நால்வரும்

Friday, January 7, 2011
திருக்கோயில்களில் விநாயகர்,பைரவர்,வீரபத்திரர்,முருகன் என்னும் நான்கு சிவகுமாரர்களின் திருவுருவங்களும் இருக்கும். சிவகுமாரர் நால்வரும் இறைவனின் சுத்த மாயா தத்துவத்திற்க் கொண்ட வடிவங்களாகும்.

விநாயகர்:- ஓங்காரத்தின்/பிரணவத்தின் உண்மைப்பொருளை அறிவிக்கும் சிவத்தின் வடிவம்.
பைரவர்:- சங்கர ருத்திரர் எனப்படுவர். சகல சம்பந்தங்களையும் சங்கரித்து ஆன்மாக்களை ஈடேற்றும் கோலம். சிவத்தினின்று தோன்றிய காரணத்தால் சிவகுமாரர் எனப்படுவர்.
இவரது வாகனம் வேதவடிவாகிய நாய் . இவரை வழிபடும்போது 'எங்களுடைய அகந்தையை நீக்கி காத்தருள வேண்டும்' என பிரார்த்தித்தல் வேண்டும்.
முருகன்:-இச்சா சக்தியாக வள்ளியம்மையையும் கிரியா சக்தியாக தெய்வானை அம்மையையும் உடையவர். மயிலாகிய வாகனம் ஆணவத்தையும் கொடியாகிய கோழி சிவ ஞானத்தையும் குறிக்கும்.
மேலும் ஆலயத்தில்;
பள்ளியறை:- காலையில் பள்ளியறைத் திறப்பு சிவமும் சக்தியும் பிரிந்து தொழிற்படுவதால் உண்டாகும் தோற்றத்தையும், இரவு பள்ளியறை மூடுதல் சக்தியானது சிவத்தில் ஒடுங்கும் போது ஏற்படும் லயத்தையும் குறிப்பனவாகும்.
கருவறை:- ஆலயத்தின் மையப்பகுதி. உடலில் இதயத்துள் இறைவன் இருப்பதற்குரிய அடையாளமாக விளங்குகிறது.
பலிபீடம்:- இது பாசத்தைக் குறிக்கிறது. இதை சிரி பலிநாதர் என்பர்.ஆலயத்துள் எட்டுத் திக்குகளில் எட்டுப் பலிபீடங்கள் இருக்கும். இவை எட்டுத்திக்குப் பாலர்களை உணர்த்தும். இவைகளுக்கெல்லாம் தலைமைப் பீடமாக உள்ளது நந்தியெம்பெருமானின் பின்பு உள்ள பலிபீடமாகும்.
நாம் வெளி எண்ணங்களை எல்லாம் பலியிட்டுவிட்டு இறைவனை வழிபட செல்லவே பலிபீடம் அமைந்துள்ளது.
கொடிமரம்:- அசுரர்களை அகற்றவும் சிவகணங்களையும் தேவர்களையும் பாதுகாக்கவும் கொடிமரம் அமைந்துள்ளது.
நந்தியெம்பெருமான்:- சிவபெருமானை எந்நேரமும் வணங்கி பார்த்தபடி இருக்கும் நந்தியெம்பெருமான் "நான் மறந்தாலும் என் நா மறவாது ஓது நாமம் நமசிவாயவே" என்பதுபோல் கண்காள் காண்மிங்களோ கடல் நஞ்சுண்ட கண்டன் தன்னை" என்று அப்பர் பெருமான் ஏங்கியதுபோல் இடைவிடாது இறைசிந்தையில் இருத்தல் வேண்டும் என்பதைக் குறிக்கும்.

மண்டபங்களின் தத்துவம்
திருமூலட்டானம்:- மூலாதாரம்
அர்த்தமண்டபம்:-சுவாதிட்டானம்
மகாமண்டபம்:-மணிபூரகம்
ஸ்நான மண்டபம்:- அநாகதம்
அலங்கார மண்டபம்:-விசுத்தி
சபாமண்டபம்:-ஆக்ஞை
Read more ...

தாய் மூகாம்பிகை

Friday, January 7, 2011
சிவ சக்த்யா யுக்தோ யதி பவதி சக்த ப்ரபவிதும்...
நசே தேவம் தேவோ ந கலு குசல ஸ்பந்தி துமபி ஆஆஆ
அத த்வாம் ஆராத்யாம் ஹரிஹர விரிஞ்சாதி பிர் அபி
பிரணந்தும் ஸ்தோதும் வா கதம் அக்ருத புண்யஹ ப்ரபவதீ
ஆ...ஆ.....

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத்காரணி நீ பரிபூரணி நீ ஜகத்காரணி நீ பரிபூரணி நீ
ஜகத்காரணி நீ பரிபூரணி நீ ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜனனி ஜனனி ஜனனி ஜனனி

ஒரு மான் மழுவும் சிறு கூன் பிறையும்
சடை வார் குழலும் பிடை வாகனமும்
சடை வார் குழலும் பிடை வாகனமும்
கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே
நின்ற நாயகியே இட பாகத்திலே
நின்ற நாயகியே இட பாகத்திலே

ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ
ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ
ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத்காரணி நீ பரிபூரணி நீ

சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்
ஷண் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்
ஷண் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்
அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும்
தொழும் பூங் கழலே மலை மாமகளே
தொழும் பூங் கழலே மலை மாமகளே

அலைமாமகள் நீ கலைமாமகள் நீ
அலைமாமகள் நீ கலைமாமகள் நீ
அலைமாமகள் நீ கலைமாமகள் நீ

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத்காரணி நீ பரிபூரணி நீ

ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே
ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே
பல தோத்திரங்கள் தர்ம சாத்திரங்கள்
பணிந்தேத் துவதும் மணி நேத்திரங்கள்
பணிந்தேத் துவதும் மணி நேத்திரங்கள்

சக்தி பீடமும் நீ ஆஆஆஆ ஆஆஆஆஆஆ
சக்தி பீடமும் நீ ஸர்வ மோக்ஷமும் நீ
சக்தி பீடமும் நீ ஸர்வ மோக்ஷமும் நீ
சக்தி பீடமும் நீ ஸர்வ மோக்ஷமும் நீ
சக்தி பீடமும் நீ ஸர்வ மோக்ஷமும் நீ
சக்தி பீடமும் நீ ஸர்வ மோக்ஷமும் நீ

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜகத்காரணி நீ பரிபூரணி நீ
ஜகத்காரணி நீ பரிபூரணி நீ ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜனனி ஜனனி ஜனனி ஜனனி
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
Read more ...

தேங்காய்

Friday, January 7, 2011
தேங்காய்

கோயில்களில் பெரும்பாலும் இறைவனுக்கு தேங்காய் உடைப்பது வழக்கம். ஏன் தேங்காய் உடைக்கிறோம். இதில் என்ன தத்துவம் இருக்கிறது என்ற விவரம் நம்மில் பலருக்கு தெரியாது. ஏதோ சுவாமிக்கு அர்ச்சனை பண்ணினோம். தரிசனம் செய்தோம் என்றவாறே இதை நாம் தொன்றுதொட்டு செய்து வருகிறோம். அதைப் பற்றி ஒரு சிறிய தத்துவ தகவல்.

தேங்காய் உடைப்பதில் ஒரு பெரிய உண்மை மறைந்து இருக்கிறது. தேங்காயின் மேல் கடுமையான ஓடும் அதனுள் மென்மையான பருப்புமாகிய காய்ப் பகுதியும் அதனுள் நீரும் உள்ளது.

உருண்டையான புற ஓடு பிரபஞ்சத்தை ஒத்து இருக்கிறது. இரண்டும் கோள வடிவம் உடையது. இது உலக மாயையைக் குறிப்பது ஆகும். உள்ளே உள்ள வெண்ணிறமான பகுதி பரமாத்மாவை குறிக்கும்.

இளநீர் அதனால் விளையும் பரமானந்த அமிர்தத்தை ஒத்து இருக்கின்றது. ஜீவாத்மா மாயையினால் பரமாத்மாவை உணராமல் பரமானந்த பிராப்தியையும் பெறாமல் நிற்கின்றது. அதுபோல் வெள்ளை பகுதியையும், நீரையும் காண முடியாமல் ஓடு மறை(க்)கின்றது.

ஈசுவர சந்நிதியில் மாயையை அகற்றி தேஜோமய சுவரூபத்தை காட்டி அவர் அருளாள் பரமானந்த பேரமுதத்தை நுகரச் செய்யும் செயலையே இது காட்டுகிறது.

இவ்வளவு உட்கருத்து இருப்பதால் தான் தேங்காயை இறைவழிபாட்டில் முக்கிய பொருளாக வைத்து நம்முன்னோர்கள் வழிபட்டு வந்துள்ளனர் என்கிற உண்மையை நாம் உணர வேண்டும்.
Read more ...

சிவபெருமான்

Friday, January 7, 2011
ஜோதிர்லிங்கக் கோயில்கள்

இந்தியாவிலிருக்கும் முக்கியமான 12 சிவபெருமானின் தலங்களில் பன்னிரெண்டு ஜோதிர்லிங்கங்கள் அமைந்திருக்கின்றன என்கிறார்கள். இவை இந்தியாவில் அமைந்திருக்கும் இடங்களையும் அவை எப்படி அந்த இடங்களில் அமைந்தன என்பது குறித்த தகவல்களையும் சிவபுராணம் சொல்லுகிறது. அந்த பன்னிரண்டு ஜோதிர்லிங்கக் கோவில்கள் குறித்த சிறு தகவல்கள் உங்களுக்காக இங்கே தரப்பட்டுள்ளது.


1. சோமநாத் ஜோதிர்லிங்கம் கோயில் - சோமநாதம் (குஜராத்)
சோமா என்ற இன்னொரு பெயரைக் கொண்ட சந்திர பகவான் ரோகிணியையும் தக்ஷ மஹாராஜாவின் மகளையும் மணந்து கொண்டார். இரு மனைவிகளுக்குள் சோமா ரோகிணியை அதிகமாக நேசித்தார். இதை அறிந்த தக்ஷ மஹாராஜா சோமாவிற்கு சாபம் கொடுத்தார். சந்திரபகவான் ஒளியிழந்து தேயத் தொடகினார். சந்திரனின் மன்னிப்பை ஏற்றுக் கொண்ட தக்ஷன் ப்ரபாஸா என்ற இடத்தில் சோமாவிற்கு சாபத்திலிருந்து விமோசனம் கிடைக்குமென்ற பரிகாரத்தையும் சொன்னார். அந்த இடத்திற்கு சென்ற சோமா ஒளியையும், தோற்றத்தையும் முழுமையாக பெற்றான். சந்திர பகவான் ப்ரபாஸாவில் சிவபெருமானுக்காகத் தங்கத் தகடுகளால் ஜொலிக்கும் சோமநாதர் கோயிலைக் கட்டினார். அரபிக்கடலின் தென்மேற்கு திசையிலுள்ள குஜராத் மாநிலத்தில் இந்தக் கோயில் இடம் பெற்றுள்ளது. சந்திர பகவானால் கட்டப்பட்ட சோமநாத் கோயில் சேதமடைந்து பிறகு இராவணன், கிருஷ்ண பரமாத்மா, பீமனால் புதுப்பிக்கப்பட்ட இந்தக் கோயில் 1026ஆம் ஆண்டில் முகமது கஜினி அழித்தான். அதன் பிறகு சோமநாத் கோயில் பல முறை புதுபிக்கப்பட்டது. தற்சமயமுள்ள சோமநாத் மந்திர் ஏழாவது முறையாக 1950ஆம் ஆண்டில் புதுபிக்கப்பட்டது.
2. மல்லிகார்ஜுன ஜோதிர்லிங்கம் கோயில் -ஸ்ரீசைலம் (ஆந்திரா)
கிருஷ்ணா நதியின் தென்திசையை ஒட்டி ரேஷபாகிரி மலைத் தொடரில் சிவபெருமான் உருவெடுத்து லிங்க வடிவத்தில் மாறினார் என்று சிவபுராணம் சொல்லுகிறது. இந்தக் கோயில் 1404ஆம் ஆண்டில் ஹரிஹர ராயா என்ற அரசனால் கட்டப்பட்டது. 8 மீட்டர் உயரத்தில் இந்தக் கோயிலைச் சுற்றி சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளது. மல்லிகார்ஜுன கோயிலுலுள்ள லிங்கம் 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. முன்காலத்தில் மக்கள் இந்த லிங்கத்தை மல்லிகை மலர்களால் பூஜை செய்து வந்தார்கள். அதனால் இந்த லிங்கம் மல்லிகார்ஜுன லிங்கம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இலங்கையிலிருந்து திரும்பிய ராமபிரான் இந்தக் கோயிலுக்கு வருகை தந்ததாகவும் அந்தச் சமயத்தில் ஸ்ரீ ராமர் ஸஹஸ்ரலிங்கத்தை நிறுவியதாகவும் புராணம் சொல்லுகிறது. இங்கு இவர் 1001 சிறிய லிங்கங்களை உருவாக்கினார் என்ற பெருமையும் இருக்கிறது. இந்தக் கோயிலில் பிரம்மராம்பிகா தேவியின் (பார்வதி தேவியின் இன்னொரு பெயர்) சன்னதியும் இடம் பெற்றுள்ளது.
3. மஹா காலேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோயில் -உஜ்ஜயினி (மத்தியபிரதேசம்)
துஷானா என்ற அரக்கன் அவந்தி நாட்டு மக்களை கொடுமைப்படுத்தி வந்தான். அவனுடைய கொடுமையை அழிக்கவும் அவனிடமிருந்து மக்களைக் காக்கவும் சிவபெருமான் இந்த பூமியில் தோன்றினார். துஷானாவைக் கொன்று அவந்தி நாட்டு மக்களை கொடுமையிலிருந்து விடுவித்தார். அதன்பிறகு மக்கள் சிவபெருமானை அங்கேயே நிரந்தரமாக இருக்க வேண்டுமென்று வேண்டிக் கொண்டதின் காரணத்தால் மஹா கால் லிங்கமாக உருவெடுத்தார். மத்தியப் பிரதேசத்திலுள்ள உஜ்ஜைன் மாநகரத்தில் இந்த மஹாகாலேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோயில் இருக்கிறது.. இந்தக் கோயில் ஐந்து பிரிவுகளைக் கொண்டது. மாபெரும் சக்தியைக் கொண்ட சுயம்புவாக தோன்றிய மஹாகால் லிங்கம் கோயிலின் அடித்தளத்தில் உள்ளது. இதற்கு மேல்தளத்தில் விநாயகர், பார்வதி, கார்த்திகேயன் சன்னதிகள் இடம் பெற்றுள்ளன. மூன்றாவது தளத்தில் நாக சந்திரேஷ்வரர் சன்னதி உள்ளது. இந்தச் சன்னதியின் கதவுகள் நாகபஞ்சமியன்று திறந்து வைக்கப் படுகின்றன. கோயிலின் பிரதான சன்னதியில் 100 கிலோ எடையுள்ள வெள்ளித் தகடுகளால் செய்யப்பட்ட ருத்ரயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. மரணத்திற்கு காரகன் சிவபெருமான். இந்தக் கோயிலில் மஹாகாலேஷ்வர் லிங்கத்திற்கு மனிதப் பிணம் எரிக்கப்பட்ட சாம்பலால் அபிஷேகம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
4. ஓம்காரேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோயில் - ஓம்ஹாரம் (மத்தியப் பிரதேசம்)
நர்மதை, காவேரி ஆகிய இரண்டு நதிகள் கூடுமிடத்திலுள்ள மன்ஹாடா தீவில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. ஓம் என்ற வடிவத்திலுள்ள இந்தத் தீவின் வடதிசையில் கௌரிசோமநாதர் கோயில் இடம் பெற்றுள்ளது. இந்தக் கோயிலில் அர்ஜுனன், பீமனின் மூர்த்திகளும் இடம் பெற்றுள்ளன. பத்தாவது நூற்றாண்டில் கட்டப்பட்ட சித்தநாத் கோயிலும் இந்தத் தீவில் இடம் பெற்றிருக்கிறது. நவராத்திரி, கார்த்திகை, பௌர்ணமி ஆகிய பண்டிகைகள் இங்கு கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
5. காசிவிஸ்வநாதர் ஜோதிர்லிங்கம் கோயில் -வாரனாசி எனும் காசி (உத்திரப்பிரதேசம்)
18-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட காசி விஸ்வநாதர் கோயில் உத்திரப் பிரதேச மாநிலம் வாரனாசியில் இருக்கிறது. வாரனாசியை காசி என்றும் அழைக்கிறார்கள். இந்தோரை ஆண்ட அஹில்யாபாய் ஹோல்கர் என்ற மஹாராணி இந்தக் கோயிலைக் கட்டினார். கோயிலின் பிரதான சன்னதியிலுள்ள தங்கத்தகடுகள் மகாராஜா ரஞ்ஜித் சிங்கினால் வழங்கப்பட்டது. இந்தக் கோயிலுள்ளே ஞானவியாபி கிணறு ஒன்று உள்ளது. விஸ்வநாதர் சன்னதியில் வைக்கப்பட்டுள்ள லிங்கமும் இந்தக் கிணற்றிலிருந்துதான் கிடைக்கப் பெற்றது என்று புராணங்கள் சொல்லுகின்றன. தாமரை புஷ்பம், மந்தாரை புஷ்பம் ஆகியவைகளால் அலங்கரிக்கப்பட்ட லிங்கத்திற்கு தினந்தோறும் பாலாபிஷேகம் நடைபெற்று வருகிறது. தண்டபாணி, மஹாவிஷ்ணு, காலபைரவன் சன்னதிகளும் இந்தக் கோயிலில் இடம் பெற்றிருக்கின்றன.
6. கேதாரேஷ்வரர் ஜோதிர்லிங்கம் கோயில் -இமயம் (உத்திரப்பிரதேசம்)
ருத்ர இமயமலைத் தொடரில் இடம் பெற்றுள்ள இந்தக் கேதாரேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோயில் வருடத்தில் ஆறு மாதத்திற்கு மட்டும் திறக்கப்படுகிறது. மற்ற ஆறு மாதத்திற்கு மூடி வைக்கப்படுகிறது. பார்வதி தேவி சிவபெருமானுடன் இணைந்து அர்த்தநாரேஷ்வரராக தோற்றமளிக்க கேதாரேஷ்வரரை பிரார்த்தனை செய்தாள். பார்வதியின் வேண்டுதலுக்காக இங்கு சிவபெருமான் கேதாரேஷ்வர லிங்கமாக உருவெடுத்தார். இந்தக் கோயிலினுள்ளே பார்வதி, விநாயகர் சன்னதிகளும் இடம் பெற்றுள்ளன. கிருஷ்ண பரமாத்மா, பஞ்ச பாண்டவர்கள், த்ரௌபதிதேவி, குந்திதேவி போன்றவர்களின் மூர்த்திகளும் இந்தக் கோயிலில் இடம் பெற்றிருக்கிறது.
7. நாகேஷ்வர் ஜோதிர்லிங்கம கோயில் -நாகநாதம் (மகராஷ்டிரம்)
த்வாரகா பெட், த்வாரகா ஆகிய இரண்டு தீவுகளுக்கிடையே நாகேஷ்வரர் ஜோதிர்லிங்கம் கோயில் உள்ளது. சிவபக்தியுடைய சுப்ரியா மற்றும் அவளுடைய தோழிகளையும் தாருகா என்ற அரக்கன் திடீரென்று தாக்கி அவர்களைக் கடத்திச் சென்று தாருகா வனத்தின் சிறையில் வைத்துக் கொடுமை படுத்தினான். சிவபெருமான் ஜோதிர்லிங்கமாக தோன்றி அந்த அரக்கன் தாருகாவை அழித்தார். அன்றிலிருந்து மக்கள் சிவபெருமானை நாகேஷ்வர ஜோதிர்லிங்கமாக பூஜித்து வருகிறார்கள். சிவ பக்தியுடைய நாமதேவர் சிவபெருமானின் புகழை அந்தக் கோயிலில் பாடி வந்தார். அவருடைய தொல்லையை தாள முடியாத மக்கள் நாமதேவரை கடவுளில்லாத இடத்தில் அமர்ந்து பாடச் சொன்னார்கள். நாமதேவர் கடவுளில்லாத இடத்தை காட்டும்படி மக்களிடம் கேட்டார். ஏரிச்சலடைந்த மக்கள் தென்திசையில் நாமதேவரை தூக்கிக் சென்று அமர்த்தினார்கள். திடீரென்று கிழக்கு திசையை நோக்கியிருந்த நாகேஷ்வர லிங்கம் தென்திசையை நோக்கித் திரும்பியது. கோயிலின் கோபுரம் கிழக்கு திசையை நோக்கியிருந்தாலும் பிரதான சன்னதி தென்திசையை பார்த்திருப்பது இங்கு விசேஷமானது.
8. கிரிஷ்னேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோயில் -குண்ருனேசம் (மகாராஷ்டிரம்)
மகாராஷ்டிராவிலுள்ள ஒளரங்காபாத் என்ற இடத்தில் கிரிஷ்னேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோயில் அமைந்துள்ளது. தேவகிரி மலைத்தொடரில் சுதர்மா சுதேஹா பிராமணத் தம்பதியர்கள் வசித்து வந்தார்கள். வேதங்களை அறிந்த சுதர்மா தம்பதியர்களுக்கு குழந்தை பாக்கியமில்லை. இதனால் வேதனையடைந்த சுதேஹா சகோதரி கிரிஷ்னாவை சுதர்மாவுக்கு மணம் செய்து கொடுத்தார். சிவபக்தியுடைய கிரிஷ்னா 101 லிங்கங்களை உருவாக்கி பூஜைகள் செய்த பிறகு ஏல கங்கா நதியில் விசர்ஜனம் செய்தாள். அவளுடைய பக்தியை கண்டு மெச்சிய சிவபெருமான் அவளுக்கு ஆண் குழந்தையை வரமாக கொடுத்தார். பொறமை கொண்ட சுதேஹா அவளுடைய ஆண் குழந்தையைக் கொன்று ஏலகங்கா நதியில் தூக்கி வீசினாள். அனைத்தையும் அறிந்த கிரிஷ்னா சிவபெருமானால் கொடுக்கப்பட்ட குழந்தை அவரால் ரட்சிக்கபடுவான் என்று மன உறுதியோடு சிவலிங்க பூஜையைத் தொடங்கினாள். லிங்கங்களை நதியில் விசர்ஜனம் செய்யும் போது அவளுடைய ஆண் குழந்தை திரும்பி வருவதைக் கண்டாள். சிவபெருமானும் அவள் முன் காட்சி தந்தார். தன் சகோதரியை மன்னிக்குமாறு சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டாள். தன்னுடைய பெயரில் சிவபெருமான் ஜோதிர்லிங்கமாக உருவெடுக்க வேண்டுமென்று அவளுடைய ஆசையையும் தெரிவித்தாள். அவளுடைய ஆசையை நிறைவேற்றும் வகையில் சிவபெருமான் அங்கு கிரிஷ்னேஷ்வர் ஜோதிர்லிங்கமாக காட்சி கொடுக்கிறார். இந்தக் கோவிலில் மதிய வேளையில் பஜனைகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
9. த்ரியம்புகேஷ்வரர் ஜோதிர்லிங்கம் கோயில் - திரியம்பகம் (மகாராஷ்டிரம்)
நாசிக்கிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் த்ரியம்பக் என்ற இடத்தில் இந்தக் கோயில் உள்ளது. 18ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோயில் கண்களின் வடிவத்தில் காட்சி தருவது விசேஷமானது. பிராமணர்கள் நிறைந்த த்ரியம்பக் நகரத்தில் வேத பாடசாலைகள், ஆசிரமங்கள் அதிகமாக இருக்கின்றன.
10. ராமேஷ்வரம் ஜோதிர்லிங்கம் கோயில் -இராமேஸ்வரம் (தமிழ்நாடு)
ராமேஷ்வரம் ஜோதிர்லிங்கம் கோயில் பழமையான கோயிலாகும் இந்தக் கோயிலில் பிரம்மாண்டமான நந்தி பகவான் இடம் பெற்றிருக்கிறார். சீதாதேவியால் ஸ்தாபனம் செய்யப்பட்ட ராமலிங்கம், அனுமாரால் கொண்டு வரப்பட்ட விஸ்வலிங்கம் ஆகிய இரண்டும் இந்தக் கோயிலில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீராமர் இலங்கைக்கு செல்வதற்கு முன் ராமேஷ்வரத்தில் சிவபெருமானுக்கு சிறப்புப் பூஜை செய்தார் என்று ராமாயணம் சொல்கிறது.
11. பீமசங்கர் ஜோதிர்லிங்கம் கோயில் - பீமசங்கரம் (மகராஷ்டிரம்)
திரிபுரசுர அரக்கனின் தவத்தை மெச்சி சிவபெருமான் அவனுக்கு சாவில்லாத வரத்தை கொடுத்து கூடவே ஆண்பாதி, பெண்பாதி உடல் கொண்டவரால் அவனுக்கு சாவு என்று சொன்னார். சிவ பெருமானிடமிருந்து வரத்தை பெற்ற திரிபுரசுரன் மக்களை கொடுமைப் படுத்தினான். அவனுடைய கொடுமையை தாளமுடியாத மக்கள் சிவபெருமானிடம் கோரிக்கை வைத்தார்கள். கார்த்திகை பௌர்ணமியன்று பார்வதி தேவி சிவபெருமானின் உடலில் புகுந்து அர்த்தநாரீஷ்வரராக மாறி திரிபுசுர அரக்கனை கொன்றார். அவனோடு போராடும் சமயத்தில் பூமியைத் தொட்ட சிவபெருமானின் வியர்வைத் துளிகள் பீம நதியாக மாறியது. அந்த இடத்தில்தான் சிவபெருமான் பீமசங்கர் ஜோதிர்லிங்கமாக காட்சி அளிக்கும் கோவில் இருக்கிறது.
12. வைத்யநாத் ஜோதிர்லிங்கம் கோயில் -பரளி (மகராஷ்டிரம்)
சிவபக்தியுடைய இராவணன் பன்னிரெண்டு ஜோதிர்லிங்கங்களுக்குள் ஒரு லிங்கத்தை இலங்கைக்கு எடுத்துச் செல்ல விரும்பினான். அவனுடைய ஆசையை நிறைவேற்றும் வகையில் சிவபெருமான் நேரில் காட்சி கொடுத்து, அவனிடம் சக்தி வாய்ந்த லிங்கத்தை கொடுத்தனுப்பினார். அரக்கர்கள் நிறைந்த இலங்கைக்கு இராவணன் லிங்கம் எடுத்துச் செல்வது தேவர்களுடைய மனம் ஒப்புக் கொள்ளவில்லை. இராவணனுக்கு தடங்கல்கள் உருவாக்க முடிவெடுத்தார்கள். திடீரென்று கங்கா தேவி இராவணன் வயிற்றுக்குள் புகுந்து கொண்டாள். தண்ணீர் நிரம்பிய வயிற்றின் பாரத்தை குறைக்க இராவணன் கையிலிருந்த லிங்கத்தை பிராமணனிடம் கொடுத்தான். இராவணன் அந்த பிராமணனை மஹாவிஷ்ணு என்று அறிந்து கொள்ளவில்லை. இராவணன் திரும்புவதற்குள் மஹாவிஷ்ணு லிங்கத்தை பூமியில் ஆழமாக புதைத்து விட்டு மறைந்தார். மண்ணில் புதைந்த லிங்கத்தை இராவணன் எடுக்க முயன்றும் தோல்வி அடைந்தான். லிங்கத்தை எடுக்க முடியாததால் சலிப்படைந்த இராவணன் இலங்கையிலிருந்து இந்த இடத்திற்கு வந்து பூஜை செய்தான் என்று புராணங்கள் சொல்லுகின்றன. லிங்கம் புதைந்த இடத்தை வைத்யநாத் ஜோதிர்லிங்கம் என்ற பெயரால் அழைக்கிறார்கள். இந்தக் கோயிலைச் சுற்றி 22 கோயில்கள் இடம் பெற்றுள்ளன. சிவகங்கை குளமும் இந்தக் கோயிலில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் குளத்தில் நீராடினால் தீராத எந்த வியாதியும் மறைந்து விடும் என்ற நம்பிக்கையோடு பக்தர்கள் இங்கு அதிகமாக வந்து செல்லுகிறார்கள்.
Read more ...
Friday, January 7, 2011
1.

சிவபெருமானின பக்தர்கள் யாவரும் அவரே கடவுள் என்றும், அவர் முலவர், பரமசிவம், காலத்திற்கும் உருவத்திற்கும் இடைவெளிக்கும் அப்பாற்ப்பட்டவர என்றும் நம்புகிறார்கள். முனிவர் அமைதியாக பகறுகின்றார "இது அதுவன்று." ஆமாம். இவ்வாறு ஆராய்ந்து அறிய முடியாதவர் சிவபெருமான்.

2.

சிவபெருமானின் பக்தர்கள் யாவரும் அவரே கடவுள் என்றும், அவரது இயல்பு உள்ளார்ந்த அன்பு, பராசக்தி, அடித்தளத்தில் உள்ளது, மூலதத்துவம் அல்லது சக்தியாக எல்லாவற்றிலும் ஓடும் தூய உணர்வு , வாழ்க்கை, அறிவு மற்றும் மகிழ்ச்சி என்றும் நம்புகிறார்கள்.


3.

சிவபெருமானின் பக்தர்கள் யாவரும் அவரே கடவுள் என்றும், அவருடைய உள்ளார்ந்த இயல்பு மூல ஆத்மா என்றும் மற்றும் அவர் மேன்மையான மஹாதேவன், பரமேஸ்வரன், வேதங்கள் மற்றும் ஆகமங்களின் மூலவர் என்றும், எல்லாவற்றையும் ஆக்கல், காத்தல், அழித்தல் செய்பவர் என்றும் நம்புகிறார்கள்.


4.

சிவபெருமானின் பக்தர்கள் யாவரும் கணேச பெருமானை நம்புகிறார்கள். அவர் சிவ-சக்தியின் மகன் என்றும், எல்லா செயலையும் வழிப்பாட்டையும் செய்யும் முன் அவரை முதலில் வணங்க வேண்டும் என்றும் நம்புகிறார்கள். அவருடைய ஆட்சி இரக்கமுடையது. அவருடைய சட்டம் நியாயமானது. நியாயம் அவரது மனம்.

5.

சிவபெருமானின் பக்தர்கள் யாவரும் முருகப்பெருமானை நம்புகிறார்கள். அவர் சிவ-சக்தியின் மகன் என்றும் அவருடைய அருள் நிறைந்த வேல் அறியாமை என்ற கட்டை உருக்கும் என்றும் நம்புகிறார்கள். முனிவர் தாமரை ஆசனத்தில் அமர்ந்து முருகனை வணங்குகின்றார். இவ்வாறு கட்டுப்பட்டதால் அவருடைய மனது அமைதி அடைகின்றது.


6.

சிவபெருமானின் பக்தர்கள் யாவரும் ஒவ்வொரு ஆத்மாவும் சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்டது என்றும், அது அவரை ஒத்து இருப்பதாகவும், இந்த அடையாளம் ஆணவம், கர்மம், மாயை என்ற பிணைப்புகளை அவரது அருளால் எல்லா ஆத்மாக்களிடமிருந்து விலக்குவதையும் நம்புகிறார்கள்.


7.

சிவபெருமானின் பக்தர்கள் யாவரும் மூன்று உலகங்கள் உள்ளன என்று நம்புகிறார்கள் - ஆத்மாக்கள் பூத உடலைப்பெறும் பூலோகம், ஆத்மாக்கள் ஆவி உடலைப்பெறும் அந்தர்லோகம், மற்றும் காரண உலகமான சிவலோகம். அங்கு ஆத்மாக்கள் பேரொளியோடு திகழ்கின்றன.


8.

சிவபெருமானின் பக்தர்கள் யாவரும் கர்ம சட்டங்களை நம்புகின்றனர். ஒவ்வொருவரும் தன் செயல் வினையின் பயனை அடைவர் என்றும் ஒவ்வொரு ஆத்மாவும் எல்லா கர்மங்களையும் தீர்மானித்து, மோட்சமும் விடுதலையும் பல பிறவிகள் மூலம் அடையும் என்றும் நம்புகிறார்கள்.


9.

சிவபெருமானின் பக்தர்கள் யாவரும் நல்ல நடத்தை, கோவில் வழிபாடு, யோகா, வாழும் சத்குரு அருள் மூலம் பரமசிவத்தை அடைவது ஆகிய யாவும் ஞானம், மெய்யறிவு பெற தேவை என்று நம்புகின்றனர்.


10.

சிவபெருமானின் பக்தர்கள் யாவரும் இயல்பான தீமை கிடையாது என்று நம்புகிறார்கள். தீமைக்கு மூலம் கிடையாது, அறியாமையைத் தவிர. சைவ இந்துக்கள் உண்மையிலேயே கருணை உள்ளவர்கள். முடிவில் நன்மை, தீமை என்பது இல்லை என்று அறிவார்கள். எல்லாம் சிவபெருமானின் விருப்பம்.


11.

சிவபெருமானின் பக்தர்கள் யாவரும் மதம்தான் மூன்று உலகங்களிலும் இணக்கமாக செயல்பட காரணம் என்றும், இந்த இணக்கத்தை கோவில் வழிப்பாடு முலமாக தோற்றுவிக்க முடியும் என்று நம்புகிறார்கள். எனெனில் அங்குதான் மூன்று உலகங்களில் உள்ளவர்கள் பங்கு கொள்வார்கள்.


12.

சிவபெருமானின் பக்தர்கள் யாவரும் சைவ மதத்தின் மேன்மையான, தேவையான மந்திரம் ஐந்து புனித ஒலிகள் கொண்ட நமசிவய என்று நம்புகிறார்கள்.
Read more ...

சிவபெருமான்

Friday, January 7, 2011
சிவபெருமான் - 108
1. ஓம் அரசே போற்றி
2. ஓம் அமுதே போற்றி
3. ஓம் அறிவே போற்றி
4. ஓம் அணுவே போற்றி
5. ஓம் அத்தா போற்றி
6. ஓம் அரனே போற்றி
7. ஓம் அருவமும் உருவமும் ஆனாய் போற்றி
8. ஓம் அழிவிலா ஆனந்தவாரி போற்றி
9. ஓம் அருளிட வேண்டும் அம்மான் போற்றி
10. ஓம் அண்ணாமலையெம் அண்ணா போற்றி

11. ஓம் ஆடகமதுரை அரசே போற்றி
12. ஓம் ஆவா என்றனக் கருளாய் போற்றி
13. ஓம் ஆழா மேயருள் அரசே போற்றி
14. ஓம் ஆருரமர்ந்த அரசே போற்றி
15. ஓம் ஆளானவர்கட்கு அன்பா போற்றி
16. ஓம் ஆரா அமுதே அருளே போற்றி
17. ஓம் இடரைக் களையும் எந்தாய் போற்றி
18. ஓம் இருள்கெட அருளும் இறைவா போற்றி
19. ஓம் இலங்கு சுடரெம் ஈசா போற்றி
20. ஓம் இரும்புலன் புலர இசைந்தனை போற்றி

21. ஓம் ஈசா போற்றி
22. ஓம் ஈசனடி போற்றி
23. ஓம் ஈங்கோய்மலையெம் எந்தாய் போற்றி
24. ஓம் உடையாய் போற்றி
25. ஓம் உணர்வே போற்றி
26. ஓம் உரையுணர்விறந்த ஒருவ போற்றி
27. ஓம் எந்தையடி போற்றி
28. ஓம் எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி
29. ஓம் எந்தமை உய்யக் கொள்வாய் போற்றி
30. ஓம் ஏனோர்க் கெளிய இறைவா போற்றி

31. ஓம் ஏகம்பத்துறை யெற்தாய் போற்றி
32. ஓம் ஏழைக் குருளைக் கருளினை போற்றி
33. ஓம் ஐயா போற்றி
34. ஓம் ஒழிவற நிறைந்த ஒருவ போற்றி
35. ஓம் காவாய் கனகக் குன்றே போற்றி
36. ஓம் கல்நார் உரித்த கனியே போற்றி
37. ஓம் கதியே போற்றி
38. ஓம் கனியே போற்றி
39. ஓம் கடையேன் அடிமை கண்டாய் போற்றி
40. ஓம் கருமுகிலாகிய கண்ணே போற்றி

41. ஓம் கனவிலுந் தேவர்க்கரியாய் போற்றி
42. ஓம் கண்ணார் அமுதக் கடலே போற்றி
43. ஓம் கடம்பூர் மேவிய விடங்கா போற்றி
44. ஓம் கலைஆர் அரிகேசரியாய் போற்றி
45. ஓம் கலைத்தலை மேவிய கண்ணே போற்றி
46. ஓம் கழுநீர் மாலைக் கடவுள் போற்றி
47. ஓம் கருங்குருவிக் கன்றருளினை போற்றி
48. ஓம் குழைத்த சொன்மாலை கொண்டருள் போற்றி
49. ஓம் கூடல் இலங்கு குருமணி போற்றி
50. ஓம் குற்றாலத்தெங் கூத்தா போற்றி

51. ஓம் கோகழி மேவிய கோவே போற்றி
52. ஓம் மூவா நான்மறை முதல்வா போற்றி
53. ஓம் படைப்பாய் போற்றி
54. ஓம் துடைப்பாய் போற்றி
55. ஓம் தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி
56. ஓம் சேவாய் வெல்கொடிச் சிவனே போற்றி
57. ஓம் மின்னாருருவ விகிர்தா போற்றி
58. ஓம் வேதியனே போற்றி
59. ஓம் விமலா போற்றி
60. ஓம் சைவா போற்றி

61. ஓம் தலைவா போற்றி
62. ஓம் குறியே போற்றி
63. ஓம் குணமே போற்றி
64. ஓம் நெறியே போற்றி
65. ஓம் நினைவே போற்றி
66. ஓம் தோழா போற்றி
67. ஓம் துணையே போற்றி
68. ஓம் வாழ்வே போற்றி
69. ஓம் என் வைப்பே போற்றி
70. ஓம் முத்தா போற்றி

71. ஓம் முதலே போற்றி
72. ஓம் நித்தா போற்றி
73. ஓம் நிமலா போற்றி
74. ஓம் பத்தா போற்றி
75. ஓம் பவனே போற்றி
76. ஓம் பெரியோய் போற்றி
77. ஓம் பிரானே போற்றி
78. ஓம் அரியாய் போற்றி
79. ஓம் அமலா போற்றி
80. ஓம் சிறவே போற்றி

81. ஓம் சிவமே போற்றி
82. ஓம் மஞ்சா போற்றி
83. ஓம் மணாளா போற்றி
84. ஓம் முழுவதும் நிறைந்த முதல்வா போற்றி
85. ஓம் தேசனடி போற்றி
86. ஓம் நேயத்தே நின்ற நிமலனடி போற்றி
87. ஓம் வானோர்க்கரிய மருந்தே போற்றி
88. ஓம் விரிகடல் உலகின் விளைவே போற்றி
89. ஓம் கருமுகிலாகிய கண்ணே போற்றி
90. ஓம் மன்னிய திருவருள் மலையே போற்றி

91. ஓம் தொழுகை துன்பந் துடைப்பாய் போற்றி
92. ஓம் மானோர் நோக்கிமணாளா போற்றி
93. ஓம் வானசுத்தமர் தாயே போற்றி
94. ஓம் பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி
95. ஓம் சீரார் திருவையாறா போற்றி
96. ஓம் பாகம் பெண்ணுரு ஆனாய் போற்றி
97. ஓம் தென்னாடுடைய சிவனே போற்றி
98. ஓம் மலைநாடுடைய மன்னே போற்றி
99. ஓம் பஞ்சேவடியான் பங்கா போற்றி
100. ஓம் பேராயிரமுடைப் பெம்மான் போற்றி

101. ஓம் தோளாமுத்தச் சுடரே போற்றி
102. ஓம் திருக்கழுக் குன்றிற் செல்வா போற்றி
103. ஓம் சந்தனச் சாந்தின சுந்தர போற்றி
104. ஓம் சீரார்பெருந்துறை நம்தேவனடி போற்றி
105. ஓம் செழுமலர்ச் சிவபுரத்தரசே போற்றி
106. ஓம் பரம் பரஞ்சோதிப் பரண போற்றி
107. ஓம் சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
108. ஓம் பராய்த்துறை மேவிய பரனே போற்றி
Read more ...

சிவபெருமான்

Friday, January 7, 2011
சிவபெருமான் நீலநிறமானது ஏன்?

தேவர்களும், அசுரர்களும் அமுது உண்பதற்காக மந்திரகிரி மலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பை கயிறாகவும் கொண்டு பாற்கடலை கடைந்தனர்.

அப்போது பாற்கடலில் இருந்து ஆலகாலவிஷம் தென்பட்டது. அதே நேரத்தில் வாசுகி பாம்பும் விஸத்தை உமிழ அண்டசாராசரமும் அஞ்சி நடுங்கின. தேவர்களும், அசுரர்களும் சிவபெருமானிடம் சென்று தஞ்சம் அடைந்தனர்.

இரண்டு விஷத்தையும் சிவபெருமான் எடுத்து உண்டார். இதனால், அவரது உடல் நீலநிறமாக மாறியது. ஆலகால விஷத்தையே உணடதால், ஆலகால கண்டர் என்றும், அவரது உடல் முழுவதும் நீலநிறமாக மாறியதால், திருநீலகண்டர் என்றும் அழைக்க்பபடுகிறார்.
Read more ...