சிவகுரு

Monday, June 11, 2012

குருவென் பவனே வேதாக மங்கூறும்
பரவின்ப னாகிச் சிவயோகம் பாவித்து
ஒருசிந்தை யின்றி உயர்பாச நீக்கி
வருநல் குரவன்பால் வைக்கலு மாமே.
சிவகுரு என்று அழைக்கப்படுபவன் செந்தமிழ் மறை முறையாம் வேதாகமம் சிறந்தெடுத்தோதும் பேரின்ப வடிவினன். அவ் வடிவுடையவனாகிச் செவ்வி யுயிரினுக்குச் சிவயோகம் சேர்ப்பித் தருள்வன். அவ் வுயிர் திருவடியுணர்வு கைவந்தமையால் வேறோர் எண்ணமும் எண்ணுவதில்லை. அவ் வுயிரை அந்நிலையான் உயரச் செய்து பாசப்பசை யகற்றித் திருவடிநீழற்கீழ் வருவித்துப் பேற்றின்கண் நிலைப்பிப்பவன் சிவகுருவாவன்
Read more ...

சிவகுரு

Monday, June 11, 2012

உணர்வொன் றிலாமூடன் உண்மையோ ராதோன்
கணுவின்றி வேதா கமநெறி காணான்
பணிவொன் றிலாதோன் பரநிந்தை செய்வோன்
அணுவின் குணத்தோன் அசற்குரு வாமே.
சிவகுரு எழுந்தருளிவந்து ஆருயிர்களை ஆட்கொள்ளும் நல்வழியாம் திருநெறிக்கு வழித்துணையாக நிற்பவன் குலகுரு அவனே குலதெய்வம். இவ் வுண்மை! திருஞானசம்பந்தப்பெருமானாராம் சிவகுரு எழுந்தருளப் பாண்டிமன்னனுக்கும் பாண்டி நாட்டிற்கும் வழித்துணையாக நின்றவர் மங்கையர்க்கரசியாராம் குலகுரு அவரே குலதெய்வம். இவ் வுண்மை சேக்கிழாரடிகள் அருளிய "மங்கையர்க்குத் தனியரசி எங்கள் தெய்வம்"1 என்ற மறை மொழியான் உணரலாம். குலகுரு வென்பார் திருக்கோவில் வழிபாடு செய்வாரும், சிவதீக்கை செய்விப்பாருமேயாவர். அவர்கள் செம்மையாளராக இருத்தல் வேண்டும். அத்தகைய பெருநிலைக்குப் பொருந்தாத் திருந்தாமாக்களாவார் சிவ உணர்வென்பது ஒரு சிறிதும் இல்லாத மூடன்; முப்பொருள் உண்மையாம் மெய்ம்மை உணராதோன்; அருமறையாம் திருவைந்தெழுத்துபதேசக் கணுவின்றியுள்ளோன். செந்தமிழ் வேதாகமநெறி காணாதவன்; தாழ்வெனும் தன்மையாம் அன்பும் பணிவும் ஒரு சிறிதும் இல்லாதோன்; சிவபெருமானையும் சித்தாந்த சைவத்தையும் இகழ்வோன்; பிறப்பு இறப்புக்கு உட்படுத்தும் ஆணவச் செருக்குடையோன் ஆகிய தன்மையாளராவர்.
Read more ...