01766
Tuesday, October 30, 2012
சிவசித்தனின் வாசியோகம் செய்! நீயும் பலர் போல நலமாக வாழ்வாய். உண்மைதான் நான் சொல்வது நீ மனிதன் என்றால் இதை உணர் .மற்றவன் எதையும் எழுதட்டும். நீ ஏன் கவலை படுகிறாய். உண்மையை உணர்ந்து, உண்மைதான் என்றால் அதை செய்வாயா .நான் சொல்லவா .
உன் தாய் தந்தை இதை போல நலமாக வள வேண்டுமா ... உண்மைதான் இந்த வீடியோ தொகுப்பை பார் .மனிதனின் அணுக்களை பற்றியும், அதை நாம் உணர்ந்து, அணுவின் செயல்பாட்டை நாம் உணரும் நிலையில் வாசியை உணரலாம். தனி மரம் தோப்பாகாது .
ஆனால் ஒவ்வொரு தனிமரமும் தோப்பாகும். மனிதனை உணரும் நிலை சிவசித்தனின் வாசியோகமே .என்று மக்கள் தனித்தனியே கூறுவதை பாருங்கள் ..இன்று ஒவ்வொரு தனி மனிதனும் தன்னை உணரவைத்து தோப்பாக மாற்றுகிறேன் . உன் உடலை அறிந்தால் நலமுடன் வாழலாம் . இறக்கும் போது உடல் நலம் பெற்று சுழுமுனை அறிந்து ஆன்மாவை உணர்ந்து, இறந்தால் இறைநிலை அறியமுடியும்.இது உண்மை. இன்றைய உலகத்திற்கு இதுதான் தேவை .பல உயிர்கள் சில நாட்களிலே இறப்பது தவறு . அவன் தன்னை அறியாமல் இறந்தால் மீண்டும் பிறப்பு உண்டு .இதுவும் உண்மை.
காலம் கடந்து செல்லும் முன் உண்மையை நீ முதலில் உணர். இதுவரை பிறந்து உள்ள யாரலும் மனிதனை உணரவைக்கும் நிலையை உணரவில்லை என்பது உண்மை. சுயம்பு என்றால் மதிப்பு அதிகம் தானே . இறுதியாக உன் அணு நான் சொல்வதை கேட்கும் . என்னை பார்த்தல் எல்லாம் நலமாக உள்ளது என்று சொல்லும் மனிதனை பார். அணுக்களை அறியாதவன் ஆண்டவனை அறியமுடியாது. அதுபோல உன் அணுவை நீ அறிந்தால் அந்த அணு சொல்லும் நான் யார் என்று.இது உண்மை . உலகில் வியாதிகள் இல்லாமல் மாற்ற நான் தயார் . நீ உண்மையானவனாக இருந்தால் காலதாமதமாகக்காதே ! பல உயிர்கள் இறந்து கொண்டு இருக்கிறது . தன்னை அறியாமல் தன் நிலை அறியாமல். இருப்பவர்களை அறியவைக்க நினைக்கிறேன் . FACEBOOK அன்பர்களே இந்த செய்தியை பரப்ப உதவுங்கள் . நன்றி. சிவசித்தன்.
சிவகுரு
Monday, June 11, 2012
குருவென் பவனே வேதாக மங்கூறும்
பரவின்ப னாகிச் சிவயோகம் பாவித்து
ஒருசிந்தை யின்றி உயர்பாச நீக்கி
வருநல் குரவன்பால் வைக்கலு மாமே.
சிவகுரு என்று அழைக்கப்படுபவன் செந்தமிழ் மறை முறையாம் வேதாகமம் சிறந்தெடுத்தோதும் பேரின்ப வடிவினன். அவ் வடிவுடையவனாகிச் செவ்வி யுயிரினுக்குச் சிவயோகம் சேர்ப்பித் தருள்வன். அவ் வுயிர் திருவடியுணர்வு கைவந்தமையால் வேறோர் எண்ணமும் எண்ணுவதில்லை. அவ் வுயிரை அந்நிலையான் உயரச் செய்து பாசப்பசை யகற்றித் திருவடிநீழற்கீழ் வருவித்துப் பேற்றின்கண் நிலைப்பிப்பவன் சிவகுருவாவன்
பரவின்ப னாகிச் சிவயோகம் பாவித்து
ஒருசிந்தை யின்றி உயர்பாச நீக்கி
வருநல் குரவன்பால் வைக்கலு மாமே.
சிவகுரு
Monday, June 11, 2012
உணர்வொன் றிலாமூடன் உண்மையோ ராதோன்
கணுவின்றி வேதா கமநெறி காணான்
பணிவொன் றிலாதோன் பரநிந்தை செய்வோன்
அணுவின் குணத்தோன் அசற்குரு வாமே.
கணுவின்றி வேதா கமநெறி காணான்
பணிவொன் றிலாதோன் பரநிந்தை செய்வோன்
அணுவின் குணத்தோன் அசற்குரு வாமே.
சிவகுரு எழுந்தருளிவந்து ஆருயிர்களை
ஆட்கொள்ளும் நல்வழியாம் திருநெறிக்கு வழித்துணையாக நிற்பவன்
குலகுரு அவனே
குலதெய்வம். இவ் வுண்மை! திருஞானசம்பந்தப்பெருமானாராம் சிவகுரு எழுந்தருளப்
பாண்டிமன்னனுக்கும் பாண்டி நாட்டிற்கும்
வழித்துணையாக நின்றவர் மங்கையர்க்கரசியாராம்
குலகுரு அவரே
குலதெய்வம். இவ் வுண்மை சேக்கிழாரடிகள் அருளிய
"மங்கையர்க்குத் தனியரசி எங்கள்
தெய்வம்"1 என்ற மறை மொழியான் உணரலாம்.
குலகுரு வென்பார்
திருக்கோவில் வழிபாடு செய்வாரும், சிவதீக்கை செய்விப்பாருமேயாவர்.
அவர்கள் செம்மையாளராக
இருத்தல் வேண்டும்.
அத்தகைய பெருநிலைக்குப்
பொருந்தாத் திருந்தாமாக்களாவார் சிவ உணர்வென்பது ஒரு
சிறிதும் இல்லாத
மூடன்; முப்பொருள்
உண்மையாம் மெய்ம்மை
உணராதோன்; அருமறையாம்
திருவைந்தெழுத்துபதேசக் கணுவின்றியுள்ளோன். செந்தமிழ் வேதாகமநெறி காணாதவன்; தாழ்வெனும்
தன்மையாம் அன்பும்
பணிவும் ஒரு
சிறிதும் இல்லாதோன்;
சிவபெருமானையும் சித்தாந்த சைவத்தையும் இகழ்வோன்; பிறப்பு
இறப்புக்கு உட்படுத்தும் ஆணவச் செருக்குடையோன் ஆகிய
தன்மையாளராவர்.
Labels:
ஆத்மா,
ஆன்மீக வழிகள்,
இறைவன்,
இறைவன் படைப்புகள்,
இறைவன் கோயில்,
சிவகுரு
Subscribe to:
Posts (Atom)