சிவகுரு

Monday, June 11, 2012

குருவென் பவனே வேதாக மங்கூறும்
பரவின்ப னாகிச் சிவயோகம் பாவித்து
ஒருசிந்தை யின்றி உயர்பாச நீக்கி
வருநல் குரவன்பால் வைக்கலு மாமே.
சிவகுரு என்று அழைக்கப்படுபவன் செந்தமிழ் மறை முறையாம் வேதாகமம் சிறந்தெடுத்தோதும் பேரின்ப வடிவினன். அவ் வடிவுடையவனாகிச் செவ்வி யுயிரினுக்குச் சிவயோகம் சேர்ப்பித் தருள்வன். அவ் வுயிர் திருவடியுணர்வு கைவந்தமையால் வேறோர் எண்ணமும் எண்ணுவதில்லை. அவ் வுயிரை அந்நிலையான் உயரச் செய்து பாசப்பசை யகற்றித் திருவடிநீழற்கீழ் வருவித்துப் பேற்றின்கண் நிலைப்பிப்பவன் சிவகுருவாவன்
Read more ...

சிவகுரு

Monday, June 11, 2012

உணர்வொன் றிலாமூடன் உண்மையோ ராதோன்
கணுவின்றி வேதா கமநெறி காணான்
பணிவொன் றிலாதோன் பரநிந்தை செய்வோன்
அணுவின் குணத்தோன் அசற்குரு வாமே.
சிவகுரு எழுந்தருளிவந்து ஆருயிர்களை ஆட்கொள்ளும் நல்வழியாம் திருநெறிக்கு வழித்துணையாக நிற்பவன் குலகுரு அவனே குலதெய்வம். இவ் வுண்மை! திருஞானசம்பந்தப்பெருமானாராம் சிவகுரு எழுந்தருளப் பாண்டிமன்னனுக்கும் பாண்டி நாட்டிற்கும் வழித்துணையாக நின்றவர் மங்கையர்க்கரசியாராம் குலகுரு அவரே குலதெய்வம். இவ் வுண்மை சேக்கிழாரடிகள் அருளிய "மங்கையர்க்குத் தனியரசி எங்கள் தெய்வம்"1 என்ற மறை மொழியான் உணரலாம். குலகுரு வென்பார் திருக்கோவில் வழிபாடு செய்வாரும், சிவதீக்கை செய்விப்பாருமேயாவர். அவர்கள் செம்மையாளராக இருத்தல் வேண்டும். அத்தகைய பெருநிலைக்குப் பொருந்தாத் திருந்தாமாக்களாவார் சிவ உணர்வென்பது ஒரு சிறிதும் இல்லாத மூடன்; முப்பொருள் உண்மையாம் மெய்ம்மை உணராதோன்; அருமறையாம் திருவைந்தெழுத்துபதேசக் கணுவின்றியுள்ளோன். செந்தமிழ் வேதாகமநெறி காணாதவன்; தாழ்வெனும் தன்மையாம் அன்பும் பணிவும் ஒரு சிறிதும் இல்லாதோன்; சிவபெருமானையும் சித்தாந்த சைவத்தையும் இகழ்வோன்; பிறப்பு இறப்புக்கு உட்படுத்தும் ஆணவச் செருக்குடையோன் ஆகிய தன்மையாளராவர்.
Read more ...

ஞானம்

Saturday, May 19, 2012
ஞானம்எல்லாம் யாம் பெற்ற தலத்தில் இன்று
ஞான வாக்கு உனக்கு ஈந்தோம் காலம் இப்போ
ஊனம் என்ற நிலை அகற்றும் தலத்து ஈசனும்
உபய நந்தி ஈசனின் ஆசி காக்கும் "

பொருள் : சித்தர்கள் முனிகள் சீவமாய் வழிபட்ட மாபெரும் ஸ்தலம் இது. முனி வாக்கு அருள் கொடுத்த குருவாய் (தென்முக கடவுள்-குரு தட்சிணாமூர்த்தியால் இந்த இடத்தில தான் பிருகு முனிக்கு சோதிடம் என்னும்ஆருடம் கைவல்யம் ஆனது - என்று கோவிலில் உள்ள குறிப்பை உறுதி செய்கிறார் ). அதை தொடர்ந்து பிருகு ஆகிய தானும் ஒரு சில ஞானங்கள் பெற்ற தலம் திருக்கள்ளில் (திருக்கண்டலம்) என்று குறிபிடுகிறார். இங்கு இருக்கும் ஈசனுக்கு ஊனம் (குறைபாடு) என்ற நிலையை கற்றும் வல்லமை உள்ளதாக சொல்கிறார். துணையாய் நந்தியும் ஊனம் அகற்றும் ஆசியை ஈசன் உடன் சேர்ந்து ஈந்து பக்தர்களை காத்து வருகிறார்.
Read more ...

கண்ணிகள்

Saturday, May 19, 2012




பொல்லாக் கொலையும் புலைஅவா விட்டு உன்றன்
வல்லபதம் காண மயங்கித் திரிகிறண்டி.    8
    
துன்பமெல்லாம் போக்கிச் சுகானந்த மானநின்தாள்
இன்பம் அனுபவிக்க ஏங்கித் தவிக்கிறண்டி.    9
    
வஞ்சகம்பொய் சூதுகொலை மானார் மயக்கமெனும்
சஞ்சலதை நீங்கித் தனித்திருக்கத் தேடுறண்டி.    10
    
ஆசைப் பெருக்காறதில்வீழாது உன்பந்த
பூசைப் புரியப் புலம்பித் தவிக்கிறண்டி    11
    
ஊணுறக்கம் இன்பதுன்பத் துஉற்றவினை யைஒழித்துக்
காணுதற்கு எட்டாப்பொருளைக் கண்டு மகிழ்ந்தனடி    12
    
பஞ்சபூதாதிப் பகுப்புகள்பொய் யென்றுணர்ந்துன்
செஞ்சரணக் கஞ்சம் அதைத் தேடி அலைகிறண்டி    13
    
ஆசை ஒழிந்தும் அருள்ஞானம் கண்டு அறிந்தும்
பேசத் தெரியாமல் பேய்போல் அலைகிறண்டி.    14
    
ஆங்காரம் விட்டு அருள்வெளியைக் கண்டு அடுத்து
நீங்காப்பே ரின்ப நிலையறித் தேடுறண்டி?    15
    
சருவம் பிரமம் எனத் தான்தெரியுந் தன்மை
மருமம் கா ணாமல் மயங்கித் திரிக்கிறண்டி.    16
    
ஐங்காயக் கோட்டை அதுமெய்யென்று உன்பாத
பங்கயம்போற் றாமல் பரிதவித்து நிற்குறண்டி.    17
    
பச்சைப்பாண் டத்தைப் போலநாள் இருக்குமென
நிச்சயமாய் எண்ணி நிலைதவறி வாடுறண்டி.    18
    
நீரிற் குமிழியைப்போல் நில்லா உடம்பினைவி
சாரிக்கப் பொய் என்றே தானறிந்து வாடுறண்டி.    19
    
நானென்ற கர்வம் நசித்ததனைச் சுட்டறுத்துத்
தான் என்ற அமிர்மந் தனைஅறிய வேண்டுறண்டி.    20
    
யோகந் தெரிந்ததன்றன் னுண்மை யறிவதற்குப்
பாகமுண ராமற் பதறி யலைகுறண்டி.    21
மவுனத்தை உச்சரித்து மந்திரபீ டத்தேறிக்
கெவுன மறிந்து கிலேசம்அதை விட்டேண்டி.    22
    
கற்பஞ்சாப் பிட்டே கனத்தவஞ் செய்ததினால்
விற்பனன் என்று பேர் விதித்தார் பெரியோர்கள்    23
    
காயசித்தி யோகசித்தி கண்டதனில் ஒண்டினதால்
மாயசித்தி யாலே மயங்காது இருக்கிறண்டி.    24
    
ஓமென்ற அக்கரத்தின் உட்பொருளைக் கண்டுவந்தும்
தாமென்ற ஆணவத்தால் தன்னை மறந்தேண்டி.    25
    
பிரணவமும் தானறிந்து பேச்சடங்கி நின்ற
சொருபந் தெரிந்தத் துலக்கத்தில் நிற்குறண்டி.    26
    
நந்தி கொலுவிருப்பை நான் அறிந்து கண்டுகொண்ட
சத்தி தெரிந்து தவியாது இருந்தண்டி.    27
    
அட்டகரு மம்தெரிந்தும் ஐவர் நிலை அறிந்தும்
இட்ட மதிற்சற்றும் இல்லாது இருக்குறண்டி.    28
    
நானென்னும் ஆணவங்கள் அணுகாது நான் எனலும்
தான் எனலும் அற்றுத் தனியே திரிகுறண்டி.    29
    
எட்டாச் சுழிமுனையி லேயிருந்து என்மனதுக்கு
எட்டாப் பொருளதனை எட்டிப் பிடித்தேண்டி.    30
    
சாகாக்கால் இன்னதெனத் தானறிந்து கொண்டதன் பின்
வேகாத் தலையும் விரைவில் அறிந்தேண்டி.    31
    
மோகாந்த காமெனும் மோகம் தவிர்ந்தன்பின்
வேகாத் தலையும் விரைவில் அறிந்தேண்டி.    32
    
சரியைகிரி யையோகந் தாண்டியபின் ஞான
புரிக்கோட்டைக் குள்ளே புகுந்து திரிகுறண்டி.    33
    
மந்திரமுந் தந்திரமும் மாய விசர்க்கமெலாம்
உந்திரம் என்று எண்ணி உறுதியது கொண்டேண்டி.    34
    
சத்தத்தின் உள்ளே சதாசிவத்தைத் தானறிய
உத்தமியே நின்னுரு என்று ஓர்ந்தறிந்து கொண்டேண்டி.    35

















































Read more ...

ஞானச் சித்தர் பாடல் -கண்ணிகள்

Saturday, May 19, 2012

ஆதி பராபரையே அம்பிகை மனோன்மணியே
சோதிச் சுடரொளியே சுத்த நிராமயமே.
1
தாயே பகவதியே தற்பரையே அற்புதமே
நேயமுடன் ஞான நெறியைஅறி விப்பாயே.
2
முடிநடுவும் மூலமுமாய் முச்சுடராய் முப்பொருளாய்
மடிவில்லா மெய்ஞ்ஞான மார்க்கத் தகோசரமாய்.
3
அஞ்ஞானக் காடு கடந் தாங்குவழி யேதொடர்ந்து
மெய்ஞ்ஞானங் காணநின்னை வேண்டிஅலைகிறண்டி
4
நிலையில்லாப் பொய்கூட்டை நிச்சயங் கொண்டாசை
வலையில் அகப் பட்டுஉழன்று வாடித் திரிகிறண்டி
5
தன்னைஅறி யாமல் தலமெட்டுங் காணாமல்
அன்னை அன்னை என்று அலறித் திரிகிறண்டி
6
தவநிலையில் தேறாமல் உன்னை உணராமல்
பவநிலையில் புக்கி அகப் பட்டுஉழன்று வாடுறண்டி.
7
Read more ...

சத்திய நாதர் என்ற ஞானச் சித்தர் பாடல்

Saturday, May 19, 2012
சத்திய நாதர் என்ற
ஞானச் சித்தர் பாடல் 


     நவநாத சித்தர்களுள் ஒருவரான சத்தியநாதரே ஞான சித்தராக, சித்தர்
இலக்கியங்களில் குறிப்பிடப்  பெறுகின்றார். 35 கண்ணிகள் கொண்ட இவரது
ஞான சித்தர்  பாடல் மனோண்மணி துதியாகக் காணப்படுவதால் இவர் சக்தி 
வழிபாட்டில் மனம் செலுத்தியவரென்பது புலனாகிறது.

நிலையில்லாப் பொய்க்கூட்டை நிச்சயங் கொண்டாசை
வலையிலகப் பட்டுழன்று வாடித்திரி கிறண்டி

என்ற கண்ணியில்  உலக மாயையின் தத்துவம் விவரிக்கப் படுகின்றது. இந்த
உடல்   அழகானதா?    அழியாததா?    வலிமையானதா?    இல்லையே.
அப்படியிருக்க  இதனை  நித்தியமென்று  கருதி  என்னவெல்லாம் ஆட்டம்
போடுகிறது?  யாரை யாரையெல்லாம்  மாய்த்துத் தள்ளுகிறது? கண்ணதாசன்
சொல்வாரே,  இன்றைக்கு செத்த பிணத்திற்காக நாளைக்கு சாகும் பிணங்கள்
அழகின்றனவே  என்று.  அதுபோல  மற்றவை  அழிவில் அவரது அழிவும்
உண்டு என்று ஏன் எண்ணிப் பார்க்க மறந்து விடுகின்றனர்.

     நீரிற்  குமிழியைப்  போல்   நில்லாமல்  மறைந்து  விடுகின்ற  இந்த
உடம்பினை  ஒருகாலத்தில் மெய்யென்று எண்ணியிருந்தேன். பிறகு ஒருநாள்
தீர  விசாரிக்கையில்  அஃது பொய்யென்று உணர்ந்து கொண்டேன். அடடா,
நான்

எத்தனை  பெரிய  அறிவீலி  என்று என்னை நானே நொந்து கொள்கிறேன்
என்று 19வது கண்ணியில் வருந்துகின்றார்.

    இந்த ஞான சித்தர் மனோண்மணி அம்பிகையை வழிபட்டபின் உண்மை
ஞானம்    கைவரப்    பெற்றவராய்    மாறியதைத்    தம்    கண்ணியில்
தெளிவாக்குகின்றார்.

தாயே பகவதியே தற்பரையே அற்புதமே
நேயமுடன் ஞான நெறியையறி விப்பாயே

என்று வேண்டியதற்கு அவள் அருள் புரிந்தமையை
சத்ததிதி னுள்ளே சதாசிவத்தைத் தானறிய
உத்தமியே நின்னருளென் றோர்த்தறிந்து கொண்டேண்டி

என்று  உண்மை  நிலையை  உணர்ந்து  கொண்டமையை உணர்த்துகின்றார்
ஞான சித்தர்.
Read more ...
Saturday, May 19, 2012

     சமுதாயத்தில்  புரையோடி விட்டிருக்கும்  மூடப் பழக்கங்களைச் சாடும்
வித்தியாசமான   சித்தராக   சிவவாக்கியர்  காட்சி   தருகின்றார்.   ஆசார,
அனுஷ்டானங்களைக்  கடைபிடிக்கிறேன்  பேர்வழி என்று தேவையற்ற மூடப்
பழக்கங்களில்  மூழ்கித்  தவிக்கும்   மூடர்களைக்   கரையேறி   உய்யுமாறு
சிவவாக்கியர் அறிவுறுத்துகின்றார்.

     “பூசைபூசை யென்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள்
     பூசையுன்ன தன்னிலே பூசைகொண்ட தெவ்விடம்
     ஆதிபூசை கொண்டதோ வனாதிபூசை கொண்டதோ
     ஏதுபூசை கொண்டதோ வின்னதென் றியம்புமே” (37)

என்று உண்மை பூசை பற்றியும்,
     “வாயிலே குடித்தநீரை எச்சிலென்று சொல்லுறீர்
     வாயிலே குதப்புவேத மெனப்படக் கடவதோ
     வாயிலெச்சில் போக வென்று நீர்தனைக் குடிப்பீர்காள்
     வாயிலெடச்சில் போனவண்ணம் வந்திருந்து சொல்லுமே”

என்று  எச்சில்  படாமல்  பூசை  செய்ய வேண்டும் என்று மடிசாமிதனமாகப்
பேசும் அறிவிலிக்கு எச்சிலைப் பற்றி விளக்கம் தருகின்றார்.


 வாயினால் ஓதப்படுவதால் வேதத்திலுள்ள  மந்திரங்களும் எச்சில், பசு
மடியில் கன்று குடித்த  பால் எச்சில்,  மாதிருந்த விந்து எச்சில், மதியுமெச்சி
லொளியுமெச்சில்  மோதகங்களான  தெச்சில் பூதலங்களேழும் எச்சில் எதில்
எச்சிலில்லை? என்று கேள்வி எழுப்புகின்றார்.

     புலால்புலால் புலாலதென்று பேதமைகள் பேசுறீர்
     புலாலைவிட்டு மெம்பிரான் பிரிந்திருந்த தெங்ஙனே
     புலாலுமாய் பிதற்றுமாய் பேருலாவுந் தானுமாய்
     புலாலிலே முளைத் தெழுந்த பித்தர்காணு மத்தனே” (149)

என்று புலால் மறுத்தலை எள்ளி நகையாடுகின்றார். இன்னும்,
     “மீனிறைச்சி தின்றதில்லை யன்றுமின்றும் வேதியர்
     மீனிருக்கு நீரலோ மூழ்வதுங் குடிப்பதும்
     மானிறைச்சி தின்றதில்லை யன்றுமின்றும் வேதியர்
     மானுரித்த தோலலோ மார்புநூல ணிவதும்” (159)

     “மாட்டிறைச்சி தின்றதில்லை யன்றுமின்றும் வேதியர்” (160)
என்ற  பாடலில்  மாட்டிறைச்சி   தின்பது  பாவம்   என்று  அருவறுக்கும்
வேதியர்களே  மாட்டிறைச்சிதான்  உரமாக காய்கறிக்கிடுவதை அறிவீர்களா?
ஆட்டிறைச்சி  தின்றதில்லை என்கிறீரே, உங்கள் யாக வேள்வியில் ஆகுதி
செய்யப் படுவதும், நெய்யாய்  இடுவதும் எது  என்பதை யோசிப் பீர்களாக
என்கிறார்.

Read more ...