சத்திய நாதர் என்ற ஞானச் சித்தர் பாடல்

Saturday, May 19, 2012
சத்திய நாதர் என்ற
ஞானச் சித்தர் பாடல் 


     நவநாத சித்தர்களுள் ஒருவரான சத்தியநாதரே ஞான சித்தராக, சித்தர்
இலக்கியங்களில் குறிப்பிடப்  பெறுகின்றார். 35 கண்ணிகள் கொண்ட இவரது
ஞான சித்தர்  பாடல் மனோண்மணி துதியாகக் காணப்படுவதால் இவர் சக்தி 
வழிபாட்டில் மனம் செலுத்தியவரென்பது புலனாகிறது.

நிலையில்லாப் பொய்க்கூட்டை நிச்சயங் கொண்டாசை
வலையிலகப் பட்டுழன்று வாடித்திரி கிறண்டி

என்ற கண்ணியில்  உலக மாயையின் தத்துவம் விவரிக்கப் படுகின்றது. இந்த
உடல்   அழகானதா?    அழியாததா?    வலிமையானதா?    இல்லையே.
அப்படியிருக்க  இதனை  நித்தியமென்று  கருதி  என்னவெல்லாம் ஆட்டம்
போடுகிறது?  யாரை யாரையெல்லாம்  மாய்த்துத் தள்ளுகிறது? கண்ணதாசன்
சொல்வாரே,  இன்றைக்கு செத்த பிணத்திற்காக நாளைக்கு சாகும் பிணங்கள்
அழகின்றனவே  என்று.  அதுபோல  மற்றவை  அழிவில் அவரது அழிவும்
உண்டு என்று ஏன் எண்ணிப் பார்க்க மறந்து விடுகின்றனர்.

     நீரிற்  குமிழியைப்  போல்   நில்லாமல்  மறைந்து  விடுகின்ற  இந்த
உடம்பினை  ஒருகாலத்தில் மெய்யென்று எண்ணியிருந்தேன். பிறகு ஒருநாள்
தீர  விசாரிக்கையில்  அஃது பொய்யென்று உணர்ந்து கொண்டேன். அடடா,
நான்

எத்தனை  பெரிய  அறிவீலி  என்று என்னை நானே நொந்து கொள்கிறேன்
என்று 19வது கண்ணியில் வருந்துகின்றார்.

    இந்த ஞான சித்தர் மனோண்மணி அம்பிகையை வழிபட்டபின் உண்மை
ஞானம்    கைவரப்    பெற்றவராய்    மாறியதைத்    தம்    கண்ணியில்
தெளிவாக்குகின்றார்.

தாயே பகவதியே தற்பரையே அற்புதமே
நேயமுடன் ஞான நெறியையறி விப்பாயே

என்று வேண்டியதற்கு அவள் அருள் புரிந்தமையை
சத்ததிதி னுள்ளே சதாசிவத்தைத் தானறிய
உத்தமியே நின்னருளென் றோர்த்தறிந்து கொண்டேண்டி

என்று  உண்மை  நிலையை  உணர்ந்து  கொண்டமையை உணர்த்துகின்றார்
ஞான சித்தர்.

No comments:

Post a Comment