ஆன்மீகம்

Friday, March 11, 2011
ஓம்

ஆன்மீகம் என்பது இறைவனின் அன்பு மூலமாக தன்னை உணர்தல் .
பழம்பாடல் ஒன்று .
விதைப்பேனோ விதைப்பினும் முளைக்குமோ ,
முளைகினும் கைக்கு கிடைக்குமோ கிடைக்கினும்
உண்பேனோ உண்பினும் விக்கிகொள்ளுமோ
ஜோதி திருஉளம் எதுவோ?


அன்றாட செயலே இறைவனால் நடக்கிறது என்பது இதனால் அறியப்படும் கருத்து.

திரு அருட்பிரகாச வள்ளலார் இயற்றி அருளிய திருஅருட்பா
ஆறாம் திருமுறை

களக்கமறப் பொதுநடம்நான் கண்டுகொண்ட தருணம்
கடைச்சிறியேன் உளம்பூத்துக் காய்த்ததொரு காய்தான்
விளக்கமுறப் பழுத்திடுமோ வெம்பிஉதிர்ந் திடுமோ
வெம்பாது பழுக்கினும்என் கரத்தில்அகப் படுமோ
கொளக்கருது மலமாயைக் குரங்குகவர்ந் திடுமோ
குரங்குகவ ராதெனது குறிப்பில்அகப் படினும்
துளக்கமற உண்ணுவனோ தொண்டைவிக்கிக் கொளுமோ
ஜோதிதிரு உளம்எதுவோ ஏதும்அறிந் திலனே.
--

சிவத்தை அறிவது மாபெரும் தவம்,
சிவத்தை அறியாதவர் சவம்!
சிவன் பெயர் சொல்வது மாபெரும் தவம்;
சிவம் இல்லையேல் எல்லாம் சவம்!!
சிவம் அறிவது மாபெரும் தவம்;
சிவம் அறியாதது சவம்!!!

ஊர்ச்சுடுகாட்டு எரிப்பிச்சனின் தீந்தமிழ்க்குஞ்சு
சிவ அறிவொளியன்
தனித்திரு, விழித்திரு, பசித்திரு.



வாழ்க்கை உலகில் பிறந்த ஜீவராசிகளுக்கு விதிக்கப்பட்ட ஒன்று. வாழ்க்கை என்பது வாழ்வதற்கே.விரும்பினாலும் விருப்பம் இல்லாவிட்டாலும் வாழ்ந்துதான் தீரவேண்டும். இவ்வுலக வாழ்வு நமக்கு இன்பமானதாக அமைவதும் நமது வாழ்க்கை வெற்றிப் பாதையில் செல்வதும் நமது குறிக்கோள் என்ன? இங்கு நாம் எப்படி வாழ்கிறோம்? என்பதைப் பொறுத்தே அமைகிறது.


உலக வாழ்வில் பல இன்பங்களும் துன்பங்களும் பகலும் இரவும் மாறிமாறி வருவதுபோல் வருவது இயற்கை. இன்பம் வருகையில் மிகவும் மகிழ்ச்சியடைவதும் துன்பம் வருகையில் துவண்டுபோவதும் அவ்வின்ப துன்பங்களுக்கு நம்மை அடிமையாக்கும் விதமாக அமையும்.


இத்தகைய நிலையில் நாம் சுற்றுப்புற சூழ்நிலைகளால் ஆளப்பட்டு, நமது சுயக் கட்டுப்பாட்டை இழக்கிறோம். இந்நிலையை மாற்றி நம்மை நாமே ஆளும் தன்மையை நாமடைந்தால் சுற்றுப்புற சூழ்நிலைகள் நம் கட்டுப்பாட்டுக்குள் வரும். வாழ்வு நாம் விரும்புவதுபோல் அமையும். இடையில் வரும் எந்த இன்பங்களும் துன்பங்களும் நம்மை பாதிக்காமல் நாம் சலனமற்ற சிந்தையோடு இனிமையான வாழ்வு வாழ்வதுடன் முன்னேற்றப் பாதையில் நாம் தொடர்ந்து செல்வது உறுதி.



வாழ்வில் முன்னேறவும், வாழ்வை என்றும் இன்பகரமாக அமைத்துக்கொள்ளவும் நம் முன்னோர்கள், மற்றும் கல்வி அறிவும் அனுபமும் மிக்க அன்பர்கள் பலரும் உரிய வழிமுறைகளை வகுத்துத் தந்துள்ளார்கள். அவற்றை அனைவரும் உணரும் வண்ணம் எடுத்துரைத்து, குழந்தைகள் மற்றும் அனைவரும் வாழ்வில் உயர வழிசெய்வதே நமது நோக்கம்.

No comments:

Post a Comment