ஓம் - யோகி நிலை

Monday, July 18, 2011
ஓம் எனும் பிரணவ மந்திரம், அ + உ + ம் என்ற எழுத்துக்களின் இணைப்பே. இதில் 'அ' என்பது
விஷ்ணுவையும், 'உ' என்பது சிவனையும், 'ம்' என்பது பிரம்மாவையும் குறிக்கிறது என்பது சமயத் தத்துவமாகும்.

அஷ்ட யோகம் (அ) அஷ்டாங்க யோகம்

ஒருவன் யோகி நிலையை அடைய இவ்வெட்டு வகை யோகத்தையும் கடைப்பிடித்து வெற்றி கண்டால் மட்டுமே முடியும்.

1) இயமம் - பசியை அடக்குவது
2) நியமம் - மதத்தொடர்பான சடங்குகளை அனுஷ்டிப்பது
3) ஆசனம் - உடலை தன்வயப்படுத்தி தான் இஷ்டப்படும் நிலைக்கு கொண்டு வருவது
4) பிராணாயாமம் - மூச்சையடக்கி உடல் செயல்பாட்டினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது
5) பிரத்தியாகாரம் - புலன்களை அடக்குவது
6) தாரணை - மனதை ஒருமுகப்படுத்தி ஒன்றில் நிலைக்கச் செய்வது
7) தியானம் - அமைதியான நிலையில் மனதை ஒருமுகப்படுத்தி சிந்தனையே இல்லாத நிலையை அடைவது
8) சமாதி - தன்னைத் தானே ஆன்ம தரிசனம் செய்து கொள்ளும் நிலை

திதிகள்

சந்திரன் சுற்றிவர ஆகும் காலம். சந்திரனின் வளர்பிறையில் 15 திதிகளும், தேய்பிறையில் 15 திதிகளும் இடம்பெறும்.

சுக்கிலபட்ச திதிகள் - அமாவாசையில் தொடங்கி வரும் 15 திதிகள்
அமரபட்ச திதிகள் - பௌர்ணமியிலிருந்து தொடங்கி வரும் 15 திதிகள்

1) பிரதமை 2) துதியை 3) திருதியை 4) சதுர்த்தி 5) பஞ்சமி
6) சஷ்டி 7) சப்தமி 8) அஷ்டமி 9) நவமி 10) தசமி
11) ஏகாதசி 12) துவாதசி 13) திரயோதசி 14) சதுர்த்தசி 15) பௌர்ணமி அல்லது அமாவாசை

திருமாலின் பத்து அவதாரங்கள்

1. மச்ச அவதாரம்

கோமுகன் என்னும் அசுரன் வேதங்களைத் திருடி விழுங்கிவிட்டு மீன் வடிவில் கடலுக்கு அடியில் சென்று ஒளிந்து கொண்டான்.
அவனை கண்டுப்பிடித்து வதைக்க திருமால் மேற்கொண்டதே மச்ச அவதாரம்.

2. கூர்ம அவதாரம்

பாற்கடலைக் கடைந்து அமிர்தம் பெற மந்தார மலையை மத்தாகப் பயன் படுத்தியபோது, அதற்கு முட்டுக் கொடுக்க திருமால்
மேற்கொண்ட ஆமை அவதாரம்.

3. வராக அவதாரம்

இரண்யாட்சன் என்னும் அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டி கடலுக்குள் ஒளிக்க முயன்ற போது, அதை மீட்க திருமால்
மேற்கொண்ட பன்றி அவதாரம்.

4. நரசிம்ம அவதாரம்

பக்தன் பிரகலாதனை காத்து ரட்சிக்கவும், பிரகலாதனின் தந்தை இரணியகசிபுவை சிட்சிக்கவும் திருமால் மேற்கொண்ட
அவதாரம். உடல் மனிதனாகவும், தலை சிங்கமாகவும் தோன்றிய அவதாரம்.

மேலே உள்ள நான்கு அவதாரங்களிலும் திருமாலுக்குப் பெற்றோர் கிடையாது.

5. வாமன அவதாரம்

காசிபன், அதிதி ஆகியோருக்கு வாமன உருவில் பிறந்து, மாபலிச் சக்கரவர்த்தியை யாசித்து தானம் கேட்டு திருமால்
வதை செய்வது வாமன அவதாரம்.

6. பரசுராம அவதாரம்

ஜமத்கினி முனிவருக்கும், ரேணுகைகும் மகனாகப் பிறந்து, பிராமணர்களைக் காக்க மறுத்த க்ஷத்திரிய குலத்தைப்
பூண்டோடு அழிக்க முற்பட்ட அவதாரம் இது.

7. இராம அவதாரம்

அயோத்தி மன்னன் தசரதனுக்கும் கோசலைக்கும் மகனாய் பிறந்து, சீதையை மணம் முடித்து, இராவணனையும்
இதர அரக்கர்களையும் கொல்வதற்கு எடுத்த அவதாரம்.

8. பல பத்திரர் அவதாரம்

பல பத்திரர் கிருஷ்ணனின் ஒன்று விட்ட சகோதரர் உறவு முறை. இவருடைய தந்தைப் பெயர் வசுதேவர். அவருக்கு
தேவகி, ரோகிணி என இரண்டு மனைவியர் உண்டு. பல பத்திரர் அவதாரம் பிரலம்பன் என்கிற அரக்கனை அழிக்க நேர்ந்த அவதாரம்.

9. கிருஷ்ண அவதாரம்

வசுதேவருக்கும் தேவகிக்கும் மகனாய்ப் பிறந்து, பாரதப் போரை நடத்தி, உலகத்திற்குத் தேவையான கீதாபதேசம் செய்த அவதாரம்.

10. கல்கி அவதாரம்

உலகை அழித்துப் புது உலகினைப் படைப்பதற்காக திருமால் மேற்கொள்ளவிருக்கிற அவதாரம் இன்னும் நிகழவில்லை.
Read more ...

பஞ்சகவ்வியம்

Monday, July 18, 2011
பஞ்சகவ்வியம்

பஞ்சகவ்வியம் செய்யவேண்டும். அது செய்யும் முறையாவது, ஈசுவரனுடைய கிழக்குப் பாகத்திலாவது அல்லது ஈசானபாகத்திலாவது ஒன்று அல்லது இரண்டு கைமுழ அளவு நான்கு முக்குச்சதுரமாகக்¢ கோமயத்தால் மெழுகி, கிழக்குநுனியாகவும் வடக்குநுனியாகவும் நான்கு நூல்களால் தனித்தனி ஒரு சாணளவுள்ள ஒன்பது கோஷ்டங்களைக்கீறி, ஒவ்வொரு கோஷ்டத்திலும், குருணியாவது, அதற்குப் பாதி அளவுள்ள நெல்லையாவது, அதனினும் பாதி அளவுள்ள அரிசியையாவது, அல்லது தருப்பையையாவது பரப்பி, வடக்கு முகமாக இருந்துகொண்ட நான்கு திக்கிலும் வடக்கு நுனியாகவும் கிழக்கு நுனியாகவுமுள்ள ஐந்து தருப்பைகளைப் பரப்பி,

நான்கு பக்கங்களிலும் புஷ்பங்களால் அலங்காரஞ்செய்து,

சிவதத்துவாய நம:,
சதாசிவதத்துவாய நம:,
வித்தியாதத்துவாய நம:,
புருஷதத்துவாய நம:,
காலதத்துவாய நம:,
பிருதிவி தத்துவாய நம:,
ஜல தத்துவாய நம:,
வாயு தத்துவாய நம:,
பிரகிருதி தத்துவாய நம:


என்று சொல்லிக்கொண்டு, நடு, கிழக்கு, தெற்கு, வடக்கு, மேற்கு, ஆக்கினேயம், நிருதம், மாருதம், ஈசானம் என்னும் ஒன்பது கோஷ்டங்களைப் பூசித்து, சுவர்ணபாத்திரம், வெண்கலபாத்திரம், அல்லது உடையாததாயும் கருப்பு நிறமில்லாததாயுமுள்ள மண் பாத்திரங்களையாவது சுத்தஞ் செய்து

ஒன்பது கோஷ்டங்களிலும் வைத்து,

சுப்பிரதிஷ்டபாத்திராய நம:,
சுசாந்தபாத்திராய நம:,
தேஜோமயபாத்திராய நம:,
ரத்தினோதகபாத்திராய நம:,
அமிருதபாத்திராய நம:,
வியக்தபாத்திராய நம:,
சூரியபாத்திராய நம:,
சம்யுக்தபாத்திராய நம:,
அவ்வியக்தபாத்திராய நம:


என்று சொல்லிக்கொண்டு, மேலே கூறியவாறு கோஷ்ட முறையாகப் பாத்திரங்களைப் பூசித்து, தாம்பிரவர்ணமான பசுவின் பாலை மூன்று உழக்கு அளவு நடுப்பாத்திரத்திலும், வெண்மைவர்ணமான பசுவின் தயிரை இரண்டு உழக்கு அளவு கிழக்குப் பாத்திரத்திலும், கபிலவர்ணமான பசுவின் நெய்யை ஒரு உழக்கு அளவு தெற்குப் பாத்திரத்திலும், கருப்புவர்ணமான பசுவின் நீரை இரு அஞ்சலிகள் கொள்ளும் அளவு வடக்கு பாத்திரத்திலும், கருப்புவர்ணமான பசுவின் சாணத்தை ஒரு உழக்கு அளவு எடுத்து ஐந்து உழக்கு நீர் சேர்த்து ஆடையினால் சுத்தி செய்து மேற்குப் பாத்திரத்திலும், விளாம்பழ அளவாவது அல்லது அதற்க் பாதி அளவாவது, அல்லது அதனினும் பாதி அளவாவது, அரிசி, நெல்லிக்கனி, மஞ்சளென்னுமிவைகளையரைத்து எடுத்து ஆக்கினேயம், நிருதம், வாயு என்னுமிந்த மூலைகளிலுள்ள பாத்திரங்களிலும், முப்பத்தாறு, அல்லது இருபத்தைந்து, அல்லது பன்னிரண்டு தருப்பைகளைச் சேர்த்து நீரில் போட்டு, முப்பத்தாறு முதலாகக் கூறப்பட்ட அளவில் பாதியாகிய வேறு தருப்பைகளால் செய்யப்பட்டதாயும், பிரதக்ஷிணமாக வாயுதிக்கில் நின்று சுற்றப்பட்டதாயும், ஒரு கையளவாகவாவது, அல்லது ஒரு ஒட்டையளவாகவாவது உள்ளதாயும், இரண்டங்குல அளவுள்ள முடிச்சுடனும், நான்கு அங்குல அளவுள்ள நுனியுடனும் கூடின கூர்ச்சத்தைச் செய்து, அதை ஒரு மரக்கால் அளவுள்ளதும், சந்தனம், அறுகு என்னுமிவற்றுடன் கூடினதுமான நீரில் போட்டுக் குசோதகஞ் செய்து, ஈசானகோண பாத்திரத்தில் இருதயமந்திரத்தால் அந்த நீரை விட்டு, பால்முதல் கோமயம் ஈறாகவுள்ள பஞ்சகவ்வியங்களை முறையே ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு, ஒருமுறை ஈசானாதி மந்திரங்களாலும், அரிசிமாவை இருதயமந்திரங்களாலும், நெல்லிமாவை சிரோமந்திரத்தாலும், மஞ்சளைக்கவச மந்திரத்தாலும், குசோதகத்தை ஆறுமுறை ஆவர்த்தி செய்த பஞ்சப் பிரம்மமந்திரத்தாலும் அபிமந்திரணஞ் செய்ய வேண்டும்.

அதன்பின்னர், கோமயத்தைக் கோசலத்திலும், அவ்விரடனையும் நெய்யிலும், அம்மூன்றனையும் தயிரிலும், அந்நான்கினையும் பாலிலும் இருதயமந்திரத்தால் சேர்த்து, அதிலேயே குசோதகத்தையும் மூலமந்திரத்தால் சேர்க்கவேண்டும். பின்னர் பஞ்சப்பிரம மந்திரம் ஷடங்கமந்திரங்களால் அபிமந்திரணஞ் செய்து, அஸ்திரமந்திரத்தால் சம்ரக்ஷணமமும், கவசமந்திரத்தால் அவகுண்டனமுஞ் செய்து, தேனுமுத்திரை காட்டி, கந்தம் புஷ்பங்களால் பூசித்து, அஸ்திரமந்திரத்தால் தூபதீபங்காட்டி, மூலமந்திரத்தால் அபிமந்திரணஞ் செய்ய வேண்டும்.

பஞ்சகவ்வியமுறை முடிந்தது.
Read more ...

சித்தாந்தம்

Monday, July 18, 2011
சித்தாந்தம்
சைவ சித்தாந்தம் என்னும் தத்துவப் பிரிவு சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடுகின்ற சமய நெறி சைவ சமயத்துக்கு அடிப்படையாக விளங்குகிறது. சித்தாந்தம் என்பது சிந்தித்துக் கண்டறிந்த முடிவான உண்மை எனப்பொருள்படும். (அந்தம் - முடிவு). ஆன்மீகம் தொடர்பான பல்வேறு கருத்துக்களையும் ஆராய்ந்து சிந்தித்து முடிந்த முடிவாகக் காணப்பட்டது சைவசித்தாந்தம்.
சிவ வணக்கம்
சிவ வணக்கம் ஆரியருக்கு முற்பட்ட இந்தியாவிலேயே தோன்றியதாகச் சில அறிஞர்கள் கருதுகிறார்கள். சிந்து வெளியில் கண்டெடுக்கபட்ட சிவலிங்கதொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு போன்ற சங்கத் தமிழ் இலக்கிய நூல்களிலும், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற நூல்களிலும் சிவன் அல்லது சைவம் என்ற சொற்கள் நேரடியாகப் பயன் படுத்தப்படாவிட்டாலும், சிவன் தொடர்பான செய்திகள் ஆங்காங்கே உள்ளன. திருக்குறளிலும் கூட சைவ சித்தாந்தக் கருத்துக்களை ஒத்த கருத்துக்கள் காணப்படுகின்றன. வடிவங்கள் இதற்குச் சான்றாக இருப்பதாகவும் அவர்கள் கருதுவர்.
இவ்வாறு சிவ வணக்கத்துக்குரிய சான்றுகள் ஆரியருக்கு முற்பட்ட காலங்களிலிருந்தே கிடைத்து வந்தாலும், சைவ சித்தாந்தம் ஒரு தத்துவப் பிரிவாக உருவானது கி.பி. ஐந்தாம் நூற்றாண்டளவிலேயே என்று கருதப்படுகின்றது. இக்காலப் பகுதியில் வாழ்ந்த திருமூலரால் எழுதப்பட்டதும், சைவ சித்தாந்தத்தின் சாரம் என்றும் கருதப்படும் திருமந்திரம் என்னும் நூலிலேயே சைவ சித்தாந்தம் என்ற சொற்பயன்பாடு முதல் முதலில் காணப்படுகின்றது.
சைவ சித்தாந்தத்தின் அடிப்படை நூல்கள்
இந்தியாவில் இந்து சமயத்தின் பெரும்பாலான தத்துவப் பிரிவுகள் வேதங்களையும் அவற்றின் இறுதிப்பகுதியாகக் கொள்ளப்படும் உபநிடதங்களையும் அடிப்படையாகக் கொண்டிருக்க, சைவ சித்தாந்தம் வேதங்களையும், ஆகமங்களையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஏராளமான ஆகமங்கள் உள்ளன. இவற்றுள் சில சைவ சமயத்துக்கும், வேறுசில வைணவ சமயத்துக்கும், மற்றவை சாக்த சமயத்துக்கும் உரியவை. சைவ சித்தாந்தத்துக்கு அடிப்படையான சைவ ஆகமங்கள் 28 ஆகும். இவற்றுட் தலையாயவை காமிகாகமம், காரணாகமம் என்பன.
சைவ சித்தாந்தத்தை விளக்கும் நூல்களில் சிறப்பானதாகக் கருதப்படுவது மெய்கண்டார் எழுதிய சிவஞான போதம் ஆகும். இதனுடன் சேர்த்து பல ஆசிரியர்களால் எழுதப்பட்ட 14 நூல்கள் சைவ சித்தாந்தத் தத்துவ விளக்க நூல்களாகும். இவற்றுட் தலையாய சிவஞான போதத்தை இயற்றிய மெய்கண்டாரின் பெயரைத் தழுவி இவை மெய்கண்ட சாத்திரங்கள் என வழங்கப்படுகின்றன.
தத்துவ அடிப்படைகள்

பதி (இறைவன்)
பசு (உயிர்)
பாசம் (மலங்கள்)

ஆகிய மூன்றையும் என்றென்றும் உள்ள நிலைத்த பொருள்களாக ஏற்றுக்கொள்வது சைவ சித்தாந்த தத்துவத்தின் அடிப்படையாகும். சைவ சித்தாந்தத்தின்படி இம் மூன்றுமே முதலும் முடிவும் இல்லாதவை. இதனால் இவை மூன்றையுமே யாரும் படைத்ததில்லை என்கிறது சைவ சித்தாந்தம். ஆயினும், என்றும் நிலைத்திருக்கும் இம் மூன்றும் வெவ்வேறு இயல்புகளைக் கொண்டவை எனக்கூறும் இத் தத்துவம் இவை பற்றிப் பின்வருமாறு விளக்குகின்றது.

இறைவன்: அறிவு வடிவாகவே இருக்கும் இறைவன் எல்லாம் அறிந்தவன், எங்கும் நிறைந்திருப்பவன், அளவற்ற வல்லமை பெற்றவன்.
உயிர்: உயிர்கள் இயல்பாகவே அறிவுள்ளவை ஆனால் மலங்களினால் பிணிக்கப்படும்போது அவற்றின் அறிவு மறைக்கப்படுகின்றது. மலங்களின் பிணிப்பிலிருந்து தாங்களாகவே விடுபடுவதற்கு உயிர்களால் முடியாது. இறைவன் துணையுடனேயே மலங்களின் பிணைப்பிலிருந்து உயிர்கள் விடுபட முடியும்.
மலங்கள்: மலங்கள் சடப்பொருள்கள். அறிவற்றவை. உயிர்களைப் பிணித்து அவற்றின் அறிவை மறைக்கும் வல்லமை கொண்டவை. இவை இறைவனை அடைய முடியாது.
Read more ...

சிவபுராணம்

Monday, July 18, 2011
சிவபுராணம்

சிவபுராணம்

நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5

வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10

ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி

சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். 20

கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் 25

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35

வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40

ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45

கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50

மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55

விலங்கு மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60

தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65

பேராது நின்ற பெருங்கருணைப் போராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70

அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் 75

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 85

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90

அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95


திருச்சிற்றம்பலம்.
Read more ...

சிவபுராணம்

Monday, July 18, 2011
சிவபுராணத்தின் நோக்கம்

முன் செய்த பாவ புண்ணியங்கள் அனைத்தும் தீர்வதற்காக உள்ளம் மகிழும் வகையில் சிவபுராணத்தைக் கூறுகிறேன் என்னும் பொருள்பட, சிவபுராணம் பாடியதன் காரணத்தை அதன் 19 ஆம், 20 ஆம் அடிகளில் விளக்கியுள்ளார் மாணிக்கவாசகர். சைவசித்தாந்தக் கொள்கைகளின்படி, உயிர்கள் செய்யும் நன்மை, தீமை ஆகிய இரு வினைகளும் அவை மீண்டும் மீண்டும் பிறப்பதற்குக் காரணமாக அமைவதுடன், உயிர்கள் இறைவனை அடைவதற்கும் தடையாக அமைகின்றன. இதனாலேயே, முந்தை வினைகள் அனைத்தும் ஓய இறைவன் அருள் தேவை என்பதை எடுத்துக் கூறுகிறது சிவபுராணம். இதன் இறுதி அடிகளும், அல்லல் நிறைந்த பிறவியை நீக்கும் வல்லமை பெற்ற திருவடிகளைப் பணிந்து சொல்லப்பட்ட இப்பாடலைப் பொருள் உணர்ந்து சொல்லுபவர்கள் சிவபெருமானின் திருவடிகளை அடைவார்கள் என்று வலியுறுத்துகின்றன.

சிவபுராணத்தின் அமைப்பு

உயிர், தான் செய்யும் வினைகளின் விளைவுகளினால் மீண்டும் மீண்டும் உலகில் பிறந்து அழுந்துவதில் இருந்து விடுதலை பெற்றுச் சிவனை அடைவதற்காக இறைவனை வேண்டுவதாக அமைந்திருப்பது இப்பாடல்.

நமச்சிவாய வாழ்க என்று தொடங்கி, முதல் பதினாறு அடிகள் வரை, இறைவனை வாழ்த்துவதாக அமைந்துள்ளன.
பதினேழாவது அடியிலிருந்து இருபது வரை நூலின் நோக்கம் பற்றியும், அதை எழுதுவதற்கு ஆக்கியோனுக்கு உள்ள தகுதியும் கூறப்படுகின்றன.
பின்னர் இறைவனைப் புகழ்ந்து, உயிர் தன்னுடைய குறைகளை இறைவனுக்குத் தெரியப்படுத்தும் அடிகள் வருகின்றன. உயிர், உலகில் பல்வேறு வடிவங்களிற் பிறந்து களைத்துப் போனதைக் கூறுவதாக இருபத்தாறு முதல் முப்பத்தோராவது வரையான ஆறு அடிகள் அமைந்துள்ளன.
இறைவன் திருவடிகளைக் கண்டதில் வீடு பேறு அடைந்த மகிழ்ச்சியைத் தெரியப்படுத்தும் 32 ஆவது அடியைத் தொடர்ந்து மீண்டும் இறைவனின் புகழ் கூறப்படுகின்றது.
50 தொடக்கம் 55 வரையான அடிகள், உயிர், தன்னைச் சுற்றி அமைந்துள்ள மாயையினால் உருவான உடல் பற்றியும், அவ்வுடலின் ஐந்து புலன்களும் தன்னை ஏமாற்றுவதையும் எடுத்துக்கூறுவதாக அமைந்துள்ளது.
தொடர்ந்து 83 ஆவது அடிகள் வரை இறைவனின் புகழ் கூறப்பட்டு, 84 ஆம், 85 ஆம் அடிகளில் பல்வேறு வடிவங்களில் இருக்கும் உடம்பினுள் கட்டுப்பட்டிருக்க முடியாமல் இருக்கும் நிலையைக் கூறி உயிர் புலம்புகிறது.
மீண்டும் இறைவனின் புகழ்ச்சியுடன், இந் நூலைப் பொருள் உணர்ந்து சொல்லுபவர்கள் அடையக்கூடிய பயனை இறுதி நான்கு வரிகளில் கூறி நூல் நிறைவு எய்துகிறது.

சிவபுராணத்தில் சைவசித்தாந்தக் கருத்துக்கள்


சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடும் சைவ சமயம் தமிழ் நாட்டில் சைவசித்தாந்தக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. இறைவன், உயிர், அதனைப் பீடிக்கும் மலங்கள் ஆகிய மூன்றும் என்றும் நிலைத்திருக்கும் உண்மைகள் என்றுகூறும் சைவ சித்தாந்தம், அவற்றின் இயல்புகள், அவற்றிடையேயான தொடர்புகள் என்பன பற்றிக் கூறி, உயிர்களின் விடுதலையும் இறுதி நோக்கமுமாகிய, இறைவனை அடையும் வழிமுறைகள் பற்றியும் கூறுகிறது.

இறைவனுடைய இயல்புகள், உயிரின் தன்மை, அவற்றை மலங்கள் பீடித்திருத்தல், உயிர்கள் திரும்பத் திரும்பப் பிறக்கவேண்டியிருத்தல், உயிர்களின் விடுதலை, உயிர்களை விடுவிப்பதில் இறைவனின் பங்கு, இறைவன் அருளைப் பெறுவதில் உயிர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்பன தொடர்பாகச் சிவபுராணத்தில் குறிப்புக்கள் வருகின்றன.

இந்து சமயத்தின் ஒரு பிரிவு என்ற வகையில் சைவம் வேதங்களை ஏற்றுக்கொண்டாலும், ஆகமங்கள் எனப்படும் நூல்களே சைவசித்தாந்தத்தின் உயிர்நாடியாக விளங்குபவை.

சிவபுராணம் தொடக்கத்திலேயே இறைவனைப் போற்றும்போது, தானே ஆகமம் ஆகி நின்று உயிர்களுக்கு அருகில் வருபவன் என்ற பொருள்பட ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் என்று கூறுகிறது. இதன் மூலம், உயிர்களின் விடுதலைக்கு ஆகமங்களின் இன்றியமையாமை வற்புறுத்தப்படுகிறது.

இறைவன்

சைவ சித்தாந்தம் கூறும் மூன்று உண்மைப் பொருள்களுள் இறைவனும் (பதி) ஒன்று. அவன் அறிவு வடிவமானவனும், எங்கும் நிறைந்திருப்பவனும், எல்லாவல்லமையும் உடையவனும் ஆவான் என்பதும்; படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய ஐந்தொழில்களை அவன் புரிகிறான் என்பதும் சைவ சித்தாந்த மரபு. இந்தக் கருத்துக்கள் சிவபுராணத்தின் பின் வரும் அடிகளில் எடுத்து ஆளப்படுகின்றன.

மெய் ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச் சுடரே
ஆக்கம் அளவு இறுதி இல்லாய்
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,

எண் இறந்து எல்லை இலாதானே

அளவிலாப் பெம்மானே
தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
அனைத்து உலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்

போக்குவாய்

உயிரும், மலங்களும்

உயிரும் உண்மைப் பொருளே, அதற்கும் அறிவு உண்டு, ஆனாலும் அதனை இயல்பாகவே பீடித்துள்ள ஆணவ மலத்தினால் அதன் அறிவு முற்றாக மறைக்கப்பட்டுள்ளது என்கிறது சைவ சித்தாந்தம். முற்பிறவியின் வினைப் பயன்கள் கன்மம் என்னும் மலமாகவும், வினைப் பயன்களை நுகர உதவும், உடல் மற்றும் உலகப் பொருட்கள் வடிவில் மாயை என்னும் மலமும் இடையில் வந்து உயிரைப் பீடிக்கின்றன. இக்கருத்துக்கள் சிவபுராணத்தின் பின்வரும் அடிகளிலே காணக் கிடைக்கின்றன.

எஞ்ஞானம் இல்லாதேன்
பொல்லா வினையேன்
வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப ஆற்றேன்

பிறவிச் சுழல்

உயிர்கள் ஒவ்வொரு பிறவியிலும் செய்யும் நல்வினை, தீவினைகளின் பயன்களை நுகர்வதற்காக அவை புதிய பிறவிகளை எடுத்துப் பிறவிச் சுழலில் சிக்கிக் கொள்கின்றன. இச் சைவ சித்தாந்தக் கொள்கை சிவபுராணத்தின் அடிகளிலே பொதிந்துள்ளன.

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்

வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப ஆற்றேன்.


இச் சுழலிலிருந்து நீங்கி விடுதலை பெறுவதற்கு இறைவன் திருவருள் தேவைப்படுகிறது. பிறவிச் சுழலிலிருந்து உயிர்களை மீட்க வல்லவன் இறைவனே என்னும் சைவ சித்தாந்தக் கருத்துக்கள் சிவபுராணத்தின் பல அடிகளிலே காணப்படுகின்றன.
Read more ...

சிவன்கண்

Monday, July 18, 2011
ருத்ராக்ஷ்ம்

ருத்ராக்ஷ்ம் என்பது ஒரு வகையான மரத்தின் விதைகள்.ருத்ராக்ஷ்ம் என்றால்ருத்திரன்+அஷம்=சிவன்கண்.அதாவது சிவனீன் கண்களில் இருந்து தோன்றியாதாகும்.மேலும் இதனை சிவனீன் சொரூபம் என்றும் கூறலாம். ருத்திரன் என்றால் தீமைகளை அழிப்பவன்.

ருத்ராக்ஷ்ம் தோன்றிய புராணக்கதை


முன்னொரு காலத்தில் தாரகாஷன்,கமலாஷன்,வித்யுன்மாலி என்ற அசுரர்கள் இருந்தார்கள்.இவர்களுக்கு திரிபுர அசுரர்கள் என்று பெயர். திரிபுர அசுரர்கள் கடுமையான தவம் செய்து பெற்ற வரங்கள் மற்றும் சக்திகளை கொண்டு பூலோகம் தேவலோகம் மீது படையெடுத்து சென்று மக்களையும்,தேவர்களையும் வாட்டி வதைத்தனர்.இதனால் துன்புற்ற தேவர்கள் சிவனிடம் சென்று தங்களை காப்பாற்றுமாறு வேண்டினர். தேவர்களின் நிலைமை கண்ட சிவன் அவர்களை காக்கும் பொருட்டு ஆயிரம் ஆண்டுகள் கண் விழித்திருந்து அகோரஸ்திரம் என்ற அஸ்திரத்தை படைத்து அந்த அஸ்திரத்தின் மூலம் திரிபுர அசுரர்களை வதம் செய்தார். தேவர்களின் நிலைக் கண்டு வருந்தினார் அப்பொழுது சிவனின் கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் பூமியில் விழுந்து ருத்ராக்ஷ்ம் மரங்களாக தோன்றின.

ருத்ராக்ஷ்ம் மரம் பற்றிய தாவரவியல் தகவல்கள்

ருத்ராக்ஷ்ம் என்பது ஒரு வகையான மரத்தின் விதைகளே ஆகும். ருத்ராக்ஷ்ம் விதைகள் அம்மரத்தின் பழுத்த பழங்களில் இருந்து கிடைக்கிறது.

ருத்ராக்ஷ்ம் மரங்கள் முழுமையாக வளர்ச்சியடைந்து பயன்தர 12முதல் 15ஆண்டுகள் ஆகின்றன.ருத்ராக்ஷ்ம் மரங்கள் முற்றிய நிலையில் 80அடி உயரம் வரை வளரும்.இவற்றின் ஆயுள் காலம் சராசரியாக100ஆண்டுகள் ஆகும்.இவற்றின் இலைகள் பச்சை நிறமாகவும்,பூக்கள் வெண்மை நிறமாகவும்,கனிகள் கருநீலமாகவும் இருக்கும்.

ருத்ராக்ஷ்ம்தாவரவியல்பெயர்"எலொபோ கார்பஸ்"(Eloeocarpus)என்பது பொதுப்பெயர் ஆகும்."எலொபோ கார்பஸ்ஜெனிட்ரஸ்", (EloeocarpusGenitrus),"எலொபோகார்பஸ் செர்ரடஸ்" (Eloeocarpus Serratus) என்ற பெயர்களுடன் ஏறக்குறைய 25 வகையான மரங்கள் உள்ளன.
ருத்ராக்ஷ்ம் மரம்

ருத்ராக்ஷ்ம் கனி


ருத்ராக்ஷ்ம் மணிகளில் இயற்கையிலே தூவாரங்கள் மற்றும் கோடுகள் அமைய பெற்றிருக்கும். இந்த கோடுகளை முகம் என்று அழைக்கிறோம். ருத்ராக்ஷ்ம் முகம் கோடுகளை கொண்டுதான் கணக்கிடபடுகின்றன
Read more ...

காகபுசுண்டர்

Tuesday, July 12, 2011
ஞானம் 80
கயிலாய மலையில் ஒருநாள் மும்மூர்த்திகளும் தேவர்களும்
கூடியிருக்கும் சமயத்தில் சிவபெருமானுக்குத் திடீரென்று ஒரு சந்தேகம்
எழுந்தது. “இந்த உலகம் எல்லாம் பிரளய காலத்தில் அழிந்து விட்ட பிறகு
எல்லோருக்கும் குருவான நமசிவாயம் எவ்விடத்தில் தங்கும்? பிரம்மா,
விஷ்ணு, ருத்திரன், மகேசுவரன், சதாசிவம் ஆகிய ஐவரும் எங்கே
இருப்பார்கள் என்பது யாருக்காவது தெரியுமா?” என்று கேட்டார்.

சிவபெருமானின் கேள்விக்கு யாருக்கும் பதில் தெரியவில்லை. எல்லாப்
பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் விஷ்ணுவும் மௌனமாயிருந்தார்.
மார்க்கண்டேயனுக்கு ஆச்சரியம். விஷ்ணுவுக்குக் கூடவா விடை
தெரியவில்லை? மார்க்கண்டேயனின் பார்வையின் அர்த்தத்தைப் புரிந்து
கொண்ட விஷ்ணுவும், “உங்கள் கேள்விக்குப் பதில் சித்தர்களிடம்தான்
கிடைக்கும். குறிப்பாக புசுண்ட முனிவரைக் கேட்டால் தெரியும். அவரை
இங்கு அழைத்து வந்து கேட்ப தென்றால் வசிட்ட முனிவரைத்தான் அனுப்ப
வேண்டும்” என்றார்.

தேவர்களுக்கெல்லாம் ஒரே ஆச்சரியம். தேவர்களான தங்களால் யூகிக்க
முடியாத ஒன்றை சித்தர் ஒருவர் யூகித்துக் கூறுவார் என்பதை அவர்களால்
நம்ப முடியவில்லை. எதனால் நீர் இப்படிக் கூறுகின்றீர்? என்று அனைவரும்
விஷ்ணுவைக் கேட்டனர்.

பிரளய காலத்தில் எல்லாம் அழிந்து விட்ட நிலையில் எனக்கு ஏதும்
வேலையில்லாததால் நான் ஆலிலையின் மீது அறிதுயிலில் ஆழ்ந்திருந்தேன்.
என்னுடைய சக்கரம் வெகு வேகமாகச் சுழன்று கொண்டிருந்தது. அந்த
வேகத்தில் அதனைக் கட்டுப்படுத்துவது என்பது யாராலும் முடியாத காரியம்.
ஆனால் அப்போது அங்கு வந்த காகபுசுண்டர் எப்படியோ அந்தச்
சக்கரத்தை ஓடாமல் நிறுத்திவிட்டு அதைக் கடந்து சென்றார். அதனால்
அவர் எல்லாம் வல்லவர் என்பதை அறிந்தேன் என்றார் விஷ்ணு.

இப்படியெல்லாம் அறிந்தவர் என்று தேவர்களாலேயே ஒப்புக்
கொள்ளப்பட்ட இந்த காகபுசுண்டருக்கு எப்படி இந்தக் காரணப்பெயர்
ஏற்பட்டது என்பதற்கு போக முனிவர் விளக்கம் கூறுகின்றார்.

முன்பு ஒரு காலத்தில் சக்தி கணங்கள் மது உண்டு நடனமாடிக்
களித்திருக்கையில் அப்போது அங்கு சிந்திய மதுத்துளிகள் குடிநீரில்
கலந்துவிட, அந்த நீரினைப் பருகிய தேவலோகத்து அன்னங்களும்
மனமயக்கத்துடன் மகிழ்ச்சியில் ஆடிக்கொண்டிருந்தன. இந்த மதுக்களிப்பு
நடனத்தை சிவனும் பார்வதியும் கண்டு மகிழ்ந்திருக்கும் வேளையில்
மகிழ்ச்சியின் எல்லையில் சிவகணமானது காகத்தின் உருவில் அன்னத்தைச்
சேர அன்னம் அப்போதே கர்ப்பமுற்று இருபத்தொரு முட்டைகள் இட,
இருபது அன்னக் குஞ்சுகளையும் ஒரு காகத்தையும் பொரித்தது. இருபது
அன்னங்களும் அநேக நாட்கள் வாழ்ந்து முக்தியடைய, சிவகலையால் பிறந்த
காகம் மட்டும் அழியாமல் இருக்கும் பேறு பெற்றது. அந்தக் காகமே இந்த
காகபுசுண்டர் என்று சித்தர் பாடல்கள் இவர் வரலாற்றைத் தெரிவிக்கின்றன.


வர ரிஷியின் சாபத்தால் உலகத்தில் சந்திர குலம் விளங்க ஒரு
வெள்ளாட்டின் (விதவை) வயிற்றில் பிறந்தவர் இவர் என்றும், பிரளய
காலத்தில் காக்கை வடிவெடுத்து அப்பிரளயத்திலிருந்து தப்பிப் பிழைத்து
அநேக கோடி வருடங்கள் ஜீவித்து இருந்தாரென்றும் ஒரு வரலாறு
தெரிவிக்கின்றது.

காகபுசுண்டர் அன்னத்தின் முட்டையிலிருந்து பிறந்தவரா?
வெள்ளாட்டின் பிள்ளையாகப் பிறந்தவரா? என்னும் ‘ரிஷிமூலம்’ இன்னும்
உறுதிப்படுத்த முடியாத தேவரகசியம்.

இவர் தமிழ் நாட்டில் பிறந்தவர். இவர் உருவம் கருமையாக இருக்கலாம்;
எதையும் கூர்ந்து பார்த்து உண்மை காணும் தன்மையுள்ளவராய் இருக்கலாம்.
உண்மைகளைக் காணப் பலவிடங்களிலும் அலைந்து திரிந்தவராயிருந்த
மையால் இவர் காகபுசுண்டர் என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்று சாமி
சிதம்பரனார் கூறுகின்றார்.

இவர் காக்கை வடிவில் இருந்து பல இடங்களிலும் சுற்றித் திரிந்தமைக்கு
இவர் பாடல்களிலேயே ஆதாரம் உள்ளது.

“காகம் என்ற ரூபமாய் இருந்து கொண்டு
காரணங்கள் அத்தனையுமே கருவாய்ப் பார்த்து
வேகமுடன் வெளியோட்ட நிலையாய்ப் பார்க்க
வெகுதூரம் சுற்றிஇன்னும் விபரம் காணேன்”

என்ற வரிகளால் இஃது உறுதிப்படுகின்றது.

தன்னுள்ளே இறைவன் கோயில் கொண்டுள்ளதை யறியாமல் வீணே
இந்த மனிதர்களெல்லாம் வெளியில் பல தெய்வங்கள் உண்டு என்று
அலைந்து திரிகின்றனரே என்பதை,“தானென்ற பிரமத்தை யடுத்திடாமல்
தரணியில் தெய்வமடா அனந்த மென்றும்” (24)

வரிகளில் சுட்டிக்காட்டி,

“முத்தியடா மந்திரத்தை நினைக்கும்போது
மோசமடா மனந்தானும் இரண்டாய்ப் போகும்
சக்தியடா மனந்தானே யோக மாகத்
தனித்திருந்து நித்திரையைத் தள்ளி மைந்தா!
புத்தியடா பிரமத்திற் புகுந்து கொண்டாற்
பூலோக மெல்லந்தான் பணியு முன்னே;
எத்தியே திரியாமற் பிடரி மார்க்கம்
ஏறுகின்ற வாசியுந்தான் கற்பந் தானே”

என்று வாசியோக மார்க்கத்தை இறைவனை அடையும் மார்க்கமாக
அறிமுகப்படுத்துகின்றார்.

“அறியலாம் மனந்தானே உயிர்தா னாகும்
அண்டத்திற் சேர்ந்திடவே ஆகும் முத்தி
பரியேறிச் சவாரியுமே நடத்த லாகும்
பஞ்சமா பாதகங்கள் பறந்தே போகும்
விரிவான மனந்தனையும் அணுவ தாக்கி
விட்டகுறை தொட்டகுறை விதியைப் பார்த்துக்
குறியான குண்டலியா மண்ட வுச்சி
கூறுகிறேன் முக்கோண நிலைதாமே” (26)

என்று வாசியோகத்தின் மூலம் குண்டலி யோகம் செய்து இறைவனைக்
காணும் மார்க்கத்தைப் போதிக்கின்றார். மேலும்,

“தாமென்ற உலகத்தில் மனித ரோடே
சஞ்சாரஞ் செய்யாற் றனித்து நில்லே
ஓமென்ற ஊண் மிகுந்து உண்டி டாதே
ஓரமாய் வழக்கதனை உரைத்தி டாதே
ஆமென்ற அட்சரத்தை மறந்தி டாதே
ஆயாச மாகவுந்தான் திரிந்தி டாதேகாமப்பேய் கொண்டவனோ டிணங்கிடாதே
காரணத்தைக் கண்டு விளையாட்டு வாயே”

“விளையாடிக் கருநெல்லி பறித்தே உண்ணு
வேகாத தலையாகும் விரும்பிப்பாரு
மலையாமல் வொண்சாரை பிடித்தே யுண்ணு
மைந்தனே சாகாக்கா லதுவே யாகும்
அலையாமல் சோதியதன் பாலை யுண்ணே
அக்கினியாம் கம்பமடா சுழுமுனை யாச்சுக்
கலைநாலு போகிறதை யெட்டிற் சேரு
கபடமற்ற தேகமடா கண்டு பாரே” (28)

இது மனம் காமவயப்படாமல் வாசியோகம் மூலம் குண்டலி எழுப்பி
நித்திய தேகம் பெறும் முறையை உபதேசித்தது ஆகும்.

இவர் கூறும் இந்த அக்கினி கம்பம் சுழுமுனை நாடியாகும். இதனை,

“நேரப்பா நெடுந்தூரம் போகும்போது
நிச்சயமாய்க் கம்பத்தின் நிலையைக் கண்டேன்;
வீரப்பா அக்கினி போல் படர்ந்து நிற்கும்
வெளியொன்றுந் தெரியாம லிருக்குந்தானே”

என்று சுழுமுனைக்கு விளக்கம் தருகின்றார். இந்த சுழுமுனையின் முடிவில்
மனோன்மணி வீற்றிருக்கும் நிலையை,

“இருக்குமடா எங்குமொன்றாய் அக்கினிக் கம்பம்
என்மகனே கம்பத்தின் நடுவே மைந்தா
உருக்கமுடன் பெண்ணரசி யொன்றி நிற்பாள்” (44)

என்று கூறுகின்றார்.

வாசியோகமே காயசித்தி உபாயமென்பதை,

“சாற்றுகிறே னென்மகனே வாசி நாதா
சத்தியமா யண்டத்திற் செல்லும் போது


போற்றுகிற அக்கினியும் பிரவேசித்துப்
புலன்களைந்துஞ் சேர்ந்ததனாற் போத மாகும்
மாற்றிலையும் அதிகமடா வுன்றன் தேகம்
மைந்தனே அபுரூப மாகுமப்பா
வாற்றியே நிழற் சாய்கை யற்றுப் போகும்
வலுத்ததடா காயசித்தி யாச்சப் பாரே” (55)

இவர் உலகில் நிலவும் சாதி வேற்றுமையைத் தம் பாடல்களில்
வெகுவாகக் கண்டித்துள்ளார். குருவைத் தேர்ந்தெடுப்பதில் மிக
எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறும் இவர் போலி குருவானவர்
உண்மையான பிரமத்தை அறியாதவர்கள் என்றும், அவர்கள் வெறும் வேத
ரகசியங்களை அறிந்ததினால் மட்டும் மெய்ஞானியராக மாட்டார்கள் என்றும்,
வெறும் காவியுடையும் யோக தண்டம் என்னும் முககோல் காலில் பாத குறடு
இவைகள் மட்டும் ஒருவரைக் குருவாக உருவகப்படுத்த இயலாது. இவர்கள்
எல்லாம் ஆணவம் கொண்ட பிறர் அஞ்சத்தக்க வேடதாரிகள் என்று கூறி,
இத்தகைய குருமார்கள் பணம் பறிப்பதிலேயே குறியாக இருப்பார்கள்
என்பார் காகபுசுண்டர்.

“குறியென்ற உலகத்தில் குருக்கள் தானும்
கொடிய மறை வேதம் எலாம் கூர்ந்துபார்த்து
அறியாமல் பிரமத்தைப் பாராமல்தான்
அகந்தையாய்ப் பெரியோரை அழும்புபேசி
விரிவான வேடம் இட்டுக் காவிபூண்டு
வெறும் பிலுக்காய் அலைந்திடுவான் நாயைப் போலே;
பரியாச மாகவும் தான் தண்டும் ஏந்திப்
பார்தனிலே குறடு இட்டு நடப்பான் பாரே”

“பாரப்பா சீடர்களை அழைப்பான் பாவி
பணம்பறிக்க உபதேசம் பகர்வோம் என்பார்”

சித்தர்களுக்குச் சாதியும் மதமும் இல்லை என்பதை காகபுசுண்டர் தம்
பாடலில் எடுத்துக் கூறுகின்றார்.

“சாண் அப்பா சாதிகுலம் எங்கட்கில்லை
கருத்துடனே என்குலம் சுக்கிலந்தான் மைந்தா”

இவர் அத்வைத கொள்கையில் உறுதியுடையவர் என்பது இவரது
ஞானப்பாடல்களால் புலனாகிறது. சித்தர்கள் பெரும்பாலும் அத்வைதக்
கொள்கையினர் என்பது ஆய்வாளர் முடிவு. ஜீவான்மாவும் பரமான்மாவும்
வேறல்ல. இரண்டும் ஒன்றேதான். இதை உணர்வதுதான் மெய்ஞானம்.
தன்னையும் பரமத்தையும் ஒன்றாக அறிந்து சமாதி நிட்டையில் இருப்பது
தான் ஜீவன் முக்தி நிலை என்றும், இதுவே சிவோகம் பாவனை என்றும்,

பரமான்மா என்பது சூட்சுமப் பொருள்; அதாவது கண்ணில் காண
முடியாத சூட்சுமப் பொருள் என்றும் அதைக் கண்ணால் காண முடிகின்ற
தூலப் பொருளில் தான் அறிய முடியும் என்றும் அதனால் நீ பரமான்மாவைக்
காண வேண்டுமானால் உன் உடம்பிலேயே அதனை அறிந்து கொள்ள
வேண்டும்.

இந்த உண்மையை உணர்ந்துகொள்ள வேண்டும் என்றால், எள்ளுக்குள்
எண்ணெய் அடங்கியிருக்கும் தன்மையையும் ஒரு சிறிய விதையினுள் பெரிய
மரம் ஒன்று அடங்கியிருக்கும் சூட்சுமத்தையும் பசுவின் பாலிலே நெய்
கலந்திருக்கின்ற தன்மையையும் பூவினுள்வாசனை கலந்திருக்கின்ற நிறம்
கலந்திருக்கின்ற உத்தியையும், மயில் முட்டையில் அழகான பலவண்ண
தோகை ஒளிந்திருக்கின்ற ரகசியத்தையும் நீ உணர்ந்து கொள்வாயானால்
உன்னுள் இறைவன் உறைந்து இருக்கும் இரகசியத்தை நீ அறிந்து கொள்வாய்.அகங்காரம் காரணமாக இதை மறந்து இதைக் கண்டறிவதற்கான
சாதனத்தையும் நீ மறந்து விடுவாயானால் உனக்கு அபரோட்ச ஞானம்
கிட்டாது. பரமாத்மாவுடன் ஒன்று மட்டும் முக்தி நிலையும் உனக்குக்
கிட்டாது என்கிறார் காகபுசுண்டர்.

“வேணும் என்றால் எள்ளுக்குள் எண்ணெய் போலும்
வித்தனிடம் அடங்கி நின்ற விருட்சம் போலும்
காணுகின்ற பூவில் உறை வாசம் போலும்
கன்று ஆவின் பாலிலே நெய்யைப் போலும்
தோணுமயில் முட்டையின் மேல் வர்ணம் போலும்
தூலம் அதி சூட்சுமம்தான் துலங்கி நிற்கும்
ஆணவத்தால் சாதனத்தை மறந்தாயானால்
அபரோட்ச ஞானம், முத்தி அரிது தானே”

காகபுசுண்டரின் ஞானப்பாடல் அனைத்துமே அந்தாதித் தொடையில்
அழகுறக் காணப்படுகின்றது. காகபுசுண்டர் உபநிடதம் என்ற தலைப்பிலான
மூன்று பாடல் தொகுப்பும் குறள் வெண்பா தொகுப்பு ஒன்றும் சித்தர் பாடல்
தொகுப்பில் காகபுசுண்டர் பாடியனவாகக் காணப்படுகின்றன.

யோகம் அறுபத்து நான்கு என்பதை,
“அறுபத்து நால்யோக மவ்வளவுந் தள்ளி
ஒருபொழுது முண்டுநிலை யோர்”

என்ற குறளிலும் சித்தர் பதினெண்மர் என்பதை,

“சித்தர் பதினெண்மர் செய்கையிற் றோன்றாத
அத்தனரு ளும்புசுண்டன் யான்”

என்ற குறளிலும் புலப்படும் இவர் இப்பதினாறு பாடல் தொகுதியை,


“யோகமுடன் கற்ப முரைத்தேனீ ரெட்டினில்
வேகமுடன் கண்டுஉணரு வீர்”

என்று கூறி முடிக்கின்றார்.
Read more ...

சூத்திர ஞானம் - வால்மீகர் - 11 - 16

Tuesday, July 5, 2011
சிவசிவா பதினெண்பேர் பாடற் கெல்லாம்
திறவுகோல் வால்மீகன் பதினா றாகும்;
சிவம்பெத்த சித்தரெல்லா மென்னூல் பார்த்துச்
சிவனோடே கோள் சொன்னார் சினந்தான் நாதன்;
அவமாகிப் போகாமல் சிவனுத் தார
அருளினால் திறந்து சொன்னேன் உலகுக்காக;
நவமான நவக்கிரகந் தன்னுள் ளேயே
நாக்குவாய் செவிமூக்கு மத்திக் கப்பால். 11

நாக்குவாய் செவிமூக்கு மத்திக் கப்பால்
நடுவீதி குய்யமுதல் உச்சி தொட்டுத்
தாக்குவாய் அங்கென்றே அதிலே முட்டுத்
தாயாரைப் பூசித்து வேதம் ஓது;
வாக்குவாய் அசையாமல் மவுனங் கொண்டு
வாசிவரு மிடத்தில்மனம் வைத்துக் காத்து
நீக்குவாய் வாசியொடு மனந்தான் புக்கு
நினைவதனி லடங்கிவரும் வரிசை காணே. 12

காணரிதே யெவராலு மிருசு வாசம்;
காண்பவனே சிவசித்த னவனே யாகும்;
பூணரிதிவ் வுலகத்தி லிந்நூல் கிட்டில்
பூலோக சித்தனென வுரைக்க லாகும்;
காணரிது சிவசக்தி திருமூச் சாகும்;
காட்டாதே மூடருக்கே யிந்நூல் தன்னை;
தோணரிது விழிமயக்கம் சும்மாப்போமே
சொல்லரிய சூட்சுமத்தைச் சொன்னே னப்பா. 13

சூட்சமிந்நூல் சொல்லுகிறேன் வாசி காண;
சூட்சாதி சூட்சத்தைத் துறக்கப் போகா;
சாட்சியில்லை துணையில்லை கேள்வி யில்லை;
சந்தேக மொன்றுமில்லை விழியைக் காணக்
காட்சியென்ன கற்பகத்தில் வசிக்கு மாப்போல்
காரணத்தைக் கண்ணாலே கண்டி ருக்க
ஆட்சிதரு முமையாளப் படியே கண்டேன்;
ஆனந்தத் திருக்கூத்தின் நடக்கை காப்பே. 14

காப்பதற்குப் பத்தியத்தைச் சொல்லக் கேளு;
காய்கனிகள் பஞ்சரசம் பரமான் னங்கள்
ஏற்கையுட னுண்டுகொண்டு சிவத்தைக் காத்தே
என்மகனே சித்தருடைக் குருநூல் பாராய்;
ஆத்துமத்துக் கழிவில்லா திருக்க வேணும்;
அவரவர்கள் நித்யகர்மம் நடக்க வேணும்;
தீர்க்கமுட னின்றவர்க்கு வாசி சித்தி
சிறப்புடனே பதினாறும் பலிக்குந் தானே. 15

தானவனா யிருக்கவென்றால் வாசி வேணும்;
தனக்குள்ளே தானிற்க இடமும் வேணும்;
வானவனாம் நின்றவர்கட் கெல்லாஞ் சித்தி
வானுக்குள் மனமிருக்க மதிபோல் காணும்,
தேனவனாஞ் சித்தருக்குத் தெவிட்டா மூலி
சிரசப்பா வுடலுக்குப் பதியே யாகும்
கோனவனா யிருக்கவென்று குறியைச் சொன்னேன்
குவலயத்தில் பதினாறுங் குறுகத் தானே.
Read more ...

சூத்திர ஞானம் - வால்மீகர் - 5 - 10

Tuesday, July 5, 2011
தானென்ற வுலகத்தில் சிற்சில் லோர்கள்
சடைபுலித்தோல் காசாயம் தாவ டம்பூண்டு
ஊனென்ற வுடம்பெல்லாம் சாம்பல் பூசி
உலகத்தில் யோகியென்பார் ஞானியென்பார்;
தேனென்ற சிவபூசை தீட்சை யென்பார்;
திருமாலைக் கண்ணாலே கண்டோ மென்பார்;
கானென்ற காட்டுக்கு ளலைவார் கோடி
காரணத்தை யறியாமல் கதறு வாரே. 6

கதறுகின்ற பேர்களையா கோடா கோடி;
காரணத்தைக் கண்டவர்கள் கொஞ்சம் கொஞ்சம்
பதறுகின்ற பேர்களெல்லாம் பராப ரத்தைப்
பற்றிநின்று பார்த்தவர்கள் சுருக்க மப்பா!
உதறுகின்ற பேர்களெல்லா முலகத் துள்ளே
உதித்தகலை தம்முள்ளே யறிய மாட்டார்;
சிதறுகின்ற பேர்களைப்போல் சிதறி டாமல்
சிவசக்தி வரும்போதே தன்னில் நில்லே. 7

நில்லென்ற பெரியோர்கள் பாஷை யாலே
நீடுலகம் தன்னுள்ளே நாலுவேதம்
வல்லமையைச் சாத்திரங்க ளிருமூன் றாக
வயிறுபிழை புராணங்கள் பதினெட் டாகக்
கல்லுகளைக் கரைப்பதுபோல் வேதாந் தங்கள்
கட்டினா ரவரவர்கள் பாஷையாலே;
தொல்லுலகில் நாற்சாதி யனேகஞ் சாதி
தொடுத்தார்க ளவரவர்கள் பிழைக்கத்தானே. 8

தானென்ற வுலகத்தி லில்லா விட்டால்
தன்பெருமை யாலழிந்து சகத்தில் வீழ்வார்;
ஊனென்ற வுடம்பெடுத்தா லெல்லாம் வேணும்;
உலகத்தி லவரவர்கள் பாஷை வேணும்;
மானென்ற சிவகாமி சிவனுங் கூடி
மாமுனிர் முகம் பார்த்து மறைநூல் சொன்னார்;
தேனென்ற சிவகாமி யருளி னாலே
திரட்டினார் வெகுகோடி தேச பாஷை 9

தேசத்தின் பாஷைதனை யறிந்தி டாமல்
தெளிவாகத் தாமுரைப்பார் பாஷை பார்த்தோர்;
ஆசிப்பா ருலகத்தில் கண்டதெல்லாம்;
ஆச்சரியந் தனைக்கண்டு மறந்து போவார்;
வாசிதனை யறியாத சண்டி மாண்பர்
வார்த்தையினால் மருட்டிவைப்பர் வகையி லாமல்;
நாசிநுனி யதனடுவில் சிவத்தைக் கண்டோர்
நான்முகனும் திருமாலும் சிவனுந் தாமே.
Read more ...

சூத்திர ஞானம் - வால்மீகர் - 1 - 5

Tuesday, July 5, 2011
வால்மீகர் சூத்திர ஞானம்

இராமாயணம் பாடிய வால்மீகர் வேறு. தென்னாட்டில் சித்தராக
விளங்கியவர் வேறு.

தேற்றமுடன் வால்மீகர் என்ற சித்து
தெளிவாக மார்க்கமது சொல்வேன் பாரீர்
மாற்றமயம் நீக்கியல்லோ வையத்தில்
வளமையுடன் வெகுகாலம் இருந்த சித்து
ஆற்றலுடன் வால்மீகி ராமாயணத்தை
அவனிதனில் மாந்தருக்குச் செய்திட்டாரே.

போகர் ஏழாயிரம் - 5834

இவர் புரட்டாசி மாதம் அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர். வேடர்
குலத்தவர். இவரது சமாதி எட்டிக்குடியில் உள்ளது.
இருள் வெளியாய் நின்றசிவ பாதம் போற்றி
எழுத்ததனின் விவரத்தை விரித்துச் சொல்வேன்;
அருவுருவாய் நின்றதுவே எழுத்த தாகும்
ஆதியந்தம் அண்டபிண்ட மதுவே யாகும்;
திருவுருவாய் ரவிமதியாய் நின்ற ரூபம்
சிவசத்தி திருமாலின் ரூப மாகும்;
வருமுருவே சிவசத்தி வடிவ மாகும்;
வந்ததிலும் போனதிலும் மனத்தை வையே. 1

வந்ததுவும் போனதுவும் வாசி யாகும்;
வானில்வரும் ரவிமதியும் வாசி யாகும்;
சிந்தைதெளிந் திருப்பவனா ரவனே சித்தன்;
செகமெலாஞ் சிவமென்றே யறிந்தோன் சித்தன்
நந்தியென்ற வாகனமே தூல தேகம்;
நான்முகனே கண்மூக்குச் செவிநாக் காகும்;
தந்திமுகன் சிவசத்தி திருமூச் சாகும்;
தந்தைதாய் ரவிமதியென் றறிந்து கொள்ளே. 2

அறிந்து கொள்ளு பூரகமே சரியை மார்க்கம்
அடங்குகின்ற கும்பகமே கிரியை மார்க்கம்;
பிரிந்துவரும் ரேசகமே யோக மார்க்கம்;
பிசகாமல் நின்றதுவே ஞான மார்க்கம்;
மறிந்துடலில் புகுகின்ற பிராண வாயு
மகத்தான சிவசத்தி அடங்கும் வீடு;
சிறந்துமனத் தெளிவாகிச் சேர்ந்தோன் சித்தன்
சிவசிவா அவனவனென் றுரைக்க லாமே. 3

ஆமப்பா வுலகத்தில் பெருநூல் பார்த்தோர்
அவரவர்கண் டதையெல்லாம் சரிதை யென்பார்;
ஓமப்பா கல்செம்பைத் தெய்வ மென்றே
உருகுவார் பூசிப்பார் கிரியை யென்பார்
வாமப்பா யோகமென்று கனிகாய் தின்று
வாய்பேசா வூமையைப்போல் திரிகு வார்கள்;
காமப்பா ஞானமென விண்டு மேலும்
காக்கைபித்தன் மிருகம்போல் சுற்றுவாரே. 4

சுற்றுவார் பெருநூலைப் பார்த்துப் பார்த்துத்
தூடிப்பா ருலகத்தல் சிற்சில் லோர்கள்!
தெற்றுவா ரவர்பிழைக்க அனேக வேடம்
தேகத்தி லணிந்துகொண்டு திரிகு வார்கள்;
பற்றுவார் குருக்களென்பார் சீட ரென்பார்
பையவே தீட்சைவைப்பார் தீமை யென்பார்.
கத்துவார் திருமூர்த்தி தாமே யென்று
காரணத்தை யறியாத கசடர் தானே; 5
Read more ...

அடிப்படை நெறி

Saturday, July 2, 2011
சித்தர் பாடல்களின் இயல்பு

சித்தர்கள் எல்லாச் சமயங்களுக்கும் பொதுவான அடிப்படை நெறிகளையே எடுத்துக்கூறியுள்ளனர். சாத்திரக் குப்பையிலும் கோத்திரச் சண்டையிலம் ஈடுபடாமல், மக்களை நன்னெறிப்படுத்த முயன்ற வடநாட்டு நவநாத சித்தர்கள் போலத் தமிழகச் சித்தர்களும் சீர்திருத்தத் கருத்தக்களை வலியுறுத்தி மக்களுக்கு நல்வழி காட்டியுள்ளனர். இராமலிங்க அடிகாளர் தெவித்துள்ள மரணமிலாப் பெருவாழ்வு சித்தர்கள் கூறிய நெறியேயாகும். 'கூற்றம் குதித்தலும் கைகூடும்" (269) என்னும் வள்ளுவர் கருத்தினை வாழ்க்கையில் நிலைநிறுத்திக் காட்டியவர்கள் இச்சித்தர்கள், இவர்கள் ஊழையும் வெல்லலாம் என்பதற்கான வழி முறைகளைத் தம் பாடல்களின் இயம்பியுள்ளனர்.வைத்தியம், இரசவாதம், ஞானம் மந்திரம் முதலியவை பற்றி எல்லாம் நூல்கள் எழுதியுள்ளனர். மேலும் வானநூல், கணிதம் முதலியவை பற்றிய புலமையையும் இவர்தம் நூல்களில் காணமுடிகிறது.சித்தர் பாடல்கள் பொதுமக்களும் பாடும் வண்ணம் எளிமையான நடையில் அமைந்தவை. எனினும்அய கருத்துக்கள் அடங்கியவை . கல்லாதவர், கற்றவர் இரு சாராருமே கேட்டு மகிழும் வகையில் அப்பாடல்கள் விளங்குகின்றன.ஊத்தை குழிதனிலே மண்ணை எடுத்தே

உதிரப் புனலிலே உண்டை சேர்த்தே

வாய்த்த குயவனார் பண்ணும் பாண்டம்

வறையோட்டுக்கும் ஆகாது என்று ஆடுபாம்பேஎன்னும் பாம்பாட்டி சித்தன் எளிய பாடல் மானிட யாக்கையின் இழிவைத் தெளிவுபடுத்துகின்றது.மாங்காய்ப் பால்உண்டு மலைமேல் இருப்போருக்குத்

தேங்காய்ப்ப தால் ஏதுக்கடி-குதம்பாய்

தேங்காய்ப்பால் ஏதுக்கடி.ஞானப் பாலுண்டு தலை உச்சியலே சிந்தனை கூடி நிலைத்து நிற்கும் ஞானிகளுக்கு உலக இச்சையாகிய பிற இன்பங்கள் வேண்டியதில்லை எனக் குதம்பைச் சித்தன் மேற்காணும் பாடலுக்கு மீ.ப . சோமு விளக்கம் அளிக்கிறார்.

மாங்காய் என்பது பிரமம், பால் என்பது அதன் அனுபவம், அதாவத ஞானப்பால், தேங்காய்ப்பால் உலக இச்சை, மலை என்பது மேலான சமாதி, இ.வ்வாறு உள்ளுறைப் பொருள் அமைத்துப் பாடும் பாடல்களைப் பிறிது மொழிதலணி என்று கூறுவர், சித்தர்கள் தம் கொள்கைகளை மறைவாக வைத்துக் கொள்ள குழுஉக் குறியினைப் படைத்துக் கொண்டனர். திருமந்திரத்திலுள்ள சூனிய சம்பாடணை (உரையாடல்) இதற்குச் சயான சான்றாகும். அவர்களின் மருத்துவ நூல்களும் இவ்வாறு குழுஉக் குறிகளைப் பயன்படுத்தியுள்ளன.

சித்தர் இலக்கியம் சீர்திருத்தம் பேசினாலும் நாத்திகத்தன்மை யுடையதன்று சித்தர்கள் இறைப்பற்று மிகவும் உடையவர்கள். தஹ்நெறி, அட்டாங்கயோகம் முதலியவை கடினமாகத் தோன்றினாலும் அவர்கள் எடுத்துரைக்கும் நெறி சிறந்ததாகும். சயை, கியை, யோகம், ஞானம் என்னும் நான்கு நெறியினையும் சித்தர்கள் பின்பற்றியுள்ளனர். சமயப்பொது நோக்கு, சாதி வேறுபாடின்மை. மூடப் பழக்க வழக்கங்களைச் சாடுதல் முதலானவை அவர்தம் பாடல்களில் காணப்பெறும் சீர்திருத்தங்களாகும்.கோயிலாவது ஏதுடா? குளங்களாவது ஏதுடா?

கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே

கோயிலும் மனத்துளே, குளங்களும் மனத்துளே

ஆவதும் அழிவதும் இல்லை, இல்லை இல்லையே (சிவவாக்கியர், 34)


சாதி பேதங்கள் சொல்லுகிறீர், தெய்வம்

தானென் றொருஉடல் பேதமுண்டா?

ஓதிய பாலதில் ஒன்றாகி யதிலே

உற்பத்தி நெய்தயிர் மோராச்சு (கொங்கணர் 95)


திருமூலர் பிற சித்தரைப்போல உடம்பை இழித்துக் கூறவில்லை. மாந்தர் உடம்பே இறைவனைக் காண அடிப்படையாக இருத்தலின் அதனைச் சிறப்பித்துப் பாடியுள்ளார்.உடம்பார் அழியில் உயிரார் அழிவர்;

திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவு மாட்டார்;

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே,

உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த் தேனே (724)உடம்பினை முன்னம் இழுக்கென றிருந்தேன்;

உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்;

உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்று

உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே (725)உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்;

வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்;

தௌ;ளத் தெளிவார்க்குச் சீவன் சிவலிங்கம்;

கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே; (1823)மனிதனுக்கு அவனது உடம்பைக் கொண்டு செய்ய வேண்டிய ஞானச் செயலைக் கற்பிக்கும் அனுபவப் பேரறிவுப் பெருநூல் சித்தர் இலக்கியம் எனச் சிறப்பித்துப் பாராட்டுவர் மீ.ப. சோமு. மேலும் அவ்விலக்கியங்கள் அறக்கருத்துக்களை வலியுறுத்தும் என்றும் மனமாசின்றிக் காக்கவும் தீமைகளை நீக்கி நன்மைகைளைச் செய்யவும் பல அறச் செய்திகளைக் கூறுகின்றன என்றும் மனிதனை மனிதனாக்குவதற்கு வேண்டிய மனப் பயிற்சி தந்து அவனை மனிதனாக்கிப் பின் வானவராக உயர்த்தும்உயய நோக்கங்கள் கொண்டவை என்றும் விளக்கியுரைத்துள்ளார்.சித்தர்கள் வெளியில் சென்று கோயில் வழிபாடு செய்ய விரும்புவதில்லை. புறச் சடங்குகளையும் அவர்கள் ஏற்பதில்லை. மனக் கோயில் வழிபாடே அவர்கட்கு முதன்மையானதாகும். யோகமுறை மூச்சடக்கிப் பயிற்சி செய்தல் ஆகியவற்றையே அவர்தம் நூல்கள் வித்துரைக்கின்றன. மன்பதைக்கு வேண்டிய சீர்திருத்தக் கருத்துக்களும் அவர்களுடைய பாடல்களில் மிகுதியாக உள்ளன.
Read more ...

வீடுபேறு அடைந்தவர்கள்

Saturday, July 2, 2011
சித்தர்கள் என்றால் வீடுபேறு அடைந்தவர்கள் எனப்பொருள் கொள்வர் சிலர், ஒரு செயல் நிறைவேறிவிட்டதா என வினவுவார் காய சித்தி ஆயிற்றா என வினவுவது வழக்கம், சாயுச்சிய நிலை அடையப்பெற்றவரே சித்தர் என்பர். அட்டமா சித்தி முதலிய யோகசித்தி பெற்றவர்களையும் சித்தர்கள் என்று அழைப்பர்.

சிலர் சித்துக்கும் சித்தத்ததுக்கும் தொடர்பு காட்டிச் சித்தத் தெளிவுடையாரே சித்தர் என விளக்கம் அளிப்பர்.'சிந்தையிலே களங்க மற்றார் சித்தன் ஆவான்" (அகத்தியர் நூறு 50)'சிந்தை தெளிந் திருப்பவன் ஆர் அவனே சித்தன்"

(வான்மீகர் சூத்திர ஞானம் 2)

'செகமெலாம் சிவமென்றே அறிந்தோன் சித்தன்

திறந்துமனத்தெளிவாகிச் சேர்ந்தோன் சித்தன்" (வான்மீகர் சூத்திர ஞானம் 3)எனவரும் இப்பாடல்கள் மேற்கூறிய கருத்திற்குச் சான்றாக விளங்குகின்றன.

சித்தருட் சித்தராய் விளங்கிய திருமூலர் சித்தர் பற்றிக் கூறும் செய்திகளும் இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.'யோகச் சமாதியின் உள்ளே அகலிடம்

யோகச் சமாதியின் உள்ளே உளரொளி

யோகச் சமாதியின் உள்ளே உள சத்தி

யோகச் சமாதி உகந்தவர் சித்தரே" (1490)


'சித்தர் சிவத்தைக் கண்டவர் சீருடன்

சுத்தாசுத் தத்துடன் தோய்ந்துந் தோயாதவர்

முத்தரம் முத்திக்கு மூலத்தர் மூலத்துச்

சத்தர் சதாசிவத் தன்மையர் தாமே" (2526)எனவரும் திருமூலன் பாடல்கள். யோகச் சமாதியை விரும்பியவரும் சிவத்தைக் கண்டவரும் சித்தர் ஆவர் எனக் குறிப்பிடும்.

கடவுளரும் சித்தராகக் கருதப்பட்டனர். அவர்தம் செயல்களும் சித்துக்களாக மதிக்கப்பட்டன. பழினியிலுள்ள முருகன் கோயில் சித்தன் வாழ்வு என அழைக்கப்பெற்றது. எல்லா ஆற்றலும் பெற்றிருப்பவன் ஆதலின் முருகனுக்குச் சித்தன் என்னும் பெயரும் உண்டு. சிவபெருமான் செய்த அருஞ்செயல்களைத் திருவிளையாடற் புராணம் சித்துக்களாகக் குறிப்பிடும். மக்களால் சித்தர்களும் கடவுளராகப் போற்றப்பட்டனர்.

மூச்சினை யடக்கி யோக ஆற்றலினால் உடலில் உள்ள மூலதாரம், கொப்பூழ், இதயம், இரைப்பையின் நடு, கழுத்து, தலைமுடி என்ற இவ் ஆறு இடங்களிலும் மனத்தை முறையாக நாட்டிக் குண்டலியை எழுப்பிப் பலபல அனுபவமும் வெற்றியும் கண்டு. அப்பாலிலுள்ள எல்லாம் ஆன பொருளில் நிலைத்துச் சித்தி பெறுபவரே சித்தர் என்ற வழக்கம் பரவுயுள்ளது எனப் பன்மொழிப்புலவர் தெ.பொ. மீனாட்சி சுத்தரனார் கலைக்களஞ்சியத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

ஆகம மாகிய இந்த மனித உடம்பிலே தெய்வப் பக்தி கொண்டு இதனுள் அருட்சக்தியை வளர்த்து ஆன்ம பணாமத்தில் மக்களிடையே வானவர்களாகவும், மனித தெய்வங்களாகவும் உலவி அருவாழ்வு வாழ்ந்து அருளை வழங்கி வருகின்ற பெயோர்களே மகான்களே சித்தர்கள், என்று மீ.ப. சோமசுந்தரனார் தம் சித்தர் இலக்கியம் என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார் (பகுதி 1 பக்கம் 14)

இறையடியார்களுள் பக்தர், பகவர், முனிவர், சித்தர் எனப் பல வகையினர் இருந்தனர் என்பர், பெரியாழ்வார் தம் பாசுரத்தில்பத்தர்களும் பகவர்களும் பழமொழிவாய்

முனிவர்களும் பரந்த நாடும்

சித்தர்களும் தொழுதிறைஞ்சத் திசை விளக்காய்

நிற்கின்ற திருவரங்கமேஎன்று பாடியிருத்தல் மேற்கூறியதற்குச் சான்றாக அமைகிறது. சித்தர் பாடல்களிலும் முனிவர், இருடியர், சித்தர் எனப் பல வகையினர் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. திருவள்ளுவர் ஞானத்தில் (14) காயசித்தி, மாயசித்தி, யோகசித்தி, வாத சித்தி எனப் பல வகைச் சித்திகள் கூறப்பட்டுள்ளன. சித்தரையும் காயசித்தர், யோகசித்தர், ஞானசித்தர் எனச் சிலர் மூவகையினராகக் கூறுவர். இங்ஙனம் சித்தர்களையும் சித்திகளையும் பாகுபடுத்தியும் பாடியுள்ளனர்.

சித்துக்கள் பற்றிய குறிப்புக்கள் பண்டைய இலக்கியங்களிலும் காணக்கிடக்கின்றன.நிலந்தொட்டுப் புகாஅர் வானம் ஏறார்

விலங்கிடு முந்நீர் காலிற் செல்லார் (130)

என்னும் குறுந்தொகைப் பாடல் அடிகளும்.

நிலத்திற் குளித்து நெடுவிசும் பேறிச்

சலத்தில் தியுமோர் சாரணன்என்னும் மணிமேகலைத் தொடர்களும் சில சித்துக்களைத் தெவிக்கின்றன.

தாயுமானவர், பாம்பாட்டிச் சித்தர், இராமலிங்க அடிகள் முதலானோர் தத்தம் பாடல்களில் சித்து விளையாடல்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர்.

தாயுமானவர் மதயானையை அடக்குதல், கரடி புலிகளின் வாயைக் கட்டுதல், சிங்கத்தை முதுகின் மேல் ஏற்றுதல், பாம்பைப் பிடித்தாட்டுதல், ஐந்து உலோகப் பொருள்களையும் விலையுயர்ந்த பொருளாக மாற்றுதல் பிறர் கண்ணிற் படாமல் உலாவுதல், தேவரை அடிமை கொள்ளல், எப்பொழுதும் இளமையோடிருத்தல், பிறர் உடலிற் புகுதல், நீர்மேல் நடத்தல், நெருப்பில் அமர்தல், முதலிய சித்துக்களைத் தம் பாடலில் (தேசோ மயானந்தம் 8) குறிப்பிடுகின்றனர்.

பாம்பாட்டி சித்தர் குறிப்பிடும் சில சித்துக்களைக் கீழ்வரும் பாடல்கள் புலப்படுத்துகின்றன.


எட்டுநாகம் தம்மைக் கையால் எடுத்தே ஆட்டுவோம்;

இந்திரனார் உலகத்தை இங்கே காட்டுவோம்;

கட்டுக் கடங்காத பாம்பைக் கட்டி விடுவோம்;

கருவிடந் தன்னைக் கக்கி ஆடு பாம்பேர்

மூண்டெயும் அக்சினிக்குள் மூழ்கி வருவோம்;

முந்நீருள் இருப்பினும் மூச்சடக்குவோம்;

தாண்டிவரும் வன்புலியைத் தாக்கி விடுவோம்;

தார்வேந்தன் முன்பு நீ நின்று ஆடு பாம்பே;

செப்பய மூன்றுலகும் செம்பொன் ஆக்குவோம்;

செங்கதிரைத் தண்கதிராய்ச் செய்து விடுவோம்;

இப்பெய உலகத்தை இல்லாமற் செய்வோம்;

எங்கள் வல்லபம் கண்டு நீ ஆடு பாம்பேஇராமலிங்க அடிகளார் சில சித்துக்களைப் பின் வரும் பாடல் அடிகளில் காட்டுகின்றார்.''கல்லையும் உருக்கலாம் நார் உத்திடலாம்

கனிந்த கனியாகச் செய்யலாம்;

கடுவிட முண்ணலாம் அமுதாக்கலாம் கொடுங்

கரடி, புலி, சிங்கம் முதலா

வெல்லு மிருகங்களையும் வசமாக்கலாம் அன்றி

வித்தையும் கற்பிக்கலாம்;

மிக்க வாழைத்தண்டை விறகாக்கலாம் மணலை

மேவு தேர் வடமாக்கலாம்;"இங்ஙனம் சித்தர்கள் பல்வேறு வகையான சித்து விளையாடல்களை செய்தமையை மேற்குறிப்பிட்ட பாடல் வகள் தெவிக்கின்றன.
Read more ...