விநாயகர் - சுலோகங்கள்

Wednesday, March 17, 2010
விநாயகரை வணங்குவோர் மேன்மைகளை அடைந்து இன்புற்று வாழ்வர்.

சுலோகம்-1

“முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம்

கலாதராவ தம்ஸகம் விலாஸிலோக ரக்ஷகம்

அநாயகைக நாயகம் விநாசிதேப தைத்யகம்

நதாசபாசு நாசகம் நமாமி தம் விநாயகம்.’

விளக்கம்: திருக்கரத்தில் மோதகத்தை மகிழ்ச்சியுடன் வைத்துக்கொண்டிருப் பவரும், தம்மைத் தியானிப்பவர்களுக்கு எப்பொழுதும் மோட்சத்தைக் கொடுப்பவரும், சந்திரனை சிரசில் அணிந்தவரும், தம்முடைய வரலாற்றைச் சங்கீர்த்தனம் செய்து கொண்டு ஆனந்தமாக இருக்கும் அடியார்களையெல்லாம் காப்பவரும், ஆதரவில்லாத மக்களுக்கு ஆபத்துக் காலத்தில் தாமே ஆதரவாக இருந்து காப்பாற்றுபவரும், கஜாசுரனைக் கொன்றவரும், தம்மைப் போற்றும் பக்தர்களுடைய பாவங்களை அக்கணமே துவம்சம் செய்ய வல்லவருமான மகா கணபதியை வணங்குகிறேன்.

சுலோகம்-2(பயன்)


“மஹாகணேச பஞ்சரத்ந மாதரேண யோந்வஹம்

ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதி ஸ்மரந் கணேச்வரம்

அரோகதாம தோஷதாம் ஸுஸாஹிதீம் ஸுபுத்ரதாம்

ஸமாஹிதாயை ரஷ்டபூதி மம்யுபைதி ஸோசிராத்.’

விளக்கம்: பஞ்சரத்தினம் என்னும் இந்த மகா கணபதி ஸ்தோத்திரத்தை எவர் ஒருவர் அனுதினமும் வைகறைப் பொழுதில் மகா கணபதியைத் தியானித்த வண்ணம் பாராயணம் செய்கிறார்களோ, அவர்கள் வெகு விரைவில் சகல வியாதிகளிலிருந்தும் எல்லா தோஷங் களிலிருந்தும் விடுபடுகிறார்கள். அவர்கள் நல்ல இசை ஞான மும், பாடும் திறனும் பெறு கிறார்கள். இவர்கள் உத்தம புத்திரர்களையும், தீர்க்கமான ஆயுளையும், அஷ்ட ஐஸ்வரியங் களையும் வாழ்வில் அடைவர்.

சுலோகம்- 3

“அகிஞ்ச நார்த்தி மார்ஜநம் சிரந்தநோக்தி பாஜநம்

புராரி பூர்வ நந்தனம் ஸுராரி கர்வ சர்வணம்

ப்ரபஞ்ச நாச பீஷணம் தனஞ்ஜயாதி பூஷணம்

கபோலதாந வாரணம் பஜே புராண வாரணம்.’

விளக்கம்: தம்மைத் தியானிப்பவர்களின் வறுமை, துன்பம் போன்றவற்றை நாசம் செய்கிறவரும், வேத வாக்கியங்களால் போற்றப் படுபவரும், மகிமை பொருந்தியவரும், திரிபுர சம்ஹாரம் செய்தருளிய பரமேசுவரனுடைய மூத்த குமாரரும், தேவர்களின் விரோதிகளான அசுரர்களின் கர்வத்தை அடக்குபவரும், லோகங்களை நாசம் செய்கிற யமதர்மனுக்குப் பயத்தைக் கொடுப்பவரும், அர்ஜுனன் போன்ற வில்லில் வல்லவர்களான வீரர்களாலும் முதலில் வணங்கிப் போற்றப்படுபவரும், கபோலத்தில் ஏற்படும் மத ஜலத்தைப் பெருக விடுபவரும், புராதன கஜ சொரூபியுமான மகா கணபதியைத் தியானிக்கிறேன்.


சுலோகம்-4

“ஸமஸ்தலோக சங்கரம் நிரஸ்த தைத்ய குஞ்ஜரம்

தரேதரோத ரம்வரம் வரேபவக்த்ர மக்ஷரம்

க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம்

மநஸ்கரம் நமஸ்க்ருதம் நமஸ்கரோமி பாஸ்வரம்.’

விளக்கம்: பதினான்கு உலகங்களிலுமுள்ள பக்தர்களுக்குப் பேரானந்தத்தைக் கொடுப்ப வரும், கஜாசுரனை சம்ஹாரம் செய்தவரும், சகல லோகங்களையும் வயிற்றுக்குள் வைத்து ரட்சிக்கும் பெருத்த வயிறுடன் தோற்றமளிப்ப வரும், சிரேஷ்டமானவரும், ஐராவதத்தைப் போன்ற முகப்பொலிவு பெற்றவரும், அழிவற்ற வரும், தம்மை வணங்குவோரின் பிழைகளைப் பொறுத்து அருள்புரிபவரும், அவர்களது மனதை நல்வழிப்படுத்தி அவர்களுக்குச் சந்தோஷத்தையும் நல்ல கீர்த்தியையும் அருளு பவருமான மகா கணபதியை வணங்குகிறேன்.

சுலோகம்- 5


“நிதாந்தகாந்த தந்த காந்தி மந்த காந்த காத்மஜம்

அசிந்த்யரூப மந்தஹீந மந்தராய க்ருந்தநம்

ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்தமேவ யோகிநாம்

தமேகதந்த மேகதம் விசிந்தயாமி ஸந்தகம்.’

விளக்கம்: மிகவும் அழகான பல் வரிசை களின் பேரொளியுடன் கூடியவரும், யமனுக்கும் மேலான பரமேசுவரருடைய குமாரரும், சிந்தனைக்கும் அப்பாற்பட்ட சொரூபத்தை உடையவரும், அழிவற்றவரும், பக்தர்களின் சகல விக்னங்களையும் சம்ஹரிப்பவரும், தவசியர் களின் மனத்தில் சர்வசதா காலமும் வாசம் செய்பவரும், யானை முகத்துடன் இருந்தாலும் ஒரே தந்தத்தைப் பெற்றவருமான மகா கணபதியை எந்நேரமும் தியானிக்கிறேன்.
Read more ...

பூமியின் வயது

Friday, March 12, 2010
1. பூமியின் வயது 455 கோடி வருடங்கள்.
2. பூமியின் சுற்றளவு 25000 மைல்கள். உருண்டை வடிவம் கொண்டது.
3. பூமியின் குறுக்களவு 8000 மைல்கள்.
4. எவரெஸ்ட் மலையின் உயரம் 29000 அடி உயரம்.
5. பெண்ட்லி பள்ளத்தாக்கு 8300 அடி ஆழம்.
6. இப்போது நாம காணும் மண்ணும் கல்லும் கலந்த பகுதி தான் பூமியின்
பொறுக்கு. சுமார் 25 மைல் வரை தான் இந்தப் பொறுக்கு.
7. அதற்குக் கீழே 1800 மைல் வரை பாறை.
8. அதற்கும் கீழே 2160 மைல் வரை அக்கினிக் குழம்பு. அதாவது பாறையும்
இரும்பும் உருகி உலோகக் குழம்பாகி பயங்கரச் சூட்டில் கொதித்துக்
கொண்டிருக்கும்.
9. இந்த அக்கினிக் குழம்புக்கும் கீழே 780 மைலுக்கு கனத்த உலோகம்.
10. இதையெல்லாம் தோண்டிப் பார்க்க நம்மிடம் ராட்சஸ இயந்திரங்கள் இல்லை.
ஆனால், ரஷ70 அடிவரை அதிக ஆழம் தோண்டிப் பார்த்திருக்கிறார்கள்.
11. பூமி சூரியனைச் சுற்றும் தூரம் 68 கோடியே 39 இலட்சம் மைல்கள்.
12. பூமியோடு சேர்ந்து நாமும் ஒரு வினாடிக்கு 18.5 மைல்கள் பிரயாணம்
செய்கிறோம்.
13. பூமி தன்னனைத் தானே சுற்றுவதில் நாம் வினாடிக்கு 1525 அடி நகர்ந்து
போகிறோம்.
14. பூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்றிவர ஒரு முழு நாள் ஆகும். (அதாவது 23
மணி நேரமும், 56 நிமிடங்களுமாகும்.)
15. பூமி சூரியனை ஒருமுறை சுற்றி வர ஒரு வருடம் ஆகும்..(அதாவது 365
நாட்களும் 6 மணி நேரமும், 46 நிமிடங்களும். 48 வினாடிகளுமாகும்.) 16. சந்திரனோ
பூமியைச் சுற்றிக்கொண்டிருக்கிறது.
17. பூமியும் ஏனைய கிரகங்களும், அதற்கென நிர்ணயிக்கப்பட்ட பாதையில்
பிறழாமல் சுற்றிக்கொண்டே இருக்கின்றன.
18. பூமியிலிருந்து சற்திரன் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிம் மைல்களுக்கு
அப்பால்இருக்கிறதது.
19. பூமியின் முக்கால் பாகம் நீரால் சூழப்பட்டுள்ளது. கால் பாகம்
மேற்பரப்பில் தான் உயிரினங்கள் வாழ்கின்றன. (பூமியின் ழுழுப்பரப்பின்
70.8 விழுக்காடு கடல்கள்.மீதமுள்ள பகுதியே நாம் வாழும் பகுதி.)
20. பூமியின் மேற்பரப்பை நான்கு கோளங்னாகப் பிரிக்கலாம். 1.
பாறைக்கோளம்.2. நீர்கோளம். 3. வளிமண்டலம் (யவஅழளிhநசந) உயிர்கோளம்
எத்தனை பிரயாணங்கள் ?

21. தன்னைத்தானே சுற்றும் பிரயாணம்!
22.சூரியனை சுற்றும் பிரயாணம்!
23. சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், மற்றும் கிரகங்கள் இவற்றோடு
சேர்ந்து செய்யும் பிரபஞ்சப் பிரயாணம்.! இங்கேயும் முடிவில்லை.
24. பிரபஞ்சம் முழுமையாக சேர்ந்து அண்ட வெளியில் வெளிநோக்கி வளைய
மடித்துக்கொண்டு போகும் பிரயாணம்!

ஆக நான்கு பிரயாணங்கள் செய்து கொண்டே இருக்கிறோம். அதே நேரம் நாம்
எதைப்பற்றியும் கவலைப்படாமல் வீட்டிலே நிம்மதியாக உறங்கிக்
கொண்டிருக்கிஙோம்.

25. நாம் நினைப்பது போல் பூமி ஒன்றா ? ஒரே ஒரு பூமி மட்டுமல்ல. ஒரு சூரிய
குடும்பத்துக்கு ஒரு பூமி. உலகில் பல சூரிய குடும்பங்கள் உள்ளன. ஒவ்வொரு சூரிய
குடும்பத்துக்கும் ஒவ்வொரு பூமி உள்ளது. ஒரு பால் வெளியில் (புயடயஒல) 200
பில்லியன் நட்சத்திரங்கள் உள்ளன. பால் வெளி என்பது ஒன்றா? நூறா ?
அதுவே 200 பில்லியன் பால் வெளிகள் உள்ளன. அப்டியானால் உலகில்
எத்தனை பில்லியன் நட்சத்திரங்கள் இருக்கும். படைத்தவனுக்கே வெளிச்சம்.
Read more ...

அதிசயப் பிரபஞ்சம்.....

Friday, March 12, 2010
பிரபஞ்சம் ஒன்றில்லை !
பல்வேறு !
காலமற்ற பிரபஞ்சமே
கருவாகி
உருவாகி உள்ளது !
காலத்துக்குத் துவக்கம் இல்லை !
முறிந்த கருந்துளையால்
பிறக்கும்
சேய்ப் பிரபஞ்சம் !
மாண்ட பிரபஞ்சம் அடுத்து
மீண்டெழும் !
ஆதி அந்த மற்ற
காலத் தூரிகை போடும்
கோலம்
மூலமும் முடிவு மில்லாப்
பிரபஞ்சம் !
பிரபஞ்சம் முறிந்து புதிதாய்ப்
பிறக்கும் !
உதித்த பிரபஞ்சம்
உப்பி விரிந்து வெப்ப இழப்பில்
சப்பிப் போகும் !
பிரபஞ்சம்
புத்துயிர் பெறக் கருந்துளைக்கு
வித்துள்ளது !
உயிரினங்கள் தோன்றி
மடிவது போல்
முடிவடையும் பிரபஞ்சம் !
புரிந்தும் புரியாய வேதமாய்ப்
புதிருக்குள் புதிராகும்
அதிசயப் பிரபஞ்சம் !
Read more ...

நான்கு சிவராத்திரிகள்

Friday, March 12, 2010
முத்தொழில் செய்யும் மூன்று கடவுள்களுள், சிவனது பொறுப்பில் வருவது இறப்பு போன்ற உறக்கம். அதே போல் உயிர்களை விழிக்கச் செய்யும் நேரம் பிரமனது தொழில் சுறுசுறுப்பாக நடைபெறும் நேரம். உயிர்கள் தத்தம் கடமைகளையும், செயல்களையும் செய்யும் நேரம், காக்கும் தெய்வமான விஷ்ணுவின் நேரம்.

இதன் அடிப்படையில்தான் நாளைப் பகுத்துள்ளனர் பெரியோர். விடிகாலை 4 மணி முதல் 8 மணி வரை (1 மணி = 1 ஓரை = 2 1/2 நாழிகைகள்) உள்ள நேரம் நான்முகப் பிரமன் செயலாற்றும் நேரம். அந்நேரத்தில் செய்யும் நியமங்கள் சத்துவத்தை அதிகப்படுத்துவன. அந்நேரத்தில் உட்கொள்ளும் உணவு சுறுசுறுப்புக்கும், உடல், மன வளர்ச்சிக்கும் உதவுவதாக அமையும்.

காலை 8 மணி முதல் முன்மாலை 4 மணி வரை விஷ்ணுவின் நேரம். இந்த நேரத்தில் உடலும், உள்ளமும் நன்கு உழைத்து, செயலாற்ற ஒத்துழைக்கும்.

மாலை 4 முதல் இரவு 8 மணி வரை மீண்டும் பிரமனின் நேரம். பிரமன் தொழிலாக, மீண்டும் உடல் மற்றும் மனதின் புத்துணர்வுக்கு ஓய்வும், உணவும் உடலில் ஒட்டும் நேரம் இது.

இரவு 8 மணிக்குள் உணவை முடித்துக் கொள்வதுதான் நல்லது. அதன் பிறகு, இரவு 8 மணி முதல், காலை 4 மணி வரை சிவனது நேரம். செயல்பாடுகள் நின்று, இறப்பு போன்ற தூக்கத்தில் அமிழும் நேரம் அது.

நம் உடலுறுப்புகளின் செயல்பாடும் இப்படியே மூன்று தெய்வங்களது செயல்பாட்டினை ஒட்டியே அமைவதால், ஒவ்வொரு மனிதனின் உடலிலும், மூன்று தெய்வங்களின் அம்சமும் உள்ளன. ஒவ்வொரு மனிதனும் மூன்று தெய்வங்களின் அருளால் ஒவ்வொரு நாளும் மூன்று நிலைகளில் சுற்றிக் கொண்டிருக்கிறான். அவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இதை உணர்ந்தாலும் உணராவிட்டாலும் மூன்று தெய்வங்களும் அவன் உடல், மன நிலைகளை மேற்பார்வை பார்க்கும் வேலையைச் செய்து கொண்டுதான் இருக்கின்றன.

இவற்றுள், அழித்தல் கடவுளான சிவனது நேரம் இரவாக இருக்கவே ஒவ்வொரு இரவும் சிவராத்திரிதான். அழித்தல் என்று எல்லாவற்றையும் ஒடுக்கி விடுவது போன்ற இந்தத் தொழிலின் முக்கிய அம்சம், அழித்தல் மட்டும் அல்ல. அழித்தல் போன்ற உறங்கும் நிலையிலும், நம் உள் மனம் விழித்திருக்கிறது. நாம் அறியாத நிலையில் உள்ளே சலனங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இங்கே தான் மஹா சிவராத்திரியின் முக்கியத்துவம் வருகிறது. அது என்ன என்று பார்ப்பதற்குமுன், மற்ற மூன்று சிவராத்திரிகளைப் பார்ப்போம்.

இரண்டாவது சிவராத்திரி
மாத சிவராத்திரி எனப்படுவது. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்தசியில் வருவது. இதுவும் ஒருவித அழித்தலைக் குறிப்பது. பௌர்ணமியில் ஒளிர்ந்த சந்திரன், தேய்ந்து முழுவதும் மறைவதற்குமுன் வரும் ராத்திரி மாத சிவராத்திரி ஆகும்.

மூன்றாவது சிவராத்திரி
வருடம்தோறும் மாசி மாதம் தேய்பிறையில் முதல் 13 நாட்களும் அனுஷ்டிக்கப்படுவது.

அது முடிந்த 14-ஆம் நாள் வரும் மகா சிவராத்திரி, 4-ஆவது சிவராத்திரி ஆகும்.
Read more ...

வேதம்

Monday, March 1, 2010
பாரத நாட்டில் வாழும் மக்கள் கடவுள் பதத்தை
அடையும் வண்ணம், நூல்கள் மஹான்களால் அநுபவ வாயிலாய்
எழுதப்பட்டன. நூல்கள் எழுதுவதற்கு முன்பே,
ஞானமார்க்கத்தின் இரகசியங்களை வாயினால்
ஒருவருக்கொருவர் சொல்லி வந்தார்கள். பின்பு பீஜங்களை
ஏற்படுதிய பிறகு, ஓலையில் அந்த எழுத்துக்களைக்கொண்டு
தாங்கள் அநுபவித்த மகத்தான இரகசியப் பொருளைப்
போதிக்கவேண்டியவர்களைத் தேர்ந்தெடுத்து,
ஜீவர்களிடத்தில் வைத்திருந்த கருணையினாலேயே
உபதேசித்து வந்தார்கள். அவ்விதமாக வெளிப்பட்ட நூலே
வேதமாகும்.

இதுவே முதல் நூலாக விளங்குகிறது. இவ்வேதத்தை
அறிந்தனுபவித்த ஞானிகளும் பெரியோர்களும் இதன்
மூலமாகக் கிடைத்த அனுபவத்தினால் சார்பு நூல்களை
இயற்றினார்கள். வேதசாரம் ஞானிகளால் ஆறு உப
அங்கங்களாகப் பிரிக்கப்பட்டன. அவைகளில்,
முதலாவதாகிய சிக்ஷை என்னும் அங்கத்தைத் தழுவியே
வேதங்கள் அனுசரிக்கப்பட்டு வந்தன. கடவுளைக் காண வழி
இரண்டென வகுத்து, அவை சுரம், சரமென உணர்த்தி,
அவைகளை நாதத்தின் மூலமாகவும், பிராணாபான
வயுக்களின் மூலமகவுமே அடையமுடியுமென்று உணர்த்திப்
பாக்களைப் பாடிவைத்தார்கள்.

அது போலவே, ஓங்கார சொரூபமாகிய நம் நாட்டின்
(இந்தியாவின் மேல் ஓம்மைப் பொருத்திப் பார்க்கவும்)
வடபுலத்தில் உறைந்த ஞானிகளால் சத்தி அம்சமாகிய
சமஸ்கிருதமென்னும் மொழியானது பரவித்தைக்கு மட்டும்
உபயோகப்படுத்தப்பட்டு வந்த்தது. ஆனால் அந்த மொழி
பேசுவதற்கு உபயோகப்படவில்லை என்பதால்,
அம்மொழியினின்றும் இந்தி,மராட்டி,குஜராத்தி முதலிய
வடபுலத்து மொழிகளை உண்டாக்கிக்கொண்டு, ஞான
கர்மாவாகிய ஆத்ம வித்தைக்குச் சமஸ்கிருதத்தையே
தாய்மொழியாக்கிக் கொண்டார்கள். இப்படியிருக்க,
தென்புலத்தில், சிவமொழியான தமிழ் ஓங்காரபீஜமாகத்
தாண்டவமாடிக் கொண்டிருந்தது. அதில் அனேக மேதாவிகள்
பிறந்து உலகுக்குத் தாங்கள் அநுபவித்த ஆனந்தமாகிய
இரகசியத்தை வழிநூலாக்கி வழங்கினார்கள்.

தமிழை ஆதாரமாகக் கொண்டு பீஜத்தைத்
தமிழிலிருந்தும் சப்தத்தை சமஸ்கிருதத்திலிருந்தும்
எடுத்துக்கொண்டு ஒன்றாய்க் கூட்டிக் கிரந்தம் என்னும்
மொழியை உண்டாக்கினார்கள். தமிழையே ஆதாரமாகக்
கொண்டு தங்கள் அநுபவங்களை வெளிப்படுத்தியிருக்கும்
ஞானிகளின் போக்குகளை, நாம் அநுபவித்துத்தான்
உணரமுடியுமே தவிர, அநுபவமில்லாமல் சாத்திரங்களைப்
படித்து மட்டுமே முடிவுக்கு வருவது நன்றன்று. அதனால்,
ஞானிகளின் போக்குகளைச் சிதைத்து விடுவதினால்
ஏற்பட்ட குற்றத்தையும், கற்றவர்கள் வார்த்தையே
எதிர்பார்க்கும் மற்றவர்கள்
கதி(மூச்சோட்டம்)யினாலேற்படும் குற்றத்தையும் அடைவர்.

வேதாந்த விசாரணை என்பதைச் சத்திர விசாரணையோடு
நிறுத்திக்கொள்ளுகிறார்களே தவிர தம் உற்பத்தியைப்
பற்றியும், பஞ்சபூதங்களை மானுட உடலில்
சம்பந்தப்படுத்தியிருக்கும் இரகசியங்களையும், நாதபிந்து
கலைகளின் இரகசியங்களையும், இன்னும் மற்றவைகளையும்
ஆராயாமல் விட்டு விடுகின்றனர். சாத்திரங்களைப் படித்து
அறிவதை விட, தன்னை அறியவேண்டி ஆராய்ச்சியின்
மார்க்கத்தில் சென்றால்தான் சூட்சும தத்துவங்களை
அறியமுடியும். கண்ணலே பார்க்காமல் அநுபவத்திற்குக்
கொண்டு வந்துணருவது முடியாத ஒன்று.

"தன்னை யறிந்தால் தலைவனைக் காணமுடியும்"

என்பதை அலசி ஆராயாமல் விட்டதே உண்மை ஞானம்
மறைபட்டதிற்குக் காரணம்.

அதற்கு எடுத்துக்காட்டாக, வீடுகளிலும் ஆலயங்களிலும்
(ஆன்மா லயிக்கும் இடங்களிலும்) கடவுளை வணங்கும்போதும்,
கற்பூரம், சாம்பிராணிப்புகை, தேங்காய் இம்மூன்றையும்
உபயொகப்படுத்துவது எதற்கு? கடவுளை
மகிழ்விப்பதற்காக என்று கூறி வாழ்நாளை வீணாக்கி
வருகிறோம். இவைகளுடைய தத்துவங்கள்(உண்மைகள்)
இரகசியமாக மறைக்கப்பட்டு இருக்கின்றன.
மறைக்கப்பட்டிருப்பதால்தான் வேதங்கள் மறைகள்
எனப்பட்டன.
கடவுள் தூபதீபங்களுக்கும் தேங்காய்க்கும் ஆசைப்படுபவரா?
சர்வ வியாபக மூர்த்திக்கு இச்சையுண்டா? இந்த அற்பப்
பொருள்களைக்காட்டி அவருடைய அருளைப் பெறமுடியுமா?
தேங்காய், மாயையாகிய மட்டையினால் மறைபட்டும்,
பற்றாகிய நாரினால் கட்டப்பட்டும், ஆசையாகிய
சிரட்டையினால் மூடப்பட்டும் இருக்கின்ற உண்மையாகியது
(உள்+மெய்) சிவம். அதனுள் இருக்கும் நீராகிய
சத்தியும், இரண்டும் சம்பந்தப்பட்டபின் உண்டாகிய உடலில்
ஓடும் ஜீவன் சாம்பிராணிப் புகை. பிராணண் ஒளியைப்
பிரகாசிப்பதையும், மன அசைவை நிறுத்துவதற்கும் கற்பூர
ஒளியைக் காட்டினார்கள். இவைகளை அறிந்து உணர்வதே
கல்வியின் பயன்.

இதைப்போலவே மறைக்(கப்பட்டுள்ள)கருத்துக்களை, நம்
நாட்டின் உருவமைப்பிலும், நம் சரீர அமைப்பிலும்,
தெய்வமைப்பிலும், உற்சவகிரியைகளின் அமைப்பிலும்,
தெய்வ ஆலயங்களுள்ள ஊர்ப்பெயரின் அமைப்பிலும்,
மனிதர்களின் பெயரமைப்பிலும், வீட்டுச்சுத்தி,
தேகசுத்தி, ஆகாரசுத்தி முதலிய அமைப்பிலும் ஞானிகள்
நூல்களின் சாரங்களாகத் தந்திருக்கின்றனர். இவைகளைப்
புரிந்துகொண்டால் நூல்களின் கருத்துக்கள் எளிதில்
விளங்கும்.

ஆத்மவித்தையானது உலகத்தில் சஞ்சரிக்கவும், யோகம்
என்னும் தந்திரத்தை(தன்+திறத்தை) அறியாமல்
மனங்கலங்கும் சீவப்பிறவியற்க்குப் பேருதவியாக இருக்கும்
என்னும் எண்ணத்துடன் எனக்குப் புரிந்தவரை
விளக்கப்பட்டுள்ளது.
Read more ...

உடல் கூறுகள்

Monday, March 1, 2010
நாடிகள்

(உடலில் உள்ள நிலையை நாடுவதால் இப்பெயரிட்டனர்)
இவை உடலின் உந்திச் சுழியிலிருந்து கீழிருந்து மேல்புறமாய்
பேய்ச்சுரைக்காயின் கூடுபோல் உடலைப் பின்னி நிற்பன. இவை மொத்தம் 72,000 என நூல்கள் கூறுகின்றன. இவற்றின் சிலவற்றிற்க்கு முழு விவரம் மருத்துவ நூல்களில்தான் கிட்டுகின்றன.

தலயில் ………………………7,000
வலது காதில் ……………1,500
இடது காதில்……………. 1,500
வலது கண்ணில்……… 2,000
இடது கண்ணில் ……….2,000
மூக்கில் ………………………3,330
பிடரியில் …………………..1,000
கண்டத்தில் ……………….1,000
வலது கையில்………… 1,500
இடது கையில் ………….1,500
தொண்டைக்கும்
நாபிக்கும் மத்தியில்.. 8,990
பிடரியின் கீழ் ……………8,000
விலாவில் ………………….3,000
கால்களின் சந்தில்…… 8,000
பீசத்தின் மேல் …………..2,000
பீசத்தின் கீழ் ……………….2,000
பாதத்தில் …………………….1,000
பிடரிக்குப் பின்னால்…. 3,680
கோசம் ……………………….13,000
********************************
ஆக நரம்புகள் …………..72,000
********************************
பெருவாரியான ஞான நூல்கள் பத்து நாடிகளுக்குத்தான் முக்கியத்துவம் தருகின்றன. இதிலும் இடகலை, பிங்கலை, சுழிமுனை ஆகிவைகளே மிக அதிகமாக விவாதிக்கப்படுகின்றன.

இடகலை – வாத நாடி
பிங்கலை – பித்த நாடி
சுழிமுனை – சிலேத்தும நாடி

இம்மூன்றையும் வைத்துத்தான் நம் முன்னோர், அதிலும் வைத்தியர்கள் உடலின் நோய்களைக் கண்டறிந்தனர்.

இ(டை)ட கலை – இடது நாசியினுள்ளே செல்லும் கற்று. இதுவே சந்திர நாடி. சக்தி நாடிஎன்போருமுண்டு.

பிங்கலை – வலது நாசியினுள்ளே செல்லும் மூச்சு. இதைச் சூரியநாடி, சிவநாடிஎன்பர்.

சுழிமுனை – அக்கினி நாடி. இடத்திற்கு இடம் மறுபடும்.

அதாவது அண்டம், பிண்டம், சூக்குமம், அதி சூக்குமம்.

அறிவாலுணர்வது அண்டம்.
உணர்வாலுணர்வது பிண்டம்.
நினைவால் உணர்வது சூக்குமம்.
கருத்தில் நிற்பது அதிசூக்குமம்.

சிகுவை – உள்நாக்கு நரம்பு
புருடன் – வலக்கண் நரம்பு
காந்தாரி – இடக்கண் நரம்பு
அத்தி – வலது காது நரம்பு
அலம்புடை – இடக் காது நரம்பு
சங்கினி – ஆண்(பெண்) குறி நரம்பு
குகு – குத நரம்பு
ரக்தவியானன் – இனப்பெருக்கத்திற்குறிய சுக்கிலம், முட்டை ஆகியவைகளை வெளித் தள்ளும் நரம்பு.
Read more ...

வழிபடும் முறை

Monday, March 1, 2010
உலக உயிர்களில் மனிதன் மட்டுமே அனுபவத்தை பதிவு செய்து கொள்ளும் அற்புத சக்தியை பெற்றுள்ளான். எனவே தான், இம்மனித தேகமே அருளனுபவம் பெற்று உயர்வு அடை உயரிய படைப்பாக ஞானிகளால் கூறப்பட்டுள்ளது.

அப்பேர்ப்பட்ட உயர்ந்த அனுபவத்தை மனிதன் உலகியல் வாழ்விலிருந்து, பெற்றுக் கொள்கிறான். ஒருவர் தனக்கு வந்த அனுபவத்தை எந்த அளவு தனது மனதில் பதிவு செய்து கொள்கிறாரோ அந்த அளவில் அவர் ஞான நிலையை அடைந்துள்ளார் என்பதை நாம் உணர்ந்து கொள்ள இயலும்.

அப்படி என்றால் அந்த அனுபவம் மனிதனுக்கு இருவகையில் கிடைக்க வாய்ப்புள்ளது. ஒன்று, இல்லற பந்தத்தில் சிக்குண்டு, உலகியல் ஈடுபாடுகளில் அதிகமாக மனதை செலுத்தி மிகவும் அல்லல்பட்டு அதனால் வரும் அனுபவம்; இந்த நிலை அனுபவம் உலகியலில் மனிதனாய் பிறந்தவர் அனைவருக்கும் பொதுநிலை.

மற்றொரு அனுபவம் என்பது, உலகியலில் பிறர்படும் இன்னல்களை உற்று கவனித்து அந்த இன்னல் அவர்களுக்கு எதனால் வருகிறது என்பதை சிந்தித்து தெளிந்து, அந்த அனுபவங்களை மனதில் பதிவு செய்து கொள்வது. இதுவே உயர்ந்த நிலை அனுபவம். இந்த நிலை அனுபவம் மனிதனுக்கு வரவேண்டுமானால் மனிதன் “நிதானத்துடனும்” பொறுமையுடனும் உலகியல் நிகழ்வுகளை கவனிக்க வேண்டும்.

இந்த அனுபவ நிலைகளை, தன்னுள் பதிவு செய்து, பிறருக்கும் பயன்படும் வகையில் எடுத்துரைப்பவர் தத்துவ அறிஞர்களாக விளங்குபவர்கள். மேலும், தான்பெற்ற அனுபவங்கள் அனைத்தும், இந்த உலக மக்கள் தெரிந்து கொண்டு, அவர்களும் நல்ல நலமான வாழ்வு வாழ வழிகாட்டுபவர் இவர்களே ஞானிகள் என்று போற்றப்படுவர்கள்.

உற்ற நோய் நீக்கி உறா அமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.

- குறள் - 442.


இக்குறளின் பொருள்: வந்த துன்பத்தை நீக்கி, இனி துன்பம் வராதபடி முன்னராக அறிந்து காக்க வல்ல தன்மை உடையவரைப் போற்றி நட்பு கொள்ள வேண்டும் என்பது இதன்படி நன்கு அனுபவம் பெற்று, உலகியல் வாழ்வில் அதிக இச்சை இல்லாத ஞானிகளை நட்புக் கொண்டால் நாம் துன்பங்களை எதிர்க்கொண்டு வென்று நலமாய் வாழலாம். அப்படி உயர்ந்த அருங்குணங்களைப் பெற்ற ஞானிகளாக, திருமூலர், திருவள்ளுவர், ஔவையார், வள்ளலார் போன்ற பற்றற்ற ஞானிகளை நட்புக் கொள்ள வேண்டும். அதாவது அவர்கள் இயற்றிய நூல்களை படித்து அதன்படி வாழப்பழகுதல் வேண்டும். அப்படி வாழப் பழகும்பொழுது நாம் அவர்களை நட்புக் கொள்ள இயலும்.

அப்படி ஞானிகளை நட்புக் கொண்டால், இந்த உலகியல் வாழ்வில் வரும் துன்பங்களை முன்னராகவே தெரிந்து கொண்டு அந்த துன்பங்களிலிருந்து நம்மை நாம் விடுவித்து வாழ்ந்து நாம் அருள்நிறை அனுபவங்களைப் பெற இயலும் என்பதே உண்மை நிலை. ஞானிகளை நட்புக் கொள்ளும் போது இயற்கையாகவே அதே கொள்கையில் வாழும் பல நல்லவரின் தொடர்பு நமக்கு ஏற்படுவது இயல்பு. அப்படி நல்ல நெறிகளை ஏறறு வாழும் அன்பர்களின் உறவுகளால் நாம் மென்மேலும் உயர்வடைய இயலும்.

மனம் தூய்மை செய்வினை தூய்மைஇரண்டும்
இனம் தூய்மை தூவா வரும்.
- குறள் – 455.


ஒருவர் நல்லவனாக போற்றப்படுவதற்குக் காரணம் அவரது மனதின் தூய்மையும், செய்யும் செயலின் தூய்மையுமாகும். இது அவர் சேர்ந்த இனத்தை சார்ந்தே அமையும். இங்கு இனம் என்பது சாதிகளைப் பற்றி குறிப்பிடப்படுவது இல்லை. நல்ல நெறிகளைச் சார்ந்து வாழ்பவர் நல்ல இனத்தை சார்ந்தவர். தீயநெறிகளைப் பின்பற்றி வாழ்பவர் தீய இனத்தைச் சார்ந்தவர் ஆவர்.

எனவே, நாம் நல்ல பழக்க வழக்கங்களைக் கொண்ட அன்பர்களுடன் பழகினால் நாம் நல்லினத்தை சார்ந்து நலம் பெறலாம். உலகில் இதுவரை தோன்றிய அமைப்புகள் அனைத்தும் சாதி, சமய அடிப்படையில் அமைந்ததால் ஒருவர் எவ்வளவு தான் நல்லவராய் இருந்தாலும், சாதி, மத, சமய அடிப்படையில் சிக்குண்டு பல சூழ்நிலைகளில் தவறுகளைச் செய்து வருகின்றனர். ஆனால், எந்தவித சமய கோட்பாடுகளிலும், உடன்படாத “சுத்த சன்மார்க்க நெறி” ஒன்று தான் நாம் இன்றைக்கு உலகில் காணும் நல்லினமாகும். எனவே வள்ளலார் உருவாக்கிய சன்மார்க்க நெறி என்பது, இதுவரை உலகில் தோன்றிய ஞானிகள் அனைவரும் அவ்வப்பொழுது தந்த நல்லநெறிகளை எல்லாம் உட்கொண்ட பொதுநெறியாகும். இந்த உலகியல் பொதுநெறியில் மட்டுமே, ஆன்ம நேயம், ஜீவகாருண்யம், தியானம், தவம், உயிர்நலப்பணி, பக்தி என்ற அனைத்து நிலைகளும் ஒருங்கே கூறப்பட்டுள்ளது.




வழிபடும் முறை (சாதனஇயல்)

இறைவனை வழிபடுவதற்கான வழிமுறைகள் யாவை?

சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்குமே இறைவனை வழிபடுவதற்கான நெறிகள் ஆகும்.
இவற்றுள் சரியை என்பது, உடலால் வழிபடுவது. அ•தாவது திருக்கோயிலை வலம் வருவது, திருக்கோயிலுக்குப் பூ மாலைகொடுப்பது, திருக்கோயிலில் துப்புரவுப் பணி செய்வது முதலியன உடலால் வழிபடுவது ஆகும்.

கிரியை என்பது வாயினால் வழிபடுவது. அதாவது அஞ்செழுத்து மந்திரங்களை ஓதுவது, திருமுறைகளை நாள்தவறாமல் படனம் செய்வது, சாத்திர தோத்திரக் கருத்துக்களைப் பிறர்க்கு எடுத்துரைப்பது முதலியன வாயினால் செய்யும் வழிபாடு ஆகும்.

யோகம் என்பது மனத்தினால் வழிபடுவது. அதாவது வழிபடு தெய்வத்தின் வடிவத்தை மனத்தில் வைத்து தியானிப்பது. அந்தரியாக பூசை செய்வது, அஞ்செழுத்து மந்திரத்தை உள்ளத்தால் அக்குமாலை கொண்டு எண்ணுவது முதலியன மனத்தினால் செய்யும் வழிபாடு ஆகும்.

இம்மூவகை வழிபாடுகளையும் தவறாமல் செய்து வந்தல், இறைவன் நமக்கு ஞானத்தை உணர்த்துவான். அவ்வாறு உணர்த்தும்போது, சீவன்முத்தர்களை அதிட்டித்து நின்றோ, குருநாதனாக வந்தோ, மானுடச் சட்டை போத்தியோ வந்து உணர்த்துவான். எனவே, குருபீடத்தில் அமர்ந்துள்ள ஞானிகளை வழிபடுவது ஞானநெறியில் செய்யும் வழிபாடாகும்.

மனம், வாக்கு, காயங்களால் சிவபெருமானை வழிபட வேண்டும் என்பதற்காகவே இந்த மனிதப் பிறவி நமக்கு வழங்கப்பட்டது. இவ்வுண்மையைத் தெளிவுபடுத்திச் சிவஞானசித்தியாரில்,

“மானுடப்பிறவி தானும் வகுத்தது மனம் வாக்குக் காயம்
ஆன இடத்து ஐந்து ஆகும் அரன்பணிக் காக அன்றோ" (182)

என்று அருணந்திசிவம் அருளிச்செய்துள்ளார்.

தெய்வ வழிபாடு என்பது யாது?

ஒவ்வொருவரும் தாம் வழிபடுவதற்கு என ஒரு தெய்வவடிவத்தை மேற்கொள்ள வேண்டும். அத்தகு தெய்வ வடிவம், மகேசுவர மூர்த்தங்கள் இருபத்தைந்தனுள் ஒன்றாகவோ, சதாசிவ வடிவமாகிய சிவலிங்க வடிவாகவோ இருக்க வேண்டும். அந்த வடிவத்தையே மனத்தினால் எப்போதும் நினைக்க வேண்டும். அந்த தெய்வத்தைக் குறித்த பாடல்களை வாயினால் ஓத வேண்டும். அத்தெய்வத்திற்குரிய மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். அவ்வாறு வழிபட்டு வருவோமானால், சிவபெருமான் அத்தெய்வவடிவில் நின்று, நமக்கு வேண்டுவன யாவற்றையும் செய்தருள்வான்.
இவ்வுண்மையைச் சிவஞானசித்தியார்,

‘‘மனமது நினைய வாக்கு வழுத்த மந்திரங்கள் சொல்ல
இனமலர் கையில் கொண்டு அங்கு, இச்சித்த தெய்வம் போற்றிச்
சினம் முதல் அகற்றி வாழும் செயல் அறம் ஆனால் யார்க்கும்
மனம் ஒரு தெய்வம் எங்கும் செய்தற்கு முன் நிலையாம் அன்றே"(114)

என்று தெளிவுபடுத்தியுள்ளது.
‘இச்சித்த தெய்வம்' என்பது வழிபடுவதற்குத் தேர்ந்து எடுத்துக்கொண்ட வடிவம் என்பதாகும். ‘செயல் அறம்' என்பது, (122) ஆம் தடைக்குள்ள விடையில் கூறியுள்ள பதினாறு சைவ ஒழுக்கங்கள் ஆகும்.


மகேசுவர வடிவங்கள் இருபத்தைந்தையும் சிவலிங்க வடிவத்தையும் மட்டுமே, வழிபடு தெய்வமாகக் கொள்ள வேண்டும் என்பதற்கு என்ன காரணம்?

இறைவன் பிறப்பு இறப்பு இல்லாதவன்; உயிர்கள் அனைத்தும் பிறப்புக்கு உட்படுவன. பிறவித் துன்பத்தைப் போக்கிக் கொள்ளும் பொருட்டு வழிபடுகின்ற நாம், பிறப்பு இறப்புக்கு உட்படாத இறைவனின் வடிவங்களையே வழிபடவேண்டும். அவ்வடிவங்களில் மட்டுமே இறைவன் முனைந்து நின்று நமக்கு அருள் பாலிக்கிறான். இவற்றைத்தவிர, பிற தெய்வ வடிவங்கள் வழிபாட்டுக்கு உரியனவல்ல. இதற்குக் காரணம், அவ்வடிவங்களை உடைய தெய்வங்கள் உயிர் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள், ஒவ்வொரு பிறப்பிலும் துன்பப்படுகிறார்கள்; அடுத்துப் பிறப்பதற்குரிய வினைகளைச் செய்கிறார்கள். எனவே அத்தெய்வங்களால் நமக்கு அருளை வழங்க முடியாது. எனவே மகேசுவர வடிவங்கள் இருபத்தைந்தையும் சதாசிவ வடிவத்தையும் மட்டுமே வழிபட வேண்டும் என்பது தெளிவாகிறது.
இவ்வுண்மையைச் சிவஞானசித்தியாரில்,

“யாதொரு தெய்வம் கொண்டிர் அத்தெய்வம் ஆகி ஆங்கே
மாதொரு பாகனார்தாம் வருவர்; மற்றத் தெய்வங்கள்
வேதனைப்படும்; பிறக்கும்; மேல்வினையும் செய்யும்;
ஆதலால் இவை இலாதான் அறிந்து அருள் செய்வன் அன்றே"(115)

என்று அருணந்திசிவம் அருளிச் செய்துள்ளார்.
இன்னும், அந்தத் தெய்வங்கள் அவரவர் நிலையில் நின்று பயன் தருவார்களே அல்லாமல், நமக்கு வேண்டுவனவற்றை எல்லாம் வழங்க, அவற்றால், இயலாது. இதற்கு, “அத்தெய்வம் அத்தனைக் காண்" என்னும் பிரமாணம் தெளிவாக உள்ளது.


அறநூல்களில் சொல்லப்பட்ட விதிகளின்படி நடந்துகொண்டால் போதாதா? இறைவழிபாடு வேறு செய்ய வேண்டுமா?

அறநூல்களில் சொல்லப்பட்ட விதிகள் அனைத்தும் இறைவனால் வேதாகமங்களில் கூறப்பட்டவையே ஆகும். அவ்விதிகளின்படி ஒழுகுபவர்களுக்கு உள்ள பயன்களை இறைவனே வழங்க வேண்டியுள்ளது. அறச் செயல்களில் சிறந்தது, இறைவன் கருணையை நினைந்து அவனை வழிபடுவதே ஆகும். எனவே, இறைவன் திருவருளை மறந்துவிட்டுச் செய்யும் அறச்செயல்கள் அனைத்தும் பயனற்றவையே ஆகும். அறநூல்களில் சொல்லப்பட்ட விதிகளின்படி ஒழுகுவதோடு, இறைவழிபாடு செய்வதும் இன்றியமையாதது என்பது இதனால் பெறப்பட்டது.
இவ்வுண்மையைத் தெளிவுபடுத்திச் சிவஞானசித்தியாரில்,

“காண்பவன் சிவனேயானால், அவனடிக்கு அன்பு செய்கை,
மாண்புஅறம்; அரன்தன் பாதம் மறந்துசெய் அறங்கள் எல்லாம்
வீண்செயல்; இறைவன் சொன்ன விதி அறம்; விருப்பு ஒன்று இல்லான்;
பூண்டனன் வேண்டல் செய்யும் பூசனை புரிந்து கொள்ளே"

என்று அருளிச் செய்துள்ளார்.

சிவபெருமானை எவ்வாறு வழிபட வேண்டும்?

சிவலிங்கம், சிவனடியார் என்னும் இரு திருமேனிகளையும் ஆதாரமாகக் கொண்டு, சிவபெருமான் உயிர்களின் புறப்பூசையினையும் அகப்பூசையினையும் ஏற்று உயிர்களுக்கு அருள் செய்வான்.
இவ்விரு பூசைகளுள் அகப்பூசையினைப் பரிபூரண பூசையாக ஏற்று; உயிர்களின் அகத்தே முன் நின்று அருள் செய்வான். இவ்வாறு, சிவபெருமானை வழிபட வேண்டும்.

இவ்வுண்மையைச் சிவஞானசித்தியாரில்,

“தாபர சங்கமங்கள் என்று இரண்டு உருவில் நின்று
மாபரன் பூசைகொண்டு மன்உணிர்க்கு அருளை வைப்பன்;
நீ, பரன்தன்னை நெஞ்சில் நினைவையேல், நிறைந்த பூசை
ஆய், பரம்பொருளை நாளும் அர்ச்சி; நீ அன்பு செய்தே"


அகப்பூசை செய்யும் முறையும் அதனால் பெறும் பயனும் யாவை?

அகப்பூசை செய்யும் முறை வருமாறு :-
நமது இதயத்தை அதற்குரிய இடமாகக் கொள்க. நமது கொப்பூழிலிருந்து எட்டு அங்குல நீளமுள் ஒரு தண்டு இருப்பதாகக் கருதுக. அத்தண்டின் முடிச்சில் எட்டு இதழ்கள் இருப்பதாகக் கொள்க. அந்நிலையில் ஒரு தாமரை மலர் இருப்பதாகக் கருதுக. அந்தத் தாமரை மலரின் நடுவே, வழிபடு தெய்வத்தின் வடிவத்தை நிலைபெறச்செய்க.

அந்த வழிபடு வடிவத்திற்கு வாசனைத் திரவியங்கள், பால், தயிர், நெய், கோசலம், கோமயம், ஆகிய பஞ்சகவ்வியங்களால் திருமுழுக்குச் செய்க. பின்னர், உயர்ந்த ஆடை ஆபரணங்களால் அழகு செய்க. அதன் பிறகு மலர்மாலைகள் சூட்டுக, பின்பு விடுமலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்க. அதன்பிறகு திருவமுது படைத்து ஊட்டுக; பின்பு தூபம் காட்டுக. இவற்றை எல்லாம் மனத்தினாலே கருதிக்கொண்டு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வது ‘அந்தரியாக பூசை' எனப்படும். இ•தே அகப்பூசை செய்யும் முறையாகும்.

இதனால் பெறும் பயன் வருமாறு :-

கண்ணாடியை விளக்க விளக்க, மாசு நீங்கி மேலிட்டு வரும் ஒளி போன்று ஆன்மா சுத்தி அடைவதால் சிவபெருமான் நம் வழிபடு தெய்வ வடிவில் நின்று விளங்கித் தோன்றுவான். அதன் பயனாக மும்மலங்களும் நீங்கி ஞானம் தோன்றும். இதுவே ஆன்ம முத்திக்குரிய உயர்ந்த சாதனமாகும்.

இதற்குப் பிரமாணம் :-

சிவஞானசித்தியார் (300) மற்றும் (301).


சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நான்கு நெறிகளில் இறைவனுக்கும் நமக்கும் உள்ள உறவுமுறை எத்தகையதாக இருக்கும்?

சரியை நெறியில், இறைவனுக்கும் நமக்கும் உள்ள உளவு முறை, ஆண்டானுக்கும் அடிமைக்கும் உள்ளது போன்றது. கிரியை நெறியில், தந்தைக்கும் மகனுக்கும் உள்ள உறவு முறை போன்றது. யோக நெறியில், தோழனுக்கும் தோழனுக்கும் உள்ள உறவு முறை போன்றது. ஞானநெறியில், குருவுக்கும் சீடனுக்கும் உள்ள உறவுமுறை போன்றது. இந்நெறியில் உள்ள உறவு முறை நாயகனுக்கும் நாயகிக்கும் உள்ளது போன்றதென சிலர் கூறுகிறார்கள்.
இந்நால்வகை நெறிகளில் உள்ள உறவுமுறை பற்றிய உண்மையைச் சிவஞானசித்தியாரில்,

“சன்மார்க்கம், சகமார்க்கம், சற்புத்திர மார்க்கம்,
தாதமார்க்கம் என்றும் சங்கரனை அடையும்
நன்மார்க்கம் நால், அவைதாம் ஞான யோக
நற்கிரியா சரியை என நவிற்றுவதும் செய்வர்"

என்று அருணந்திசிவம் தெளிவுறுத்தியுள்ளார்.

சரியை நெறியாகிய உடலால் செய்யும் வழிபாட்டில் என்னென்ன சிவப்பணிகள் செய்ய வேண்டும்?

உடலால் செய்யும் வழிபாடு வருமாறு :-
1. திருக்கோயில்களில் உள்ளும் புறமும் பெருக்கித் துப்புரவு செய்தல்

2. திருக்கோயிலில் உள்ள தரையைச் சுத்தமான பசுவின் சாணம் கொண்டு மெழுகுதல்.

3. அதிகாலையில் எழுந்து, குளித்து, வண்டுகள் மொய்வதற்கு முன், கைநகம் படாமல் மலர்களை கொய்து திருக்கோயிலில் கொடுத்தல்.

4. பூமாலை தொடுக்கத் தெரியுமானால், இண்டை, தொடை, கண்ணி, பந்து, தண்டிற் கட்டுமாலை முதலிய பூமாலைகளைத் தொடுத்துத் திருக்கோயிலில் சேர்ப்பித்தல்.

5. பன்னிரு திருமுறைப் பாடல்களை வாயினால் பத்தி பரவசத்துடன் பாடுதல்.

6. பசுவின் நெய், எள் எண்ணெய் முதலியவற்றால் தீபம் ஏற்றுதல்.

7. மலர்தரும் மரங்களை கொண்ட திருநந்தவனம் அமைத்தல்.

8. சிவவேடப் பொலிவு உடையவரைச் சிவனாகவே நினைந்து வழிபடுதல். இதற்குப் பிரமாணம், சிவஞானசித்தியார் (271) ஆகும்.


கிரியைநெறி ஆகிய மனமும் உடலும் கொண்டு செய்யும் வழிபாட்டில் (பெரும்பாலும் வாயினால் செய்வது) என்னென்ன சிவப்பணிகள் செய்ய வேண்டும்?

இ•து, ஏறத்தாழ நமது இல்லங்களில் செய்யும் வழிபாடு ஆகும். வீட்டிலுள்ளவர்களது உதவியோடு வேண்டிய உபகரணங்களை அமைத்துக்கொண்டு, வழிபடு தெய்வத்தை (உபாசன மூர்த்தம்) வீட்டில் நிறுவி வழிபடுவது. அப்போது திருமுறைகளைக் கலந்த அன்பாகிக் கசிந்துருகிப் பாடவேண்டும்.
வீட்டில் என்னென்ன முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்பதை சிவஞான சித்தியாரில் (272) அருணந்திசிவம் அழகுற அருளிச்செய்துள்ளார்.


யோகநெறி ஆகிய மனத்தினால் செய்யும் வழிபாட்டில் என்னென்ன சிவப்பணிகள் செய்ய வேண்டும்?

இது சிவயோகம் ஆகும். பொறி புலன்களை ஒடுக்கி, சுவாசத்தை ஒருவழிப்படுத்தி, ஏறத்தாழ அகப்பூசை செய்யும் முறையில் சிவபெருமானோடு ஒன்றிய உணர்வோடு மனத்தைப் பழக்குவதே, யோக நெறியில் செய்யும் பணியாகும். இதற்குப் பிரமாணம் சிவஞானசித்தியார் - (272)

ஞானநெறியில் செய்ய வேண்டுவது யாது?

இது சைவம் கூறும் சன்மார்க்கம். இந்நெறியில் நிற்பவர்கள், சிவாகமங்களில் கூறப்பட்ட பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள்களின் உண்மையையம் இயல்பையும் தெளிவாக அறிதல் வேண்டும். அவ்வறிவின் பயனால், ஞானம் ஏற்படும். அப்போது சிவபெருமானை அறியும் உணர்வு தலைப்படும். அந்நிலையிலும், ஆன்மா தன்னையோ, தனது அறிவையோ, தன்னால் அறியப்படும் சிவனையோ வேறுபடுத்தி உணராமல், சிவனருளில் அழுந்தி நிற்கும் பயிற்சினை மேற்கொள்ள வேண்டும்.
Read more ...