ஞானச் சித்தர் பாடல் -கண்ணிகள்

Saturday, May 19, 2012

ஆதி பராபரையே அம்பிகை மனோன்மணியே
சோதிச் சுடரொளியே சுத்த நிராமயமே.
1
தாயே பகவதியே தற்பரையே அற்புதமே
நேயமுடன் ஞான நெறியைஅறி விப்பாயே.
2
முடிநடுவும் மூலமுமாய் முச்சுடராய் முப்பொருளாய்
மடிவில்லா மெய்ஞ்ஞான மார்க்கத் தகோசரமாய்.
3
அஞ்ஞானக் காடு கடந் தாங்குவழி யேதொடர்ந்து
மெய்ஞ்ஞானங் காணநின்னை வேண்டிஅலைகிறண்டி
4
நிலையில்லாப் பொய்கூட்டை நிச்சயங் கொண்டாசை
வலையில் அகப் பட்டுஉழன்று வாடித் திரிகிறண்டி
5
தன்னைஅறி யாமல் தலமெட்டுங் காணாமல்
அன்னை அன்னை என்று அலறித் திரிகிறண்டி
6
தவநிலையில் தேறாமல் உன்னை உணராமல்
பவநிலையில் புக்கி அகப் பட்டுஉழன்று வாடுறண்டி.
7

No comments:

Post a Comment