய்நெறி ஆவதும்
எந்தை பிரான்தன் இறையடி தானே.

என்பதை ஒவ்வொரு ஆன்மாக்களும் பற்றி நின்றால் உலக இச்சைகளில் உள்ள பற்றுக்கள் அறவே நீங்கிய ஒரு பற்றற்ற தெளிவு நிலை ஒவ்வொரு ஆன்மாக்களுக்கும் உண்டாகும். தியானத்தில் ஈடுபடும் ஒவ்வொரு ஆன்மாக்களுக்கும் திருமூலரின் உபதேசக் கருத்துக்கள் அடங்கிய பாடல்வரிகள் நினைவில் இருத்தல் வேண்டும்

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணோமே
சென்றே புகுங்கதி இல்லை நும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர் நினைத்து உய்மினே!

சிவ சிவ என்பதை ஒரு மந்திரமாகவும், அதனை ஒரு தியானப் பொருளாகவும் ஆன்மாக்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.

சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவ சிவ எனச் சிவகதி தானே.

ஆன்மாக்கள் பரமன்மீது மனத்தைக் குவித்துத் தியானிக்கும்போது சிவ சிவ மந்திரத்தை எவ்வாறு உச்சரிக்க வேண்டும் எனக் கீழு்வரும் பாடல் விளக்குகின்றது.

நம என்னும் நாமத்தை நாவில் ஒடுக்கி
சிவ என்னும் நாமத்தைச் சிந்தையுள் ஏற்ற
பாவமது தீரும், பரிசும் தற்றால்
அவமதி தீரும் அறும்பிறப் பன்றோ!

ஒவ்வொரு ஆன்மாக்களுக்கும் சிவனைத் தவிர வேறு வேறு தெய்வங்கள் இருந்தால் அவற்றிற்குரிய மந்திரங்களை ஒரு குருவின் உதவிமூலம் அறிந்து தியானம் செய்தல் வேண்டும். இஷ்ட தெய்வ தியானங்களுக்கு மந்திரங்கள், தியானங்கள், பிஜாட்சரங்கள் தனித்தனியே கூறப்படுகின்றன. ஒவ்வொரு ஜீவன்களுக்கும் இஸ்ட தெய்வங்கள் வேறாக இருப்பினும் சிவனை ஓம் நமசிவாய என்று ஓதியும் ஓம் சக்தி ஓம் என்று ஓதியும் உயர்ந்த தியான சக்தியைப் பெற்றுக் கொள்ளலாம்.

அகஸ்தியர் பூரண சூத்திரம், மற்றும் சித்தர் நூல்களில் தியான மந்திரங்கள் பல கூறப்படுகின்றன.

தரிசிக்கத் தியானம் ஒன்று சொல்லக் கேளாய்
சிவாய நம ஓம் கலீம் என்று சேவி.

என்று சிவத்தியானம் கூறுகின்றது.

அம் உம் ஓம் ஸ்றிம் ஈம் சம் வம்
சரவணபவ தேவா ஆறுமுகவா சிவசுப்ரமணியா நம.

என்பது முருகன் தியானமாகும்.

என சுப்ரமணியர் தியானம் கூறுகின்றது.

இவ்வாறு ஒவ்வொரு கடவுள்களுக்கும் ஒவ்வொரு தியான மந்திரங்கள் வேதாகமங்களில் கூறப்பட்டுள்ளன.

இவற்றை எல்லாம் குரு உபதேசத்தால் பெற்று அனைத்து ஆன்மாக்களும் தங்கள் பிறவிப் பெருங்கடலை நீந்துவோமாக.
Read more ...

கந்தர் அனுபூதி

Wednesday, September 15, 2010
இல்லையெனும் மாயையில் இட்டனை; நீ
பொல்லேன் அரையாமை பொறுத்திலையோ;
மல்லேபுரி பன்னிரு வாகுவில் என்
சொல்லே புனையும் சுடர் வேலவனே. [29]

செவ்வான் உருவில் திகழ் வேலவன் அன்று
ஒவ்வாதது என உணர்வித்ததுதான்
அவ்வாறு அறிவார் அறிகின்றதலால்
எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே. [30]

பாழ்வாழ்வு எனும் இப்படு மாயையிலே
வீழ்வாய் என என்னை விதித்தனையே;
தாழ்வானவை செய்தன தாம் உளவோ?
வாழ்வாய் இனி நீ; மயில் வாகனனே. [31]

கலையே பதறிக் கதறித் தலையூடு
அலையே படுமாறு அதுவாய் விடவோ?
கொலையே புரி வேடர்குலப் பிடி தோய்
மலையே! மலை கூறிடு வாகையனே. [32]


சிந்தாகுல இல்லொடு செல்வம் எனும்
விந்தாடவி என்று விடப் பெறுவேன்;
மந்தாகினி தந்த வரோதயனே!
கந்தா! முருகா! கருணாகரனே! [33]

சிங்கார மடந்தையர் தீநெறி போய்
மங்காமல் எனக்கு வரம் தருவாய்;
சங்க்ராம சிகாவல! ஷண்முகனே!
கங்கா நதி பால! க்ருபாகரனே! [34]

விதிகாணும் உடம்பை விடா வினையேன்
கதிகாண மலர்க்கழல் என்று அருள்வாய்;
மதிவாள் நுதல் வள்ளியை அல்லது பின்
துதியா விரதா! சுரபூபதியே. [35]

நாதா! குமரா! நம என்று அரனார்
ஓதாய் என ஓதியது எப்பொருள்தான்?
வேதா முதல் விண்ணவர் சூடு மலர்ப்
பாதா! குறமின் பத சேகரனே. [36]கிரிவாய் விடுவிக்ரம வேல் இறையோன்
பரிவாரம் எனும் பதம் மேவலையே
புரிவாய் மனனே ! பொறையாம் அறிவால்
அரிவாய் அடியோடும் அகந்தையையே. [37]

ஆதாளியை ஒன்று அறியேனை அறத்
தீதாளியை ஆண்டது செப்பு மதோ?
கூதாள! கிராதகுலிக்கு இறைவா!
வேதாள கணம் புகழ் வேலவனே. [38]

மாவேழ் சனனம் கெட மாயை விடா
மூவேடணை என்று முடிந்திடுமோ?
கோவே! குற மின்கொடி தோள் புணரும்
தேவே! சிவ சங்கர தேசிகனே. [39]

வினையோட விடும் கதிர்வேல் மறவேன்
மனையோடு தியங்கி மயங்கிடவோ?
சுனையோடு அருவித் துறையோடு பசுந்
தினையோடு இதனோடு திரிந்தவனே. [40]சாகாது எனையே சரணங்களிலே
காகா; நமனார் கலகம் செயுநாள்
வாகா! முருகா! மயில்வாகனனே!
யோகா! சிவஞான உபதேசிகனே! [41]

குறியைக் குறியாது குறித்தறியும்
நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும்
செறிவற்று உலகோடு உரைசிந்தையும் அற்று
அறிவற்று அறியாமையும் அற்றதுவே. [42]

தூசா மணியும் துகிலும் புனைவாள்
நேசா! முருகா! நினது அன்பு அருளால்
ஆசா நிகளம் துகள் ஆயினபின்
பேசா அனுபூதி பிறந்ததுவே. [43]

சாடும் தனிவேல் முருகன் சரணம்
சூடும்படி தந்தது சொல்லுமதோ?
வீடும் சுரர் மாமுடி வேதமும் வெங்
காடும் புனமும் கமழும் கழலே. [44]கரவாகிய கல்வி உளார் கடை சென்று
இரவா வகை மெய்ப்பொருள் ஈகுவையோ?
குரவா! குமரா! குலிசாயுத! குஞ்
சரவா! சிவயோக! தயாபரனே! [45]

எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ;
சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனையாள்;
கந்தா! கதிர்வேலவனே! உமையாள்
மைந்தா! குமரா! மறை நாயகனே. [46]

ஆறாறையும் நீத்து அதன்மேல் நிலையைப்
பேறா அடியேன் பெறுமாறு உளதோ?
சீறா வருசூர் சிதைவித்து இமையோர்
கூறா உலகம் குளிர்வித்தவனே! [47]

அறிவொன்று அற நின்று அறிவார் அறிவில்
பிறிவொன்று அற நின்ற பிரானலையோ?
செரிவொன்று அற வந்து இருளே சிதைய
வெறிவென்று அவரோடு உறும் வேலவனே. [48]தன்னம் தனி நின்று அதுதான் அறிய
இன்னம் ஒருவர்க்கு இசைவிப்பதுவோ?
மின்னும் கதிர்வேல் விகிர்தா! நினைவார்
கின்னம் களையும் கிருபை சூழ் சுடரே. [49]

மதிகெட்டு அறவாடி மயங்கி அறக்
கதி கெட்டு அவமே கெடவோ கடவேன்?
நதிபுத்திர! ஞானசுகாதிப! அத்
திதி புத்திரர் வீறடு சேவகனே. [50]

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே! [51]
Read more ...

கந்தர் அனுபூதி

Wednesday, September 15, 2010
"கந்தர் அனுபூதி"
அருணகிரிநாதர் அருளியது!

"காப்பு"

நெஞ்சக் கனகல்லும் நெகிழ்ந்து உருகத்
தஞ்சத்து அருள் ஷண்முகனுக்கு இயல்சேர்
செஞ்சொல் புனைமாலை சிறந்திடவே
பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம். [1]


"கந்தர் அனுபூதி"
அருணகிரிநாதர் அருளியது!

ஆடும் பரிவேல் அணிசேவல் எனப்
பாடும் பணியே பணியா அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனி யானைச் சகோதரனே [1]

உல்லாச நிராகுல யோகவிதச்
சல்லாப வினோதனும் நீயலையோ?
எல்லாம் அற என்ன இழந்த நலம்
சொல்லாய்; முருகா! சுரபூபதியே. [2]

வானோ புனல்பார் கனல் மாருதமோ
ஞானோதயமோ நவில் நான்மறையோ
யானோ மனமோ எனை ஆண்ட இடம்
தானோ பொருள் ஆவது ஷண்முகனே. [3]

வளைபட்ட கைம்மா தொடுமக்கள் எனும்
தளைபட்டு அழியத் தகுமோ தகுமோ?
கிளைபட்டு எழுசூர் உரமும் கிரியும்
தொளைபட்டு உருவத் தொடு வேலவனே. [4]


"கந்தர் அனுபூதி"
அருணகிரிநாதர் அருளியது!

மகமாயை களைந்திட வல்லபிரான்
முகமாறும் ஒழிந்தும் ஒழிந்திலனே:
அகமாடை மடந்தையர் என்று அயரும்
சகமாயையுள் நின்று தயங்குவதே. [5]

திணியான மனோசிலை மீது உனதாள்
அணியார் அரவிந்தம் அரும்பும் அதோ?
பணியா என வள்ளி பதம் பணியும்
தணியா அதிமோக தயாபரனே. [6]

கெடுவாய் மனனே! கதி கேள் கரவாது
இடுவாய்; வடிவேல் இறைதாள் நினைவாய்;
சுடுவாய் நெடுவேதனை தூள்படவே
விடுவாய் விடுவாய் வினை யவையுமே. [7]

அமரும் பதிகேள் அகமாம் எனும், இப்
பிமரம் கெட மெய்ப்பொருள் பேசியவா!
குமரன்! கிரிராசகுமாரி மகன்
சமரம் பொரு தானவ நாசகனே. [8]


"கந்தர் அனுபூதி"
அருணகிரிநாதர் அருளியது!

மட்டூர் குழல் மங்கையர் வலைப்
பட்டூசல் படும் படர் என்று ஒழிவேன்;
தட்டூடு அர வேல்சயிலத் தெறியும்
நிட்டூர! நிராகுல! நிர்ப்பயனே! [9]

கார்மா மிசை காலன் வரின் கலபத்
தேர்மா மிசை வந்து எதிரப் படுவாய்;
தார்மார்ப! வலார் தலாரி எனும்
சூர்மா மடியத் தொடு வேலவனே! [10]

கூகா என என்கிளை கூடி அழப்
போகாவகை மெய்ப்பொருள் பேசியவா !
நாகாசல! வேலவ! நாலுகவித்
தியாகா! சுரலோக சிகாமணியே! [11]

செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மா இரு சொல் அற என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே. [12]"கந்தர் அனுபூதி"
அருணகிரிநாதர் அருளியது!

முருகன் தனிவேல் முனி நம் குரு என்று
அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ?
உருவன்று அருவன்று உளதன்று இலதன்று
இருளன்று ஒளியன்று என நின்றதுவே. [13]

கை வாய் கதிர்வேல் முருகன் கழல் பெற்று
உய்வாய் மனனே! ஒழிவாய்; ஒழிவாய்;
மெய் வாய் விழி நாசியொடும் செவியாம்
ஐவாய் வழி செல்லும் அவாவினையே. [14]

முருகன் குமரன் குகன் என்று மொழிந்து
உருகும் செயல் தந்து உணர்வென்று அருள்வாய்;
பொருபும் கவரும் புவியும் பரவும்
குரு புங்கவ! எண்குண பஞ்சரனே. [15]

பேராசை எனும் பிணியில் பிணிபட்டு
ஓரா வினையேன் உழலத் தகுமோ?
வீரா! முதுசூர் பட வேல் எறியும்
சூரா! சுரலோக துரந்தரனே. [16]
Read more ...

ஐயப்பன் கவசம்

Wednesday, September 15, 2010
"ஐயப்பன் கவசம்"

'மண்ணுலகெல்லாம் காத்தருள் செய்ய
மணிகண்ட தேவா வருக வருக !
மாயோன் மைந்தா வருக வருக !
ஐங்கரன் சோதரா ஐயப்பா வருக வருக !

புலிவாஹனனே வருக வருக !
புவியெல்லாம் காத்திட வருக வருக !
பூரணை நாதனே வருக வருக வருக !
புண்ணிய மூர்த்தியே வருக வருக !

பூதநாயகா வருக வருக !
புஷ்களை பதியே வருக வருக !
பொன்னம்பலத்துறை ஈசா வருக !
அடியாரைக் காக்க அன்புடன் வருக !

வருக வருக வாசவன் மைந்தா !
வருக வருக வீரமணிகண்டா !
வஞ்சனை நீக்கிட வருக வருக !
வல்வினை போக்கிட வருக வருக !

ஐயம் தவிர்த்திட ஐயப்பா வருக !
அச்சம் அகற்றிட அன்பனே வருக !
இருவினை களைந்தே எனையாட்கொள்ள
இருமூர்த்தி மைந்தா வருக வருக !

பதினெண் படியை மனதில் நினைக்கப்
பண்ணிய பாவம் பொடிப் பொடியாகும்.
ஐயப்பா சரணம் என்றே கூறிட
ஐம்பூதங்களும் அடி பணிந்திடுமே !

சபரிகிரீசனை நினைந்தே நீறிடத்
துன்பங்கள் யாவும் தூள் தூளாகும்
சரணம் சரணம் என்றே சொல்லிட
சித்திகள் யாவும் வந்தடைந்திடுமே !

பம்பையின் பாலன் பெயர் சொல்லிடவும்
பகைவர்கள் எல்லாம் பணிந்தே வணங்குவர்
ஐயப்பன் பாதம் அநுதினம் நினைக்க
அவனியில் உள்ளோர் அடி பணிந்தேத்துவர் !

சரணம் சரணம் ஐயப்பா !
சரணம் சரணம் சபரிகிரீசா !
சரணம் சரணம் சத்குரு நாதா !
சரணம் சரணம் ஸ்வாமியே சரணம் !
Read more ...

ஷண்முக நாமாவளி

Wednesday, September 15, 2010
"ஷண்முக நாமாவளி"

ஹரஹர சிவசிவ ஷண்முக நாதா
ஹரஹர சிவசிவ வென்முக நாதா
ஹரஹர சிவசிவ பரம விலாசா
ஹ்ரஹர சிவசிவ வபய குகேசா
அருண கிரிபரவு மருணெறி நாதா
தரும வுருவர்புகழ் சததள பாதா
அரிபிர மாதிக டொழுவடி வேலா
திருவடி நாரவ ருளமுறை சீலா
எனினிய குருனித மெனுமதி யீசா
சனனவெய் தறவளி தருபர மேசா
பாசா பாச பாப வினாசா
மாசே றாத மான நடேசா
போஜா வாஜா பூஜகர் நேசா
தேஜா ராஜா தேவஸ மாஜா
தீஞ்சுவை யருளொரு திருவா ரமுதே
ஓம் சர வணபவ வுருவே யருவே.
Read more ...

பாம்பன் ஸ்வாமிகள்

Wednesday, September 15, 2010
அருள்மிகு "பாம்பன் ஸ்வாமிகள்" அருளிய

"பகை கடிதல்"

திருவளர் சுடர் உருவே, சிவைகரம் அமர் உருவே,
அருமறை புகழ் உருவே, அறவர்கள் தொழும் உருவே,
இருள் தபும் ஒளி உருவே, என நினை எனது எதிரே,
குருகுகண் முதன் மயிலே, கொணர்தி உன் இறைவனையே! [1]

மறை புகழ் இறை முனரே, மறை முதல் பகர் உருவே,
பொறை மலி யுலகுருவே, புனனடை தரும் உருவே,
இறையிள முகவுருவே, என நினை எனது எதிரே,
குறைவறு திருமயிலே, கொணர்தி உன் இறைவனையே! [2]இதரர்கள் பலபொரவே, இவனுறை எனது எதிரே,
மதி ரவி பலவெனதேர், வளர் சரண் இடையெனமா,
சதுரொடு வரு மயிலே, தடவரை யசைவுறவே,
குதிதரும் ஒருமயிலே, கொணர்தி உன் இறைவனையே! [3]

பவநடை மனுடர் முனே, படர் உறும் எனது எதிரே,
நவமணி நுதல் அணியேர், நகை பல மிடறணிமால்,
சிவணிய திருமயிலே, திடனொடு நொடி வலமே,
குவலயம் வருமயிலே, கொணர்தி உன் இறைவனையே! [4]


அழகுறு மலர் முகனே, அமரர்கள் பணி குகனே,
மழவுரு உடையவனே, மதிநனி பெரியவனே,
இழவிலர் இறையவனே, என நினை எனது எதிரே,
குழகது மிளிர் மயிலே, கொணர்தி உன் இறைவனையே! [5]

இணையறும் அறுமுகனே, இதசசி மருமகனே,
இணர் அணி புரள் புயனே, என நினை எனது எதிரே,
கணபண மரவுரமே, கலைவுற வெழுதருமோர்
குணமுறு மணி மயிலே, கொணர்தி உன் இறைவனையே! [6]


எளியவ, என் இறைவ, குகா, என நினை எனது எதிரே,
வெளிநிகழ் திரள் களைமீன், மிளிர்சினை எனமிடைவான்,
பளபள வென மினுமா, பல சிறை விரி தரு நீள்,
குளிர்மணி விழி மயிலே, கொணர்தி உன் இறைவனையே! [7]

இலகயின் மயில் முருகா, என நினை எனது எதிரே,
பலபல களமணியே, பலபல பதமணியே,
கலகல கலவெனமா, கவினொடு வருமயிலே,
குலவிடு சிகை மயிலே, கொணர்தி உன் இறைவனையே! [8]


இகலறு சிவகுமரா, என நினை எனது எதிரே,
சுகமுனி வரர் எழிலார், சுரர் பலர் புகழ் செயவே,
தொகு தொகு தொகு வெனவே, சுர நடம் இடுமயிலே,
குகபதி அமர் மயிலே, கொணர்தி உன் இறைவனையே! [9]

கருணை பெய் கனமுகிலே, கடமுனி பணிமுதலே,
அருணையர் அரன் எனவே, அக நினை என எதிரே,
மருமலர் அணி பலவே, மருவிடு களமயிலே,
குரு பல அவிர் மயிலே, கொணர்தி உன் இறைவனையே! [10]


"சஷ்டிநாதன் அருள் சடுதியில் சித்திக்கட்டும்!"
"மயில்வாஹனனுக்கு ஹரோஹரா!!"
"வெற்றி வேல் முருகனுக்கு; ஹரோஹரா !!"
Read more ...

திருவாசகம்

Wednesday, September 15, 2010
மாணிக்கவாசகர்.

திருவாசகம் சைவ சமயக் கடவுளான சிவன் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும். இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர். பன்னிரு சைவ சமயத் திருமுறைகளில் திருவாசகம் எட்டாம் திருமுறையாக உள்ளது.

யாத்திரைப் பத்து
(தில்லையில் அருளியது)
சிவலோகத்துக்குச் செல்ல அனைவரையும் அழைத்துக் கூறிய பகுதியாதலின், இது, 'யாத்திரைப்பத்து' எனப்பட்டது.
அனுபவ அதீதம் உரைத்தல்
துரியாதீத நிலையாகிய பேரின்ப அனுபவத்தைக் கூறுதல்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

பூவார் சென்னி மன்னன்எம் புயங்கப் பெருமான் சிறியோமை
ஓவா துள்ளங் கலந்துணர்வாய் உருக்கும் வெள்ளக் கருணையினால்
ஆவா என்னப் பட்டன்பாய் ஆட்பட் டீர்வந் தொருப்படுமின்
போவோம் காலம் வந்ததுகாண் பொய்விட் டுடையான் கழல்புகவே.

பதப்பொருள் : பூ ஆர் - மலர் நிறைந்த, சென்னி - முடியையுடைய, மன்னன் - அரசனாகிய, எம் புயங்கப் பெருமான் - பாம்பணிந்த எங்கள் பெருமான், சிறியோமை - சிறியவர்களாகிய நம்மை, ஓவாது - இடையறாமல், உள்ளம் கலந்து - உள்ளத்தில் கலந்து, உணர்வு ஆய் - உணர்வுருவாய், உருக்கும் - உருக்குகின்ற, வெள்ளக்கருணையினால் - பெருகிய கருணையால், ஆவா என்னப்பட்டு - ஐயோ என்று இரங்கியருளப்பட்டு, அன்பு ஆய் - அன்பு உருவாய், ஆட்பட்டீர் - ஆட்பட்டவர்களே, பொய் விட்டு - நிலையில்லாத வாழ்க்கையை விட்டு, உடையான் கழல் புக - நம்மை ஆளாக உடைய இறைவனது திருவடியை அடைய, காலம் வந்தது - காலம் வந்துவிட்டது, போவோம் - வந்து ஒருப்படுமின் - வந்து முற்படுங்கள்.

புகவே வேண்டா புலன்களில்நீர் புயங்கப் பெருமான் பூங்கழல்கள்
மிகவே நினைமின் மிக்கவெல்லாம் வேண்டா போக விடுமின்கள்
நகவே ஞாலத் துள்புகுந்து நாயே அனைய நமையாண்ட
தகவே உடையான் தனைச்சாரத் தளரா திருப்பார் தாந்தாமே.

பதப்பொருள் : நக - நாட்டார் நகை செய்ய, ஞாலத்துள் புகுந்து - உலகில் எழுந்தருளி, நாயே அனைய - நாயைப் போன்ற, நமை ஆண்ட - நம்மை ஆட்கொண்ட, தகவு உடையான்தனை - பெருமையையுடைய இறைவனை, சார - அடைந்தால், தாம் தாம் - அவரவர், தளராது இருப்பார் - தளர்ச்சி நீங்கி இருப்பார்கள், ஆதலின், அடியவர்களே, நீர் - நீங்கள், புலன்களில் - ஐம்புல விடயங்களில், புகவேண்டா - செல்ல வேண்டா, புயங்கப் பெருமான் - பாம்பணிந்த பெருமானது, பூங்கழல்கள் - தாமரைப் பூவை ஒத்த திருவடிகளை, மிக நினைமின் - மிகுதியாக நினையுங்கள், மிக்க எல்லாம் - எஞ்சியவையெல்லாம், வேண்டா - நமக்கு வேண்டா, போக விடுமின்கள் - அவற்றை நம்மிடத்திலிருந்து நீங்கும்படி விட்டுவிடுங்கள்.

தாமே தமக்குச் சுற்றமுந் தாமே தமக்கு விதிவகையும்
யாமார் எமதார் பாசமார் என்ன மாயம் இவைபோகக்
கோமான் பண்டைத் தொண்டரொடும் அவன்றன் குறிப்பே குறிக்கொண்டு
போமா றமைமின் பொய்நீக்கிப் புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே.

பதப்பொருள் : தமக்குச் சுற்றமும் தாமே - ஒவ்வொருவருக்கும் உறவினரும் அவரே, தமக்கு விதி வகையும் தாமே - நடைமுறைகளை வகுத்துக்கொள்பவரும் அவரே; ஆதலால், அடியவர்களே, நீங்கள், யாம் ஆ£¢ - நாம் யார், எமது ஆர் - எம்முடையது என்பது யாது, பாசம் ஆர் - பாசம் என்பது எது, என்ன மாயம் - இவையெல்லாம் என்ன மயக்கங்கள்? என்று உணர்ந்து, இவை போக - இவை நம்மை விட்டு நீங்க, கோமான் - இறைவனுடைய, பண்டைத் தொண்டரொடும் - பழைய அடியாரொடும் சேர்ந்து, அவன்றன் குறிப்பே - அவ்விறைவனது திருவுளக் குறிப்பையே, குறிக்கொண்டு - உறுதியாகப் பற்றிக்கொண்டு, பொய் நீக்கி - பொய் வாழ்வை நீத்து, புயங்கன் - பாம்பணிந்தவனும், ஆள்வான் - எமையாள்வோனுமாகிய பெருமானது, பொன் அடிக்கு - பொன் போல ஒளிரும் திருவடிக்கீழ், போம் ஆறு அமைமின் - போய்ச் சேரும் நெறியில் பொருந்தி நில்லுங்கள்.

அடியா ரானீர் எல்லீரும் அகல விடுமின் விளையாட்டைக்
கடிசே ரடியே வந்தடைந்து கடைக்கொண் டிருமின் திருக்குறிப்பைச்
செடிசேர் உடலைச் செலநீக்கிச் சிவலோ கத்தே நமைவைப்பான்
பொடிச்சேர் மேனிப் புயங்கன்தன் பூவார் கழற்கே புகவிடுமே.

பதப்பொருள் : அடியார் ஆனிர் எல்லீரும் - அடியாராகிய நீங்கள் எல்லீரும், விளையாட்டை - உலக இன்பங்களில் ஈடுபட்டுப் பொழுது போக்குகின்ற நிலையை, அகல விடுமின் - நீங்கிப் போமாறு விட்டு ஒழியுங்கள்; கடிசேர் அடியே - மணம் தங்கிய திருவடியையே, வந்து அடைந்து - வந்து பொருந்தி, திருக்குறிப்பை - திருவுள்ளக் குறிப்பை, கடைக்கொண்டு இருமின் - உறுதியாகப் பற்றிக்கொண்டிருங்கள்; பொடி சேர் மேனி - திருவெண்ணீறு பூசப்பெற்ற திருமேனியையுடைய, புயங்கன் - பாம்பணிந்த பெருமான், செடி சேர் உடலை - குற்றம் பொருந்திய உடம்பை, செல நீக்கி - போகும்படி நீக்கி, சிவலோகத்தே - சிவபுரத்தே, நமைவைப்பான் - நம்மை வைப்பான், தன் பூ ஆர் கழற்கே - தனது தாமரை மலர் போன்ற திருவடி நிழலிலே, புகவிடும் - புகும்படி செய்வான்.

விடுமின் வெகுளி வேட்கைநோய் மிகவோர் காலம் இனியில்லை
உடையான் அடிக்கீழ்ப் பெருஞ்சாத்தோ டுடன்போ வதற்கே ஒருப்படுமின்
அடைவோம் நாம்போய்ச் சிவபுரத்துள் அணியார் கதவ தடையாமே
புடைபட் டுருகிப் போற்றுவோம் புயங்கன் ஆள்வான் புகழ்களையே.

பதப்பொருள் : (அடியார்களே!) மிக - மேன்மைப்படுவதற்கு, இனி ஓர் காலம் இல்லை - இனிமேல் ஒரு காலம் கிடையாது; ஆகையால், அணியார் கதவு அடையாமே - சிவலோகத்தின் அழகிய கதவு நமக்கு அடைக்கப்படாதிருக்கும்படி, வெகுளி - கோபத்தையும், வேட்கை நோய் - காம நோயையும், விடுமின் - விட்டுவிடுங்கள், உடையான் அடிக்கீழ் - நம்மை உடைய பெருமானது திருவடிக்கீழ், பெருஞ்சாத்தோடு - பெரிய கூட்டத்தோடு, உடன் போவதற்கே ஒருப்படுமின் - உடன் செல்வதற்கு மனம் இசையுங்கள், புயங்கன் - பாம்பை அணிந்தவனும், ஆள்வான் - நம்மை ஆள்பவனுமாகிய இறைவனது, புகழ்களை - பெருமைகளை, புடைபட்டு - எங்கும் சூழ்ந்து, உருகிப் போற்றுவோம் - மனமுருகிப் போற்றுவோம்; போற்றினால், சிவபுரத்துள் - சிவலோகத்தில், நாம் போய் அடைவோம் - நாம் போய்ச் சேர்ந்துவிடுவோம்.

புகழ்மின் தொழுமின் பூப்புனைமின் புயங்கன் தாளே புந்திவைத்திட்
டிகழ்மின் எல்லா அல்லலையும் இனியோர் இடையூ றடையாமே
திகழுஞ் சீரார் சிவபுரத்துச் சென்று சிவன்தாள் வணங்கிநாம்
நிகழும் அடியார் முன்சென்று நெஞ்சம் உருகி நிற்போமே.

பதப்பொருள் : (அடியார்களே!) நாம் - நாம், இனி -இனிமேல், ஒர் இடையூறு அடையாமே - ஒரு துன்பம் வந்து சேராவண்ணம், திகழும் - விளங்குகின்ற, சீர் ஆர் - சிறப்பு அமைந்த, சிவபுரத்துச் சென்று - சிவபுரத்துக்குப் போய், சிவன் தாள் வணங்கி - சிவபெருமானது திருவடியை வணங்கி, நிகழும் - அங்கே வாழும், அடியார் முன் சென்று - அடியார் முன்னே சென்று, நெஞ்சம் உருகி நிற்போம் - மனம் உருகி நிற்போம்; அதற்கு, புயங்கள் தாளே - பாம்பணிந்த பெருமானது திருவடியையே, புகழ்மின் - புகழுங்கள், தொழுமின் - வணங்குங்கள், பூப்புனைமின் - அவற்றுக்கு மலர்சூடுங்கள், புந்தி வைத்திட்டு - அதனையே நினைவில் வைத்துக்கொண்டு, எல்லா அல்லலையும் - பிற எல்லாத் துன்பங்களையும், இகழ்மின் - இகழுங்கள்.

நிற்பார் நிற்கநில் லாஉலகில் நில்லோம் இனிநாம் செல்வோமே
பொற்பால் ஒப்பாந் திருமேனிப் புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே
நிற்பீர் எல்லாந் தாழாதே நிற்கும் பரிசே ஒருப்படுமின்
பிற்பால் நின்று பேழ்கணித்தால் பெறுதற் கரியன் பெம்மானே.

பதப்பொருள் : பொற்பால் - அழகினால், ஒப்பு ஆம் - தனக்குத் தானே நிகரான, திருமேனி - திருமேனியையுடைய, புயங்கன் ஆள்வான் - பாம்பணிந்த பெருமானது, பொன்னடிக்கே - பொன் போன்ற திருவடியை அடைவதற்கே, நிற்பீர் - நிற்கின்றவர்களே, நில்லா உலகில் - நிலையில்லாத உலகின்கண், நிற்பார் நிற்க - நிற்க விரும்புவார் நிற்கட்டும், நாம் இனி நில்லோம் - நாம் இங்கு இனி நிற்கமாட்டோம், செல்வோம் - சென்றுவிடுவோம்; செல்லாமல், நின்று - தங்கி நின்று, பிற்பால் பேழ்கணித்தால் - பின்பு மனம் வருந்தினால், பெம்மான் - எம் பெருமான், பெறுதற்கரியன் - பெறுதற்கு அரியவனாவான்; ஆதலால், எல்லாம் தாழாது -எல்லோரும் காலந்தாழ்த்தாது, நிற்கும் பரிசே - நீங்கள் நினைந்து நின்றபடியே, ஒருப்படுமின் - செல்ல மனம் இசையுங்கள்.

பெருமான் பேரா னந்தத்துப் பிரியா திருக்கப் பெற்றீர்காள்
அருமால் உற்றுப் பின்னைநீர் அம்மா அழுங்கி அரற்றாதே
திருமா மணிசேர் திருக்கதவந் திறந்த போதே சிவபுரத்துத்
திருமால் அறியாத் திருப்புயங்கன் திருத்தாள் சென்று சேர்வோமே.

பதப்பொருள் : பெருமான் - இறைவனது, பேரானந்தத்து - பேரின்பத்தில், பிரியாதிருக்கப்பெற்றீர்காள் - பிரியாமல் மூழ்கியிருக்கப் பெற்றவர்களே, நீர் அருமால் உற்று - நீங்கள் அருமையான மயக்கத்தில் பொருந்தி, பின்னை - பின்பு, அம்மா - ஐயோ என்று, அழுங்கி அரற்றாதே - வருந்தி அலறாவண்ணம், திருமா மணிசேர் - அழகிய சிறந்த மணிகள் இழைக்கப்பெற்ற, திருக்கதவம் - திருக்கதவு, திறந்த போதே - திறந்திருக்கும்போதே, சிவபுரத்து - சிவபுரத்திலுள்ள, திருமால் அறியா - திருமாலறியாத, திருபுயங்கன் - அழகிய பாம்பணிந்த பெருமானது, திருத்தாள் - திருவடியை, சென்று சேர்வோம் - சென்றடைவோம் (ஒருப்படுமின்).

சேரக் கருதிச் சிந்தனையைத் திருந்த வைத்துச் சிந்திமின்
போரிற் பொலியும் வேற்கண்ணாள் பங்கன் புயங்கன் அருளமுதம்
ஆரப் பருகி ஆராத ஆர்வங் கூர அழுந்துவீர்
போரப் புரிமின் சிவன்கழற்கே பொய்யிற் கிடந்து புரளாதே.

பதப்பொருள் : போரில் பொலியும் வேல் - போரில் விளங்குகின்ற வேல் போன்ற, கண்ணாள் - கண்களையுடைய உமையம்மையின், பங்கன் - பாகனும், புயங்கன் - பாம்பணிந்தவனும் ஆகிய இறைவனது, அருள் அமுதம் - திருவருள் அமுதத்தை, ஆரப் பருகி - நிரம்பப் பருகி, ஆராத ஆர்வம் கூர - தணியாத ஆசை மிக, அழுந்துவீர் - மூழ்கியிருப்பவர்களே, பொய்யில் கிடந்து புரளாதே - பொய்யான வாழ்வில் கிடந்து புரளாமல், சிவன் கழற்கே - சிவபெருமானது திருவடியிலே, போரப் புரிமின் - அடைய விரும்புங்கள், சேரக் கருதி - அதனையடைய எண்ணி, சிந்தனையை - சித்தத்தை, திருந்த வைத்து - தூய்மையாக வைத்துக்கொண்டு, சிந்திமின் - இடைவிடாமல் நினையுங்கள்.

புரள்வார் தொழுவார் புகழ்வாராய் இன்றே வந்தாள் ஆகாதீர்
மருள்வீர் பின்னை மதிப்பாரார் மதியுட் கலங்கி மயங்குவீர்
தெருள்வீ ராகில் இதுசெய்மின் சிவலோ கக்கோன் திருப்புயங்கள்
அருளார் பெறுவார் அகலிடத்தே அந்தோ அந்தோ அந்தோவே.

பதப்பொருள் : புரள்வார் - புரள்பவராயும், தொழுவார் - வணங்குபவராயும், புகழ்வார் - துதிப்பவராயும், இன்றே வந்து - இப்பொழுதே வந்து, ஆள் ஆகாதீர் - ஆட்படாதவர்களாய், மருள்வீர் - மயங்குகின்றவர்களே, பின்னை - பின்பு, மதியுள் கலங்கி - அறிவினுட்கலக்கமடைந்து, மயங்குவீர் யாவர்? தெருள்வீர் ஆகில் - தௌ¤வடைய விரும்புவீரானால், இது செய்மின் - எம்பெருமானுக்கு ஆட்படுதலாகிய இதனைச் செய்யுங்கள்; சிவலோகக்கோன் - சிவலோக நாதனாகிய, திருப்புயங்கன் - பாம்பணிந்த பெருமானது, அருள் - திருவருளை, அகல் இடத்து - அகன்ற உலகின்கண், ஆர் பெறுவார் - யார் பெற வல்லார்கள்? அந்தோ அந்தோ அந்தோ - ஐயோ ஐயோ ஐயோ!

திருச்சிற்றம்பலம்
Read more ...

திருவாசகம்

Wednesday, September 15, 2010
மாணிக்கவாசகர்

திருவாசகம் சைவ சமயக் கடவுளான சிவன் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும். இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர். பன்னிரு சைவ சமயத் திருமுறைகளில் திருவாசகம் எட்டாம் திருமுறையாக உள்ளது.

அச்சப் பத்து
புற்றிள்வாள் அரவும் அஞ்சேன் பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்
கற்றைவார் சடைஎம் அண்ணல் கண்ணுதல் பாதம் நண்ணி
மற்றும்ஓர் தெய்வந் தன்னை உண்டென நினைந்தெம் பெம்மாற்கு
அற்றிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 4

வெருவரேன் வேட்கை வந்தால் வினைக்கடல் கொளினும் அஞ்சேன்
இருவரால் மாறு காணா எம்பிரான் தம்பிரா னாம்
திருவுரு அன்றி மற்றோர் தேவரெத் தேவ ரென்ன
அருவரா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 8

வன்புலால் வேலும் அஞ்சேன் வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன்
என்பெலாம் உருக நோக்கி அம்பலத் தாடுகின்ற
என்பொலா மணியை ஏத்தி இனிதருள் பருக மாட்டா
அன்பிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 12

கிளியனார் கிளவி அஞ்சேன் அவர்கிறி முறுவல் அஞ்சேன்
வெளியநீ றாடும் மேனி வேதியன் பாதம் நண்ணித்
துளியுலாம் கண்ணராகித் தொழுதழு துள்ளம் நெக்கிங்கு
அளியிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 16

பிணியெலாம் வரினும் அஞ்சேன் பிறப்பினோ டிறப்பும் அஞ்சேன்
துணிநிலா அணியினான்தன் தொழும்பரோடழுந்தி அம்மால்
திணிநிலம் பிளந்துங் காணாச் சேவடி பரவி வெண்ணீறு
அணிகிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 20

வாளுலாம் எரியும் அஞ்சேன் வரைபுரண் டிடினும் அஞ்சேன்
தோளுலாம் நீற்றன் ஏற்றன் சொற்புதம் கடந்த அப்பன்
தாளதா மரைகளேத்தித் தடமலர் புனைந்து நையும்
ஆளலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 24

தகைவிலாப் பழியும் அஞ்சேன் சாதலை முன்னம் அஞ்சேன்
புகைமுகந் தெரிகை வீசிப் பொலிந்த அம்பலத்து ளாடும்
முகைநகைக் கொன்றைமாலை முன்னவன் பாதமேத்தி
அகம்நெகா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 28

தறிசெறி களிறும் அஞ்சேன் தழல்விழி உழுவை அஞ்சேன்
வெறிகமழ் சடையன் அப்பன் விண்ணவர் நண்ண மாட்டாச்
செறிதரு கழல்கள் ஏத்திச் சிறந்தினி திருக்கமாட்டா
அறிவிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 32

மஞ்சுலாம் உருமும் அஞ்சேன் மன்னரோ டுறவும் அஞ்சேன்
நஞ்சமே அமுத மாக்கும் நம்பிரான் எம்பிரானாய்ச்
செஞ்செவே ஆண்டு கொண்டான் திருமுண்டம் தீட்ட மாட்டாது
அஞ்சுவா ரவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 36

கோணிலா வாளி அஞ்சேன் கூற்றவன் சீற்றம் அஞ்சேன்
நீணிலா அணியினானை நினைந்து நைந்துருகி நெக்கு
வாணிலாங் கண்கள் சோர வாழ்ந்தநின்றேத்த மாட்டா
ஆணலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 40

திருச்சிற்றம்பலம்
Read more ...

திருப்பரங்குன்றம்

Wednesday, September 15, 2010
திருப்பரங்குன்றம்

" உதிக்கின்ற செங்கதிர்போல் உருவம் தாங்கி
உள்ளத்தில் நினைப்போரின் துயர் களைந்து
மதி தடவும் வனம் சூழ்ந்த 'பரங்குன்றத்தில்'
மனங்கவரும் திருக்கோயில் கொண்டவனே ! "


திருச்செந்தூர்

"'திருச்செந்தூர்' திருத்தலத்தில் மயில் மீது நடனம்
தெளிவாக ஆடி மனம் குடிகொள்ளும் முருகா!
திருவள்ளி மனம் மேவும் திகழ் கந்த வேளே!
திரு குமபமுனி வணங்கும் செந்தூர் செவ்வேளே!"

பழநி


" தேவர்க்குத் தேவன் தலை வாழ்த்திப் போற்றும்
திருவாவினன்குடி திகழ்வோனே !
தவயோகி எல்லாம் தவறாமல் வந்து
தவம் செய்யும் "பழநி"ப் பதி வாழ்வே ! "


" ஸ்வாமிமலை"

" தினைப் புனத்து வள்ளியொடும் இந்திராணி மகளாம்
தெய்வயானை தன்னோடும் "குருமலை"யில் தங்கி
வினை களைய வேண்டி வரும் பக்தர் வினை களையும்
வெற்றி வடிவேலவனே ! தேவர் பெருமானே ! "" அருள்மிகு பாலசுப்ரமணிய ஸ்வாமி, திருத்தணி"

" நின்னை வணங்கும் பக்தர் அனைவரும்
நன்றே தழைத்து நன்னெறி நின்றிட
முன்னைப் பழம்பதி 'திருத்தணி' மேவும்
முருகா ! முருகா ! முனைவேல் முருகா ! "
"அருள்மிகு சோலைமலை முருகன், பழமுதிர் சோலை"

" நஞ்சினை உண்டு நடமிடும் ஈசர்
நயந்திடும் நறுந்தமிழ் மொழி பேசி
கொஞ்சிடும் முருகா ! கூர்வடிவேலா!
"பழமுதிர் சோலை" பெருமாளே! "
Read more ...

சிவபுராணம்

Wednesday, September 15, 2010
சிவபுராணம்

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க [5]

வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க [10]

ஈசன் அடி போற்றி எந்தை அடி போற்றி
தேசன் அடி போற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி [15]
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி

சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணந்தன்னை
முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான். [20]


"கண்ணுதலான் தன் கருணைக் கண் காட்ட வந்தெய்தி
எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
எண்ணிறந்து எல்லை இலாதானே நின் பெருஞ்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன் [25]

புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகிப்
பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுரராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள் [30]
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்

உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே [35]

வெய்யாய் தணியாய் இயமானனாம் விமலா
பொய்யாயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய்ஞ்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே [40]"ஆக்கம் அளவு இறுதி இல்லாய் அனைத்துலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பில்
நாற்றத்த்தின் நேரியாய் சேயாய் நணியானே
மாற்ற மனங்கழிய நின்ற மறையோனே [45]

கறந்த பால் கன்னலொடு நெய் கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று
பிறந்த பிறப்பறுக்கும் எஙள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை [50]

மறைந்திட மூடிய மாய இருளை
அறம் பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டிப்
புறந்தோல் போர்த்தெங்கும் புழு அழுக்கு மூடி
மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய [55]

விலங்கு மனத்தால் விமலா உனக்குக்
கலந்த அன்பாகிக் கசிந்துள் உருகும்
நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலந்தன் மேல் வந்தருளி நீள் கழல்கள் காட்டி
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் [60]
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே


"மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச் சுடரே,
தேசனே, தேன், ஆர் அமுதே, சிவபுரனே,
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே,
நேச அருள் புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் [65]
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே,

ஆரா அமுதே, அளவிலாப் பெம்மானே,
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே,
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே,
இன்பமும் துன்பமும் இல்லானே, உள்ளானே, [70]

அன்பருக்கு அன்பனே, யாவையுமாய் அல்லையுமாம்
சோதியனே, துன்னிருளே, தோன்றாப் பெருமையனே,
ஆதியனே, அந்தம் நடுவாகி அல்லானே,
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே,

கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொண்டுணர்வார் தம் கருத்தின் [75]
நோக்கரிய நோக்கே, நுணுக்கரிய நுண்ணுணர்வே,
போக்கும் வரவும் புணர்வும் இல்லாப் புண்ணியனே,
காக்கும் எம் காவலனே, காண்பரிய பேரொளியே,

ஆற்றின்ப வெள்ளமே, அத்தா, மிக்காய், நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய் சொல்லாத நுண்ணுணர்வாய் [80]
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே, தேற்றத் தெளிவே, என் சிந்தனையுள்
ஊற்றான உண்ணார் அமுதே, உடையானே!"வேற்று விகார விடக்கு உடம்பின் உள் கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று [85]
போற்றிப் புகழ்ந்து இருந்து பொய் கெட்டு மெய்யானார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே

நள்ளிருளில் நட்டம் பயின்றாடு நாதனே
தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே [90]
அல்லற் பிறவி அறுப்பானே ஓ-வென்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக் கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தினுள்ளார் சிவனடிக் கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து."
வாதவூர் அடிகள் வாழ்க!
வாழ்த்தும் அவர் அடியார் வாழ்க!!
திருச்சிற்றம்பலம்.
Read more ...

சக்தி நிலை

Friday, September 10, 2010
மனிதனின் சக்தி நிலை

மனிதனின் சக்தி நிலை பற்றிப் பேசும்போது ஏழு சக்கரங்கள் குறித்துக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இவை மனிதனின் உடலில் உள்ளவை.எல்லா இயந்திரங்களும் சக்கரங்கள் வழியாகவே நகர்கின்றன. சக்கரங்கள் இல்லாமல் ஒரு மாட்டு வண்டியோ காரோ நகர முடியாது. எனவே, சக்கரங்கள் இயக்கத்துக்கானவை. மனிதனை ஒரு பரிணாமத்திலிருந்து மற்றொரு பரிணாமத்திற்கு நகர்த்திச் செல்பவைதான் சக்கரங்கள்.மனித உடலில நூற்றுக்கணக்கான சக்கரங்கள் உள்ளன.மனிதனின் உணர்வு நிலையிலேயே உச்சகட்டமானது அன்புதான். அன்பு என்பது ஆழமான அழகான வலி. அன்பு சக உயிர்கள் மீதான, பரிவாக வெளிப்படும்.ஆனால் நாடிகள் சந்திக்கும் மையங்களாக ஏழு சக்கரங்களுக்கென்று தனித்தனி இடங்கள் குறிக்கப்பட்டிருந்தாலும் அவை ஒரே இடத்தில் இருக்குமென்று சொல்ல முடியாது.சக்தி நிலையில் ஏற்படும் வளர்ச்சிகளுக்கேற்ப அவை நகரக்கூடும். இந்த ஏழும் சக்கரங்கள் என்று அழைக்கப்பட்டாலும் அவை வட்ட வடிவத்தில் இராது. முக்கோணங்களாகவே இருக்கும். மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அநாகதம், விசுக்தி, ஆக்ஞை, சஹஸ்ரஹாரம் ஆகிய சக்கரங்களே அவை.
1.மூலாதாரம்: உடலின் அடிப்படையான சக்கரம், இந்த சக்கரம் தூண்டப்படிருந்தால் உணவு, உறக்கும் ஆகியவற்றிலேயே அதிக நாட்டம் இருக்கும்.
2.சுவாதிஷ்டானம்: உலகின் பொருள் தன்மை சார்ந்து நுகர்ச்சிகளில் இருகி ஈடுபடாட்டிற்குக் காரணமானது.
3.மணிப்பூரகம்: உடலின் உறுதி மற்றும் நல மேம்பாட்டுக்கானது. இந்த சக்கரம் தூண்டப்பட்டவர்கள் கடும் உழைப்பாளிகளாக எறும்பைப் போல் சுறுசுறுப்பானவர்களாக இருப்பார்கள்.
4.அநாகதம்: இந்த சக்கரத்துகென்று சில முக்கியத்துவங்கள் உண்டு. படைப்பாற்றல், அன்பு போன்றவற்றின் ஆதார சக்கரம் இது. முந்தைய மூன்று சக்கரங்களான மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம் ஆகியவை உலகியல் இன்பங்களுக்கும், வாழ்க்கைக்கும் உரியவை. அநாகத்த்தை அடுத்து வருகிற விசுக்தி, ஆக்ஞை, சகஸ்ரஹாரம் ஆகியவை அருள் நிலை, ஆன்மீக வளர்ச்சி போன்றவற்றிற்கு உரியவை.இந்த இருவேறு நிலைகளுக்கும் மத்தியில் ஒரு சம நிலையான தன்மை அநாகதத்திற்கு உண்டு. இரண்டு இயல்புகளும் கலந்ததாக இது அமைந்துள்ளது. அதனால் தான், மேல் நோக்கிய ஒரு முக்கோணமும், கீழ் நோக்கிய ஒரு முக்கோணமும் பின்னிப் பிணைந்து ஒரு நட்சத்திரத்தை உருவாக்கும் தோற்றமே அநாகத வடிவம்.மேல் நோக்கியமுக்கோணம் அருளியல் வாவுக்கும் கீழ்நோக்கிய முக்கோணம் உலகியல் வாழ்வுக்கும் அடையாளம். ஸ்ரீ சக்கரம் போன்ற எந்திரங்கள் முக்கோணங்கள் நிரம்பியதாய் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அவை அநாகதத்தில் இருந்து உருவானவைதான்.
5.விசுக்தி: என்பது தீயவற்றை வடிகட்டும் ஆற்றல் சிவபெருமானுக்கு ‘விசுவகண்டன்”; “நீலகண்டன்” என்று பெயர்கள் உண்டு. இதன் பொருள், விஷத்தை வெளியே நிறுத்தியவர் என்பது. விசுக்தி சக்கரம் தூண்டப்பட்டிருந்தால் விஷத்தன்மை உடலுக்குள் நுழையாமல் தடுக்க முடியும். விஷம் என்றால் உணவு மட்டுமல்ல, தீய உணர்வுகள், எண்ணங்கள், சக்திகள் என்று விஷத்தன்மை கொண்டவற்றிலிருந்து விடுபட முடியும்.
6.ஆக்ஞை: இது ஞானம், தெளிவு, போன்றவற்றுக்கான சக்கரம். விசுக்தியைப் பொறுத்தவரை, அந்தச் சக்கரம் தூண்டப்பட்டால் ஆற்றலோடு நிகழமுடியுமே தவிர சமூகத்தில் நிறைய எதிர்ப்புகள் இருக்கும். சமூக வாழ்க்கையோடு உடன்பட இயலாது. மக்களிடமிருந்து விலகி வாழ்கிற நிலையிலேயே இருப்பார்கள். ஆனால் ஆக்ஞா முழுவதுமாகத் தூண்டப்பட்டவர்கள் சமூகத்தின் அங்கீகாரத்தைப் பெற்ற ஞானவான்களாகத் திகழ்கிறார்கள்.
Read more ...

9 மண்டலம்

Friday, September 10, 2010
மனித உடல் உறுப்புகளை 9 மண்டலங்களாக பிரிக்கலாம்.

1.உடல் மண்டலம்
2. மூச்சு மண்டலம்
3. இரத்த மண்டலம்
4. சீரண மண்டலம்
5. எலும்பு மண்டலம்
6. நரம்பு மண்டலம்
7. தசை மண்டலம்
8. கழிவு மண்டலம்
9. நாளமில்லா சுரப்பி மண்டலம் ( Endocrine )

மேற்குறித்த 9 மண்டலங்களும் சரியான தொகுக்கப் பட்ட சீரான ஆசனங்களால் கட்டுப் படுத்தப்படுவதோடு அவைகளுடைய வளர்ச்சியினையும், செயல்பாடுகளையும் மனித ஆயுட்காலம் வரை அவற்றின் சோர்வில்லாத இயக்கத்தையும் உடலாசனங்கள் வழங்கக் கூடும். மனித உடலுக்கு ஆதாரமாகவும் , அஸ்திவாரமாகவும், இருப்பவை எலும்புகளே உடலில் உள்ள எல்லா எலும்புகளும் அதனை இணைக்கும் மூட்டுகளும் சேர்ந்ததே எலும்பு மண்டலம் . உடலுக்கு ஒரு ஒழுங்கான வடிவமைப்பிற்கு காரணமாகவும் தன் சீரான செயல்பாட்டிற்கு துணை புரிபவையும் எலும்புகளே. உடலில் உள்ள 7 தாதுக்களிலும் மிகக் கெட்டியானதாகவும் , பலம் உடையதாக இருப்பவை எலும்புகளே.முன்கூட்டியே தீர்மானிக்கப் பட்ட மற்றும் அவ்வப் போது உருவாகும் தீர்மானங்களை செயல்பட வைப்பதற்கும் , ஒவ்வொரு அணு செயல்படுகாளையும் தன் கட்டுபாட்டில் வைத்து பராமரித்து வருவதோடு , உயிர் இயக்கம் (தன்னிச்சை செயல்பாடு, அனிச்சை செயல்பாடு) என இருவகை கேந்திர செயல்பாட்டின் செயலக மையமாக விளங்கி வருவதற்கும் யாவற்றிற்கும் மேலாக அறிவு , புத்தி , சித்தம், என்ற மன தளத்தின் அதிபதியாக நுட்ப செயல்பாடுகளின் அதிக பட்ச தலைமையமாக விளங்கிடும் மூளை என்ற மிக நேர்த்தியான உறுப்பினை பாதுகாக்கும் பெட்டகமாக விளங்குவது எழும்பினால் ஆன மண்டை ஓடே ஆகும் . (தலைஎலும்புகள் 8 ).

மனிதன் மனிதனாக வாழவும் அதில் சிறந்ததோர் மாமனிதனாக வாழவும், அனுபவம் நிறைந்த ஆற்றல் மிகுந்த பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரிய மகான்கள் பலர் நிறைய வழி முறைகளை சொல்லியுள்ளனர்.அதன்படி வாழ்ந்த மனிதர்கள், வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதர்கள், வாழப் போகும் மனிதர்கள் என முக்கால மக்களுக்கும் ஏற்ற வகையில் வாழ வழிகண்டுள்ளனர் மகான்கள். இவைதான் வாழ்க்கை நெறிமுறைகள் ஆகும்.இந்த நெறிமுறைகள் மத, இன, மொழிக்கு அப்பாற்பட்டு தத்துவ விளக்காக அமைந்திருக்கின்றன. இவை பெரிய மகான்கள் வாழ்ந்து அனுபவித்து புரிந்துகொண்ட உண்மைகளாக இருக்கின்றன.இந்த வழிமுறைகளுக்கு அப்பாற்பட்டு வாழ்ந்தவர்கள் வாழ்க்கை நெறிமுறைகளை தவறவிட்டவர்கள். இவர்களின் வாழ்க்கை மனித வாழ்க்கையிலிருந்து மாறுபட்டு மிருக வாழ்க்கையாக மாறியுள்ளது.ஆனால் மேலான தத்தவங்களையும், சாஸ்திரங்களையும் படைத்து அதற்கு மேல் வாழ்ந்தவர்கள் தான் சித்தர்கள். இவர்கள் ஒரு மனிதன் செம்மையாக வாழ மனம், உடல், ஆன்மா இம்மூன்றும் சீரான நிலையில் இயங்கவேண்டும். அப்படி இயங்கினால்தான் மேற்சொன்ன வாழ்க்கை நெறிமுறைகளை கடைப்பிடிக்க முடியும், ஆத்மாவை உணர முடியும் என்கின்றனர் சித்தர்கள் (சித்தம் அடைந்தவர்கள்). மனதையும் உடலையும் வலுப்பெறச் செய்ய பிரபஞ்ச சக்தியை ஆட்கொள்ள வேண்டும் என்று ஆணித்தரமாக கூறியுள்ளனர். பொதுவாக சூரியனை சுற்றி கோள்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த கோள்களுக்கும் மனிதனுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. அவற்றைத் தெளிவாக அறிந்து கொண்டு கோள்களின் இயக்கத்தினால் மனிதனுக்கு ஏற்படும் நன்மை தீமைகளை பல சாஸ்திரங்களில் சித்தர்கள் எழுதியுள்ளனர். இந்த வகையில் வந்ததுதான் வான சாஸ்திரம். கோள்கள் அதனதன் நிலையிலிருந்து அனைத்து ஜீவராசிகளையும் இயக்குகிறது. ஆகையால் தான் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு குணாதிசயங்களுடன் மாறுபட்டு காணப்படுகிறான்.மனம், புத்தி, உடல் மாறுபடாமல் சீராக இருக்க பிரபஞ்ச சக்தி அவசியம் தேவையாகும். உடலுக்கு நல்ல எண்ணங்கள் நல்ல புத்தி கிடைக்க பிரபஞ்ச சக்தியை ஆக்க பலனாக மாற்றினால் தான் முடியும். இத்தகைய சிறப்பு வாய்ந்த பிரபஞ்ச சக்தியைப் பெற தியானம், சரநிலை சுவாசம் மூலம் தான் முடியும் என்கின்றனர். சரநிலை சுவாசம் பற்றி கடந்த இதழ்களில் விரிவாக அறிந்துள்ளோம்.சரநிலை சுவாசத்தை நல்ல முறையில் கடைப்பிடித்தால் அது உடலுக்குத் தேவையான இரத்த ஓட்டத்தைக் கொடுத்து இதயத்தைப் பலப்படுத்தும்மேலும் நல்ல மன நிலையைக் கொடுத்து உடலுக்கு சக்தியை பெறச் செய்கிறது. இதனால் தீய எண்ணங்களிலிருந்து விடுபட்டு நல்ல எண்ணங்களை ஏற்படுத்தி மனிதன் சிறப்பாக வாழ வழி செய்கிறது. சரநிலை சுவாசத்தை பின்பற்றும் போது உடல் வலுப்பெற்று மனம் அமைதி அடைகிறது. தெளிவுற்ற மனமே நோயற்ற உடலைத் தரமுடியும். இந்நிலை சரசுவாசத்தினால் முடியும்.சரசுவாசத்தின் மூலம் பிரபஞ்ச சக்தி பெற்றவர்களால் தான் கோள்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த முடியும். கோள்களின் ஆதிக்கம் மனிதனை ஆட்டிப் படைக்கிறது. இதைத்தான் விதி என்கிறார்கள். மனிதன் பலமுயற்சி செய்தும் வெற்றிபெற முடியாத நிலைக்கு விதி என்கிறான். மனித முயற்சிக்கு அப்பாற்பட்ட சக்தியை விதி எனக் கூறுகிறான். ஆனால் சரசுவாசம் மூலம் கோள்களின் ஆதிக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளை மாற்றி பல நன்மைகளை பெற முடியும் என்கின்றனர் சித்தர்கள். சரசுவாசம் மூலம் பிரபஞ்ச சக்தியை அடைந்து கோள்களின் ஆற்றலான விதியை மாற்றலாம்.இந்த கோள்களின் ஆதிக்கத்தை பற்றி கவலைப்படாமல் அதன் போக்கையே மாற்றிக் காட்டியவர்கள் சித்தர்கள்.
“நாள் என்னசெய்யும் கோள் என்ன செய்யும்
நாதன் உள்ளிருக்கையிலே”
நாதன் என்பது சரநிலை சுவாசத்தின் மூலம் கிடைக்கும் பிரபஞ்ச சக்திதான் என்கின்றனர் சித்தர்கள்.

மனிதனின் உடல் - மனம் - அறிவு - ஆன்மீகத் தேடல் அனைத்தையும் ஒரே புள்ளியில் சந்திக்க வைத்து, உள்நிலை வளர்ச்சிக்கு உறுதுணை புரிய ஈசா யோக மையம் ஏற்படுத்தியிருக்கும் வழியே “சஹஜ ஸ்திதி யோகா”.சஹஜ ஸ்திதி யோகா என்றால், “இயல்பாக வாழும் கலை” என்று பொருள்.தன் இயல்பு வாழ்க்கையில் இருந்தபடியே தன்னை மேம்படுத்திக் கொள்ள அனைவருக்கும் வழங்கப்படும் அரிய வாய்ப்பு இது.சஹஜ ஸ்திதி யோகா, எந்தவொரு பழக்கத்தயும் விடச்சொல்லி வற்புறுத்துவதில்லை. எந்தவொரு மனநிலையையும் மாற்ற சொல்லி வற்புறுத்தவதில்லை. அனுபவ ரீதியாக எதையும் உணர்ந்து, வேண்டாதவறை விலக்கிக் கொள்வதற்கான, விழிப்புணர்வைத் தருகிறது.இதுவரை உணராத பரிமாணத்தில் வாழ்கையை மனிதன் உணரத் தொடங்குகிறான். அன்பு, அமைதி, ஆனந்தம் ஆகியவை வெளியிலிருந்து பெருவதர்க்கல்ல. மனிதனிடம் ஏற்கனவே இருக்கும் இயல்புதான் என்பதை அனுபவ அடிப்படையில் உணரும்போது முற்றிலும் புதிய பார்வை கிடைக்கிறது.செயல்திறன் அதிகரித்தல், உடல் நலம், மன அமைதி இவையெல்லாம் சஹஜ ஸ்திதி யோகாவில் முக்கிய அம்சங்களல்ல. அவை பக்க விளைவுகள்தான்.மனிதன் தன்னை உணர்ந்து, தனக்குள் இருக்கும் பேராற்றலை உணர்ந்து, உயிர்களிடையே பேதமில்லை என்கிற அனுபத்தைப் பெறுவதே சஹஜ ஸ்திதி யோகாவின் முக்கிய நோக்கம்.நோய் வாய்ப்பட்டிருக்கும் மனிதன் சஹஜ ஸ்திதி யோகாவிற்குப் பிறகு, நோயின் தன்மையை உணர்கிறான். ஆனால், அதனால் துன்பமடைவதில்லை.சில அடிப்படை அணுகுமுறைகள் மாறும்போதே சில நோய்கள் அவனைவிட்டு விலகுவதை இங்கே காணமுடியும்.கோபம், பதட்டம், போன்றவை தங்கள் பிறவிக் குணங்கள் என்று கருதியவர்கள், வகுப்புகள் தொடங்கி சில நாட்களிலேயே அந்த குணங்கள் தங்களை விட்டு விலகுவதைக் காண்கிறார்கள்.சஹஜ ஸ்திதி யோகா, நீண்ட கால அனுபவத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள, ஆழ்ந்த யோக அறிவியலின் வெளிப்பாடு.எல்லா வயதினருக்கும் பொதுவான தன்மையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பயிற்சி, மனிதன் தனது அடிப்படை சக்தியை நன்கு உணரவும் அதனை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பாக அமைந்துள்ளது.உலகின் பல பகுதிகளிலும் பரவியுள்ள சஹஜ ஸ்திதி யோகாவை “தன்னை உணர்வதற்கான அமைதிப்புரட்சி” என்று அழைக்கிறோம்.
Read more ...

யோகா கலையின் தோற்றம்.

Friday, September 10, 2010
யோகா கலையின் தோற்றம்.

சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் உதயமானதாக உலகமெங்கும் போற்றப்படும் யோகா கலை, இன்று மேற்கத்தைய நாடுகளில், கீழ்த்திசை நாடுகளில், ஏன் சீனத்திலும்,ஆஸ்திரேலியாவிலும் கூட கடைகட்டி விற்கப்படுகிறது. லண்டனில் மட்டும் மொத்தம் முன்னூறு யோகா மையங்கள். சீனாவில் கிட்டத்தட்ட அறுநூறு யோகா மையங்கள். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மட்டும் இருநூறு யோகா மையங்கள்.ஆனால் இந்தக்கலையைக் கண்டறிந்த தாயகமான இந்தியத்திருநாட்டிலோ, உரிய மதிப்பின்றி இருந்த இந்தக்கலை, இப்போது தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகவும், அதிகரித்துவரும் மனோதத்துவ ரீதியிலான பிரச்சினைகளாலும், மீண்டும் உரிய முக்கியத்துவத்தைப் பெறத் தொடங்கியுள்ளது.இன்றைக்கு கொரியர்கள் நடத்தும் எங்கள் நிறுவனம் யோகா பயிற்சியைக் கொடுக்கிறது. இதன் புனிதத்தையும், நோய் தீர்க்கும் தன்மையையும் உணர்ந்த கொரியர்களும் ஆர்வத்துடன் பங்குபெறுகிறார்கள். தங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்கிறார்கள். இதன் பெருமையைச் சிலாகிக்கிறார்கள். இதன் மூலம் அடைந்த பலன்களை வெளிப்படையாகச் சொல்கிறார்கள்.இன்றைய நவீன யுகத்தில் ஆண்களும் பெண்களும் குறைந்தபட்சம் எட்டிலிருந்து பத்துமணிவரை பணிபுரிய வேண்டியுள்ளது. வீடு திரும்பும் நேரத்தையும் கணக்கில் கொண்டால் சராசரியாக பத்திலிருந்து பதினாலு மணிநேரம்செலவு செய்கிறார்கள். இந்த நேரத்தில் மூளைக்கு வேலை கொடுக்கவேண்டியுள்ளது. இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. இலக்கு முடிவதற்குள் பணியை நிறைவு செய்யவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.பணி முடிந்து வீடு வந்தால் கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் திருப்தி செய்ய உணவு தயாரித்தல், குடும்ப வேலைகள், மாமியார், மாமனார், அத்தை மகன், பெரியம்மா பையன், நீண்டகால நண்பர், எதிர்த்த வீட்டுத் தோழர், வீட்டு வாடகை, பஞ்சர் ஆன பைக், பக்கத்து வீட்டில் இருந்து கழிவு நீர் வாசனை, டிக்கெட் புக்கிங், தெருவிளக்கு எரியாதது, சாலை சரியில்லாதது, காப்புறுதி, கடன் அட்டை காலக்கெடு தவறியது, வங்கி என்று சுற்றிலும் அம்புகளால் துளைபடுகிறார் நமது மனது என்னும் அபாக்கியசாலி.இதிலிருந்து விடுபட வேண்டும் என்றால் அதற்கு சிறந்த வழி, ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது ஒதுக்கி யோகா போன்ற பயிற்சியில் ஈடுபடுவது.இதன் மூலம் கர்ப்பிணிப் பெண்களில் இருந்து, மன அழுத்த நோய்க்கு ஆளானவர்கள் வரை பயனடையலாம். நாட்பட்ட தலைவலி, முதுவலி நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நீரிழிவு உள்ளவர்கள், எப்போதும் வேலையைச் சிந்தித்து அதன் மூலம் உயர் இரத்த அழுத்தம், மைகிரேன், உடல் வலி, தூக்கமின்மை ஆகிய நோய்களுள்ள அனைவரும் பயன் அடையலாம். வியாதிகள் ஏதுமின்றி உடலையும் மனதையும் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள விரும்பும் அனைவரும் பயனடையலாம்.உட்கார்ந்து எழுந்து, கையைக் காலை ஆட்டி, கண்ணை மூடித்திறந்து, இது மட்டும் அல்ல யோகா.

யோகம் பயில்வதற்கு ஆசனப்பயிற்சி இன்றியமையாது. யோகப் பயிற்சிகளில் யோகாசனம் முக்கியமானது. யோகம் ஒரு கலை. கல்வி பயில்வதற்கு எவ்வளவு இன்றியமையாததோ, அவ்வளவு இன்றியமையாதது யோகம் பயில்பவர்களுக்கு யோகாசனம் பயில்வது என்று கூறினால் அது மிகையாகாது. யோகம் என்றால் என்ன? யோகம் என்ற சொல் யுஜ் என்ற சமஸ்கிருத மொழியில் உள்ள சொல்லின் வழியே பிறந்ததாகும். யோகம் என்ற சொல்லுக்கு “ஒருங்கிணைத்தல்” அல்லது “எல்லாவற்றையும் எந்தவிதமான வேறுபாடுமின்றி முழுமைப்படுத்துதல்” என்றும் பொருள் கூறுகின்றனர். யோகம் என்றால் அலையும் மனதை அலையாமல் ஒரு நேர்வழிப்படுத்தும் செயல் என்று எளிமையாகவும் உரைக்கின்றனர். யோகம் தமிழில் தவம் அல்லது ஜெபம் எனப்படும். அறிவியல் கலை யோகம் என்பது மக்கள் தம் உடலையும் உள்ளத்தையும் அடக்கியாளக் கண்ட ஓர் அறிவியல் கலையாகும். யோகப் பயிற்சியில் சித்தி பெற்ற அறிஞர்கள் இயற்கையைத் தன்வயப்படுத்தும் ஆற்றலை அடைவார்கள். யோகக் கலை சாகாக் கலை என்று பல அறிஞர்கள் கூறுவர். யோகப் பயிற்சியால் நீண்ட நாள் வாழலாம். யோகம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றிய கலையாகும். சிவயோகம் இந்த யோகம் என்னும் அரும்பெரும் ஆன்மீகக்கலை நம் முன்னோர் இன்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கண்ட அரும்பெரும் கலை. இக்கலை இன்று சைவ சமய சாத்திரங்களில் அழகுற மிக நுணுக்கமாக எடுத்துக் காட்டப் பெற்றுள்ளது. யோகத்தை சிவயோகம் என்பதும், இது சிவனார் மக்களுக்கு உபதேசித்துக் கொடுத்த கலை என்பதும் தெறிந்ததே. உலகிலே முதன் முதலாக யோகக் கலையைக் கண்டவர்கள் சிவனை வழிபடும் சிவனெறியாளர்களே. யோக முறை யோகாசன முறைகளை முறையோடு பின்பற்ற வேண்டும். உள்ளுறுப்புகள் தான் யோகாசனத்தில் முழுக்கப் பயன்படுகின்றன. உள்ளுறுப்புகள் தூய்மை பெறவும் வலிமை பெறவும் பயிற்சி செய்யும் நேரத்தில் மிகவும் நியமத்துடன் பயபக்தியுடன் நெறி பிறழாது செய்ய வேண்டும்.

யோகப் பயிற்சியின் சிறப்புகள்
1. தேகத்திற்கு வந்த நோய்களைப் போக்கியும் இனி நோய்கள் வராமல் காத்தும் ஒருவருக்கு உகந்த உன்னத உடலை உருவாக்குகிறது.
2.உள்ளுறுப்புகளையும் வெளியுறுப்புகளையும் தூய்மைப்படுத்தி அது தன் பணிகளை அருமையாகவும் திறமையாகவும் அயராமல் செயல்படுத்தத் தூண்டுகிறது.
3. சாதாரணமாகச் செயல்படும் ஒருவனுடைய செயலாற்றலை மிகுதிப் படுத்துவதுடன் உடல் நலமும், மனவளமும் பெற்று வாழ உற்சாகப்படுத்துகிறது.
4. அன்றாடம் உடலில் உண்டாகும் கழிவுப் பொருட்களை வெகு விரைவாக வெளிப்படுத்தவும், உடலைக் கசடற்ற முறையில் வைத்துக் காக்கின்ற சக்தியினையும் உடலுக்குத் தருகின்றது. அதாவது நரம்புகள், மூளை, நுரையீரல், இதயம், ஜீரண உறுப்புகள் மற்றும் குண்டிக்காய் போன்ற அவயவங்களுக்கு திறமையுடன் வேலை செய்கின்ற ஆற்றலை அளிக்கிறது.
5. நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்வதற்குத் துணை புரிகிறது. மனதாலும், செயலாலும், உயர்ந்த வாழ்வு வாழத் தூண்டுகிறது. இவ்வாறு தேகநலனைப் பற்றியும், சிறந்த ஆரோக்கிய வாழ்வு முறையைப் பற்றியும் யோகமுறை உடற்பயிற்சி முறைகள் நிறைந்து செயல்படுகின்றன.

ஆசனம் செய்வதால் உண்டாகும் பயன்கள்:
1. ஆசனங்களை முறையோடு செய்து வந்தால் உடல்வளம் பெறுவதுடன், மிகவும் சுறுசுறுப்போடும் விரைவாகவும் அன்றாட வாழ்வில் இயங்க முடியும்.
2. முதுகெலும்பு எளிதில் வளைந்து இயங்கும் ஆற்றலைப் பெறுவதால், எதனையும் சிறப்பாகப் பணியாற்றும் வகையில் உடலில் ஒத்துழைப்பு உயர்ந்த அளவில் கிடைக்கிறது.
3. பசி நன்றாக எடுக்கிறது. உடலில் பற்றிக் கொள்கின்ற நோய்கள் தொடக்க நிலையிலேயே முறியடிக்கப்படுகின்றன.
4. மிகவும் முக்கிய உறுப்புகளான இதயம், நுரையீரல்கள் மற்றும் மூளைப்பகுதிகள் செழிப்படைந்து சிறப்புடன் பணியாற்ற முடிகிறது.
5. தங்கு தடை இல்லா இரத்த ஓட்டம் உடலெங்கும் இயல்பாக ஓடி, உடலைப் பூரணப் பொலிவு பெற வைக்கிறது.
6. உடல் அவயங்கள் எல்லாம் விறைப்பாக இருக்காமல், எளிதில் செயலுக்கு இணங்கும் தன்மையில் இருந்திட வழி அமைகிறது.

வேத சம்கிதைகளில் தவத்தைப் பற்றிய குறிப்புகள் அடங்கியுள்ளன, தவப் பயிற்சிகளான தவங்கள்[Brāhmaṇas](900 முதல் 500 BCE) இல் முந்தைய வேத வர்ணனைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.பாகிஸ்தானில் உள்ள சில இடங்களில் சிந்து பள்ளத்தாக்கு நாகரிகத்தில் (c. 3300- 1700 B.C.E) இருந்த சில கண்டெடுக்கப்பட்ட உருவங்களின் அமர்ந்திருப்பது போன்ற நிலைகள் சாதாரண யோகா அல்லது தியான நிலைகளைக் காட்டுவது போல் உள்ளன மேலும் இது ஒரு வகையான சடங்கு முறையை, யோகாவின் ஆரம்பமாகக் காட்டுகிறது. இது க்ரெகொரி போஷ்செல் என்ற தொல் பொருள் ஆய்வாளரின் கூற்று. இந்து பள்ளத்தாக்கு சின்னங்களுக்கும், பின்னாளில் வந்த யோகா மற்றும் தியானப் பயிற்சிகளுக்கும் இடையில் ஏதோ ஒரு வகை சம்பந்தம் உள்ளதை முடிவான சாட்சிகள் இல்லாவிட்டாலும் , அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.நமது முன்னோர்களாகிய யோகிகளும், ஞானிகளும் ஏறக்குறைய பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, உடல், உள வளத்தையும், நலத்தையும் கொடுக்கின்ற வழிமுறைகளைத் தெளிவாகக் கூறிச் சென்றுள்ளனர். இவற்றுள் முக்கியமானவையாக யோகா, தியானம், மூச்சுப்பயிற்சி தாவரஉணவுமுறை, ஆயுர்வேத வைத்தியமுறை என்பவற்றைக் கருதமுடியும். நம் முன்னோர்களால் 84 இலட்சம் வரையிலான யோகாசனங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக கற்றறிந்தோர் கூறியுள்ளனர்.யோகா, தியானம், மூச்சுப்பயிற்சி என்பன ஒன்றோடொன்று தொடர்பு கொண்டவையாக விளங்குகின்றன.

பதஞ்சலி யோகம் என்றும் அஷ்டாங்க யோகம் என்றும் அழைக்கப்படும் யோக முறைகள் பதஞ்சலி என்ற முனிவரால் உருவாக்கப்பட்டவை. பழங்காலத்தில் பதஞ்சலி முனிவரின் தரிசனமாக (மதமாக) இவை கடைபிடிக்கப் பட்டிருக்கலாம். இந்த அஷ்டாங்க யோகம் என்பது எட்டு அங்கங்களை கொண்டது.அஷ்டாங்க யோகத்தில் முதலாவது யமம் – அஹிம்சை, சத்தியம், திருடாமல் பிறர் பொருளுக்கு ஆசைப்படாமல் இருத்தல், ப்ரம்மசர்யம், போகப்பொருள்களை தவிர்த்த நிலை ஆகியவை கொண்ட வாழ்வே “யமா” அல்லது யமம் எனப்படும். அடுத்தது நியமம்,தூய்மையாக இருத்தல், சுகம் துக்கம், பிடித்தது பிடிக்காதது என்று நேரும்போது அமைதியாய் நடுநிலையாய் இருத்தல், தவம், கற்றல், எல்லாவற்றையும் ஈஸ்வரனுக்கு அர்ப்பணித்து தன் கடமைகளை செய்தல் ஆகியவை நியமத்தில் அடங்கும்.இதுவரை சொன்னவை வாழ்க்கைமுறை. இனி உள்ளத்துக்காக செய்யக்கூடிய த்யான முறையாவன,அசைவின்றி சுகமான வகையில் கஷ்டப்படுத்திக்கொள்ளாமல் அமரவேண்டும். ஆசனம் அமைந்தபிறகு, ப்ராணாயாமம் என்ற முறையில் சுவாசத்தை கட்டுப்படுத்துவது. சுவாசங்கள் பலவகைப்படும். அத்தகைய சுவாசங்களுக்கு கால அளவுகளும் உண்டு.புலன்களை அடக்குதல், மனதை பழக்கி ஒருநிலை கொண்டு அதிலேயே அடங்கிவிடும் நிலை ப்ரத்யாஹாரம் எனப்படும்.ஒரு நேரத்தில் ஒரே பொருளில் மனதை லயிக்கவிடுவது, மற்ற எல்லா இடையூறுகளையும் விலக்கி ஏகாக்ர சிந்தை என்பதைப்போல் ஒன்றையே தொடர்ந்து சிந்தித்து மனதை நிலை நிறுத்தி வைத்தல் தாரணா எனப்படும்.தாரணா நிலையில் மனதை ஒருமைப்படுத்தி, பக்தியுடன் “தைலதாரை” என்ற எண்ணை கொட்டுவதைப்போல் இடைவிடாமல் தொடர்ந்து மனம் லயிப்பதே த்யானம் எனப்படும்.இந்த அஷ்டாங்க யோகத்தின் கடைசி நிலை, சமாதி எனப்படும்.எதை தாரணா மற்றும் த்யான நிலைகளில் மனதில் லயிக்க விடுகிறோமோ அதாகவே ஆகி இரண்டர கலந்து ஒன்றாகிவிடுதலே சமாதி எனப்படும் எட்டவது நிலையாகும். இதற்கு முந்தைய நிலைகளில் செய்பவர், செயல், அதன் விளைவு என்பது இருக்கிறது. ஆனால் சமாதி நிலையில் இவையெல்லாம் ஒன்றாக கலந்து விடுகின்றன.
யாமா (விதிகள் / வரையறைகள்)
நிர்யாமா (தனிமனித ஒழுக்கம்)
ஆசனா (யோகா செய்யும் முறைகள்)
ப்ராணாயமா (மூச்சுப்பயிற்சி)
ப்ரத்யஹாரா (விடுபடுதல்)
தாரணா (குறிப்பிட்டவைகள் மீது ஒருநிலைப்படுத்துதல்)
தியானா (தியானம்)
சாமாதி (தீர்வு) இதில் குறிப்பிட்ட யோகாவை எடுத்துக்கொண்டால் அதில்
பக்தி யோகா
கர்ம யோகா
பதஞ்சலி யோகா முறை
ஜனன யோகா
ஹத்த யோகா
குண்டலினி யோகா என்று பிரிவுகள் உண்டு... யோகா சிறந்ததொரு முறை என்பதும், அதில் நம் முன்னோரின் ஆழ்ந்த அறிவு - மனத்துக்கு பயனளிக்கும் வகையில் செறிந்துள்ளது.
Read more ...