பத்மாசனம்

Friday, February 26, 2010
செய்முறை விளக்கம் :

ஒரு விரிப்பில் உட்கார்ந்த நிலையில் இரண்டு கால்களையும் முன்னால் நீட்டவும் வலது காலை தூக்கி இடது கால் தொடையின் மேல் வைக்கவும், வலது குதிகால் அடிவயிற்றை தொட்டு அழுந்தி இருக்க வேண்டும், வலது கை முட்டியால் வலது கால் தொடை மற்றும் முட்டியை தரையில் அழுந்தி. பின் வலது கையால் இடது கால் பெருவிரலையும் இடது கையால் இடது கணுக்காலையும் பிடித்து சிறுக சிறுக மடக்கி இழுத்து இலேசாக தூக்கி வலது தொடையின் மேல் ஏற்றி வைக்கவும், இடது குதிகால் அடிவயிற்றை நன்கு அழுந்தி தொட்டிருக்க வேண்டும், இரண்டு கால் முட்டியும் தரையில் தொட்டிருக்க வேண்டும், அடி முதுகு நிமிர்ந்திருக்க வேண்டும், தோள்பட்டை தளர்ந்திருக்க வேண்டும், கழுத்தும் முகமும் நேராக இருக்க வேண்டும், கண்கள் மூடிய நிலையில் புருவ மத்தியில் கவனிக்கவும், இது தியானத்திற்குரிய ஆசனம், பிறகு கால்களை மாற்றி போடவும்.

பயன்கள் :

இவ்வாசன பயிற்சியில் கால்களை நன்கு மடக்கி பயிற்சி செய்வதால் இந்த ஆசனம் மூட்டு வலிக்கு ஓர் அற்புத சஞ்சீவி ஆகும், முதுகு தண்டு நிமிர்ந்து நேராக இருப்பதால் நுரையீரலுக்கு பிராணன் தங்கு தடையின்றி வருகிறது, இதன் மூலம் நுரையீரலில் ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு இதயத்தின் மூலம் உடல் முழுவதும் ரத்தத்தினுடைய ஓட்டமும் பிராணனுடைய இயக்கமும் சரிசமமாக பாய்ச்சப்படுவதால் அனைத்து உறுப்புகளுக்கும் தேவையான ஆதார சக்தி கிடைத்து சீராக இயங்குகின்றன, இவ்வாசனத்தில் முதுகு தண்டு நிமிர்ந்திருப்பதால் இரைப்பை. சிறுகுடல். பெருங்குடல். மலக்குடல். கல்லீரல். கணையம் இப்படி ஜீரண உறுப்புகள் ஒன்றை ஒன்று அழந்தாமல் அதன் அதன் ஸ்தானத்தில் அந்தந்த உறுப்புகள் இருந்து
இயங்குவதால் விரைவாகவும் எளிதாகவும் உணவு ஜீரணிக்கப்படுகின்றன.

No comments:

Post a Comment