கடவுள்

Thursday, November 25, 2010
ஞானத்தின் வடிவமான குரு ஒருவர் வலம் வந்தார். அவரது திருவோட்டில் ஒருவர் அன்னமிட்டார். அந்தச் அன்னத்தில் ஒரு நாய் வாய் வைத்து உண்டது. நாயின் முதுகில் ஞானி அமர்ந்தார். பாரம் தாங்காமல் நாய் திணறியது. இந்த செய்கையை ஊர் கூடிப் பார்த்தது. வெளியில் சென்றிருந்த சீடன் திரும்பினான். குருவின் செய்கை அவனுக்குத் திகைப்பைத் தந்தது!

“என்ன இது குருவே?” என்றான் அவன். “பிரமத்தில் ஒரு பிரம்மம், பிரமத்தை இட்டது. அதை ஒரு பிரம்மம் உண்டது. அந்த பிரம்மத்தின் மேல் இந்த பிரம்மம் அமர்ந்திருப்பதை, இத்தனை பிரம்மங்கள் கூடிப் பார்க்க, ‘என்ன இது?’ என்கிறது ஒரு பிரம்மம்!” என்று சிரித்தபடி சொன்னார் ஞானி. திருவோடும் பிரம்மம்; அன்னமும் பிரம்மம்; நாயும் பிரம்மம்; பார்த்த மக்களும் பிரம்மம்; கேட்ட சீடனும் பிரம்மம்; தானும் பிரம்மம்; என்ற ஞானியின் பார்வைதான் ஞானத்தின் உச்சம்.

· ஸ்ரீராமானுஜரைத் தேடி வந்த ஒருவன், “ஆண்டவனை அடையும் வழி என்ன?” என்றான். “மனிதர்கள் மீது அன்பு வைப்பதுதான் ஒரே வழி” என்றார் அந்த மகான்.

· ‘கடவுள் இல்லை’ என்று காலமெல்லாம் வாதித்த அமெரிக்க அறிஞர் இங்கர்சால், ‘கடவுள் இருந்தால் மன்னிக்கட்டும்’ என்று தனது நூலில் எழுதினார்.

· ‘உலகம் முழுவதும் கடவுள் இல்லை என்று சொன்னாலும், எனக்குக் கடவுள் என்றும் உண்டு’ என்றார் அண்ணல் காந்தி.

சக மனிதர்களிடம் இறக்கி வைக்க முடியாத இதயத்தின் பாரத்தை, ஒருவன்மேல் நம்பிக்கையோடு நாம் இறக்கி வைப்போம். அந்த நம்பிக்கைக்கு உரியவன் ஆண்டவனே. பாரம் இறங்கினால் சுமை குறையும். சுமை குறைந்தால் மனம் லேசாகும். மனம் லேசானால் வாழ்வின் ருசி வளரும். எல்லா உயிர்களிலும் இறைவனைக் காண்போம். அவற்றின் மீது அன்பு செய்வதே உண்மையான பக்தி வழிபாடு என்று உணர்ந்து கொள்வோம்.
Read more ...

பட்டினத்தார்

Thursday, November 25, 2010
*மலரில் உள்ள தேனை மட்டுமே தேனீ அருந்தும். சாதாரண ஈயோ பேதமில்லாமல் எதிலும் அமரும் சுபாவம் கொண்டது. அதுபோல நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் நல்ல செயல்களை மட்டுமே செய்வார்கள். ஒரு பொருளை நாம் விரும்பத் தொடங்கும்போதே, அதை ஒருநாள் வெறுக்கவும் வேண்டிவரும் என்ற உண்மையை நாம் உணர்வதில்லை. ஆனால், விரும்பும்போதே வெறுக்கவும் தெரிந்து கொண்டவர்கள் வீணான மனவருத்தங்களுக்கு ஆளாக நேர்வதில்லை.

ஆத்திரம் என்பது உள்ளத்தில் எழும்போது, அறிவு தன்னை திரையிட்டுக் கொள்ளும். ஆத்திரம் கொண்டவன் தன் ஆத்திரத்தை தீர்த்துக் கொள்வதை தடுப்பது என்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல.

ஆத்திரம் கொண்டவன் செய்யக் கூடாத செயல்களை புத்தியின்றி செய்ய தலைப்படுவான். அதனால், வாழ்நாள் முழுவதும் தான் செய்த பழிச்செயலை எண்ணி வருந்துவான். அதனால், ஆத்திரத்தை விடுத்து சாந்த குணத்தை பின்பற்றுங்கள்.

தீய குணம் கொண்டவர்கள் இறந்ததும் மீண்டும் இம்மண்ணில் உடனே பிறந்து விடுவார்கள். இறைவன் அம்மனிதர்களின் பாவ விமோசனத்திற்காக உடனே திருப்பி அனுப்பி விடுகிறான். வாழும் காலத்தில் நன்மையை செய்பவனே முக்தி அடைய தகுதியானவன்."
Read more ...

நந்திக்கலம்பகம்

Tuesday, November 23, 2010
கவிதைச் சுவை


நந்திக் கலம்பகம் சொற்சுவையும் பொருட்சுவையும் கற்பனை வளமும் மிக்கது. ‘ஊசல்’, மகளிர் மன்னனின் சிறப்பைப் பாடி ஊஞ்சல் ஆடுவது பற்றிய ஓர் உறுப்பு. அதில் இடம்பெற்றுள்ள பாடல் நந்திக் கலம்பகத்தின் கவிதைச் சுவைக்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.


ஓடரிக்கண் மடநல்லீர்! ஆடாமோ ஊசல்

உத்தரியப் பட்டாட ஆடாமோ ஊசல்

ஆடகப்பூண் மின்னாட ஆடாமோ ஊசல்

அம்மென்மலர்க் குழல்சரிய ஆடாமோ ஊசல்

கூடலர்க்குத் தௌ¢ளாற்றில் விண்ணருளிச் செய்த

கோமுற்றப் படைநந்தி குவலய மார்த்தாண்டன்

காடவர்க்கு முன்தோன்றல் கைவேலைப்பாடிக்

காஞ்சிபுர மும்பாடி ஆடாமோ ஊசல்.

(பாடல், 29)


குருக்கோட்டையை நந்திவர்மன் வென்ற புறப்பொருளையும், அவன் மீது காதல் கொண்ட பெண் அவனது உலாவைப்பற்றிக் கூறும் புறப்பொருளையும் இணைத்துப் பாடிய பாடலைப் பாருங்கள்.


எனதே கலை வளையும் என்னதே; மன்னர்
சினவேறு செந்தனிக்கோன் நந்தி - இனவேழம்
கோமறுகிற் சீறிக் குருக்கோட்டை வென்றாடும்
பூமறுகிற் போகாப் பொழுது.

(பாடல், 2)


நந்தி பவனி வரும்போது அவனைப் பார்த்து ஏங்கும் பெண்ணின் மேகலையும் வளையும் அவள் மெலிவால் நெகிழ்ந்துவிடுகின்றன. அவன் பவனிவராத பொழுதுதான் அந்த அணிகள் அவளுக்குரியவையாக இருக்கின்றன என நயமாகப் பாடுகிறார் கவிஞர்.


நந்தியைப் பிரிந்து தவிக்கும் காதற்பெண்ணின் உருக்கத்தைக் கீழ்க்காணும் பாடலில் காணலாம்.


மங்கையர்கண் புனல்பொழிய மழைபொழியும் காலம்

மாரவேள் சிலைகுனிக்க மயில்குனிக்கும் காலம்

கொங்கைகளும் கொன்றைகளும் பொன்சொரியும் காலம்

கோகனக நகைமுல்லை முகைநகைக்கும் காலம்

செங்கை முகில் அனையகொடைச் செம்பொன்பெய் ஏகத்

தியாகியெனும் நந்தியருள் சேராத காலம்

அங்குயிரும் இங்குடலும் ஆனமழைக் காலம்

அவரொருவர் நாமொருவர் ஆனமழைக் காலம்.

(நந்திக்கலம்பகம், தனிப்பாடல், 11)


பிரிந்து சென்ற ஒரு தலைவன் தலைவியிடம் விரைந்து திரும்புகிறான். தேர் ஓடுவதாக அவனுக்குத் தெரியவில்லை. மனம் அவ்வளவு விரைகிறது. உயிரோ தலைவியிடம் முன்னமே சென்றுவிட்டது. ‘தேரில் வெறும் கூடுதான் வருகிறது’ என்று மேகத்திடம் சொல்லியனுப்புகிறான்.


ஓடுகின்ற மேகங்காள் ஓடாத தேரில்வெறும்
கூடுவருகு தென்று கூறுங்கோள் - நாடியே
நந்திசீ ராமனுடைய நன்னகரில் நன்னுதலைச்
சந்திச்சீ ராமாகில் தான்.

(நந்திக்கலம்பகம், தனிப்பாடல், 17)

நந்திவர்மனின் வீரத்தை மகட்கொடை மறுக்கும் மறவன் ஒருவனின் கூற்றில் வெளிப்படுத்துவதைப் பாருங்கள்


அம்பொன்று வில்லொடிதல் நாணறுதல் நான்கிழவன் அசைந்தேன்
என்றோ வம்பொன்று குழலாளை மணம்பேசி வரவிடுத்தார் மன்னர் தூதா!
செம்பொன்செய் மணிமாடத் தௌ¢ளாற்றின் நந்திபதம் சேரார் ஆனைக்
கொம்(பு) ஒன்றோ நம்குடிலின் குறுங்காலும் நெடுவளையும் குனிந்து பாரே.

(நந்திக்கலம்பகம், 77)


‘தூதனே! கையிலிருப்பது ஓர் அம்புதான். வில் ஒடிந்ததுதான். அதன் நாணும் அறுந்துவிட்டதுதான். நான் வயதானவன் தான். இப்படி எண்ணித்தானே என் மகளை மணம்பேசிவர மன்னன் உன்னை அனுப்பினான். என் குடிலைச் சுற்றிப்பார். குடிலின் குறுங்காலும் நீண்ட வளைமரமும் நந்தியின் பகை அரசர்களின் யானைக் கொம்புகள் அல்லவா? பார்.’


இவற்றைப் போன்ற பல பாடல்கள் நந்திக் கலம்பகத்தின் இலக்கியச் சிறப்பினை எடுத்தியம்புவனவாக உள்ளன.
Read more ...

நந்திக் கலம்பகம்

Tuesday, November 23, 2010
கலம்பகம்


தமிழ் மொழியில் காணப்படும் சிற்றிலக்கிய வகைகளில் குறிப்பிடத்தக்க ஒன்று கலம்பகம், கலம்பகம் என்றால் ‘கலவை’ என்று ஒரு பொருள் உண்டு. பெரும்பாணாற்றுப்படையில்,


‘பல்பூ மிடைந்த படலைக் கண்ணி’


என்ற ஒரு தொடர் வருகிறது, இதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர், ‘பல வகையாகிய பூக்கள் கலந்து நெருங்கிய கலம்பக மாலை’ என்று கூறுகிறார். இப்பொழுது பேச்சு வழக்கிலும் பலவகையான பூக்களைச் சேர்த்துத் தொடுத்த மாலையைக் கதம்பம் என்று குறிப்பிடுகின்றனர். கலம்பகம் என்பதே கதம்பம் என்று வழக்கில் மாறி வந்துள்ளது. தொண்டரடிப் பொடியாழ்வார் ‘கலம்பகம் புனைந்த அலங்கலந் தொடையல்’ என்று குறிப்பிடுகிறார். இதன் பொருள், ‘பல மலர்களால் புனைந்த மாலை’ என்பதாகும். பல்வேறு மலர்களால் ஆன மாலை கலம்பகம் எனப்படுவது போல பல்வேறு உறுப்புகளும் பொருளும் பாட்டும் கலந்துவரும் பாமாலையான இலக்கிய வகை கலம்பகம் என்று அழைக்கப்படுகிறது. பலவகையான ஓசை நயமுடைய பாக்களும் இனங்களும் உறுப்புகளும் பயின்று, அகமும் புறமும் அகப்புறமுமாகிய திணைகள் விரவி உவகை, பெருமிதம் முதலிய சுவைகளைக் கொண்டதாய்ப் பாடப்படுவது கலம்பகம். கலம் என்றால் பன்னிரண்டையும் பகம் என்பது அதனில் பாதியாகிய ஆறையும் குறிப்பாக உணர்த்தி 18 உறுப்புகளைக் குறிப்பது என்றும் விளக்கம் சொல்வர்.


கலம்பக அமைப்பு


கலம்பக இலக்கியத்தின் பெரும்பாலான உறுப்புகளின் கருக்கள் தொல்காப்பியத்தில் காணப்படுகின்றன. பாட்டியல் நூல்கள் கலம்பக இலக்கிய வகையின் உறுப்புகளைக் கூறுகின்றன.


பாட்டியல் நூல்கள் கலம்பக இலக்கியத்தின் முதல் உறுப்புகளாக ஒருபோகு, வெண்பா, கட்டளைக் கலித்துறை ஆகிய யாப்பு வகைகளைக் குறிப்பிடுகின்றன. இவை கலம்பக இலக்கியத்தின் தொடக்கத்தில் இடம்பெற வேண்டும். முதல் உறுப்புகள் பாட்டுடைத் தலைவனை வாழ்த்துவனவாக அமையவேண்டும்.


அமைப்பு


பலவகைப் பொருள்பற்றி வெவ்வேறு செய்யுள் வகைகளால் நூறுபாட்டுகள் அமைந்த நூல் கலம்பகம். ஒரு செய்யுளின் இறுதித் தொடர் அல்லது சொல் அல்லது சீர் அல்லது அசை அடுத்த செய்யுளின் தொடக்கமாக அமையும் அந்தாதி முறையிலேயே நூறு செய்யுள்களும் அமையும்.


புயவகுப்பு, மதங்கு, அம்மானை, காலம், சம்பிரதம், கார், தவம், குறம், மறம், பாண், களி, சித்து, இரங்கல், கைக்கிளை, தூது, வண்டு, தழை, ஊசல் என்பன கலம்பகத்தின் பதினெட்டு உறுப்புகளாகும். கடவுளுக்கு 100, முனிவருக்கு 95, அரசருக்கு 90, அமைச்சருக்கு 90, வணிகருக்கு 50, வேளாளருக்கு 30 எனப் பாடல் எண்ணிக்கை இடம் பெறும் என்றும் இலக்கண நூல்கள் கூறுகின்றன.நந்திவர்மன் என்ற பல்லவ அரசனைப் புகழ்ந்து பாடப்பட்டது நந்திக் கலம்பகம். இவன் தௌ¢ளாறு எறிந்த நந்திவர்மன் எனப்படுபவன். தௌ¢ளாற்றில் இவன் புரிந்த போர் வெற்றியைக் கலம்பகம் குறிப்பிடுகிறது. இவனது காலம் கி.பி. 825 முதல் கி.பி. 850 வரை. எனவே, இந்த நூல் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டைச் சார்ந்தது என்பர். இதுவே தமிழில் தோன்றிய முதல் கலம்பக நூல் என்று கூறப்படுகிறது. இதில் 110 பாடல்கள் உள்ளன. சில பாடல்கள் இடைச்செருகலாக இருப்பதால் அந்தாதிப் பாடல் எண்ணிக்கை மாறுபடுகிறது. இதன் பாட்டுடைத் தலைவனும் கிளவித் தலைவனும் நந்திவர்மனே. முதற்கலம்பகமான இதில் புயவகுப்பு, தூது, இரங்கல், மறம், பாண், மடல், ஊசல், காலம், மடக்கு, வெறி விலக்கு, சம்பிரதம், கையுறை, மதங்கியார் ஆகிய 13 உறுப்புகள்தாம் உள்ளன. காலத்தால் முற்பட்டதாதலின் உறுப்புகள் குறைவாகப் பெற்றுள்ளது எனலாம்.


நந்திக் கலம்பகம் உருவானது பற்றிய செய்தி


நந்திவர்மனின் பகைவன் ஒருவன் அவனை ஒழிப்பதற்குப் பல சூழ்ச்சிகள் செய்தானாம். அவை வெற்றி பெறாமல் போகவே, கடைசியில் இவ்வாறு ஒரு சுவையான நூல்பாடி, அதில் அவனுடைய மரணத்திற்கு உரிய வகையில் படிப்படியாகச் சில தொடர்களையும் செய்யுள்களையும் அமைத்து, ஈம விறகு அடுக்கி, அதன்மேல் அரசன் வீற்றிருந்து கேட்குமாறு வேண்டிக் கொண்டான். இவ்வாறு பாடுதலை ‘அறம்பாடுதல்’ என்பார்கள். பாட்டுடைத் தலைவன் அழிவதற்காகத் தீச்சொற்கள் புணர்த்தும் தீய பொருத்தங்களை அமைத்தும் பாடுதல் இது. நந்திவர்மன், தமிழ்ப் பாட்டுகளின் சுவையில் மிகவும் ஈடுபாடு கொண்டவன். இவனைத் தமிழ்த் தென்றல் என்றும் நூற்கடல் புலவன் என்றும் கலம்பகம் குறிப்பிடுகிறது. ஆகையால் அவன் அந்த வேண்டுகோளுக்கு இசைந்தான். பகைவனின் சூழ்ச்சியைப் பற்றி அறிந்த பின்னரும், பாட்டுகளின் சுவையில் திளைத்து ஒன்றுபட்ட அரசன் ஈம விறகின்மேலே அமர்ந்துகொண்டு அனைத்துப் பாடல்களையும் கேட்டான். இறுதிப்பாடல் முடிந்தவுடன் ஈ.ம விறகு பற்றி எரிய உயிர் துறந்தான் என்று சொல்லப்படுகிறது. இது தமிழின் பெருமையைக் காட்டுதற்கும் மன்னனின் அளப்பரிய தமிழார்வத்தைக் காட்டுதற்கும் சொல்லப்பட்ட கதை எனலாம். கவிதை நயம் மிகுந்த அந்த நூறாவது பாட்டு,


வானுறு மதியை அடைந்ததுன் வதனம்

மறிகடல் புகுந்ததுன் கீர்த்தி

கானுறு புலியை அடைந்ததுன் வீரம்

கற்பகம் அடைந்ததுன் கரங்கள்

தேனுறு மலராள் அரியிடம் புகுந்தாள்

செந்தழல் அடைந்ததுன் தேகம்

யானும்என் கவியும் எவ்விடம் புகுவேம்

எந்தை யேநந்தி நாயகனே.

(நந்திக்கலம்பகம், தனிப்பாடல், 21)


என்பதாகும்.


‘வானுறு மதியை’ என்பதற்கு இரண்டு விதமான பொருள் உண்டு. உன் பொலிவு சந்திரனுக்குத்தான் உண்டு என்பது ஒன்று. உன் பொலிவு சந்திரனை அடைந்துவிட்டது என்பது இன்னொன்று. அப்படியே வீரம், கொடை, செல்வம் மேனியின் நிறம் எனப் பாடலில் வரும் அனைத்திற்கும் இருபொருள் கூறலாம். நந்தி மாண்ட கதையை நம்புபவர்கள் கீழ்க்காணும் பொருளொன்றே கொள்கின்றனர்.


‘வானத்தின் சந்திரனை அடைந்தது, உன் முகத்தின் ஒளி. உன் வீரம் காட்டில் வாழும் புலியிடம் சேர்ந்தது. உன் கொடைவளம் மிகுந்த கைகள், கற்பக மரங்களை அடைந்தன. திருமகள் உன்னை விட்டுத் தன் நாயகனான திருமாலிடமே சேர்ந்து விட்டாள். உன் உடம்போ நெருப்பிடம் சேர்ந்தது. இந்த நிலையில் உன்னைப் பிரிந்து நானும் எனது கவிதையும் எங்கே சென்று சேர்வதோ! எம் தலைவனாகிய நந்திவர்மனே’ என்பது மேற்குறிப்பிட்ட பாடலின் கருத்து.


இந்நூலைப் பாடியவர் காடவர் என்ற கவிஞர் என்று குறிப்பிடுவர். அவர் நந்திவர்மனின் இளைய சகோதரர் என்றும் கூறுவர். தொண்டை மண்டல சதகத்தில் இவ்வரலாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


‘கலம்பகம் கொண்டு காயம்விட்ட தௌ¢ளாற்றை நந்தி’ என்ற தொடரும் ‘நந்தி கலம்பகத்தால் மாண்ட கதை நாடறியும்’ என்ற சிவஞான சுவாமிகளின் செய்யுளடியும் இதற்குச் சான்று என்று குறிப்பிடுவர். நூல் எழுதப்பட்டு முற்றுப்பெறும் காலத்தில் நந்தி இறந்திருக்கலாம். நூலின் தொடக்கத்தில் ‘வடவரை அளவும் தென் பொதி அளவும் விடையுடன் மங்கள விசையமும் நடப்ப’ நந்தி அரசாள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இறுதியில் ‘செந்தழல் புகுந்ததுன் தேகம்’ என முடிகிறது. நூலாசிரியர் மன்னன் இறந்ததையே இவ்வாறு குறிப்பிட்டிருக்கக் கூடும்.


நந்திக் கலம்பகத்தின் சிறப்பு


ஓர் அரசனைப் புகழும்போது ஒரே வகையான யாப்பினால் பல செய்யுள் இயற்றுவதைவிடப் பலவகை யாப்புகளால் பல செய்யுள் இயற்றும் புதிய மரபைத் தமிழ் இலக்கியத்திற்கு முதலில் வழங்கிய பெருமை நந்திக் கலம்பகத்திற்கு உண்டு. புலவர் தாமே நேரே அரசனைப் புகழ்ந்து பாடுவது பழைய மரபு. ஆனால் நந்திக் கலம்பகத்தில், ஊரார் பாடுவதுபோலவும், வீரன் ஒருவன் தன் தலைவனின் பெருமையைப் பாராட்டிப் பாடுவதாகவும் அமைந்துள்ளது. இவ்வாறு வேறு பல துறைகள் அமைத்துச் செய்யுள் இயற்றும் முயற்சியை நந்திக் கலம்பகம் வழங்கியது.


கலம்பக இலக்கியம் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதற்குரிய இலக்கணமாக நந்திக் கலம்பகம் அமைந்துள்ளது.
Read more ...

நாட்டுப்புற மருத்துவம்

Tuesday, November 23, 2010
நாட்டுப்புற மருத்துவத்தின் சிறப்புகள்


1. பக்க விளைவுகள் இல்லாதது.

2. எளிய முறையில் அமைவது.

3. அதிகப் பொருட் செலவில்லாதது.

4. ஆங்கில மருத்துவத்தில் குணப்படுத்த முடியாத பல நோய்களுக்கு குணம் தரக்கூடியது.

5. அனுபவ முறையில் பெறப்படுவது.

6. பெரும்பாலும் இயற்கையாகக் கிடைக்கும் பொருள்களை மருந்துகளாகக் கொண்டுள்ளது.

7. சற்று மெதுவாகச் செயல்பட்டாலும் நோய் முழுமையாகக் குணமடைவது.

8. எளிய முறையில் மக்களுக்குப் புரிய வைப்பதால் நோயாளிகள் நோயின் ஆரம்பகட்டத்திலேயே
தடுப்பு முயற்சிகள் செய்து கொள்ள ஏதுவாகிறது.

9. நாட்டுமருத்துவத்தை அறியக் கல்வியறிவு தேவையில்லை; பாமரரும் பின்பற்றலாம்.

10. பெரும்பாலும் பரம்பரை பரம்பரையாகப் பின்பற்றப்பட்டு வருவதால் மருத்துவர்கள் நோயைக்
கண்டறிவது மிக எளிதாகின்றது.

11. உலக நாடுகளில் நாட்டுப்புற மருத்துவமே நவீன மருத்துவத்துக்கு அடிப்படையான உந்துதலாக
அமைந்துள்ளது.

12. உடல் ரீதியாக மட்டும் அணுகாமல் உளரீதியாகவும் அணுகுவதால் நாட்டுப்புற மருத்துவம்
சிறப்பானதாக ஆகின்றது.


நாட்டுப்புற மருத்துவ ஆய்வுகள்


ஓ.பி ஜாகி (O.P. Jaggi) என்பவர் 1973-இல் நாட்டுப்புற மருத்துவம் (Folk Medicine) என்னும் நூலை எழுதியுள்ளார். இதில் இந்திய நாட்டுப்புற மருத்துவக் முறைகள் பற்றிய விளக்கம் உள்ளது. 1956 - இல் சோப்ரா (R.N. Chopra) என்பவரும் மற்றும் சிலரும் சேர்ந்து இந்திய மருத்துவச் செடிகளின் பட்டியல் (Glossary of Indian Medicinal Plants) என்னும் நூலை எழுதியுள்ளனர். இதில் மூலிகைச் செடிகளின் பட்டியல் உள்ளது. மேலும் பல்வேறு அறிஞர்கள் பல கட்டுரைகள் எழுதி அவை ஆங்காங்கே வெளியாகியுள்ளன.

தமிழில் நாட்டுப்புற மருத்துவம் பற்றி வெளிவந்த நூல்கள் குறைவு. இவற்றில் டாக்டர். க, வேங்கடேசனின் ஆய்வு நோக்கில் நாட்டுப்புற மருத்துவம் (1976) என்ற நூலும் டாக்டர் இ. முத்தையாவின் நாட்டுப்புற மருத்துவ மந்திரச் சடங்குகள் (1986) என்ற நூலும் குறிப்பிடத்தக்கவை. முனைவர் க.சந்திரன் நாட்டு மருத்துவம் (2002) என்னும் நூலை எழுதியுள்ளார்.


சி.எஸ். முருகேச முதலியார் பாடம் ( 1936) என்னும் நூலில் நாட்டுப்புற மருத்துவ முறைகள் சிலவற்றை விளக்குகிறார். ஆ.ரா. கண்ணப்பர் நாட்டு மூலிகைகளைப் பற்றி விரிவாக நம் நாட்டு மூலிகைகள் என்ற நூலில் எழுதியுள்ளார். இவரைத் தொடர்ந்து புற்றுநோய் மூலிகைகள் என்ற நூலை இரா, குமாரசாமி என்பவர் எழுதியுள்ளார்.


பி. கரேந்திரகுமார் நாட்டுப்புறவியல் ஆய்வுக் கோவையில் (1987) தஞ்சை மாவட்ட நாட்டுப்புற மருத்துவம் பற்றி ஆங்கிலத்தில் கட்டுரை எழுதியுள்ளார். சோமலெ அவர்கள் ‘தழிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும் (1974) என்ற நூலில் ‘மந்திரமும் மருந்தும்‘ என்ற தலைப்பில் மந்திர மருத்துவச் சடங்குகள் பற்றித் தெளிவாக விளக்கியுள்ளார். 1985-இல் ஆ. சிவசுப்பிரமணியன் ‘ஆராய்ச்சி இதழில்‘ பரதவர்களின் நாட்டு் மருத்துவம் பற்றி ஆராய்ந்து எழுதியுள்ளார். ஆறு.இராமநாதன் தமது ‘நாட்டுப்புற இயல் ஆய்வுகள்‘ (1997) நூலில் ‘நாட்டுப்புற மருத்துவம் நம்பிக்கைக்கு உகந்ததா?‘ என்றும் கட்டுரையை எழுதியுள்ளார்.


இவை தவிரப் பல்வேறு பல்கலைக் கழகங்களிலும் ஆய்வு செய்த மாணவர்கள் பலர் தமது ஆய்வுத் தலைப்பாக நாட்டுப்புற மருத்துவக் கூறுகளை எடுத்துக் கொண்டு ஆய்வேடுகளை அளித்துள்ளனர்.
Read more ...

நாட்டுப்புற மருத்துவம்

Tuesday, November 23, 2010
நாட்டுப்புற மருத்துவத்தின் வகைகள்


நாட்டுப்புற ஆய்வாளர்கள் பலர் நாட்டுப்புற மருத்துவ வகைகளை அவரவர் வாழும் நாட்டில் வழங்கும் சூழல்களுக்கேற்பப் பலவாறு பகுத்துக் காண்பர். டான்யாடர் (Don yoder) நாட்டுப்புற மருத்துவத்தைப் பின்வருமாறு வகைப்படுத்துகின்றார்.


1. மந்திர சமய மருத்துவம் (Magico Religious Medicine)


(i). கடவுளின் சீற்றத்தால் ஏற்படும் நோய்கள்.
(ii). கெட்ட ஆவிகளால் ( Evil Spirit ) ஏற்படும் நோய்கள்.


(iii). சூன்யம் (Witch Craft ) முதலியவற்றால் ஏற்படும் நோய்கள்.
(iv). கண்ணேறு படுவதால் (Evil Eye ) ஏற்படும் நோய்கள்.
(v). மரபுத் தளைகளை மீறுவதால் (Break of Taboos) ஏற்படும் நோய்கள்.


2. இயற்கை நாட்டுப்புற மருத்துவம் (Natural Folk Medicine)


(i). மனிதர்களுக்கான மருத்துவம்.
(ii). பிராணிகளுக்கான மருத்துவம்.


தே. ஞானசேகரன் நாட்டுப்புற மருத்துவத்தை மூன்று நிலைகளில் அடக்குகிறார்.


1. மருந்து முறை சார்ந்த ராஜவைத்தியம்.
2. மந்திர முறை சார்ந்த பூதவைத்தியம்.
3. நெருப்பு முறை சார்ந்த ராட்சச வைத்தியம்.


சு. சண்முகம் சுந்தரம் நாட்டுப்புற இயல் என்னும் தமது நூலில் நாட்டுப்புற மருத்துவத்தைப் பின்வரும் ஐந்து வகைகளாகப் பகுத்துள்ளார்.


1. இயற்கை மருத்துவம் (வயிற்றுப்பூச்சிகள் அழிய வேப்பிலைக் கொழுந்தை அரைத்து சாப்பிடுதல்
போன்றவை).

2. மத / மாந்திரீக மருத்துவம் (மந்திரித்தல,. கண்ணேறு கழித்தல், சுற்றிப் போடுதல்).

3. நம்பிக்கை மருத்துவம் ( எமனுக்கு பயந்து காது குத்துவது, கை, கால் சுளுக்குகளுக்கு இரட்டையர்
நீவுதல் போன்றவை).

4. திட்ட மருத்துவம் (உணவு செரிக்க வெற்றிலை போடுதல் போன்றவை).

5. முரட்டு மருத்துவம் (நாய் கடித்தால் கடிபட்ட இடத்தைச் செருப்பால் அடித்தல்).


ஆறு. இராமநாதன் நாட்டுப்புற மருத்துவத்தை நம்பிக்கை மருத்துவம், இயற்கை அல்லது மூலிகை மருத்துவம் என இரண்டாவது வகைப்படுத்துகிறார்.


நாட்டுப்புற மக்கள் நோய் தோன்றுவதற்கான காரணங்களாகப் பின் வருவனவற்றை நம்புகின்றனர்.


1. தெய்வங்களின் கோபம்.
2. பேயின் செயல்.
3. வைப்பு / பில்லிசூனியம் / வசிய மருந்து.

4. முற்பிறப்புப் பாவங்கள்.
5. கண்ணேறு.
6. உடலில் ஏற்படும் சூடு / குளிர்ச்சி.
7. கவனக் குறைவு.


இந்த நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டே மருத்துவ முறைகள் அமைகின்றன. முதல் ஜந்தும் நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு அமைவதால் அதற்கான மருத்துவமும் மந்திரச் சடங்குகள் வாயிலாகவே செய்யப்படுகின்றன. எனவே இவற்றை நாம் நம்பிக்கை மருத்துவம் எனச் சுட்டலாம். இத்தைகய நம்பிக்கை மருத்துவ முறைகள் உளவியல் தொடர்புடைய சில நோய்களைத் தீர்க்க உதவுகின்றன.


மேற்கூறப்பட்டவற்றுள் இறுதி இரண்டு (6,7) காரணங்களால் தோன்றும் நோய்களைக் குணப்படுத்த மூலிகைகள் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய மருத்துவத்தை இயற்கை அல்லது மூலிகை மருத்துவம் என்று சுட்டலாம்.


க. வேங்கடேசன் தமது ஆய்வு நோக்கில் நாட்டுப்புற மருத்துவம் என்னும் நூலில் நாட்டுப்புற வழக்காறுகளின் அடிப்டையில் வரையறுத்துள்ள நாட்டுப்புற மருத்துவ வகைகளாவன.


1. நாட்டுப்புறப் பாடல்கள் கூறும் மருந்து முறைகள்.
2. நம்பிக்கைகள் கூறும் மருந்து முறைகள்.
3. பழமொழிகள் கூறும் மருந்துமுறைகள்.
4. பழக்கவழக்கங்கள் கூறும் மருந்து முறைகள்.
5. சிடுகா மருந்துமுறைகள்.


இவற்றில் சிடுகா மருந்து என்பது பாட்டி வைத்தியம், கைமுறை வைத்தியம், வீட்டு வைத்தியம் என்ற பெயர்களில் வழங்கப்படுகின்றது இவற்றை எழுதப்படாத மருந்தியல் முறைகள் எனலாம்.


ந. சந்திரன் தமது நாட்டு மருத்துவம் என்னும் நூலில் மருத்துவத்துக்கு உட்படுத்தப் படுபவர்களின் அடிப்படையில் ஐந்து வகைகளைக் குறிப்பிடுகிறார்.


1. மகளிர் மருத்துவம்.
2. ஆடவர் மருத்துவம்.
3. குழந்தையர் மருத்துவம்.

4. பொது மருத்துவம்.
5. கால்நடை மருத்துவம்.
Read more ...

நாட்டுப்புற மருத்துவம்

Tuesday, November 23, 2010
மனிதன் தனக்கு வரும் நோய்களை மட்டுமல்லாமல் தான் வளர்த்து வரும் வீட்டு விலங்குகளான ஆடு, மாடு, போன்றவற்றிற்கு வரும் நோய்களையும் எதிர் கொள்ள வேண்டியிருந்தது. ஆகவே வீட்டு விலங்குகளுக்கு அவன் பார்த்த வைத்தியம் மனித வைத்தியத்தை மேம்படுத்துவதற்கு உதவியாய் இருந்தது.


இயற்கையோடு தொடர்பு கொண்டிருந்த மனிதன் தன்னைச் சுற்றி வளர்ந்துள்ள மரம், கிளை, இலை, வேர், செடி, கொடி, பூ, காய், கனி, விதை ஆகியவற்றையும் கூர்ந்து நோக்கினான். இதனால் அவற்றின் மருத்துவக் குணங்களும் அவனுக்குப் புலனாகத் தொடங்கின. ஆங்காங்கே கிடைக்கக் கூடிய தாவர வகைகளின் மருத்துவக் குணங்களை அறிந்து அவற்றை மனிதர்களிடம் சோதனைக்கு உட்படுத்தி வெற்றி கண்டபோது நாட்டு வைத்தியத்தின் மீதும் வைத்தியர்கள் மீதும் மனிதர்களுக்கு நம்பகத் தன்மை உண்டானது.


நோயுற்றவன் தன் மருத்துவனை நம்புவதும், மருத்துவன் மருந்தை நம்புவதும் காலத்தின் தேவையாகியது. இந்நிலையில், நாட்டு வைத்தியர்கள் பெரிதும் மதிக்கப்பட்டனர். இம்மதிப்பைக் காத்துக் கொள்ள அவர்கள் தமக்குத் தெரிந்த மருத்துவத்தில் மேலும் விளக்கம் தேட முற்பட்டனர் இத்தேடல் முயற்சி அவர்களுககு இத்துறையில் அனுபவ முதிர்ச்சியைத் தந்தது, இப்பெரியோர்களின் அனுபவக் கொடையே நாட்டு மருத்துவமாகும், (நா.சந்திரன் 2002 - 14-16).


நாட்டுப்புற மருத்துவத்தின் பல்வேறு பெயர்கள்


நாட்டுப்புற மருத்துவமானது நாட்டுமருத்துவம், கை வைத்தியம், பாட்டி வைத்தியம், வீட்டு வைத்தியம், பரம்பரை வைத்தியம, பச்சிலை வைத்தியம், முலிகை வைத்தியம், இராஜ வைத்தியம், இரகசிய மருந்து வைத்தியம் என மக்களால் பல்வேறு பெயர்களில் மருந்தின் அடிப்படையிலும் மருத்துவம் செய்கின்ற ஆள் அடிப்படையிலும் அமைந்துள்ளன.


நாட்டுப்புற மருத்துவம் குறித்த விளக்கம்


நாட்டுப்புற மருத்துவம் குறித்து அகக்றை கொண்ட அறிஞர்கள் அவற்றைக் குறித்து விளக்கங்கள் பல கூறினர். இவர்களது இந்த விளக்கங்கள் நாட்டுப்புற மருத்துவத்தை வரையறை செய்ய முயன்றதன் விளைவு எனக் கூறலாம்.


தலைமுறை தலைமுறையாத் தெரிந்து கொண்ட அனுபவத்தின் உதவியோடு எளிய முறைகளில் வீட்டிலேயே நோய்களைப் போக்கிக் கொளளும் மருத்துவ முறையே நாடடுப்புற மருத்துவம் என்கிறது ஸ்டெட்மன் மருத்துவ அகராதி (Stedman's Medical Dictionary).

டான்யாடர் (Don Yoder) என்னும் அமெரிக்க அறிஞர் நாட்டுப்புற மருத்துவத்திற்கு வீட்டு வைத்தியம் (Home Remedies) என்று விளக்கம் தருகிறார். அமெரிக்க டாக்டர் ஜார்விஸ் தமது நாட்டுப்புற மருத்துவம் என்னும் நூலில் பின்வருமாறு கூறுகிறார: ‘உலகில் எங்கு நீங்கள் நோய்வாய்ப்பட்டாலும் நோயைத் தீர்க்க அங்கு இயற்கை மருந்து இருப்பதைப் பார்ப்பீர்கள்’.


நாட்டுப்புறத்து மக்கள் தமக்குற்ற நோய்களைத் தீர்க்கக் கையாளும் மருத்துவ முறைகளை நாட்டுப்புற மருத்துவம் எனலாம் என்பர் சு.சண்முகசுந்தரம் (நாட்டுப்புறவியல் - 139)


ந. சந்திரன் ஒரு நாட்டின் தட்பவெப்ப நிலைகளுக்கேற்ப மக்களுக்கு ஏற்படும் நோய்களுக்கு அந்தந்த நாட்டில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு பாமர மக்கள் தம் பட்டறிவால் செய்துவரும் மருத்துவ முறையை நாட்டு மருத்துவம் எனலாம் என்கிறார்.


ந. சந்திரனின் விளக்கப்படி பாமரர்கள் மட்டுமே நாட்டுப்புற மருத்துவத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்றாகின்றது. ஆனால் இன்றைய நிலையில் நாட்டுப்புற மருத்துவத்தின் சிறப்பும் பயனும் கற்றவர்களுக்கும் தெளிவாகியுள்ளன. சில குறிப்பிட்ட நோய்களுக்கு நாட்டுப்புற மருத்துவமே ஏற்றது என்பது தெரியவந்துள்ளது. நவீனமான முறைகளில் நாட்டுப்புற மருந்துகள் தயாரிக்கப்பட்டுவருகின்றன. ஆகவே இன்றைய நிலையில் நாட்டுப்புற மருத்துவம் பாமரர்க்கானது என விளக்கம் சொல்வது சரியன்று. சந்திரனின் விளக்கத்தில் பாமரன் என்பதை மட்டும் நீக்கினால் போதுமானது.


நாம் நாட்டுப்புற மருத்துவத்தைப் பின்வருமாறு விளக்கலாம். ஒரு நாட்டின் தட்பவெப்ப நிலைகளுக்கேற்ப மக்களுக்கு ஏற்படும் நோய்களுக்கு அந்தந்த நாட்டில் இயற்கையாகக் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு மக்கள் தம் பட்டறிவால் செய்துவரும் மருத்துவ முறையே நாட்டுப்புற மருத்துவம் ஆகும்.
Read more ...

நாட்டுப்புற மருத்துவம்

Tuesday, November 23, 2010
தமிழில் நாட்டுப்புற மருத்துவம் பற்றி வெளிவந்த நூல்கள் குறைவு. இவற்றில் டாக்டர். க, வேங்கடேசனின் ஆய்வு நோக்கில் நாட்டுப்புற மருத்துவம் (1976) என்ற நூலும் டாக்டர் இ. முத்தையாவின் நாட்டுப்புற மருத்துவ மந்திரச் சடங்குகள் (1986) என்ற நூலும் குறிப்பிடத்தக்கவை. முனைவர் க.சந்திரன் நாட்டு மருத்துவம் (2002) என்னும் நூலை எழுதியுள்ளார்.


சி.எஸ். முருகேச முதலியார் பாடம் ( 1936) என்னும் நூலில் நாட்டுப்புற மருத்துவ முறைகள் சிலவற்றை விளக்குகிறார். ஆ.ரா. கண்ணப்பர் நாட்டு மூலிகைகளைப் பற்றி விரிவாக நம் நாட்டு மூலிகைகள் என்ற நூலில் எழுதியுள்ளார். இவரைத் தொடர்ந்து புற்றுநோய் மூலிகைகள் என்ற நூலை இரா, குமாரசாமி என்பவர் எழுதியுள்ளார்.


பி. கரேந்திரகுமார் நாட்டுப்புறவியல் ஆய்வுக் கோவையில் (1987) தஞ்சை மாவட்ட நாட்டுப்புற மருத்துவம் பற்றி ஆங்கிலத்தில் கட்டுரை எழுதியுள்ளார். சோமலெ அவர்கள் ‘தழிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும் (1974) என்ற நூலில் ‘மந்திரமும் மருந்தும்‘ என்ற தலைப்பில் மந்திர மருத்துவச் சடங்குகள் பற்றித் தெளிவாக விளக்கியுள்ளார். 1985-இல் ஆ. சிவசுப்பிரமணியன் ‘ஆராய்ச்சி இதழில்‘ பரதவர்களின் நாட்டு் மருத்துவம் பற்றி ஆராய்ந்து எழுதியுள்ளார். ஆறு.இராமநாதன் தமது ‘நாட்டுப்புற இயல் ஆய்வுகள்‘ (1997) நூலில் ‘நாட்டுப்புற மருத்துவம் நம்பிக்கைக்கு உகந்ததா?‘ என்றும் கட்டுரையை எழுதியுள்ளார்.


இவை தவிரப் பல்வேறு பல்கலைக் கழகங்களிலும் ஆய்வு செய்த மாணவர்கள் பலர் தமது ஆய்வுத் தலைப்பாக நாட்டுப்புற மருத்துவக் கூறுகளை எடுத்துக் கொண்டு ஆய்வேடுகளை அளித்துள்ளனர்.
Read more ...

சிவ விரதம்

Monday, November 22, 2010
விரி கடலும், மண்ணும், விண்ணும், மிகு தீயும், புனல், காற்றாகி எட்டு திசையான சங்க வெண்குழைக் காதுடை செம்பவள மேனி எம் இறைவன் சிவ பரம் பொருளுக்கு மிகவும் உகந்த அஷ்ட மஹா விரதங்களாக ஸ்கந்த புராணம் கூறுபவை 1. சோம வார விரதம், 2.திருவாதிரை, 3.உமா மஹேஸ்வர விரதம், 4. மஹா சிவராத்திரி விரதம், 5.கேதார விரதம், 6. கல்யாண விரதம், 7. சூல விரதம் 8. ரிஷப விரதம், ஆகியவை ஆகும்।


சிவராத்திரி நித்ய, மாத சிவராத்திரி, பக்ஷசிவராத்திரி, யோக சிவராத்திரி, மஹா சிவராத்திரி என்று வருடம் முழுவதும் கொண்டாடப்படுவதாக ஸ்கந்த புராணம் கூறுகின்றது.

நித்ய சிவராத்திரி : தினம் தோறும் வரும் இரவு நித்ய சிவராத்திரி ஆகும்.

மாத சிவராத்திரி : ஒவ்வொரு மாதமும் வரும் கிருஷ்ண பக்ஷ சதுர்த்தி மாத சிவராத்திரி ஆகும்.

பக்ஷ சிவராத்திரி : மாசி மாதம் கிருஷ்ண பக்ஷ பிரதமை முதல் சதுர்த்தசி வரை 13 நாட்கள் பக்ஷ சிவராத்திரி ஆகும்.

யோக சிவராத்திரி : திங்கட்கிழமையில் இரவு பகல் முழுவதும் அமாவாசை இருந்தால் அது யோக சிவராத்திரி ஆகும்.

மஹா சிவராத்திரி : மாசி மாதம் கிருஷ்ண பக்ஷ சதுர்த்தசி இரவு மஹா சிவராத்திரி.

இவற்றுள் மஹா சிவராத்திரி விரதம் தான் வெகு சிறப்பாக பக்தர்களால் அனுஷ்டிக்கப்படுகின்றது.
Read more ...

சோமவார விரதம்

Monday, November 22, 2010
சோமவார விரதம் தோன்றிய வரலாறு:


சந்திரன் கார்த்திகை மாத சுக்லபக்ஷ அஷ்டமியில் தோன்றினான். சந்திரன் பெயரால் சோமவார விரதம் தோன்றியது. சந்திரன் சிவனை ஆராதித்ததும், கிருத யுகம் தோன்றியதும், சந்திரனை சிவபெருமான் சிரசில் அணிந்ததும் கார்த்திகை சோம வாரத்தில் தான். தட்சபிரஜாபதி தன் மகள்களை தனித்தனியாக மணம் செய்து கொடுத்தால் அவர்களிடையே ஏற்றத் தாழ்வுகள் உண்டாகும் என்று கருதி தந்து 27 மகள்களான , கார்த்திகை, ரோகிணி, மிருகžருஷம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி, அசுபதி, பரணி ஆகியோரை மஹா பேரழகனான சந்திரனுக்கு மணம் புரிவித்தான். ஆனால் சந்திரனோ ரோகிணி மற்றும் கார்த்திகையிடம் மட்டும் மிகவும் அன்பு கொண்டு தனது மற்ற மனைவியர்களை புறக்கணித்தான். அதனால் மனம் நொந்த மற்ற பெண்கள் தங்கள் தந்தையிடம் சென்று முறையிட்டனர். ஆத்திரமடைந்த தட்சன் சந்திரனுக்கு சாபம் கொடுத்தான், அதனால் சந்திரன் தனது கலைகளை இழந்தான் அவனை குஷ்ட நோயும் பீடித்தது. தன் சாபம் நீங்க சந்திரன் கார்த்திகை மாதத்தின் அனைத்து திங்கட் கிழமைகளிலும் எம்பெருமானை கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை மிடற்றினிலடக்கிய வேதியனை புனல் விரி நறுங்கொன்றைப் போதணிந்த கனல் புரி யனல் புல்கு கையவனை, ஐந்தலையரவு கொண்டரைக்கசைத்த சந்த வெண்பொடி சங்கரனை நினைத்து விரதம் அனுஷ்டித்தான், அவனது விரததிற்கு மகிழந்த பரம கருணாமூர்த்தியான எம்பெருமான் அவனுக்கு சாப நிவர்த்தி அளித்தார் அதனால் சந்திரன் தான் இழந்த சோபையை பெற்றான், ஆயினும் பதினாறு கலைகளும் நாள் ஒன்றாக வளர்ந்து பௌர்ணமியன்று பூரண சந்திரனாக திகழ்ந்து பின் தன் கலைகளை ஒவ்வொன்றாக இழந்து பின் அமாவாசையன்று ஓளியற்றவனாகவும் ஆகும் வண்ணம் எம்பெருமானை இகழ்ந்தவனே ஆனாலும் தட்சன் அளித்த சாபத்தை முற்றிலும் நீக்காமல் மாற்றியருளினார் கருணைக் கடலாம் சிவபெருமான். என்னே பகைவனுக்கும் அருளும் ஐயனின் பண்பு.சிவபெருமானுக்குரிய விரதங்கள் எட்டு என்று ஸ்கந்த புராணம் கூறுகின்றது அவற்றுள் ஒன்று கார்த்திகை சோம வார விரதம். கார்த்திகை மாதத்தின் திங்கள் கிழமைகளில் இவ்விரதம் கடைபிடிக்கப்படுகின்றது. இந்த வருடம் ஐந்து சோமவாரங்கள் வருகின்றன. ஐந்து வாரங்களிலும் இவ்விரதம் சம்பந்தப்பட்ட பல்வேறு தகவல்களை அன்பர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆண்டவன் உத்தரவு.

முதல் வாரமான இவ்வாரம் கார்த்திகை மாதத்தின் சிறப்பு மற்றும் கார்த்திகை சோமவார விரதம் தோன்றிய வரலற்றைக் காணலாம்.

இரண்டாம் வாரம் கார்த்திகை சோம வார விரதம் அனுஷ்டிக்கும் முறை பற்றி காணலாம்.

மூன்றாம் வாரம் கார்த்திகை சோமவார சங்காபிஷேகம் பற்றி காணலாம் .

நான்காம் வாரம் பல்வேறு சிவாலயங்களில் கார்த்திகை சோமவாரம் எவ்வாறு கொண்டாடப்படுகின்றது என்பதை காணலாம்.

நிறை வாரம் 1008 சங்காபிஷேகம் மிகவும் சிறப்பாக நடைபெறும் திருக்கடையூர் தலவரலாறும் சங்காபிஷேக உற்சவம் பற்றியும் காணலாம்.
Read more ...

கார்த்திகை மாதம்

Monday, November 22, 2010
கார்த்திகை மாதத்தின் சிறப்பு:


ஐப்பசி மாதத்தில் சூரியன் துலா இராசியில் நீச்சம், கார்த்திகை மாதத்தில் நீச்சம் மாறி உச்சம் ஆகிறார் எனவே தான் அக்னி ரூபமான அண்ணாமலையார் சிவபெருமானை கார்த்திகை மாதம் முழுதும் வழிபடுகிறோம். சிவ பெருமானின் ஐந்து முகங்களான சத்யோஜாதம், தத் புருஷம், வாமதேவம், ஈசானம், அகோரம் இவற்றுடன் கீழ் நோக்கிய அதோ முகம் என்னும் ஆறு முகங்களின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய ஆறு பொறிகளே சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளாக முருகப்பெருமானாக மாற அந்த அறுவரையும் வளர்த்தவர்கள் கார்த்திகைப் பெண்கள் இதற்காக அவர்கள் அறுவரும் நட்சத்திரமாக விளங்குகின்றனர். அந்த கிருத்திகை நட்சத்திரத்தின் அதி தேவதை ‘அக்னி’. கிருத்திகா ப்ரதமம் என்று வேதத்தில் கிருத்திகை முதலாவதாக கூறப்படுள்ளது. அந்த மாதத்தின் கார்த்திகை மற்றும் பௌர்ணமி இனைந்த அந்த திருக்கார்த்திகை நாளில் அடிமுடி காண முடியாத ஜோதிப்பிழம்பாக எம்பெருமான் நின்றதால் அவரை ஜோதி வடிவாகவே வணங்குகின்றோம். கிருத யுகத்தில், மலையரசன் தன் பொற்பாவை உமையம்மையுடன் பரமேஸ்வரன் “திருக்கயிலையில்” அக்னி ரூபமாகத்தான் மகரிஷ’களுக்கு தரிசனம் தந்து கொண்டிருந்ததாகவும், உமா மஹேஸ்வரர்களின் உண்மையான திவ்ய தரிசனத்தைக் காண்பதற்காக , அம்மாமுனிவர்கள் கடும் தவமியற்றியதாகவும், அப்போது அவர்கள் தவத்திற்காகப் பிரம்மதேவரால் தனது மனதிலிருந்து படைக்கப்பட்டதே மானசரோவரம் என்னும் தெய்வீகத்தடாகம் என்றும் புராண நூல்கள் கூறுகின்றன.
Read more ...

அப்பர்

Sunday, November 21, 2010
`இளமைக் காலத்தில் சிவபெருமானை வணங்காமல் வாழ்நாளை வீணாக்கிவிட்டேன்' எனத் தெளிவாகவே சொல்கிறார் அப்பர். `முன்னமே நினையாது ஒழிந்தேன் உனை' என்பது பெருமானாரின் வரலாற்றுக் குறிப்பு.

முன்ன மேநினை யாதொழிந் தேனுனை
இன்னம் நானுன சேவடி ஏத்திலேன்
செந்நெல் ஆர்வயல் சூழ்திருக் கோளிலி
மன்ன னேஅடி யேனை மறவலே. (5.57.1)

முன்னமே நினையாது ஒழிந்தேன் உனை
இன்னம் நான் உன சேவடி ஏத்திலேன்
செந்நெல் ஆர்வயல் சூழ்திருக் கோளிலி
மன்னனே அடியேனை மறவலே.

`முன்னரே உன்னை நினையாது ஒழிந்தேன்; இன்னமும் உன் திருவடிகளை நான் நன்கு ஏத்தவில்லை. செந்நெல் நிறைந்த வயல்கள் சூழ்ந்த திருக்கோளிலியில் எழுந்தருளியுள்ள மன்னனே! அடியேனை மறவாதே.'

உன - உன்னுடைய
சேவடி - செம்மையான திருவடி
ஏத்திலேன் - ஏத்தவில்லை; போற்றவில்லை
திருக்கோளிலி - ஊரின் பெயர்: திருக்குவளை என வழங்கப்பெறும்
மறவலே - மறவாதே

இறைவர் திருவடிகளைப் போற்றிப் பல்லாயிரம் பாடல்கள் பாடிச் செந்தமிழால் வணங்குகிறார் அப்பர்; ஆயினும் தம் திருத்தொண்டில் பெருமானாரின் உள்ளம் நிறைவு கொள்ளவில்லை.

`இமைப்பொழுதும் நெஞ்சைவிட்டு நீங்காச் சேவடிகளை வணங்கியது போதாது; இன்னும் இன்னும் இன்னும் வணங்கவேண்டும்' என்கிறார்.

மெய்யடியார்களின் அன்பின் திறம் இது. `தேனாய் இனிய அமுதமுமாய்த் தித்திக்கும் சிவபெருமானை வணங்குவதற்கு அளவில்லை' என்கிறார் அப்பர்.

பேரன்பும் பேரருளும் வாய்ந்த மெய்யடியாராக விளங்கினாலும் தம்மை மிகவும் எளியவராகவே கருதுவார் அப்பர்.

`சிவபெருமானே, உன்னை வணங்கும் மெய்யடியார்கள் பலர். யானோ மிகவும் எளியவன்; உன்னை முன்பு வணங்காது இருந்தவன்; இன்னும் செம்மையாக வணங்காதவன்; ஆயினும் அடியேனை மறந்துவிடாதே! என்னையும் நினைந்து அருள்செய்வாயாக!' எனப் பணிந்து வேண்டுகிறார்.

இறைவரை வணங்காது இருந்து, இறையருளால் உண்மை உணர்ந்து, இறைவரை வணங்கத் தொடங்கியவர்கள் இத்திருப்பாடலை நாள்தோறும் உள்ளம் உருக ஓதி வழிபடுதல் நன்று.
Read more ...

தேவாரம்

Sunday, November 21, 2010
தேவாரங்கள் எனப்படுபவை சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவபெருமான் மீது, திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய நாயன்மாரால் தமிழிற் பாடப்பட்ட பாடல்கள் ஆகும். முதல் இருவரும் கிபி 7ம் நூற்றாண்டிலும், மூன்றாமவர் கிபி 8ம் நூற்றாண்டிலும் இவற்றைப் பாடியதாகக் கருதப்படுகிறது. தேவாரங்கள் பதிக வடிவிலே பாடப்பட்டுள்ளன. பதிகம் என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது.7ம் நூற்றாண்டு, தமிழ்நாட்டிலே பல்லவர் ஆட்சி பலம் பெற்றிருந்த காலமாகும். மிகவும் செல்வாக்குடனிருந்த பௌத்தம், சமணம் ஆகிய மதங்களுக்கெதிராகச் சைவ சமயம் மீண்டும் மலர்ச்சி பெறத்தொடங்கிய காலம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் போன்றோர் தோன்றி ஊர்ரூராகச் சென்று சமயப்பிரசாரம் செய்தனர். சென்ற இடங்களிலெல்லாம் இருந்த கோயில்கள் மீது தேவாரங்களைப் பாடினர். திருஞானசம்பந்தர் தனது மூன்றாவது வயதில் தேவாரங்களைப் பாடத்தொடங்கியதாகச் சொல்லப்படுகிறது. இவர் தனது சொந்த ஊரான சீர்காழியிலுள்ள தோணியப்பர் மீது, "தோடுடைய செவியன்" என்று தொடங்கும் அவரது முதற் பதிகத்தைப் பாடினார்.திருவதிகை வீரட்டானம் என்னும் தலத்தில் பாடிய "கூற்றாயினவாறு விலக்ககலீர்" என்று தொடங்கும் பதிகமே அப்பர் என்று அழைக்கப்பட்ட திருநாவுக்கரசரின் முதற் பதிகமாகும். "பித்தா பிறைசூடி" என்று தொடங்கும் தேவாரம் சுந்தரரின் முதற் பதிகம்.10ம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது, சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த தேவாரங்களையும், வேறுபல சமய இலக்கியங்களையும் எடுத்து, பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை, நம்பியாண்டார் நம்பி என்பவர் பன்னிரண்டு திருமுறைகளாகத் தொகுத்தார். இதில் முதலேழு திருமுறைகளும் தேவாரங்களாகும். இவற்றின் விபரங்கள் பின்வருமாறு.திருமுறை                              பாடியவர்                                                    பாடல் எண்ணிக்கை


முதலாம் திருமுறை            திருஞானசம்பந்தரமூர்த்தி நாயனார்     1469

இரண்டாம் திருமுறை         திருஞானசம்பந்தரமூர்த்தி நாயனார்     1331


மூன்றாம் திருமுறை           திருஞானசம்பந்தரமூர்த்தி நாயனார்      1346

நான்காம் திருமுறை            திருநாவுக்கரசு நாயனார்                           1060

ஐந்தாம் திருமுறை               திருநாவுக்கரசு நாயனார்                           1015


ஆறாம் திருமுறை                திருநாவுக்கரசு நாயனார்                            980


ஏழாம் திருமுறை                  சுந்தரமூர்த்தி நாயனார்                              1026   

மொத்தம்     8227
தேவாரங்கள் பழந்தமிழ் இசையையொட்டிய பண்களுடன் பாடப்பட்டு வருகின்றன. சைவக் கோயில்களிலும், சைவர்கள் வீடுகளிலும், பாடசாலை முதலிய இடங்களில், சமய நிகழ்ச்சிகளின் போதும் தேவாரங்கள் இன்றும் பாடப்பட்டு வருகின்றன.
Read more ...

வேதம்

Sunday, November 21, 2010
வேதங்கள் என்பவை இந்து சமயத்தின் அறிவு நூல்களாகும். வேதம் என்ற சொல் வித் என்ற வடமொழிச் சொல்லை வேராகக் கொண்டது. வித் என்றால் அறிதல் என்று பொருள். இந்து சமயத்துக்கு அடிப்படையானவை நான்கு வேதங்கள் ஆகும். அதனால் இவை நான்மறை என்றும் கூறப்படும். அவையாவன:

* ரிக் வேதம்
* யஜுர் வேதம்
* சாம வேதம்
* அதர்வண வேதம்

என்பனவாகும்.

இவற்றுள் காலத்தால் முற்பட்டது ரிக் வேதமாகும். இது இந்தியாவில், கி.மு. 1500விற்கு முன் உருவாகியிருக்கக்கூடுமெனக் கருதப்படுகின்றது. வேதங்கள் வேத மொழி என்னும் மொழியில் ஆக்கப்பட்டுளது. இம்மொழி சமஸ்கிருத மொழியின் முன்னோடி. வேதங்கள் இன்றளவும் வாய்வழியாகவே வழங்கிவந்துள்ளது. சுமார் கி.மு 300 ஆம் ஆண்டளவில் எழுத்துவடிவம் பெற்றிருக்கக்கூடும் எனக் கருதப்படுகின்றது என்றாலும் வாய்வழியாகவே தலைமுறை தலைமுறையாக நிலைப்பெற்று வந்துள்ளது.

இதன் சமய முக்கியத்துவம் தவிர, உலகின் மிகத் தொன்மையான நூல்களிலொன்று என்றவகையிலும் இதற்கு முக்கியத்துவம் உண்டு. வழிபாடு, சமயக் கிரியைகள் முதலியவற்றைச் சுலோகங்களால் எடுத்துக்கூறும் வேதங்கள், அக்கால சமூக வாழ்க்கையையும் படம்பிடித்துக் காட்டுகின்றன.


வேதங்களுக்கு நான்கு பாகங்கள் உண்டு. அவையானவை:

1. "மந்திரங்கள்" (கடவுளால் தரப்பட்டவையாக கருதப்படும் பாடல்கள்)
2. பிராமணா எனப்ப்படும் உரை அல்லது சடங்கு வழிமுறைகள்
3. அரண்யகா எனப்படும் காட்டில் வாழும் முனிவர்களின் உரைகள்
4. உபநிடதங்கள் (வேதங்களுக்கான தத்துவ உரைகள்/ விளக்கங்கள்/ எதிர்ப்புக்கள்)

கி.பி. 14 ஆவது நூறாண்டில் வாழ்ந்த சாயனர் (சாயனாச்சார்யர்) வேதத்திற்கு விரிவான விளக்கம் எழுதியுள்ளார். இருக்கு வேதத்தில் 1028 சுலோகங்கள் உள்ளன (10522 மந்திர வரிகள்), மற்றும் அதற்குரிய பிராமணிய சடங்குகள், காட்டு முனி உரை, உபநிடத தத்துவ உரை ஆகியவை உண்டு. வெள்ளை (சுக்ல) யஜுர் வேதத்திற்கு எழுதப்பட்ட சடபாத பிராமணா என்னும் உரைநூல் தான் பழமையானதும், மிக முக்கியமானதும் ஆகும். இந்த 100 வழி என்னும் பொருள் படும் சடபாத பிராமணா சுமார் கி.மு 700-800 வாக்கில் எழுதப்படிருக்கலாம் என கருதப்படுகின்றது.


முதல் இரண்டு பாகங்களும் "கர்ம கண்டங்களாகவும்", அதாவது செயலுக்கு (ஓதுவதுக்கும், சடங்குக்கும்) அல்லது அனுபவத்துக்குரியவையாகவும், கடைசி இரண்டும் மெய்ப்பொருள் உண்ர்வதற்குத் துணையான வேதாங்களாகவும் வகைப்படுத்தப்படுவதுண்டு. வேதாந்தங்கள் என்றால் வேதத்தின் இறுதியில் வந்த கடைசி பாகம் என பொருள்படும். நான்கு பாகங்களும் ஒரு நபராலோ அல்லது ஒரே குழுவாலோ அல்லது ஒரே காலத்திலோ எழுதப்படவில்லை. குறிப்பாக உபநிடதங்கள் முதல் இரண்டு பாகங்களுக்கும் பல எதிர்ப்புக்களையும், மறுப்புக்களையும் தெரிவிக்கின்றது.
Read more ...

உருத்திராட்சம்

Monday, November 15, 2010
உருத்திராட்சம்

வெண்மை, கருமை, செம்மை, பொன்மை, குரால் (கபிலம் brown)
என்னும் நிறங்களால் ஐவகைப் பட்டதும், ஒன்று முதல் பதினாறு வரை முள்முனைகள் கொண்டதும், ஒருவகைச் சிறப்பான மருத்துவ ஆற்றல் கொண்டதாகக் கருதப்படுவதும், குமரி நாட்டுக் காலந் தொட்டுச் சிவ நெறித் தமிழரால் "அணியப்பட்டுவருவதும், பனிமலை அடிவார நேபாள நாட்டில் இயற்கையாக விளைவதும், அக்கமணி என்று பெயர் வழங்கியதும், ஆரியர் தென்னாடு வந்தபின் உருத்திராக்கம் (ருத்ரா?) எனப் பெயர் மாறியதுமான காய்மணி;


"தலையெலும் பப்புக் கொக்கிற கக்கம்" (திருப்புகழ் 475). அக்கு பார்க்க; see akku

அள்= கூர்மை (திவா). அள் --> அள்கு --> அ?கு.
வெள் --> வெள்கு -->வெ?கு = விரும்பு,
மிக விரும்பு, பிறர் பொருளை விரும்பு.

அ?கு --> அக்கு = கூர்மை, முனை, முள்முனை, முள்முனையுள்ள அக்க மணி.
"உருப்புலக்கை அணிந்தவர் " (திருவானைக் கோச் செங். 4)
அக்கு --> அக்கம் = பெரிய அக்கமணி, 'அம்' பெருமைப் பொருட் பின்னொட்டு.
விளக்கு --> (கலங்கரை) விளக்கம்.

கடவுண்மணி, சிவமணி, தெய்வமணி, நாயகமணி, கண்மணி, கண்டம், கண்டி,
கண்டிகை, முண்மணி என்பன
அக்கமணியின் மறுபெயர்கள். இவற்றுள் முதல் நான்கொழிந்த ஏனைய வெல்லாம்,
அக்கு அல்லது அக்கம் என்னும் பெயரைப் போன்று, கூர்முனைகளைக் கொண்டதென்றே
பொருள் படுவன. முண்மணி என்பது வெளிப்படை.

கடவுளையே ஒருசார் தமிழர் சிவன் என்னும் பெயரால் வழிபடுவதால், 'கடவுண்மணி' முதலிய நாற்பெயரும் ஒருபொருட் சொற்களே.

கடவுள் மணி, முள் மணி என்பன கடவுண்மணி. முண்மணி என்று புணர்ந்தது போன்றே,
கள் மணி என்பதும் கண்மணிஎன்று புணரும்.

குள் --> கள் = முள். கள் --> கள்ளி = முள்ளுள்ள செடி.
முள் --> முள்ளி,(நீர்)முள்ளி.
குள் --> குளவி = கொட்டும் முள்ளுள்ளது.
குள்ளுதல் = கிள்ளுதல் (நெல்லை வழக்கு).
குள் --> கிள் --> கிள்ளி -->கிளி =கூரிய மூக்கினாற் கிள்ளூவது.

கள் --> கண்டு = கண்டங்கத்திரி (முட்கத்திரி).
கண்டு --> கண்டம் = கள்ளி, கண்டங்கத்திரி, எழுத்தாணி.
கண்டு -->கண்டல் = முள்ளி, நீர்முள்ளி, தாழை.
கண்டு --> கண்டகம் = முள், நீர்முள்ளி, வாள்.
கண்டல் -->கண்டலம் = முள்ளி.
கண்டகம் --> கண்டகி = முள்ளுள்ள தாழை, இலந்தை, மூங்கில், முதுகெலும்பு.
கண்டு --> கண்டி = முனைகளுள்ள உருத்திராக்கம்.
கண்டி --> கண்டிகை = உருத்திராக்க மாலை.


சிவன் சிவமாகி வடமொழியால் சைவமானது போல், விண்ணவனை அடையாளங் காண
வைணவத்திலிருந்து தலை கீழாகப் போக வேண்டும்.

தமிழில் இருந்து வடமொழிக்குப் போன வழி:

விண்ணவன் = விண்ணு --> விஷ்ணு - வைஷ்ணவம் - வைணவம்.
இதனால் தான் ஆழ்வார்களால் விண்ணகரம் என்ற சொல்லை பெருமாள் கோயிலுக்குப்
பயன்படுத்துவதைப் பார்க்கிறோம்.


உண்ணம் --> உஷ்ணம் (இதிலும் தலை கீழாக நாம் புரிந்து வைத்திருக்கிறோம்.) உண்ணம்தான் முதல்; உஷ்ணம் அல்ல. உண்ணம் என்பதோடு பொருளால் தொடர்பு கொண்ட பல தமிழ்ச் சொற்கள் இருக்கின்றன


இற்றைத் தமிழர்க்குப் பொதுவாக மதத் துறையிற் பகுத்தறிவின்மையால், கண்மணி யென்பது சிவன் கண்ணினின்று தோன்றிய மணியே என்றும், அக்கம் என்பது அ? என்னும் வடசொற் திரிபே யென்றும், ஆரியப் புராணப் புரட்டையெல்லாம் முழுவுண்மை யென்றும், அதை ஆரய்தல் இறைவனுக்கு மாறான அறங்கடை (பாவம்) என்றும் நம்பிக் கொண்டிருக்கின்றனர்.

ஆரியவேதக் காற்றுத் தெய்வமாகிய உருத்திரனுக்கும் சிவனுக்கும் யாதொரு தொடர்புமில்லை.
மங்கலம் என்று பொருள்படும் சிவ என்னும் ஆரிய அடைமொழி இந்திரன், அக்கினி, உருத்திரன்
என்னும் ஆரிய வேத முச்சிறு தெய்வங்கட்கும் பொதுவாக வழங்கப் பட்டுள்ளது. அதற்குச் சிவந்தவன்
என்று பொருள் படும் சிவன் என்னும் செந்தமிழ்ப் பெயர்ச் சொல்லொடு எள்ளளவுந் தொடர்பில்லை.
அந்திவண்ணன், அழல்வண்ணன், செம்மேனியன், மாணிக்கக் கூத்தன் முதலிய சிவன் பெயர்களை நோக்குக.

சிவநெறி குமரி நாட்டிலேயே தோன்றி வளர்ச்சியடைந்து விட்ட தூய தமிழ் மதமாதலாலும்,
அக்கமணி மேனாடுகளில் விளையாமையாலும், கிரேக்கத்திற்கு இனமான ஒரு மொழியைப்
பேசிக் கொண்டிருந்த மேலையாசிய ஆரிய வகுப்பார் இந்தியாவிற்குட் புகு முன்னரே,
தமிழர் இந்தியா முழுதும் பரவி வட இந்தியத் தமிழர் முன்பு திராவிடராயும், பின்பு பிராகிருதராயும்
மாறியதனாலும், அக்கமணியைச் சிவனியர் குமரி நாட்டுக் காலந்தொட்டு அணிந்து வந்ததனாலும்,
அம்மணிக்கு அப்பெயரே உலக வழக்கில் வழங்கியதனாலும், தமிழ் முறைப் படி முண்மணி என்பதே
அப் பெயர்ப் பொருளாம்.

அக்கு -
ak, to be sharp, to pierce, Gk. ak - ros, pointed, ak - one, whetstone,
ak-me, edge. L., ac-us, needle, ac-uere, to sharpen,
ac-ies, edge, acumen - anything sharp, AS , ecg, edge, E., acute, sharp,
pointed, f.L., acutus, past participle of acuere
Fr., aigu, acute.

அக்கு என்பதே முதன்முதல் தோன்றிய இயற்கையான பெயர் .
அது 'அம்' என்னும் பெருமைப்பொருட் பின்னொட்டுப் பெற்று அக்கம் என்றானது.
முத்து --> முத்தம் (பருமுத்து) அக்கம் = பருத்த சிவ மணி.


ஆரியர் - திராவிடச் சிக்கலைத் தவிர்க்கலாம் எனிலும் சில உண்மைகளை
மறுக்க இயலாதிருக்கிறது. பாவாணர் கொஞ்சம் வேகமானவர்.


" சைவரக்குரிய சிவ சின்னங்கள் மூன்றில் ஒன்று உத்திராட்சம்;
மற்றவை திருநீறும் ; திருவைதெழுத்தும்."

முக்கண்ணன் சிவபெருமான் கண்ணிலிருந்தது உதிர்ந்த நீர்தான் உத்திராட்சம். அவர் கண்களிலிருந்து உதிர்ந்த நீரில் கண்டிமரம் தோன்றியது. சிவப் பிழப்பாக நெருப்புக் கண்ணிலிருந்து கரிய உருவக் கண்டி தோன்றின. "உருத்திரன் கண்ணீரில் உதித்தால் உத்திராக்கம் - உத்திராட்சம்" என்று பெயர் பெற்றது.

சாமியார்களைப் பற்றி ஒரு அடையாளம் காட்டும்போது " நெற்றியில்
பட்டை" , "காவிச் சட்டை" , "கழுத்தில் கொட்டை "என்று வேடிக்கையாகவும்
சில சமயங்களில் வினையாகவும் சொல்லவதுண்டு.

உருத்திராட்சம் இதற்கு முன் அறியாதவர்கள் கூட அருணாச்சலம்
திரைப்படம் மூலம் பலர் தெரிந்திருப்பார்கள்.

இது வெறும் நாகரீகத்திற்காக அணிகிற விஷயமில்லை. உத்திராட்சம்
ஓர் அபூர்வமான மூலிகைப் பொருள் என்பது ஆய்ச்சியாளர்களால் ஒப்புக்
கொள்ளப்பட்ட ஒரு விஷயமாகும்.

மன அழுத்தம் குறைய , மன உளைச்சல் நீங்க, இரத்த அழுத்தம்
குறைய ,நோய்கள் நீங்க இந்த உருத்திராடச மாலை அணிவது நல்லது.
தூங்கும் போது தலையணைக்கு அடியில் வைத்துப் படுத்தால் ஆழ்ந்த தூக்கம் கொள்ளலாம்

38 வகையான உத்திராட்சத்தில் , 21 வகை மிக பிரசித்தம். முகத்தைப்
பொறுத்தே ஒரு முகம், இரு முகம் என்று வருசைப் படுத்தப்படுகிறது.
ஒவ்வொரு முகத்திற்கும் பலன் உண்டு.

[ ஒருமுகம் உருத்திராட்சம் கிடைப்பது மிக அபூர்வம். நான் நேப்பாளம் சென்றிருந்த போது ஒரு முக உத்திராட்சம் முதல் பதினாறு முகம் கொண்ட உத்திராட்சம் கண்டேன். இதில் ஒரு முக உத்திராட்சம் [சிறியது] மூன்று இலட்சம் நேப்பாள ரூபாய் வரை
விலை சொல்லப்பட்டது.]

ஒரு முகம் கிடைக்கப் பெற்றவர்கள் தங்க பூண் போட்டு பத்திரப்
படுத்தியிருப்பார்கள். பல தலைமுறையாக காத்து வைத்திருப்பார்கள். அதை
வைத்திருந்தால் குடும்பத்தில் சகல சம்பத்துக்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சில குழந்தைகள் 3 - 4 வயது வரை பேசாது இருப்பார்கள் அல்லது
சரிவர சொற்கள் வராது இருப்பார்கள். அந்த மாதிரி குழந்தைகளுக்கு
இந்த உத்திராட்ச மணியினை 48 நாட்கள் உராய்த்து நாவில்
தடவி வந்தால் சரியான பேச்சு வரும் [ அனுபவ உண்மை]

ஒரு முகம் [ ஏகமுக] உத்திராட்ச சிவன் என்பர். இதனை அணிந்தால்
பிரம்ம வாதன பாவம் நீங்கும் என்பார்கள்.

இருமுக உத்திராட்சத்தினை சிவ சக்தி - கவுரி சங்கர் என்றும்
சொல்வார்கள். இரு முக உத்திராட்சம் , மந்திரதந்திர சக்தி கொடுக்கும்-
கொலைப் பாவம் போம்.

மும்முகம் அனலைக் குறிக்கும். வினை தீரும், அதிர்ஷ்டத்தையும்
கொடுக்கும் என்பர்.

நான்முகம் அதிதெய்வம். பாவம் தீரும் , எதிர்பாலிரை ஈர்க்க உதவும்.
ஐம்முகம் தீங்கு தீரும், பிரச்சனைக்கும் தீர்வு காணும்.

ஆறுமுக உருத்திராட்சத்திற்க்கு அதிபதி ஆறுமுகனே. பிரவதை பாவ
நிவர்த்தியையும் கொடுக்கும்.

ஏழு முக உருத்திராட்சத்திற்கு ஈசன் நாகேசன் ; அபாயத்திலிருந்து காக்கும்.

எட்டு முக உருத்திராட்சத்திற்க்கு உரியவர் விநாயகர்; திருட்டுக் குற்ற பாவம் தீரும்.

ஒன்பது முக உருத்திராட்சத்திற்க்கும் தெய்வம் வயிரவன்; இதை அணிந்தால்
கொலைப் பாவம் தீரும்.

பத்து முகத்திற்கு பதி அரி ; இதனை அணியின் பேய் அஞ்சி நீங்கும். பதினொன்று
[ ஏகாதாச ] இறை உருத்திரர் ; இதை பூண்டவர்க்கு விக்கினம் நீங்கும்.

பன்னிரு முழ்கத்திற்க்கு தேவர் தித்தர் ; ஊறுங்கள் போம் எண்ணங்கள் நிறைவேறும்.

பதின் மூன்று முக உத்திராட்சத்திற்கு தெய்வம் பரமசிவன்; இதனை தலையில்
அணிந்தால் முக்தி உண்டு

பதினாங்கு முக உத்திராட்சம் ருத்ர நேத்திரத்திலிருந்து உண்டானது.
இதை அணிந்தால் எல்லா வியாதிகளும் போய் எப்போதும்

இப்படி ஒவ்வொரு முகத்திற்க்கும் ஒவ்வொரு பலனாக உள்ளது உருத்திராட்சத்தை 3,4,5,6, எண்ணிகையில் வளையமாக கோர்த்து அணிவர்,
கழுத்தில் அணியும் மாலைகள் 27 , 54 , 108 என்ற கணக்கில் இருக்கும்.
கழுத்தில், கையில் அணியும் உத்திராட்சம் அங்?குபங்சர் போல் செயல் பட்டுபயனளிக்க கூடியதாம்.


ஆரம்ப இந்தோஷியாவில் விளைந்த இது இப்போது நேப்பாளத்திலும், ஹரித்துவாரிலும் பயிராகிறது.
நேப்பாளத்தில் பசுபதிநாத் கோயிலில் உத்திராட்ச மரம் ஓரளவு நன்கு வளர்ந்த மரத்தினை பார்த்தேன். ஆனால் காய்கள் இல்லை.

அபூர்வமான இந்த உருத்திராட்சத்துக்கு கிராக்கி அதிகம். இதன் மகிமை உணர்ந்து,
மரத்திலால் செதுக்கிய போலிகளும், அரக்கினால் உருக்கிய போலிகளும் விற்பனையில்
நிறைய உள்ளது. உருத்திராட்சம் வாங்கினால் அது குறித்து அறிந்தோர்,
விபரம் அறிந்தோர் மூலம் வாங்கவும். போலியா , நிஜமா என்று அறிய அதனை தண்ணீர் போடவும்.
மூழ்கினால் அசல், மிதந்தால் நகல் !

மந்திரமும் எண்ணும் :

" ஈசான மந்திரத்தால் சிகையில் நாற்பதும், சிரசில் ஆறும் தரிக்க,

தற்புற மந்திரத்தால் ' செவியன்றுக்கு ஆறு வீதம் தரிக்க;

கண்டத்தில் அகோர மந்திரத்தால் 32 தரிக்க;

உரத்தில்[மார்பில்] 49 அணிக;

தோள்களில் 16ம் அணிக ;

மதரத்து 12 ம் அணிக;

பிரசாத மந்திரத்தால் முன்கைக்கு 8 ம்

மார்பில் மாலையாக 108 மணிகளை அணிந்திடுக;

இது செய்வார் கருவுட் புகார். [பிறவாமை பெறுவர்]


விதிமுறைகள் / நியமம்:

உத்திராட்சம் அணிவோர் சில நியமங்களை மேற்கொள்ள வேண்டும்.
உணவில் ஊனைத் தவிர்த்திட வேண்டும்.
உரையாடுவதில் , பேச்சில் இனிமை வேண்டும். கடுமையான
கீழ்தரமான சொற்களை/ வார்த்தைகளை நீக்க வேண்டும்.
மதுவை ஒழித்தல் வேண்டும்.


மணி அளவு:

பெரும்பாலும் இப்போது பலரும் மிகச் சிறிய அளவுடைய மணிகளையே விரும்பி பூணுகிறார்கள்.
ஏனினும் ' உத்திராக்க விசிட்டம் ' என்னும் நூலில் எந்த அளவு உத்திராட்ச மணி
சிறப்புடையது என்று கூறப் பெற்றுள்ளது.
நெல்லிக்கனி அளவுள்ள மணி உத்தமானது ;
இலந்தைக் கனிஅளவுள்ளது மத்திமம் ;
கடலை அளவுடையது அதமம்.

இதனை பின் வரும் வெண்பா ;

" உத்தமமே மலகத் தின்கனிக்கொப் பானகண்டி ;
மத்திம மாகும் இலந்தை வன்கனிக்கொப்பு
இத்தலத்துள் நீசஞ் சணவித் திணை யென்ன வேநினைக ;
பாசவிதம் பாற்ற நினைப் பார். "


செபமாலைக்குரிய மணிகள்:

இரண்டு முகமுடையதும் மூன்று முக உடையதும் செபமாலைக்கு உரியதுஅன்று ;
பத்து முகமும் பதின்மூன்று முகமும் பழுதுடையது ; மற்றனைத்தும் உத்தமம்.

இதனை கூறும் பாடல் :

இரண்டுமுகக் கண்டிசெப மாலைக் கிசையாது
இரண்டுடன் ஒன்றும் இசையாது - இரண்டுடனே
பத்துமுக மும்பதின் மூன்றும் பழுது ;
மற்றனைத்தும் உத்தம மாமென்றுணர்.


செபத்துக்குரிய விரல் :

அங்குஷ்டத்தினால் மோட்சமும், தர்ச்சனியால் சத்துரு நாசம்,
மத்திமையால் பொருட்பேறும், அனாமிகையால் சாந்தியும்,
கனிஷ்டையால் இரட்சைணையும் .
[அங்குஷ்ட: கட்டை விரல் ; தர்ச்சனி ள்காட்டி விரல்;
மத்திமை : நடு விரல் ; அனாகிகை : மோதிர விரல் ;
கனிஷ்டை : சுண்டு விரல்.]

செபிக்கும் ஒலி:

செபிக்குங்கால் மானதம் மந்தம் ஒலி என மூன்று விதமுண்டு.
மானதமாக உச்சிப்பது உத்தமம் ;
மானதம் முத்திக்கு ஏது ;
மந்தம் புத்தி சித்திக்கும்;
இழிதொழிலரே ஒலித்து உச்சரிப்பர்.

1008 செபித்தல் உத்தமம்;
அதிற்பாதி மத்திமம்;
108 செபித்தல் அதமம்

"வலது கரத்தில் ஜப மாலை கொண்டு - துணியால் மறைத்துக் கொள்க;
தனாது குருவும் அதனைக் காண்டல் கூடாது ' என்பது விதி.
செபிக்கும் காலம் உத்திராட்ச மாலை கைதவறிக் கீழே வீழின், ஜபமாலைக்
கண்ணில் ஒற்றிக் கொண்டு, நன்னீராட்டி, 108 முறை காயத்திரி எண்ணுக;
செபமாலை அறுந்து வீழின் , குறைவற முன்போல் கோவையாக்கி,
முறையே நீராட்டி. அகோரம் ஒரு நூறு உச்சரிக்க.

பொது:

சிவபக்தருக்குக் உத்திராட்ச தானம் செய்வது சிறப்புடையது.
உத்திராட்சம் அணிந்தவரை பணிவதும் சிவ புண்ணியம்.
மேற்கண்டபவைகளை கூறியவை சிதம்பரம் மறையான சம்பந்தர் பாடி
அருளிய ' உத்திராக்க விசிட்டம் " என்னும் வெண்பா நூலில் கண்டனவாகும்.
திருவாடுவடுதுறை தீனம் 1954- ல் வெளியீடு.

அறுபத்து மூன்று நாயன்மார்களூள் ஒருவர் மூர்த்தி நாயனார். அவரைச்
சுந்தரர் திருத்தொண்டர்த் தொகையில் " மும்மையால் உலகாண்ட
மூர்த்திக்கும் அடியேன் " என்று துதிப்பர். இதன் பொருள் " மும்மை "
என்பது உத்திராட்சம் , ஜடை , திருநீறு .இந்த மூன்றையே உண்மைப்
பொருள் என மதித்து வாழ்ந்தவர் மூர்த்தி நாயனார்.

பல்லவ அரசர்களில் பெரும்பாலோர் சைவ சமயச் சார்பும் பற்றும்
உடையவர்கள். இதனை அவர்கள் இயற்பெயராலும் சிறப்புப் பெயர்களானும்
அறியவரும்.திருநாவுக்கரசரால் சைவம் சார்ந்தவனாகிய மகேந்திரன் மகன் ,
வாதாபி கொண்ட முதலாம் நரசிம்ம வர்மன், காஞ்சிக்கு அண்மையில்
கூரம் என்ற ஊரில் வித்யாவிநீத பல்லவேசுவரக்கிருதம் என்ற சிவாலயத்தை கட்டினான்.
காஞ்சி புரத்தில் கைலாச நாதர் கோயிலை கட்டியவன் இராசசிம்மன் என்னும் பல்லவ அரசனின்
தந்தையாகிய பரமேசுவரவர்மன் மாகபலிபுரத்தில் ' கணேசர் ' கோவில் என்ற சிவாலாயத்தை அமைத்தவன்.

இக்கோவிலில் பதினொரு வடமொழிச் சுலோங்கள் கல் வெட்டியில் இருக்கிறது. அவை அரசனுக்கும்
சிவனுக்கும் பொருள் பொருந்தும் வண்ணம் சிலோடையாக உள்ளது. அதில் இரண்டாவது ஆறாவது
சுலோங்கள் அவ்வரசன் உருத்திராட்ச மணிகளாலாய சிவலிங்கத்தைத் தலைமுடியாகஅணிந்தவன் என்று அறியவருகிறது. கருவறையில் சிவலிங்கத் திருமேனிக்கு மேல் உச்சியில் மேற்கட்டி இருப்பது கண்கூடு ; பெரும்பாலான தலங்களில் பட்டாடையால் அமைக்கப் பெற்றிருக்கும் திருவாரூரில் பூங்கோயிலில்
" முத்து விதானம் " அமைந்திருந்ததாகத் திருநாவுக்கரசர் கூறுவர்.இங்கு கண்ட முத்து உருத்திராட்ச
மணியாகவும் இருக்கலாம் ஆகவே கருவறையில் சிவலிங்கத் திருமேனிக்கு மேல் உச்சியில்
"அமைய வேண்டுவது ' உத்திராட்ச விதானம் ' இதை உணர்ந்த திருப்பனந்தாள் மட சிறீகாசி வாசி
நந்தித் தம்பிரான் சுவாமிகள் பலசிவ தலங்களில் அமைக்க உதவினார்.
அப்படி அமைந்தவற்றுள் திருவண்ணாமலையில் அருணாசலேசுவரர் காணலாம்.

[நேப்பாளத்தில்] காட்மண்டில் பதிபதிநாத் கோயிலிலும் காணலாம்.காரைகுடிக்கு அருகில்
இருக்கும் பிள்ளையார் பட்டியிலிருக்கும் விநாயகர் கோயிலில் [உரித்த தேங்காய்] அளவு
உத்திராட்சம் இருப்பதாக பலர் சொல்ல கேட்டுயிருக்கிறேன்

"நெக்குளார்வ மிகப் பெருகி நினைந்தக்கு
மாலை கொண்டங்கை யிலெண்ணுவார்
தக்கவானவராய்த் தகுவிப்பது
நக்க நாம நமச் சிவாயவே " - சம்பந்தர்.
Read more ...

விநாயகர் வழிபாடு - 2

Sunday, November 14, 2010
அனைத்து ஆலயங்களிலும் எழுந்தருளியுள்ள மூர்த்தங்கள்
நடராசர் :- படைத்தல், காத்தல்,அழித்தல்,மறைத்தல்,அருளல் என்னும் ஐந்தொழிகளையும் செய்யும் கடவுள் அம்பலவாணர் திருவுருவம்.

உமாதேவி:- சிவபெருமானுடைய திருவருட்சக்தி. ஐந்தொழில்களுக்கும் துணையாகவுள்ள சிவசக்தி.உமாமகேசுவரராகிய சிவனே அம்மை வடிவங்களை வழிபடும் அன்பருக்கு அருள்பாலிப்பவர் என்பதை "உடையாள் நடுவுள் நீயிருத்தி" என்னும் திருவாசகம் மூலம் அறியலாம்.

சந்திரசேகரர்:- உமாதேவியை இடப்பாகத்தே கொண்ட போகவடிவம். சடையில் ஒற்றைப்பிறை விளங்கும்.

சோமஸ்கந்தர்:- சர்வலோகங்களையும் தேராய் அமைத்து ஆரோகணித்து முப்புரங்களையும் எரிக்கப்புறப்பட்ட கோலம்.

தட்சணாமூர்த்தி:- குரு வடிவம் கல்லால மரத்தின்கீழ் ஞானகுருவாக எழுந்தருளிய சிவபிரான் வடிவம்.

பிட்சாடனர்:- ஆன்மாக்கள் செய்யும் செப,தப அனுட்டானங்களை ஏற்கும் திருவடிவம்.

மேலும் திருக்கோயில்களில் விநாயகர்,பைரவர்,வீரபத்திரர்,முருகன் என்னும் நான்கு சிவகுமாரர்களின் திருவுருவங்களும் இருக்கும். சிவகுமாரர் நால்வரும் இறைவனின் சுத்த மாயா தத்துவத்திற்க் கொண்ட வடிவங்களாகும்.

விநாயகர்:- ஓங்காரத்தின்/பிரணவத்தின் உண்மைப்பொருளை அறிவிக்கும் சிவத்தின் வடிவம்.
பைரவர்:- சங்கர ருத்திரர் எனப்படுவர். சகல சம்பந்தங்களையும் சங்கரித்து ஆன்மாக்களை ஈடேற்றும் கோலம். சிவத்தினின்று தோன்றிய காரணத்தால் சிவகுமாரர் எனப்படுவர்.
இவரது வாகனம் வேதவடிவாகிய நாய் . இவரை வழிபடும்போது 'எங்களுடைய அகந்தையை நீக்கி காத்தருள வேண்டும்' என பிரார்த்தித்தல் வேண்டும்.
முருகன்:-இச்சா சக்தியாக வள்ளியம்மையையும் கிரியா சக்தியாக தெய்வானை அம்மையையும் உடையவர். மயிலாகிய வாகனம் ஆணவத்தையும் கொடியாகிய கோழி சிவ ஞானத்தையும் குறிக்கும்.
மேலும் ஆலயத்தில்;
பள்ளியறை:- காலையில் பள்ளியறைத் திறப்பு சிவமும் சக்தியும் பிரிந்து தொழிற்படுவதால் உண்டாகும் தோற்றத்தையும், இரவு பள்ளியறை மூடுதல் சக்தியானது சிவத்தில் ஒடுங்கும் போது ஏற்படும் லயத்தையும் குறிப்பனவாகும்.
கருவறை:- ஆலயத்தின் மையப்பகுதி. உடலில் இதயத்துள் இறைவன் இருப்பதற்குரிய அடையாளமாக விளங்குகிறது.
பலிபீடம்:- இது பாசத்தைக் குறிக்கிறது. இதை சிரி பலிநாதர் என்பர்.ஆலயத்துள் எட்டுத் திக்குகளில் எட்டுப் பலிபீடங்கள் இருக்கும். இவை எட்டுத்திக்குப் பாலர்களை உணர்த்தும். இவைகளுக்கெல்லாம் தலைமைப் பீடமாக உள்ளது நந்தியெம்பெருமானின் பின்பு உள்ள பலிபீடமாகும்.
நாம் வெளி எண்ணங்களை எல்லாம் பலியிட்டுவிட்டு இறைவனை வழிபட செல்லவே பலிபீடம் அமைந்துள்ளது.
கொடிமரம்:- அசுரர்களை அகற்றவும் சிவகணங்களையும் தேவர்களையும் பாதுகாக்கவும் கொடிமரம் அமைந்துள்ளது.
நந்தியெம்பெருமான்:- சிவபெருமானை எந்நேரமும் வணங்கி பார்த்தபடி இருக்கும் நந்தியெம்பெருமான் "நான் மறந்தாலும் என் நா மறவாது ஓது நாமம் நமசிவாயவே" என்பதுபோல் கண்காள் காண்மிங்களோ கடல் நஞ்சுண்ட கண்டன் தன்னை" என்று அப்பர் பெருமான் ஏங்கியதுபோல் இடைவிடாது இறைசிந்தையில் இருத்தல் வேண்டும் என்பதைக் குறிக்கும்.

மண்டபங்களின் தத்துவம்
திருமூலட்டானம்:- மூலாதாரம்
அர்த்தமண்டபம்:-சுவாதிட்டானம்
மகாமண்டபம்:-மணிபூரகம்
ஸ்நான மண்டபம்:- அநாகதம்
அலங்கார மண்டபம்:-விசுத்தி
சபாமண்டபம்:-ஆக்ஞை

பலிபீடத்திற்கு அப்பால் விழுந்து வணக்க வேண்டும். கோயிலில் வேறு எங்கும் எச்சந்நிதியிலும் விழுந்து வணங்கக்கூடாது.
சமய சின்னங்கள் இன்றி ஆலயம் செல்லல் ஆகாது.
இறைவனுக்கு சாத்தப்பட்ட திருநீறு,வில்வம்,மலர் போன்றவற்றை மிதித்தல் ஆகாது.
ஒரே ஒருமுறை பிரகாரத்தை வலம்வருதல் கூடாது.
தனித்தனியாக ஒவ்வொரு பிரகாரத்தையும் வலம் வருதல் கூடாது.
கோயிலில் படுத்து உறங்குதல் கூடாது.
சந்தியா வேளையில் உணவோ வேறு தின்பண்டமோ உண்ணல் ஆகாது.(சந்தியா வேளை மாலை 5.31 முதல் 7.30 மணிவரை.)
இரைந்துசிரித்தல் ஆகாது.
ஒருவர் காலில் மற்றவர் விழுந்து வணங்குதல் கூடாது.
இறைவனுக்கு நிவேதனம் செய்யாதவற்றை உண்ணுதல் கூடாது.
தலைமுடி ஆற்றுதல் கூடாது.
ஆராதனைக்குரிய பொருள் இன்றி ஆலயம் செல்லல் தவறு.
கோயிலில் வேகமாக வலம் வருதல் கூடாது. கர்ப்பிணிப் பெண் மெதுவாக நடப்பதுபோல் வலம்வருதல் வேண்டும்.
ஆண்கள் சட்டையணிந்து கொண்டோ போர்த்துக் கொண்டோ ஆலயம் செல்லல் தவறு. மேல் வேட்டியை(சால்வையை) இடுப்பில் கட்டிக் கொண்டு செல்லல் வேண்டும்.தலைப் பாகை அணிந்திருத்தல் கூடாது.
மூர்த்திகளை தீண்டுதல்,மூர்த்திகளின் கீழ் கற்பூரம் ஏற்றல் கூடாது.
சுவாமிக்கு நிவேதனமாகும்போது பார்த்தல் கூடாது.
சுவாமிக்கும் பலிபீடத்திற்கும் குறுக்கே போதல்
நந்திக்கும் சுவாமிக்கும் குறுக்கே போதல் கூடாது. நந்தியெம்பெருமான் இமைக்காது சிவபிரானை பார்த்து தொழுதவண்ணம் இருப்பதால் குறுக்கேபோவது பாவத்தை ஏற்படுத்தும். தூபி,பலிபீடம்,கொடிமரம்,விக்கிரகம் ஆகியவற்றின் நிழலை மிதித்தல் கூடாது. நிழலில் மூன்றுகூறு நீக்கி எஞ்சிய இரண்டு கூறினுள்ளே செல்லல் பாவம் இல்லை என்பர். திருவிளக்குகளை கையால் தூண்டவோ,தூண்டிய கைகளில் உள்ள எண்ணெய்யை தலையில் தடவுதலோ அன்றி கோயிற் தூணில் துடைத்தலோ கூடாது.
அபிடேக காலத்தில் உட்பிரகாரத்தை வலம்வருதல் கூடாது.
இறைவனுக்கு நிவேதனம் செய்யாதவற்றை உண்ணக்கூடாது.
தீட்டுடன் செல்லல் கூடாது ஒருவரை ஒருவர் நிந்தித்தல் கூடாது

பெண்கள் இடப்பக்கமும் ஆண்கள் வலப்பக்கமும் நின்று வழிபடுதல் அவசியமானதா?

மாதொருபாகனாகிய சிவனாரின் வலப்பக்கம் சிவனாகிய ஆணும் இடப்பக்கம் பெண்ணாகிய உமையும் இருப்பதைக் கொண்டு எழுந்ததாக இருக்க வேண்டும்.தோடுடைய செவியன் என்று ஞான சம்பந்தர் பாடுகிறார். தோடு என்பது பெண்கள் அணிவது. ஆண்கள் காதில் அணிவதற்கு குழை என்று பெயர். எனவே இறைவனின் இடப்பாகம் பெண்ணுக்குரியது என்பதை திருஞானசம்பந்தர் விளக்கியுள்ளார். காலனை சிவபிரான் இடப்பக்க காலால்தான் உதைக்கிறார். அதனாலேயே காலன் பிழைத்தான் என்பர் ஆன்றோர். காரணம் சிவனின் இடப்பக்கம் பெண்ணாகிய உமையம்மையாதலால் பெண்மை குணமாகிய இரக்கத்தின் விளைவால் இடக்கால் காலன்மேல் இரக்கம் கொண்டு காலனின் உயிர்பறிக்காது தண்டித்தது என்பர்.எனவே வலம்-ஆண் என்றும் இடம்-பெண் என்பதும் மரபாயிற்று.பேருந்தில் கூட வலப்புறம் ஆண்களும் இடப்புறம் பெண்களும் அமர்வது தமிழகத்தில் விதியாக்கப் பட்டுள்ளதை கண்டிருப்பீர்கள். இந்த "இடம்" பெண்களுக்கு என்பது காலம் காலமாக திருமணத்தில் தாலி ஏறியது தொட்டு குடும்ப நல்லதுகள்வரை பெண்களுக்கு "இடம்" என்ற பண்பாடு இருந்தமையால் ஏற்பட்டதே!எனவே இடப்புறமாக பெண்கள் நின்றும் வலப்புறமாக ஆண்கள் நின்றும் வழிபடல் வேண்டும் என வந்துள்ளது.ஆனால் இதை ஆலய வழிபாட்டு விதியாகக் கருதமுடியாது. இறைவன் தில்லையில் கூத்தாடும்போது வலப்புறமும் இடப்புறமும் வியாக்கிரதபாதரும் பதஞ்சலி முனிவரும் வழிபடுகின்றனர். எனவே இறைவனை இடப்பக்கமாக பெண்களும் வலப்பக்கமாக ஆண்களும் நின்று வழிபடல் வேண்டும் என்பது கட்டாய விதி அல்ல. ஆனால் ஆலயத்தில் துஷ்டர்களால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களைத் தவிர்க்க இம்முறையை சில ஆலயங்களில் கட்டாயவிதியாக கடைப்பிடிப்பர். அப்படி கடைப்பிடிப்பது நன்மையே என்பதால் "அவ் விதியை" ஒழுகுவதே உத்தமம்.

விநாயகர் வழிபாடு நந்தியெம்பெருமானை வழிபட்டு துவாரபாலகர்களை வழிபட்டபின்னர் மேற்கொள்வதா அன்றி அதற்கு முதலிலேயே வழிபடல் வேண்டுமா?

பெரிய சிவாலயங்களில் (ஆகமவிதிப்படி முறையாக அமைந்த ஆலயங்கள்) கோபுர வாயிலுக்கு வெளியே உள்ள விநாயகரை வழிபட்டு, பின் கொடிமரம்,பலிபீடம்,நந்தி ஆகியவற்றை வழிபட்டு பின்னர் துவாரபாலகர்களை வழிபட்டு தொடர்ந்து விநாயகர் சந்நிதியில் வழிபட்ட பின்னர் சிவபெருமானை வழிபடல் வேண்டும்.திருக்கைலாயத்திலும் நந்தியின் அனுமதியுடனேயே திருக்கைலாயம் நுழைய முடியும். பின்னர் துவார பாலகர்களின் அனுமதி பெற்று உட்செல்லும் போது சிவகுடும்பத்தை வணங்க முடியும். சிவ குடும்ப வணக்கத்தில் விநாயகர் வணக்கம் முதன்மை பெறுகிறது. எனவே துவார பாலகர்களுக்கு அடுத்ததாக விநாயகர் வழிபாடும் அதனைத் தொடர்ந்து மூலமூர்த்தி வழிபாடும் விதியாகிறது.

சேரமான் பெருமானுக்கு முன்னமே ஔவையாரை துதிக்கையால் திருக்கைலாயம் கொண்டு சென்றவர் விநாயகர் என்ற தத்துவத்தை கருத்தில் நிறுத்தின் விநாயகர் வழிபாடு திருக்கைலாயம் செல்லும்போது ஏற்படும் இடர்களை நீக்கவல்லது.அதுபோல் ஆலய வழிபாடுகளை மேற்கொள்ளும்போது ஏற்படக்கூடிய இடர்களை விநாயகர் வழிபாடு நீக்க வேண்டியே பெரிய சிவாலயங்களில் கோபுரவாசலின் வலப்புறமாக விநாயகர் சந்நிதி இருப்பது மரபு என உணரலாம்.

எனவே கோபுர வாசலில் வெளியே வலப்புறமாகவுள்ள விநாயகர் சந்நிதியில் வழிபட்டு பின் நந்தியை வழிபட்டு துவாரபாலகர்களை வழிபட்டு அதன்பின்னர் விநாயர் சந்நிதி இருக்குமானால் அவ்விநாயகர் சந்நிதியில் வழிபட்டு பின் மூலமூர்த்தியை வழிபடல் வேண்டும் என்பது புலனாகிறது.
சுருங்கக் கூறின்

* நித்திய கருமங்களை முடித்து நீராடி தூய ஆடையணிந்து சிவசின்னங்களாகிய திருநீறு,உருத்திராக்கம் அணிந்து ஆலயம் செல்லல் வேண்டும்.

* கோபுரத்தை கண்டமாத்திரம் கைகூப்பி தொழவேண்டும்.

* மலர்கள்,பாக்கு,மாலை,கற்பூரம்,பழம் என்பவற்றை கொண்டுசெல்லல் வேண்டும்.

* தல விநாயகரை(கோபுரத்துக்கு வெளியே வலப்புறமாக இருப்பார்.) தரிசித்து குட்டிக் கொண்டு தோப்புக்கரணம் இட்டு வழிபட்டு உட்செல்ல வேண்டும்.

* கொடிமரம்,பலிபீடம்,நந்தி ஆகியவற்றை வழிபடல் வேண்டும்.

* துவார பாலகர்களை வணங்கியபின்னர் ஆலய திருமூலட்டானத்தின் வலப்புறமாக விநாயகர் சந்நிதியில் வழிபடல் வேண்டும்.

* மூலமூர்த்தியை வழிபட்டபின் சுற்றிலும் உள்ள ஏனைய மூர்த்திகளை வழிபடல் வேண்டும்.

* சண்டேசுவரரை மெதுவாக மும்முறை கைகளைத் தட்டி பின் வணங்குதல் வேண்டும். திருநீற்றை இருகைகளாலும் பணிவுடன் பெற்று சிவசிவ என உச்சரித்த வண்ணம்

* மேல்நோக்கி தலையை உயர்த்தி நெற்றியில் அணிதல் வேண்டும்.கிழே சிந்துதல் கூடாது.

* ஆலயப் பிரகாரத்தை மும்முறை வலம் வருதல் வேண்டும்.

* கொடிமரத்தின் கீழ்(பலிபீடத்திற்கு அப்பால்) விழுந்து வணங்க வேண்டும்.

* வடக்கு முகமாக சற்று அமர்ந்து திருமுறை, திருவைந்தெழுத்தை ஓதி ஆலய வழிபாட்டை பூரணப்படுத்தல் வேண்டும்.
Read more ...

பிரணவம் - 3

Sunday, November 14, 2010
"ஓம்" எனும் தாரக மந்திரத்தை தனிமையாக இருந்து ஏகாந்த தியானம்
செய்தால் இதன் பலன் அதிகம். ஐம்புலன்களின் தொழில்கள் இயக்கம்
அடைந்து மனது நிலைபெறும். ஐம்புலக் கதவு அடைபடும். தன்னையும்,
உலகையும் மறந்து நிற்க , சாபாசங்கள் மறந்து மனம் நிலைப்படும்.
குறுகிக் கிடந்த மனம் விசாலமடையும்.மெய்ஞான விசாரணை விளைந்து,
அதனால் வாழ்க்கையும் வேதனைகளும் இல்லாத ஒன்றாகிவிடும்.
இந்த விரிந்த அண்டப்பார்வை உண்டாகும்

"ஓம்" என தியானிப்பதால் அநேக சித்திகள் கைகூடும். அதனால்
ஒழுக்கம் ஏற்பட்டு உண்மை அறிவு இன்னதென்று நன்கு நமக்கு விளங்கும்.
இதன் மூலம் ஒளியை தரிசித்து மனத்திருப்தி,மெய், முகம், ஆகியவற்றில்
ஒரு தெளிந்த பிரகாசமிக்க ஒளி, அறிவு உயர்ந்து மற்றோருக்கு வழிகாட்டும்
தன்மை நீங்களும் காணலாம்.

You see, there is no gain without pain.
ஆனால் முயன்றால் நிச்சயம் சாதித்துவிடலாம்.
ஒரே சமயத்தில் மனதின் வெவ்வேறு ஓட்டங்களை, நாம் விரும்பிய பாதைகளில் செல்லுமாறு செய்வதுதான் அடிப்படையானது. அப்படியரு சாதனையைப் பழக்கப் படுத்திக்கொள்ளும்போது ஒரே நேரத்தில் மூன்று நான்கு காரியங்களிலாவது மனதை, கவனத்தைச் செலுத்தலாம். வேகமாக சிந்திக்கலாம். சிந்தனையின் பல படிகளைத் தாண்டி முடிபுகளை விரைவாக அடையலாம்.
Lateral Thinking போன்றவை எளிதானவைதானே!

பலர் காயகல்பம் பற்றி கேள்விப்பட்டு இருப்பார்கள். இதை
உண்டவர்கள் நரை, திரை மாறி பொன்போல் உடல் ஒளிர்ந்து - சாவில்லாது
என்றும் இளமையுடன் வாழலாம் என்பர்கள். ஆயினும் அந்த காயகல்பம்
கிடைப்பது அரிது. இருப்பினும் நாம் காயகல்பம் பெற ஒரு வழி உண்டு.
அதிகாலை எழுந்ததும் , இரவில் படுக்கபோகும் பொழுதும் நாள் தவறாது
பத்து நிமிட மணித்துளிகள் ' ஓம் ' என்னும் மந்திரத்தை மனதால் உச்சரிக்க
வேண்டும்.உச்சரிக்கும் போது நமது மூக்கின் வலப்பகுதி துவார வழியாக
காற்றை சுவாசித்து இடப்பக்க மூக்குத் துவார வழியாக காற்றை வெளியிட
வேண்டும்.

இப்படி சூரிய பகுதியில் உஷ்ணமாக உள்ள காற்றை சந்திரப்பகுதியில்
குளிர்ச்சிப்படுத்தி வெளியேற்றும் பொழுது ' ஓம் ' என்ற மந்திரத்தை மனதால்
நினைந்தவாறு தொடர்ந்து செய்து வரவேண்டும். இங்ஙனம் வெளிச்செல்லும் பிராணன்
குறைந்து குறைந்து இறுதியில் உள்ளேயே சுழலத் தொடங்கும். உள் சுழற்சியால்
மூலாதாரத்தில் பாம்பு வடிவில் உறங்கிக் கொண்டுடிருப்பதாக சொல்லப்படும் குண்டலி
அல்லது குண்டலினி என்னும் சக்தி எழுப்பும். குண்டலியும் அடியுண்ட நாகம் போல்
ஓசையுடன் எழும். இவ்வாறு எழும்பும் குண்டலினி ஆறு தரங்களில் பொருந்தி
சகஸ்ராரத்தில் சென்று அமுதமாக மாறிக் கீழ்வரும்.

[ சித்தர்கள் 'விந்து விட்டவன் நெந்து கெடுவான்]
என்பார்கள். காரணம் இந்த விந்துதான் பிரணாயத்தின் மூலம் குண்டலி வழி
சகஸ்ராரத்தில் அடைகிறது. மேல் ஏறினால் பேரின்பம். கீழ் இறங்கினால் சிற்றின்பம்.]

யோகியர் நாவை மடித்து இதனை உண்ணுவார். இந்த ஒரு சொட்டு அமுதம் சுவைத்தால்
பசி, தாகம், தூக்கம் இல்லாது பன்னிரண்டு ஆண்டுகள் தவமிருக்கலாம்.
அதுவே சிவநீர் என்பார்கள். இதனை விழுங்கினால் நாமும் காயசித்தி பலனை அடையலாம்.

இதனை திருமூலர் :

"ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாள்ர்க்குக்
கூற்றை உதைக்கும் குறியது வாமே " - என்கிறார்.

இருகாலும் என்பது இரு காற்று வழி. இடகலை, பிங்கலை. அவ்வாறு இரண்டாகப்
பிரிக்காது இரு வழியாகவும் மூச்சுக்காற்றை ஒரே முறையில் ஏற்றிப் பின்பு இறக்கிப்
புருவமத்தியில் பூரிக்கச் செய்தல் வேண்டும். இவ்வாறு காற்றை முறையாக ஏற்றி
இறக்கும் கணக்கை இவ்வுகத்தார் அறியவில்லை. அவ்வாறு அறிந்தவர்கள் எமனை
எதிர்த்து உதைக்கும் ஆற்றல் அறிந்தவர்கள்.
வாழும் கலை என்று மனிதரை நீண்ட நாள் வாழ வைக்கும் கலையினை நம்
பண்டைப் பெருமைக்குரிய சித்தர்கள் 'தாம் பெற்ற இன்பம் இவ்வையகம்
பெறுக' என்ற நோக்கில் தெளிவாக சொல்லியுள்ளார்கள்.

காயசித்தியின் பெருமையினை 'காகபுசண்டர்' பாடலைக் காண்போம் :

பாரப்பா பன்னிரண்டு முடிந்துதானால்
பாலகன் போலொரு வயது தானுமாச்சு
நேரப்பா இருபத்தி நான்கு சென்றால்
நேர்மையுள்ள வயது மீரண்டாகும்
சீரப்பா முப்பத்தி ஆறுமானால்
சிறப்பாக மூன்று வயதாச்சுதப்போ
தாரப்பா பன்னிரண்டுக்கோர் வயதாய்த்
தான் பெருக்கி வயததுவை எண்ணிக்கொள்ளே ....


ஒன்றில்லாமல் ஒன்றிலில்லை. இதனை மெய்பிக்கவே சிவனும் - சக்தியும்.
உலக மாந்தர்களும் அவ்வாறு எண்ணி ஒழுகல் வேண்டும். ஆணும் - பெண்ணும்
சேர்ந்ததே வாழ்வு. வாழ்வில் இன்ப - துன்பம் எல்லாவற்றிலும் இருவருக்கும் சம
பங்கு உண்டு என்பதை மெய்பிக்கவே , விளக்கவே அர்த்தநாரீஸ்வரர்
உருவமாக சரிபாதி உடல்.
Read more ...

நூறு யோசனை

Sunday, November 14, 2010
முழநான்கு கொண்ட கோல் = 6 அடி நீளமுள்ள கோல்

இந்தக் கோலால் 500 = 500 X 6 = 3000 அடிகள்.

கிட்டத்தட்ட முக்கால் மைலுக்குச் சற்றுக்குறைவான தூரம்.

இன்னொன்று ‘யோசனை’ எனப்படும். இதன் அளவுகள் ஒன்றுடன்

ஒன்று மிகவும் வித்தியாசப்படும்.

பொதுவாக இது நான்கு காதம் கொண்டது. அப்படியானால்

12000 கஜம் X 4 = 48000 கஜங்கள் கொண்டது. கிட்டத்தட்ட 30 மைல்

என்று கொள்ளலாம்.

ராமாயணத்தில் எல்லாமே யோசனைக் கணக்கில்தான் இருக்கும்.

நூறு யோசனை நீளம், நூறு யோசனை உயரம், நூறு யோசனை அகலம்

என்று இப்படி.

நாட்டுக்கு நாடு பல அளவைகள் இருந்திருக்கின்றன.

பொதுவான வழக்கில் இருந்ததைச் சொல்கிறேன்.

இந்த வாய்ப்பாடுகளையெல்லாம் எங்காவது சேமித்து

வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் கொள்ளுப்பேரப்பிள்ளைகளிடம்

நீங்கள் கதை சொல்லும்போது, “இப்படியெல்லாம் அளந்து

விட்டிருக்கிறாங்கப்பா, நம்ப ஆளுங்க”, என்று அளந்துவிடலாம்.

8 நெல் = 1 விரக்கடை (0.75 inches)

12 விரக்கடை = 1 சாண் (9 inches)

2 சாண் = 1 முழம் (18 inches)

2 முழம் = 1 கஜம் (3 feet = 36 inches)

4 முழம் = 1 பாகம் ( 6 feet)

6000 பாகம் = 1 காதம்(12000 கஜம்)

1 காதம் என்பது கிட்டத்தட்ட 7 மைல்.

கீலோமீட்டராக்க 7 X 8 / 5 செய்துகொள்ளுங்கள்.

இதனை ‘ஏழரை நாழிகை வழி’ என்றும் சொல்வார்கள்.

ஏழரை நாழிகை என்பது 3 மணி நேரம்.

ஒரு சராசரி மனிதன் 3 மணி நேரத்தில் பொடிநடையால் கடக்கும்

தூரமாக இதைக் கருதினார்கள்.

சரிதானே? மூன்று மணி நேரத்தில் 7 மைல். ஒரு மணிக்கு ஒன்றே

முக்கால் மைல்.

மனிதனே மூன்று மணி நேரத்தில் காத தூரம் போகிறான்.

ஆனால் ஒரு குறிப்பிட்ட குதிரை அப்படியல்ல.

காளமேகப்புலவர் சொல்கிறார் கேளுங்கள்:

முன்னே கடிவாளம் மூன்றுபேர் தொட்டிழுக்க

பின்னே இருந்திரண்டு பேர்தள்ள – எந்நேரம்

வேதம்போம் வாயான் விகடராமன் குதிரை

மாதம்போம் காத வழி!

விகடராமன் என்பவனுடைய குதிரை ஒரு காதம் செல்வதற்கு

ஒரு மாதம் பிடிக்குமாம். அதுவும் முன்னாலிருந்துகொண்டு மூன்று பேர்

கடிவாளத்தைப் பற்றியிழுக்க, பின்னாலிருந்துகொண்டு இரண்டு பேர்

தள்ளினால்தான் அந்த வேகமும்கூட.

சிவகங்கைப் பக்கத்தில் ராசசிங்கமங்கலக் கண்மாய் என்றொரு

பேரேரி இருக்கிறது. ராசசிம்ம பாண்டியன் காலத்தில் கிபி 800 வாக்கில்

வெட்டப்பட்டது. அதற்கு நாற்பத்தெட்டுக் கலிங்குகள் இருந்தனவாம்.

ஒரு காதத்துக்கு ஒரு கலிங்கு வீதம் கட்டியிருக்கிறார்கள்.

அதையட்டி ஒரு பெயர் அந்தக் கண்மாய்க்கு ஏற்பட்டிருக்கிறது.

‘நாரை பறக்காத நாற்பத்தெட்டுக் காதவழி’.

நாரைகள் ஆர்க்டிக் பிரதேசத்திலிருந்து நவம்பர் டிசம்பர் மாதத்தில்

தெற்கு நோக்கி பறந்துவரும். ஆங்கில V எழுத்து அமைப்பில் அவை

கூட்டங்கூட்டமாகப் பறந்துவந்து தமிழக நீர்நிலைகளில் நிலை கொள்ளும்.

நாரை அடாது விடாது நீண்ட தூரம் பறக்கக்கூடியது.

அப்பேர்ப்பட்ட நாரையும்கூட ராசசிங்கமங்கலத்துக் கண்மாயின்

நாற்பத்தெட்டுக் கலிங்குகளையும் ஒரே வீச்சில் பறந்து கடக்கமாட்டாதாம்.


காலங்களில் அவள்

6-00am – 8-24am – பூர்வான்னம்

8-24am – 10-48am – பாரான்னம்

10-48am – 1-12 pm – மத்தியான்னம் (மத்ய அன்னம்)

1-12pm – 3-36pm – அபரான்னம்

3-36pm – 6-00pm – சாயான்னம்

சாமம் என்பதற்கு இரண்டு மூன்று வகையாக கணக்குகள் இருந்தன.

சாதாரண வழக்கத்தில் ஒரு சாமம் என்பது ஏழரை நாழிகை

கொண்டது. அதாவது மூன்று மணி நேரம். அப்படியானால் ஒரு நாளில்

எட்டு சாமங்கள் இருக்கின்றன.

முழுக்கணக்கு –>

2 கண்ணிமை = 1 நொடி

2 கைந்நொடி = 1 மாத்திரை

2 மாத்திரை = 1 குரு

2 குரு = 1 உயிர்

2 உயிர் = 1 சணிகம்

12 சணிகம் = 1 வினாடி

60 வினாடி = 1 நாழிகை

2.5 நாழிகை = 1 ஓரை (1 மணி நேரம்)

3.75 நாழிகை = 1 முகூர்த்தம் (1.5 மணி)

2 முகூர்த்தம் = 1 சாமம் (3 மணி)

4 சாமம் = 1 பொழுது

2 பொழுது = 1 நாள்

15 நாள் = 1 பக்கம்

2 பக்கம் = 1 மாதம்

6 மாதம் = 1 அயனம்

2 அயனம் = 1 ஆண்டு

12 ஆண்டு = 1 மாமாங்கம்

5 மாமாங்கம் = 1 வட்டம்


பெரும்பொழுது

1 இளவேனில் சித்திரை, வைகாசி

2 முதுவேனில் ஆனி, ஆடி

3 கார் ஆவணி, புரட்டாதி

4 குளிர் ஐப்பசி, கார்த்திகை

5 முன்பனி மார்கழி, தை

6 பின்பனி மாசி, பங்குனி

சிறுபொழுது

1 காலை காலை 6 மணி – 10 மணி வரை

2 நண்பகல் காலை 10 மணி – பிற்பகல் 2 மணி வரை

3 எற்பாடு பிற்பகல் 2 மணி – மாலை 6 வரை

4 மாலை மாலை 6 மணி – முன் இரவு 10 மணி வரை

5 யாமம் இரவு 10 மணி – பின் இரவு 2 மணி வரை

6 வைகறை விடியற்காலம் 2 மணி – பின் இரவு
Read more ...

நவகிரகங்கள்

Sunday, November 14, 2010
நவகிரகங்கள்நம்முடைய இந்து தர்மப்படி, நாம் உருவாக்கும் சட்ட திட்டத்திற்கு நாமே கட்டுப்பட வேண்டும். அதாவது இறைவனுக்கும் ஜென்ம நட்சத்திரம் உண்டு என்ற வகையில் அவரும் நவக்கிரகங்களுக்கு கட்டுப்பட்டாக வேண்டும் என்ற வாதமும் உள்ளது. கடவுளுக்கு எவ்வாறு நட்சத்திரம், ராசி கணிக்கிறீர்கள்? அது அவர்களுடைய பிறந்த நாள் என்று ஏதும் இல்லையாதலால், அவதரித்த நாளைக்கொண்டு நட்சத்திரத்தை கணித்துள்ளனர். சிவபெருமான் ருத்திர அவதாரமெடுத்ததை அடிப்படையாக்க்கொண்டு அவருக்கு திருவாதிரை நட்சத்திரம் அளிக்கப்பட்டுள்ளது. அதே போல சிவனுக்கு நேரம் கெட்டிருந்தபோது அவர் பிச்சையெடுத்த கதையெல்லாம் உள்ளது. இப்படித்தான் ராமனுக்கு நவமியும், கிருஷ்ணனுக்கு அஷ்டமியும் உள்ளது. நவகிரகங்களை வழிபடும் முறை: நவகிரகங்களை வழிபடுவது நல்லது என்றாலும், எந்த ஒரு கோயிலிற்குச் சென்றாலும் மூலவரை வழிபடாமல் வெறும் நவகிரக வழிபாட்டை மற்றும் மேற்கொள்வது தவறானது. முழு முதற் கடவுளான விநாயகரை வழிபட்ட பின்னர், அந்த கோயிலின் மூலவரை வணங்கி விட்டு, இறுதியாகவே நவகிரக வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். இதுவே சிறந்த பலன்களை அளிக்கும். மூலவரை வழிபடாமல் நவகிரங்கங்களை மட்டும் வழிபடுவது எதிர்மறையான பலன்களையே கொடுக்கும்.


நவக்கிரகங்களும், வழிபாட்டுத் தலங்களும்கிரகம்: சூரியன்
ஸ்தலம்: சூரியனார் கோவில்
நிறம்: சிவப்பு
தானியம்: கோதுமை
வாகனம்: ஏழு குதிரை பூட்டிய தேர்
மலர்: செந்தாமரை
உலோகம்: தாமிரம்
நாள்: ஞாயிறு
ராசிகற்கள்: மாணிக்கம்
பலன்கள்: காரிய சித்தி.

கிரகம்: சந்திரன்
ஸ்தலம்: திங்களூர்
நிறம்: வெள்ளை
தானியம்: அரிசி
வாகனம்: வெள்ளை குதிரை
மலர்: வெள்ளரளி
உலோகம்: ஈயம்
நாள்: திங்கள்
ராசிகற்கள்: முத்து
பலன்கள்: தடங்கல் நீங்கும், முன்னேற்றம் ஏற்படும்.

கிரகம்: குரு
ஸ்தலம்: ஆலங்குடி
நிறம்: மஞ்சள்
தானியம்: கொண்டை கடலை
வாகனம்: அன்னம்
மலர்: வெண்முல்லை
உலோகம்: பொன்
நாள்: வியாழன்
ராசிகற்கள்: புஷ்பராகம்
பலன்கள்: சகல சம்பந்துக்கள், மற்றும் வித்தைகள் தேர்ச்சி

கிரகம்: ராகு
ஸ்தலம்: திருநாகேஸ்வரம்
நிறம்: கரு நிறம்
தானியம்: உளுந்து
வாகனம்: ஆடு
மலர்: மந்தாரை
உலோகம்: தாமிரம் மற்றும் கருங்கல்
நாள்: ஞாயிறு
ராசிகற்கள்: கோமேதகம்
பலன்கள்: எந்த காரியத்திலும் ஜெயம் அடைதல்

கிரகம்: புதன்
ஸ்தலம்: திருவென்காடு
நிறம்: பச்சை
தானியம்: பச்சைபயிர்
வாகனம்: குதிரை
மலர்: வெண்காந்தல்
உலோகம்: பித்தளை
நாள்: புதன்
ராசிகற்கள்: மகரந்தம்
பலன்கள்: சகல சாஸ்திரம் மற்றும் ஞானம்

கிரகம்: சுக்கிரன்
ஸ்தலம்: கஞ்சனூர்
நிறம்: வெள்ளை
தானியம்: மொச்சை
வாகனம்: கருடன்
மலர்: வெண்தாமரை
உலோகம்: வெள்ளி
நாள்: வெள்ளி
ராசிகற்கள்: வைரம்
பலன்கள்: விவாகம் மற்றும் பிராப்தம் செளபாக்கியம் மலட்டுத்தன்மை நீங்கும்

கிரகம்: கேது
ஸ்தலம்: கீழ்பெரும் பள்ளம்
நிறம்: பல நிறம்
தானியம்: கொள்ளு
வாகனம்: சிங்கம்
மலர்: செவ்வள்ளி
உலோகம்: கருங்கல்
நாள்: ஞாயிறு
ராசிகற்கள்: வைடூரியம்
பலன்கள்: வறுமை, வியாதிகள் நீங்கும்.

கிரகம்: சனி
ஸ்தலம்: திருநள்ளாறு
நிறம்: கருப்பு
தானியம்: எள்
வாகனம்: காகம்
மலர்: கருங்குவளை
உலோகம்: இரும்பு
நாள்: சனி
ராசிகற்கள்: நீலம்
பலன்கள்: வியாதிகள், பயம், மற்றும் தீராத கடன்கள் நீங்கும்

கிரகம்: செவ்வாய்
ஸ்தலம்: வைதீஸ்வரன் கோவில்
நிறம்: சிவப்பு
தானியம்: துவரை
வாகனம்: ஆட்டுக்கடா
மலர்: செண்பகம்
உலோகம்: செம்பு
நாள்: செவ்வாய்
ராசிகற்கள்: பவழம்
பலன்கள்: பகைவர்களை வெற்றி கொள்ளுதல், சகல சாஸ்திர ஞானம்
Read more ...

பஞ்சாங்கம்

Sunday, November 14, 2010
பஞ்சாங்கம்...........!
புத்தாண்டுக் காலையில் திருக்கோயில்களில் பஞ்சாங்கம் வாசிக்கிற பழக்கமும் கடைப்பிடிக்கப்படுகிறது. பஞ்சாங்கம் வாசிப்பதிலும் நம் முன்னோர்கள் ஒருவித அர்த்தம் உள்ளடக்கி வைத்துள்ளனர். பஞ்சாங்கம் என்பது பஞ்ச... அங்கம் என்ற இஇரு தனிச் சொல்லின் சொற்சேர்க்கையாகும்.
இதன் பொருள் அய்ந்து உறுப்புக்களான வாரம் அல்லது கிழமை, திதி, நட்சத்திரம், யோகம், கரணம் என்னும் அய்ந்து உறுப்புக்களைக் கொண்டது. வாரம் அல்லது கிழமை என்பது நாளைக் குறிக்கும். இஇது அடுத்தடுத்து வருவதால் பஞ்சாங்கத்தில் முதலிடம் பெறுகிறது. கிழமைக்கு உரிமை என்று பொருள்.
ஞாயிறு ( சூரியன் ) திங்கள் ( சந்திரன் ), செவ்வாய் ( மார்ஸ் எனப்படும் செவ்வாய்க் கிரகம் ), புதன் ( மெர்க்குரி ), வியாழன் ( ஜூப்பிடர் ), வெள்ளி ( வீனஸ் ), சனி ( சாட்டர்ன் எனும் சனிக் கிரகம்) எனும் ஏழு கிரகங்களின் பிரதிபலிப்பாகத்தான் வாரத்தின் ஏழு நாட்களைப் பெயர் சூட்டி வழக்கில் கொண்டு வந்துள்ளனர் நம் முன்னோர் என்பதை நம்மில் பலர் அறிவோம்.
தமிழ்ப்புத்தாண்டு புலருகிற நாளுக்கு முன் தினம் இரவு தங்கள் படுக்கையறையில் நிலைக்கண்ணாடி முன்பாக ஒரு வெள்ளித் தட்டில் அல்லது சுத்தமான தட்டில் பலவகையான பழங்கள், தங்கள் வீட்டில் உள்ள பணம்... காசுகள், நகைகள் போன்றவற்றை அவரவர் விருப்பத்திற்கேற்ப வைத்து விடுவார்கள். காலையில் துயில் நீங்கி எழும்போது அந்தத் தட்டின் எதிரேயுள்ள கண்ணாடியில் பார்வை பதிய கண் விழிப்பார்கள். இஇப்படிச் செய்வதால் அந்தப் புத்தாண்டில் செல்வம் குறைவிலாது கிடைக்கும் என்ற நம்பிக்கை காணப்படுகிறது. தமிழகத்தில் இந்தப் பழக்க வழக்கம் பெரும்பாலான இந்துக் குடும்பங்களில் நிலவுவதை இன்றும் காணமுடியும்.
தீபாவளி, பொங்கல் போல் தமிழ்ப்புத்தாண்டு அவ்வளவாகச் சிறப்பாகக் கொண்டாடப்படுவதில்லை. கோயில்களில் பஞ்சாங்கத்தைப் படித்து வரும் ஆண்டின் பலன்களைக் கூறுவார்கள். பெரும்பாலவர்கள் கோயில்களுக்குச் செல்வர்.ஒரு சிலர் புத்தாடைகள் உடுத்திச் செல்வர். வீடுகளில் எளிமையான வகையில் வழிபாடுகளுடன் சைவ உணவு வகைகளை உண்டு மகிழ்வர்.
Read more ...

தமிழ் எண் - 2

Sunday, November 14, 2010
கிமுக்களில்.....
பொதுவாக ஆண்டுக் கணக்கு நம் முன்னோர்களால் எப்படிஎப்படியோ கணக்கிடப்பட்டு பின்பற்றப்பட்டு வந்திருந்தாலும் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே அதாவது 3102 லிருந்து ஒரு ஒழுங்குசெய்யப்பட்டு வரையறுக்கப்பட்ட ஆண்டுக் கணக்கு கடைப்பிடிக்கப்பட்டு வந்திருப்பதை அறிய முடிகிறது. ஆண்டுக் கணக்கை "அப்தம்" என்று வழங்கிவந்திருக்கின்றனர். கி.மு.3102 லிருந்து தொடங்கப்படுவதை "கலியப்தம்" என்று நெறிப்படுத்தப்பட்டு நடப்பிலிருந்தது. தமிழர்களிடம் மட்டுமல்லாது சில பண்டைய இனங்களான மாயா, சுமேரியன் ஆகியோரிடமும் இருந்து வந்திருக்கிறது. இதன் பின்னர் பல அப்தங்கள் ஏற்பட்டன. விக்கிரமாதித்தன் பெயரால் தோன்றியது விக்ரமாப்தம் அல்லது விக்ரமாங்க சகாப்தம் ஆகும். கி.பி. 78ல் ஏற்பட்டது "சக சகாப்தம்"ஆகும். இதுதான் பாரதத்தின் பெரும்பகுதியிலும் தென்கிழக்காசியா பகுதிகளிலும் பரவியது. இன்றும் பயன் படுத்தப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.
வராலாற்றுப் பழமையுடைய, அராபியர்களூம், சீனர்களும் சந்திரனை அடிப்படையாக வைத்து ஒரு பவுர்ணமியிலிருந்து இன்னொரு பவுர்ணமி வரை கொண்ட 28 நாட்களை ஒருமாதம் என்று கணித்திருந்தனர். இந்த முறையில் கோள் சுழற்சிக் கணிப்பை வரையறுப்பதில் குழப்பம் ஏற்படவே சீனப்பேரரசர் கணியர்களைத் தூக்கிலிட்டதாகவும் அதன் பின் தமிழ்க் கணியர்களைச் சீன நாட்டுக்கு அழைத்து நம் முறையில் கணிதம் பயிற்றுவிக்கச் செய்ததாக சீனவரலாற்றுக்குறிப்புகள் அதிர்ந்து தெரிவிக்கிறது.
தமிழ் எண் வடிவங்களைக் கொண்டு கூட்டல், கழித்தல், வகுத்தல் என்ற கணித முறை நடை முறைப்படுத்துவதில் கடினமாகத்தான் இஇருந்திருக்க வேண்டும். இஇப்போது போல அந்தக்காலத்தில் கணினி எல்லாம் கிடையாதே. எல்லாம் மனக் கணினிதான்! மனக்கணிப்பில்தான் எல்லாமே... இஇருந்திருக்கின்றன. மனம் தான் கணினி. மில்லியனும், பில்லியனையும் அன்றைய தமிழன் கணக்கிட்ட முறையைப் பாருங்கள்!
10 கோடி .. 1 அற்புதம்
10 அற்புதம் .. 1 நிகற்புதம்
10 நிகற்புதம் .. 1 கும்பம்
10 கும்பம் .. 1 கணம்
10 கணம் .. 1 கற்பம்
10 கற்பம் .. 1 நிகற்பம்
10 நிகற்பம் .. 1 பதுமம்
10 பதுமம் .. 1 சங்கம்
10 சங்கம் .. 1 வெள்ளம்
அ சமுத்திரம் 10 வெள்ளம் ..
1 அந்நியம் அ ஆம்பல்10 அன்னியம் ..
1 மத்தியம் அ அர்த்தம்10 மத்தியம் ..
1 பரார்த்தம் 10 பரார்த்தம் .. 1 பூரியம்
தற்போது புழங்கும் தசம எண்வரிசை இந்தியாவில் கருவாகி உருவாகிப், பின்அரேபிய நாடுகளின் வழியே ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றது என்பது எண்ணியல் அறிஞர் கருத்தாகும்.
வானவியலில் மிகுந்த முன்னேற்றமடைந்திருந்தஇந்தியாவில் மிகப்பெரிய எண்களுக்கும் தேவையிருந்தது. குப்பையைக் கிளறியதில் கிடைத்தது இது:-
விந்தம் - 64,00,000
நியுதம் - மில்லியன்
மகாகும்பம் - பில்லியன்
கற்பம் - பத்து பில்லியன்
கடல் - பத்தாயிரம் பில்லியன்
பரார்த்தம் - ஒரு லட்சம் பில்லியன்
நிகற்பம் - பத்து டிரில்லியன்
மகாகிதி - ஓராயிரம் டிரில்லியன்
மகாகோணி (மகா§க்ஷ¡ணி) - பத்து டிரில்லியன்
மகாக்ஷ¢தி - ஆயிரம் டிரில்லியன்
சோபம் - பத்தாயிரம் டிரில்லியன்
சாகரம் - பத்து குவாடிரில்லியன்
மகாசாகரம் - 18 சாகரம்
மகாசோபம் (மகா§க்ஷ¡பம்) - நூறாயிரம் டிரில்லியன்
மகாபூரி - பத்து குவின்டில்லியன்
கீழ்க்கண்ட *மிகப்பெரிய* எண்களை தமிழர்கள் புழக்கத்தில் புரளவிட்டுள்ளனர். ஆனால் அவைஎதைக் குறிப்பிட்டன என்பதை தமிழறிஞர்கள் கருத்துரைத்தால் என்போன்ற அரைகுறைகளும்நிறையத் தெரிந்துகொள்ள வாய்ப்பிருக்கும்!
மகாதோரை
மகாநிகற்பம்
மகாமகரம்
மகாவரி
மகாவற்புதம்
மகாவுற்பலம்
பிரம்மகற்பம்
கமலம்
பல்லம்
பெகுலம்
தேவகோடி
விற்கோடி
மகாவேணு
தோழம்பற்பம்
கணனை
தன்மனை
அபிதான சிந்தாமணி சொல்லும் எண்ணின் வகுப்பு (36 வகை):
ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், பதினாயிரம், இலக்கம், பத்திலக்கம், கோடி,பத்துக்கோடி, நூறுகோடி, அர்ப்புதம், கர்வம், மகாகர்வம், பதுமம்,மகாபதுமம், சங்ம, மகாசங்கம், §க்ஷ¡ணி, மகா§க்ஷ¡ணி, க்ஷதி, மகாக்ஷதி,§க்ஷ¡பம், மகா§க்ஷ¡பம், பரார்த்தம், சாகரம், பரதம், அசிந்தியம், அத்தியந்தம், அனந்தம், பூரி, மகாபூரி, அப்பிரமேயம், அதுலம்,அகம்மியம், அவ்வியத்தம்.
இது தவிர யுகக்கணக்கு, தெய்வத்துள் வைக்கப்பட்டவர் (வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து) வயதுக்கணக்கு, வான்கணக்கு, நிலக்கணக்கு, நுணுக்கக்கணக்கு, பின்னக்கணக்கு (முந்திரி?), என்றெல்லாம் இருந்துள்ளன. காரிநாயனார் கணக்கதிகாரத்தில் கொஞ்சம் காணலாம்.
தமிழர்களின் பழைய கணக்கீட்டு முறைகள் மிகவும் வியப்பானவை. மிகவும் நுட்பமான கணக்கீட்டு முறை அவர்களிடமிருந்தது. நுண்மையான அளவுகளிலிருந்து பெரிய அளவுகளை விரிவாய்க் கணக்கிட்டனர். அவர்களின் நீட்டல் அளவு முறையைக் கொஞ்சம் பாருங்களேன்.
8அணு - 1தேர்த்துகள்
8தேர்த்துகள் - 1பஞ்சிழை
8பஞ்சிழை - 1மயிர்
8மயிர் - 1நுண்மணல்
8நுண்மணல் - 1கடுகு
8கடுகு - 1நெல்
8நெல் - 1பெருவிரல்
12பெருவிரல் - 1சாண்
2சாண் - 1முழம்
4முழம் - 1கோல்(அ)பாகம்
500கோல் - 1கூப்பீடு
தமிழர்களிடம் வணங்குவது, வழிபடுவது, எழுதுவது, பேசுவது மிகுதியாகவும் போற்றுவது, பின்பற்றுவது, பரப்புவது, செயல்படுத்துவது குறைவாகவும் இருக்கின்றன. தனித்தனியாக உயரும் பண்பாடு மிகுதியாகவும், கூட்டாக் ஒன்று சேர்ந்து உயரும் பண்பாடு குறைவாகவும் உள்ளன. தனி மரம் தோப்பாகாது என்பது முதுமொழி!
தமிழ்ப்புத்தாண்டு மலரும் பொன் காலைப் பொழுதில் தமிழர்கள் அதிகாலையிலேயே எழுந்து, குளித்து தூய ஆடை அணிந்து கதிரவனை வணங்குகின்றனர். சிலர் தங்கள் குலதெய்வம் குடிகொண்டிருகிறகோவில்களுக்குச் சென்று வழிபடுகின்றனர். விசேச ஆராதனை, அபிசேகங்கள் செய்து வழிபடுகின்ற அதே நேரத்தில் வீட்டில் உள்ள பெரியோர்களிடம் ஆசி பெறுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். தங்கள் வீட்டு உபயோகத்திற்கு ஒரு புதிய பொருளை வாங்கி அளிக்கின்ற பழக்கமும் சிலரிடம் காணப்படுகிறது.
புத்தாண்டுக் காலையில் திருக்கோயில்களில் பஞ்சாங்கம் வாசிக்கிற பழக்கமும் கடைப்பிடிக்கப்படுகிறது. பஞ்சாங்கம் வாசிப்பதிலும் நம் முன்னோர்கள் ஒருவித அர்த்தம் உள்ளடக்கி வைத்துள்ளனர். பஞ்சாங்கம் என்பது பஞ்ச... அங்கம் என்ற இரு தனிச் சொல்லின் சொற்சேர்க்கையாகும். இ இதன் பொருள் அய்ந்து உறுப்புக்களான வாரம் அல்லது கிழமை, திதி, நட்சத்திரம், யோகம், கரணம் என்னும் அய்ந்து உறுப்புக்களைக் கொண்டது. வாரம் அல்லது கிழமை என்பது நாளைக் குறிக்கும். இது அடுத்தடுத்து வருவதால் பஞ்சாங்கத்தில் முதலிடம் பெறுகிறது. கிழமைக்கு உரிமை என்று பொருள்.
ஞாயிறு ( சூரியன் ) திங்கள் ( சந்திரன் ), செவ்வாய் ( மார்ஸ் எனப்படும் செவ்வாய்க் கிரகம் ), புதன் ( மெர்க்குரி ), வியாழன் ( ஜூப்பிடர் ), வெள்ளி ( வீனஸ் ), சனி ( சாட்டர்ன் எனும் சனிக் கிரகம்) எனும் ஏழ் கிரகங்களின் பிரதிபலிப்பாகத்தான் வாரத்தின் ஏழு நாட்களைப் பெயர் சூட்டி வழக்கில் கொண்டு வந்துள்ளனர் நம் முன்னோர் என்பதை நம்மில் பலர் அறிவோம்.
தமிழ் மாதப் பிறப்பும் அதனையொத்து அமையும் ஆண்டுப் பிறப்பும் கதிரவனின் இயக்கத்தைக் கொண்டே நம் முன்னோர் கணித்து, சூரியன் தன் பயணத்தை மேசராசியில் காலடி வைத்து உட் புகுகின்ற பொன் நாளே தமிழ்ப் புத்தாண்டின் துவக்க நாளாக அமைத்துள்ளனர்.
Read more ...

விபூதி

Sunday, November 14, 2010
திருநீறு, உருத்திராட்சம், ஐந்தெழுத்து ஆகிய மூன்றும் மிகவும் இன்றியமையாதவை. பசுவின் சாணத்தை எடுத்து அதனை சுட்டு சாம்பலாக்கிய பஸ்மமே சுத்தமான விபூதி ஆகும். திருநீற்றிற்கு விபூதி, பசுமம், பசிதம், சாரம் இரட்சை என பல பெயர்கள் உண்டு.


1. விபூதி - மேலான ஐசுவரியத்தைத் தருவது.
2. பசிதம் - அறியாமையை அழித்து, சிவஞான
சிவதத்துவத்தைத் தருவது.
3. சாரம் - ஆன்மாக்களின் மலமாசினை அகற்றுவது.
4. இரட்சை - ஆன்மாக்களை துன்பத்தினின்றும் நீக்கி பேரின்ப வாழ்வு தருவது
5. திருநீறு - பாவங்களை எல்லாம் நீறு செய்வது.


இதன் பெருமையை திருஞானசம்பந்தர் தனது மந்திரமாவது நீறு எனத் தொடங்கும் திருநீற்றுப் பதிகத்தில் தெளிவாகக் கூறியுள்ளார். சிவாயநம, நமசிவாய, சிவ சிவா என்று ஏதாவதொரு பஞ்சாட்சர மĪ 4;்திரத்தை செபித்தபடி உத்தூளனமாக (நெற்றி முழவதும்) அல்லது திரிபுண்டரிகமாக (3 கோடுகளாக) திருநீற்றினை அணிதல் வேண்டும். இதற்கு ஆட்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் ஆகிய விரல்களை உபயோகிக்க வேண்டும். கிழக்கு முகமாக அல்லது வடக்கு முகமாக நோக்கியபடியே அணிதல் வேண்டும். இதனால் நல்வாக்கு, நல்லோர் நட்பு, உயர்ந்த நற்குணங்கள், குறைவில்லா செல்வம், சகல விதமான ஐசுவரியங்கள் போன்ற எல்லா நலமும் பெற்று நம் வாழ்வில் சிறப்புடன் வாழலாம்.


விதிப்படியமைந்த திருநீற்றை உட்கொண்டால் உடம்பின் அசுத்தங்கள் அனைத்தையும் போக்கி நாடிநரம்புகள் அனைத்திற்கும் வலிமையை கொடுக்கும்
உடலுக்கும், உயிரிற்கும் இம்மையிற்கும், மறுமையிற்கும் உயர்வளிக்கும் விபூதியினை தினமும் நாம் அணிந்து உயர்வடைவோமாக.
Read more ...

அலை

Sunday, November 14, 2010
மன அலை

உங்களது தீவரமான எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் உங்கள் மனம் பிறருக்கு ஒலிபரப்புகிறது. நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இப்போது கூட அது அப்படித்தான் செய்துகொண்டிருக்கிறது. இது உலகறிந்த, ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாகும்.

எண்ணங்களும், உணர்ச்சிகளும் நீண்ட தூரத்திற்கு அஞ்சல் செய்யப்பட இயலுமா என்பதைத் தீர்மானிக்க ட்யூக் பல்கழைக்கழகம் போன்ற பல்கலைக்கழகங்களில் இடைவிடாது அறிவியல் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் அஞ்சல் செய்யும் போது ஏற்படும் மனோதத்துவக் கதிர்வீச்சை (AURU) என்று அழைக்கிறார்கள்.

உதாரணம்: ‘நாய்’ என்று சொன்ன மாத்திரத்தில் நடுங்கும் மனிதர்கள் அந்த அச்சத்தை மானசிகமாக ஒலி பரப்புகிறார்கள். அந்த அச்சத்தின் நுண்ணொலியைக் கண்டதும் நாய்கள் உறுமுகின்றன, குரைக்கின்றன அல்லது சில சமயம் அந்தப் பயந்த மனிதர்களைத் தாக்கவும் செய்கின்றன. தங்கள் அச்சத்தை மானசிகமாக ஒலிபரப்பும் மனிதர்களைக் கடிக்க வருகின்ற அதே நாய்கள் அவற்றிடம் உண்மையான அன்புகாட்டும் மனிதர்களை ஒன்றும் செய்வதில்லை. வாலை ஆட்டி அன்புடன் வரவேற்கின்றன. உங்களது தீவிரமான எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் ஒரு நாய்க்கு மானசிகமாக ஒலிபரப்ப முடியுமேயானால் நிச்சயமாக மனிதர்களுக்கும் மானசிகமாக ஒலிபரப்பு முடியும். இது நிருபிக்கப்பட்ட உறுதிபடுத்தப்பட்ட அறிவியல் உண்மை.

மானசிக ஒலிபரப்பினால் உங்கள் வாழ்க்ககையில் அதிசயிக்கத்தக்க நற்பயன் விளையக்கூடும். உதாரணமாக, உங்கள் நண்பர் பிரியா உங்களை நோக்கி வந்து கொண்டிருப்பதை கவனிக்கிறீர்கள். இப்படித் தீவிரமாக நினைக்கிறீர்கள் “பிரியாவுக்கு நல்லெண்ணத்தை அஞ்சல் செய்து கொண்டிருக்கிறேன். அவரது வாழ்க்கையில் என்னால் மகிழ்ச்சி சேர்க்க முடியும் என்று நம்புகிறேன்!” (அவரது வாழ்க்கயைில் மகிழ்ச்சி சேர்க்க முடியும் என்ற நோக்கத்துடன் நல்லெண்ணத்தோடு அவருக்கு ‘ஹலோ’ சொல்லுகிறீர்கள். நீங்கள் மானசிகமாக அஞ்சல் செய்யும் நல்லெண்ணத்தையும் வாழ்த்துக்களையும் பெற்றுக் கொண்டு அவர் பதில் வணக்கம் தெரிவிப்பார்).

முச்சந்தியில் நிற்கின்ற போலீஸ்காரருக்கும், ஊனமுற்ற சிறுவனுக்கும் அலுவலத்திலும் மளிகைக் கடையிலும், தொழிற்சாலையிலும் என தென்படுகின்ற ஒவ்வொருவருக்கும் – யார் எங்கிருந்தாலும் எல்லோருக்கும் – உங்கள் நல்லெண்ணத்தையும் வாழ்த்துக்களையும் மானசிகமாக அஞ்சல் செய்யுங்கள்.

எங்கோ இருக்கின்ற முன்பின் தெரியாத மனிதர்களுக்கு உங்களுடைய மானசிக அஞ்சல் எப்படிப் போய்ச் சேரும் என்பதையோ, அவர்களின் மனம் அல்லது உள்மனம் எவ்வாறு அதை உணர முடியும் என்பதையோ பற்றி எண்ண வேண்டாம்

உங்களுடைய நல்லெண்ணத்தையும் வாழ்த்துக்களையும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனிதருக்கும் அஞ்சல் செய்வதன் மூலம் உங்களுடைய வாழ்க்கைக் கண்ணோட்டம் சிறப்படைந்து உங்களுடைய சொந்த ஆக்க சக்தியும் பன்மடங்காகப் பெருகும் என்பது நிருபிக்கப்பட்ட மனோதத்துவ உண்மையாகும்.
Read more ...

பிரணவம் - 2

Sunday, November 14, 2010
முதல் எழுத்து:

"ஆதியிலே பராபரத்திற் பிறந்த சத்தம்
அருவுருவாய் நின்ற பாசிவமுமாகி
தோதியென்ற சிவனிடமாய்ச் சத்தியாகித்
தொல்லுலகில் எழுவகையாந் தோற்றமாகி "
என்னும் சுப்பிரமணிய ஞானத்திலிருந்து அறியலாம்.

சட்டை முனியும் தனதுசூத்திரத்தில் :
" ஒடுக்கமடா ஓங்காரக் கம்பமாச்சு
ஓகோகோ அகாரமங்கே பிறந்ததாச்சு "
- என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சிவன், சக்தி , சிவசக்தி மூலத்தைக் குறிக்கும் ஓங்கார மந்திரத்திற்க்கும்
முதல் எழுத்தாகவும் இதுவே " அ " உள்ளது. அத்துடன் எழுத்துக்களைக்
குறிக்குங்கால் , தமிழ் , தெலுங்கு , கன்னடம் , மலையாளம் , சமஸ்கிருதம்
முதலிய மொழியிலும் இதுவே முதல் எழுத்து.

" அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு "
என்ற வள்ளுவர் முதல் குறள் மூலமும் ,

அகஸ்த்திய பெருமான் தனது மெய்ஞான சுத்திரத்தில் ,
" அவ்வாகி உவ்வாகி மவ்வுமாகி ,
- ஐம்பத்தோ ரெழுத்துக்கு தியாகி "

"அகாமுதல் அவ்வைமுத்தும் தியாகும்
அறிந்தோர்க்கு இதிலேதான் வெளியதாகும் "
என்று பாடியுள்ளத்தின் மூலம் நன்கு அறியலாம்.


உருவமும்- உடலும்.

உடம்பை உருவைக் குறிக்கும் போது ஏற்கனவே குறித்தப்பிட்டபடி
இதுவே கருவில் தரிக்கும் பிண்டத்திற்குக் காரணமாய் விளங்குகிறது.
ஆண்டவன் அவ்வெழுத்தின் உருவமாய் உடம்பினுள் அமைந்துள்ளார்
என்பது கீழ்காணும் மெஞ்ஞான முனிவர்களது சூத்திரம் மூலம் விளங்கும்.

"கண்டது அவ்வென்னுங் கடைய தோரட்சாம்,
பிண்டத்துக் குற்பத்தி பிறக்கு மிதிலே"
- மச்சைமுனி தீட்சை ஞானம்

"உந்தியினுள்ளெ அவ்வும் உவ்வுமாய் மவ்வுமாகி
விந்துவாய் நாதமாகி விளங்கிய சோதிதன்னை "
- அகஸ்தியர் முதுமொழி ஞானம்.

மேலும் இது வாயைத் திறந்தவுடன் நாக்கு , அல்லது மேல் வாயைத்
தீண்டாமலேயே தொண்டையின் மூலமாய் பிறக்கும் ஓசை பேசும் போது
உண்டாகும் எல்லா ஒலியையும் விட மிகவும் இயற்கையானது.

இது பற்றி யூகிமுனி தனது வைத்திய சிந்தாமணி 800 - ல்

"அவ்வென்னும் அட்சாத்தில் நாடிதோன்றும்
அந்நாடி தானின்று தத்துவந் தோன்றும்
எவ்வென்னு மெலும்பு தசை புடை நரம்பும்
ஈலிட்டு பழுவோடிரண்டு கொங்கையுமாம்
முவ்வென்று முட்டுக்கால் விளையீரெட்டாம்
முட்டியமைத் தங்ஙனே யோருருமாக்கி "

என்று கூறியுள்ளதன் மூலம் உருவம் உடம்பிற்கும் இதுவே முதல்
காரணமென நன்கு தெளிந்துணரலாம்.

ஓங்காரம், பிரவணம். இது எல்லா எழுத்து ஒலிகட்கும் முதலாக விருந்து
அகத்தும், புறத்தும், இயற்கையாய் ஒலிக்கும் ஓசை. இது உந்தியின் கீழ் தங்கி
நிற்கும். இதை விளக்கும்படி திருமூலர்,

" ஓங்காரம் உந்தி கீழ் உற்றிடும் எந்நாளும்
நீங்கா வகாரமும் நீள் கண்டத் தாயிடும் " என்று கூறியுள்ளார்.
ஓங்காரத்தி தத்துவம் , அ , உ , ம் எனமித்து ஒலி எழுப்புவது.
அகாவொலி முதற்பிரிந்து படைத்தற் தொழிலையும், உகாரவொலி பின்
தோன்றிக் காத்தல் தொழிலையும் , மகாரவொலி முடிவாதலின் அழித்தற்
தொழிலையும் ஆக முத்தொழிலையும் ஒருங்கே
இணைத்து அடக்கி நிற்கும்.
Read more ...

ஆணவம்

Sunday, November 14, 2010
ஆணவம்

ராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு நாள், கங்கை நதிக்கரையில் ஓய்வாக அமர்ந்திருந்தார். அவரைத் தேடி யோகி ஒருவர் வந்து சேர்ந்தார். ஆணவம் மிகுந்தவர் அந்த யோகி. பரமஹம்சரிடம், “என்னைப் போல் கங்கை நீரின் மேல் நடந்து உங்களால் கரையைக் கடக்க முடியுமா?” என்று கேட்டார்.

“நீர் மேல் நடக்கும் யோகத்தை எவ்வளவு காலம் பயின்றீர்கள்?” என்று வினவினார் பரமஹம்சர். “இமயத்தில் 18 ஆண்டுகள் நோன்பிருந்து, கடும் யோகாசனம் பயின்று, இந்த ஸித்தி கைவரப் பெற்றேன். உங்களால் நீரில் நடக்க இயலுமா?” என்று பெருமிதத்துடன் கேட்டார் யோகி.

அவரைப் பார்த்து புன்னகைத்தார் பரமஹம்சர். “அப்பனே, அந்த அளவுக்கு நான் முட்டாள் இல்லை. கங்கையின் அக்கரைக்கு செல்ல விரும்பினால் படகுக்காரனிடம் இரண்டு பைசா கொடுத்தால் போதும். அவன், என்னை அக்கரையில் கொண்டுபோய் விடுவான். 18 ஆண்டுகளை வீணாக்கி நீ சம்பாதித் யோக சக்தி, இரண்டு பைசாவுக்குத்தான் சமம். வேண்டாத இந்த விளையாட்டில் எனக்கு எப்போதும் விருப்பம் இல்லை!” என்றார்.

நாம் எந்தச் செயலை செய்தாலும் அதில் சிரத்தையுடன் மனதை செலுத்தி, முழுமையான அர்பணிப்பு உணர்வுடன் செய்ய வேண்டும். ‘எப்போதெல்லாம் மனம் நிலையற்று அலைகிறதோ அப்போது மனதை ஆத்மாவின் வசத்தில் நிலைநிறுத்த வேண்டும்’ என்கிறார் கீதையில் வழிகாட்டுகிறார் ஸ்ரீகிருஷ்ணர்.
Read more ...

கடவுள்

Sunday, November 14, 2010
கடவுள்

ஞானத்தின் வடிவமான குரு ஒருவர் வலம் வந்தார். அவரது திருவோட்டில் ஒருவர் அன்னமிட்டார். அந்தச் அன்னத்தில் ஒரு நாய் வாய் வைத்து உண்டது. நாயின் முதுகில் ஞானி அமர்ந்தார். பாரம் தாங்காமல் நாய் திணறியது. இந்த செய்கையை ஊர் கூடிப் பார்த்தது. வெளியில் சென்றிருந்த சீடன் திரும்பினான். குருவின் செய்கை அவனுக்குத் திகைப்பைத் தந்தது!

“என்ன இது குருவே?” என்றான் அவன். “பிரமத்தில் ஒரு பிரம்மம், பிரமத்தை இட்டது. அதை ஒரு பிரம்மம் உண்டது. அந்த பிரம்மத்தின் மேல் இந்த பிரம்மம் அமர்ந்திருப்பதை, இத்தனை பிரம்மங்கள் கூடிப் பார்க்க, ‘என்ன இது?’ என்கிறது ஒரு பிரம்மம்!” என்று சிரித்தபடி சொன்னார் ஞானி. திருவோடும் பிரம்மம்; அன்னமும் பிரம்மம்; நாயும் பிரம்மம்; பார்த்த மக்களும் பிரம்மம்; கேட்ட சீடனும் பிரம்மம்; தானும் பிரம்மம்; என்ற ஞானியின் பார்வைதான் ஞானத்தின் உச்சம்.

· ஸ்ரீராமானுஜரைத் தேடி வந்த ஒருவன், “ஆண்டவனை அடையும் வழி என்ன?” என்றான். “மனிதர்கள் மீது அன்பு வைப்பதுதான் ஒரே வழி” என்றார் அந்த மகான்.

· ‘கடவுள் இல்லை’ என்று காலமெல்லாம் வாதித்த அமெரிக்க அறிஞர் இங்கர்சால், ‘கடவுள் இருந்தால் மன்னிக்கட்டும்’ என்று தனது நூலில் எழுதினார்.

· ‘உலகம் முழுவதும் கடவுள் இல்லை என்று சொன்னாலும், எனக்குக் கடவுள் என்றும் உண்டு’ என்றார் அண்ணல் காந்தி.

சக மனிதர்களிடம் இறக்கி வைக்க முடியாத இதயத்தின் பாரத்தை, ஒருவன்மேல் நம்பிக்கையோடு நாம் இறக்கி வைப்போம். அந்த நம்பிக்கைக்கு உரியவன் ஆண்டவனே. பாரம் இறங்கினால் சுமை குறையும். சுமை குறைந்தால் மனம் லேசாகும். மனம் லேசானால் வாழ்வின் ருசி வளரும். எல்லா உயிர்களிலும் இறைவனைக் காண்போம். அவற்றின் மீது அன்பு செய்வதே உண்மையான பக்தி வழிபாடு என்று உணர்ந்து கொள்வோம்.
Read more ...

பிரணவம் - 1

Sunday, November 14, 2010
ஓம் என்னும் பிரணவம்

எந்த மொழியிலும் எழுத்துகள் பிறப்பதற்கு மூல காரணமாக இருப்பது ஒலியே. அந்த
ஒலியே பிரவணம் எனப்படும். வாயைத் திறந்து உள்ளிருக்கும் மூச்சுக் காற்றை வெளியிடும்போது
�ஓ� என்ற உருவமற்ற ஒலி பிறக்கின்றது. அவ்வொலியின் கடைசியில் வாயை மூடும்போது
�ம்� என்ற ஒலி தோன்றுகிறது.

இந்த ''ஓம் - ஓம்'' என்ற ஒலியையே பிரவணம் என்று கூறுவர். உலகம் தோன்றுவதற்கு
முன்பு பிரவண ஒலியே நிலவி இருந்தது என்றும் , பிரணவத்திலிருந்து விந்துவும்,
விந்திலிருந்து நாதமும் அதிலிருந்து உலகமும் உயிர்களும் ஒன்றிலிருந்து ஒன்றாகத்
தோன்றின எனத் தத்துவ நூல்கள் கூறுகின்றன.

ஓம் என்பது பிரணவ மந்திரமாகும்

இது அ + உ+ ம் என்ற மூன்றெழுத்தின் இணைப்பே �ஓம்�.
மனிதனின் உடலும் இறைவனின் இயற்கை வடிவான ஓங்கார வடிவத்துடன் அமைந்திருக்கிறது.
மனித வடிவமும் அருள் வடிவம்தான்.

ஓம் என்ற பிரவணன்
"அ" என்பது எட்டும்
"உ"என்பது இரண்டும் என்ற எண்களின் தமிழ் வடிவம்.

உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்து உயிர்மெய்த்தாவது போல்
உயிரும் உடலும் சேர்ந்ததுதான் மனித வாழ்வு.
அவரவர் கையால் மனிதனின் உடல் எண் சாண் அளவுடையது.

மனிதன் விடும் இரு வகை மூச்சுகள். [உள் மூச்சு வெளி மூச்சு ]

" உ ' எழுத்து குறிக்கும் மூச்சு உள் மூச்சு வெளி மூச்சு.
" ம் ' ஆறு அறிவின் உணர்வு இயக்கத்தால் எற்படும் இன்பத்தை அது குறிக்கும்

அத்துடன் " ஓம் " என்ற பிரணவம் 96 தத்துவத்துடன் விளங்கும்.
அ உ ம் என்ற எழுத்துக்களால் குறிக்கும் பெருக்கு தொகை 8 x 2 x 6 = 96.
இதனை சிலர் இப்படியும் கூறுவார்கள்: அ என்பது முதல்வனான சிவனையும்
உ என்பது உமையவள் எனப்படும் சக்தியினையும், சிவனும் சக்தியும் இணைந்த
சிவசக்தியினையும் குறிக்கும்.

இச்சிவசக்திவடிவமே, சொரூபமே வரி வடிவில் " ஓ " என பிள்ளையார்
சுழியாகவும் , "உ" எனவும் உள்ளது. வழிப்படும் உருவவாக 'சிவலிங்கமும்' ,
ஒலி எழுத்தாக சொல்லும்போது ஓங்காரம், பிரணவம் என்று ஆன்றோர்களும்,
சான்றோர்களும் சொல்கிறார்கள்.
இதனை திருமூலர், திருமந்திரத்தில் :

" ஓமெனு ஓங்காரத் துள்ளே ஒரு மொழி
ஓமெனு ஓங்காரத் துள்ளே உருவம்
ஓமெனு ஓங்காரத் துள்ளே பல பேதம்
ஓமெனு ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே "

முதல் வரிக்கு ஓம் என்பதை உச்சரிக்கும் பொழுது ஒரே சொல்லாகவும்,
இரண்டாம் வரிக்கு அன்னையின் கருவில் பிண்டம் தரிக்கும் பொழுதும்
அது தாயின் வயிற்றிற்குள் காணும் காட்சி ஓம் என்றே தோன்றும் ,
மூன்றாம் வரிக்கு ஒரே உச்சரிப்பாயினும், மூன்றெழுத்தையும் அதன்
விளக்கத்தையும் , பேதங்கள் பலவாறாகவும் , நான்காவது வரிக்கு இதை
சதா உச்சரித்து தியானிப்பதால் முக்தி - உயர்ந்த சித்தியும் கிட்டும்
என்பதை பாடல் நமக்கு உணர்த்துகிறது.
Read more ...

பைரவர்

Sunday, November 14, 2010
பைரவர் பற்றி எழுதச் சொல்லி வல்லி சிம்ஹன் கேட்டார்கள். கீழே கொடுத்திருப்பது
சிதம்பர ரகசியத்தில் சிதம்பரம் சித்சபையின் உள்ளே நடராஜருடன் காக்ஷி அளிக்கும்
ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் பற்றியது. அதன் பின்னர் பைரவர் பற்றிய பொதுவான
குறிப்புகளும், பைரவ அஷ்டகமும். அனைவரும் பயன் பெறும்படி வேண்டிக்
கொள்கின்றேன்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர்: சித் சபையின் உள்ளே சிவகாம சுந்தரிக்கு இடப்பக்கமாய்
மேற்கே பார்த்துக் கொண்டு ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் இருக்கிறார். எல்லாச் சிவன்
கோவில்களிலும் பைரவருக்குத் தனிச் சன்னிதி உண்டு. ஆனால் இங்கேயோ நடராஜரின்
பக்கத்திலேயே இருக்கிறார். இவருடைய வாகனம் ஆன நாய் ஆனது சிவனிற்குக் குடை
பிடிக்கும் கணங்களில் ஒருவரான குண்டோதரனின் மறு பிறவி எனச் சொல்லப் படுகிறது.
நடராஜருக்குப் பூஜை நடக்கும் கால பூஜையில் ஒருமுறை இவருக்கும் அபிஷேகம், ஆராதனை
செய்யப் படுகிறது. நடராஜ தரிசனத்துக்கும், சிதம்பர ரகசிய தரிசனத்துக்கும்
கொடுக்கும் முக்கியத்துவம் இவருடைய தரிசனத்துக்கும் கொடுக்கப் படுகிறது.

எல்லாச் சிவன் கோவில்களிலும் காலபைரவர் தான் காவல் தெய்
வம். சிவனால் நியமிக்கப் பட்ட இவர் சிவனின் அவதாரங்களில் ஒன்றாகவே கருதப்
படுகிறார். முன்னாட்களில் கோவிலைப் பூட்டிச் சாவியைக் கால பைரவர் சன்னிதியில்
வைத்துவிட்டுப் போய்விடுவார்கள் எனச் சொல்லப் படுகிறது. சிதம்பரம் கோவிலிலும்
பல நூற்றாண்டுகளுக்கு முன் தினசரி பூஜை முடிந்ததும், இரவில் கால பைரவர்
சந்நிதியில் அன்றைய பூஜை செய்யும் தீட்சிதர் ஒரு தாமிரத் தட்டை வைத்து விட்டு
வருவார் எனவும், காலையில் அது தங்கமாய் மாறி இருக்கும் எனவும் நம்பப் படுகிறது.
அந்தத் தங்கத் தட்டை வைத்துக் கொண்டுதான் தீட்சிதர்கள் தங்கள் வாழ்நாள்
செலவிற்கு வழி பார்த்துக் கொண்டதாயும் சொல்லப் படுகிறது. இந்த செவிவழிச்
செய்திகளால்தான் இந்த பைரவருக்கு "ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர்" என்ற பெயரும்
ஏற்பட்டது என்று சொல்கிறார்கள். எப்போது நின்றது என்று நிச்சயமாய்க் கூற
முடியாத கால கட்டத்திலேயே இந்தப் பழக்கம் நின்று விட்டதாயும் சொல்லப் படுகிறது.
இந்த பைரவர் "க்ஷேத்திர பாலகர்" எனவும் சொல்லப் படுகிறார்.

சிவனின் அம்சமாய்ச் சொல்லப் படும் இவரே ஆணவத்துடன் இருந்த பிரம்மாவின் தலையைக்
கொய்தார் எனவும் சொல்லப் படுகின்றது. இவரைப் பிரார்த்தித்தால் தீராத கடன்கள்
தீரும் என்றும் சொல்கின்றனர். காசிமாநகரின் க்ஷேத்திர பாலகர் பைரவர் தான். காசி
நகர் முழுதும் அவரே காவல் காக்கின்றார் என்று ஐதீகம். காசி யாத்திரை
மேற்கொள்ளுபவர்கள் கடைசியில் பைரவர் கோயிலுக்குச் சென்று அவரைத் தரிசித்து
அங்கே காசிக்கயிறு பெற்றுக் கொண்டு பின்னரே திரும்ப வேண்டும் என்றும் யாத்திரை
பைரவர் தரிசனம் செய்யாமல் நிறைவேறாது எனவும் ஐதீகம்.

பைரவர் நிர்வாணமாய் நாயுடன் காவல் காக்கும் கோலத்தில் இருப்பார். எப்போதும்
சிரித்த முகம். ஆனால் துஷ்டர்களைத் தண்டிக்கவும் தண்டிப்பார். தண்டனை
கடுமையாகவே கொடுப்பார் என்றும் சொல்லுவார்கள். இரவு வேளைகளில் கோயிலின்
பிராஹாரத்தை பைரவரே தன் துணையான நாயுடன் சுற்றி வந்து காவல் காப்பார் என்றும்
நம்பப் படுகின்றது. நான் பார்த்த பைரவர்களிலேயே பட்டீஸ்வரம் கோயிலின் பைரவர்
நிஜமான ஒரு மனிதன் போலவே பார்த்தால் ஒரு கணம் சட்டுனு மனதில் திடுக்கிட்டுப்
போகும் வண்ணம் ஜீவனுடன் விளங்குகின்றார். பட்டீஸ்வரம் சென்றபோது திரும்ப இருந்த
எங்களை குருக்கள் அழைத்து பைரவரைத் தரிசனம் செய்ய வைத்தார். கீழே பைரவ அஷ்டகம்
வடமொழியிலும், தமிழிலும் கொடுத்துள்ளேன். இதைத் தினமும் படித்து வந்தால் தீராத
கடன்கள் தீரும். கையில் பணம் இல்லையே என நினைத்து வருந்தும்போது குறைந்த
அளவுக்கான தேவைக்காவது பணம் கிடைக்க்ம் என ஆத்தீகர்களின் நம்பிக்கை.

ஸ்ரீ காலபைரவ பஞ்சரத்னம்
======================

கட்கம் கபாலம் டமருகம் த்ரிசூலம்
ஹஸ்தாம்புஜே ஸ்ந்நதம் த்ரிணேத்ரம்|
திகம்பரம் பஸ்ம விபூஷிதாங்கம்
நமாம்யஹம் பைரவமிந்துசூடம்||

கவித்வதம் ஸத்வரமேவ மோதான்
நதாலேய ஸம்பு மனோபிராமம்|
நமாமி யானீக்ருத ஸார மேயம்
பவாப்தி பாரம் கம்யந்த மாஸு||

ஜராதி துக்கௌக விபேத தக்ஷம்
விராகி சமஸேவ்ய பாதாரவிந்தம்|
நரபதிபத்வ ப்ரதமாஸு நந்த்ரே
ஸுராதிபம் பைரவ மானதோஸ்மி||

ஸமாதி ஸம்பத் ப்ரதமான தேப்யோ
ரமா தவாத்யாசித பாதபத்மம்|
ஸமாதி நிஷ்டை ஸ்தரஸாதிகம்யம்
நமாம்யஹம் பைரவமாதிநாதம்||

கிராமகம்யம் மனஸாபி தூரம்
சராசாஸ்ய ப்ரபாவதி ஹேதும்|
கராக்ஷிபச் சூன்ய மாதாபிரம்யம்
பராவரம் பைரவமான தோஸ்மி||

>ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகம் =========================== தனந்தரும் வயிரவன்
தளிரடி
>பணிந்திடின் தளர்வுகள் தீர்ந்து விடும் மனந் திறந் தவன்பதம் மலரிட்டு

வாழ்த்திடின் மகிழ்வுகள்
>வந்து விடும் சினந்தவிர்த் தன்னையின் சின்மயப்புன்னகை சிந்தையில் ஏற்றவனே

தனக்கிலை யீடு
>யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (1) வாழ்வினில் வளந்தர வையகம்
>நடந்தான் வாரியே வழங்கிடுவான் தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட தானென
>வந்திடுவான் காழ்ப்புகள் தீர்த்தான் கானகம் நின்றான் காவலாய் வந்திடுவான்

தனக்கிலை யீடு
>யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (2) முழுநில வதனில் முறையொடு
>பூஜைகள் முடித்திட அருளிடுவான் உழுதவன்விதைப்பான் உடைமைகள் காப்பான் உயர்வுறச்
>செய்திடுவான் முழுமலர்த் தாமரை மாலையை ஜெபித்து முடியினில் சூடிடுவான்

தனக்கிலை யீடு யாருமே
>என்பான் தனமழை பெய்திடுவான் (3) நான்மறை ஓதுவார் நடுவினில்
>இருப்பான் நான்முகன் நானென்பான் தேனினில் பழத்தைச் சேர்த்தவன் ருசிப்பான்

தேவைகள்
>நிறைத்திடுவான் வான்மழை எனவே வளங்களைப்பொழிவான் வாழ்த்திட வாழ்த்திடுவான்

தனக்கிலை யீடு
>யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (4) பூதங்கள் யாவும் தனக்குள்ளே
>வைப்பான் பூரணன் நான் என்பான் நாதங்கள் ஒலிக்கும் நால்வகை மணிகளை நாணினில்

பூட்டிடுவான்
>காதங்கள் கடந்து கட்டிடும் மாயம் யாவையும் போக்கிடுவான் தனக்கிலை யீடு யாருமே
>என்பான் தனமழை பெய்திடுவான் (5) பொழில்களில் மணப்பான் பூசைகள்
>ஏற்பான் பொன்குடம் ஏந்திடுவான் கழல்களில் தண்டை கைகளில் மணியணி கனகனாய்

இருந்திடுவான்
>நிழல்தரும் கற்பகம் நினைத்திடபொழிந்திடும் நின்மலன் நானென்பான் தனக்கிலை யீடு
யாருமே
>என்பான் தனமழை பெய்திடுவான் (6) சதுர்முகன் ஆணவத் தலையினைக்
>கொய்தான் சத்தொடு சித்தானான் புதரினில் பாம்பைத் தலையினில் வைத்தான் புண்ணியம்
>செய்யென்றான் பதரினைக் குவித்து செம்பினை எரித்தான் பசும்பொன் இதுவென்றான்

தனக்கிலை யீடு
>யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (7) ஜெய ஜெய வடுக நாதனே
>சரணம் வந்தருள் செய்திடுவாய் ஜெய ஜெய ஷேத்திர பாலனே சரணம் ஜெயங்களைத்

தந்திடுவாய்
>ஜெய ஜெய வயிரவா செகம் புகழ் தேவா செல்வங்கள் தந்திடுவாய் தனக்கிலை யீடு யாருமே
>என்பான் தனமழை பெய்திடுவான் (8)
Read more ...

தன்னை அறிந்தவன் ஞானி

Sunday, November 14, 2010
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅ ரெனின்

அறிவின் மேம்பட்ட நிலை ஞானம் எனப்படும். இதுவே ஒவ்வொரு மனிதனும் அடைய முயற்சிக்க வேண்டிய ஒன்று. தன்னை அறிந்தவன் ஞானி. இத்தகைய மெய்ஞான நிலையினை அடைந்த ஒருவன் தன்னையறிவான், தன்னைப் போல் பிறரையும் அவர்தம் உள்ளத்தையும் அறிவான். தானே “அதுவென்றாகி”த் தனக்கென ஒன்றுமிலாதவனாக, தன்னில் “அதனை” ஒளித்து தன்னிகரில்லா ஆனந்த நிலையினை அனுபவிப்பான். இறைவனுடன் ஒன்றிவிடுவான்.


தன்னை அறிந்தவன் இறைவனை அறிவான்
.
Read more ...

திருநீறு -1

Sunday, November 14, 2010
*"கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி...*
*நில்லாப் பிழையும் நினையாப் பிழையும் நின் ஐந்தெழுத்தைச்*
*சொல்லாப்பிழையும் துதியாப் பிழையும் தொழாப்பிழையும்...*
*எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய்கச்சி ஏகம்பனே..!"......பட்டினத்தார்...*
**
*"தந்ததுன் தன்னைக் கொண்டதென் தன்னைச்*
*சங்கரா ஆர்கொலோ சதுரர்..*
*அந்தமொன் றில்லா ஆனந்தம் பெற்றேன்*
*யாதுநீ பெற்றதொன் றென்பால் *
*சிந்தையே கோயில் கொண்ட எம் பெருமான்*
*த்ரயுபெருந்து ராயுறை சிவனே...*
*எந்தையே ஈசா உடலிடங் கொண்டாய்*
*யானிதற் கிலன் ஒர்கைம் மாறே..".........மணிவாசகர்......*
**
*மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு*
*சுந்தரமாவது நீறு துதிக்கப் படுவது நீறு..*
*தந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு..*
*செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான் திருநீறே...*

*"இந்தப் பாசுரத்தை கூறி கூன் பாண்டியன் தன் கொடு நோயை தீர்த்தார்".....*
**
**
*தெய்வம் செவி சாய்க்கும்...*
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்திலுல்ளது நீறு
செந்துவர்வாய் உமைபங்கன் திருவாலவாயான் திருநீறே

வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதம் தருவது நீறு புன்மை தீர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு உண்மையில் உள்ளது நீறு
சீதப் புனல் வயல் சூழ்ந்த திருவாலவாயான் திருநீறே

முத்தி தருவது நீறு முனிவர் அணிவது நீறு
சத்தியம் ஆவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு திருஆலவாயான் திருநீறே


அன்பும் சிவமும் இரண்டென்பார் அறிவிலார்
அன்பே சிவமாவதாரும் அறிகிலார்
அன்பே சிவமாவதாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே!

முகத்திற்கண் கொண்டு பார்க்கின்ற முடர்காள்
அகத்திற்கண் கொண்டு காண்பதே ஆனந்தம்
மகட்குத்தாய்தன் மணாளனோடு ஆடிய
சுகத்தைச் சொல்என்ல் சொல்லுமாறு எங்கனே.
Read more ...