வீடுபேறு அடைந்தவர்கள்

Saturday, July 2, 2011
சித்தர்கள் என்றால் வீடுபேறு அடைந்தவர்கள் எனப்பொருள் கொள்வர் சிலர், ஒரு செயல் நிறைவேறிவிட்டதா என வினவுவார் காய சித்தி ஆயிற்றா என வினவுவது வழக்கம், சாயுச்சிய நிலை அடையப்பெற்றவரே சித்தர் என்பர். அட்டமா சித்தி முதலிய யோகசித்தி பெற்றவர்களையும் சித்தர்கள் என்று அழைப்பர்.

சிலர் சித்துக்கும் சித்தத்ததுக்கும் தொடர்பு காட்டிச் சித்தத் தெளிவுடையாரே சித்தர் என விளக்கம் அளிப்பர்.



'சிந்தையிலே களங்க மற்றார் சித்தன் ஆவான்" (அகத்தியர் நூறு 50)



'சிந்தை தெளிந் திருப்பவன் ஆர் அவனே சித்தன்"

(வான்மீகர் சூத்திர ஞானம் 2)

'செகமெலாம் சிவமென்றே அறிந்தோன் சித்தன்

திறந்துமனத்தெளிவாகிச் சேர்ந்தோன் சித்தன்" (வான்மீகர் சூத்திர ஞானம் 3)



எனவரும் இப்பாடல்கள் மேற்கூறிய கருத்திற்குச் சான்றாக விளங்குகின்றன.

சித்தருட் சித்தராய் விளங்கிய திருமூலர் சித்தர் பற்றிக் கூறும் செய்திகளும் இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.



'யோகச் சமாதியின் உள்ளே அகலிடம்

யோகச் சமாதியின் உள்ளே உளரொளி

யோகச் சமாதியின் உள்ளே உள சத்தி

யோகச் சமாதி உகந்தவர் சித்தரே" (1490)


'சித்தர் சிவத்தைக் கண்டவர் சீருடன்

சுத்தாசுத் தத்துடன் தோய்ந்துந் தோயாதவர்

முத்தரம் முத்திக்கு மூலத்தர் மூலத்துச்

சத்தர் சதாசிவத் தன்மையர் தாமே" (2526)



எனவரும் திருமூலன் பாடல்கள். யோகச் சமாதியை விரும்பியவரும் சிவத்தைக் கண்டவரும் சித்தர் ஆவர் எனக் குறிப்பிடும்.

கடவுளரும் சித்தராகக் கருதப்பட்டனர். அவர்தம் செயல்களும் சித்துக்களாக மதிக்கப்பட்டன. பழினியிலுள்ள முருகன் கோயில் சித்தன் வாழ்வு என அழைக்கப்பெற்றது. எல்லா ஆற்றலும் பெற்றிருப்பவன் ஆதலின் முருகனுக்குச் சித்தன் என்னும் பெயரும் உண்டு. சிவபெருமான் செய்த அருஞ்செயல்களைத் திருவிளையாடற் புராணம் சித்துக்களாகக் குறிப்பிடும். மக்களால் சித்தர்களும் கடவுளராகப் போற்றப்பட்டனர்.

மூச்சினை யடக்கி யோக ஆற்றலினால் உடலில் உள்ள மூலதாரம், கொப்பூழ், இதயம், இரைப்பையின் நடு, கழுத்து, தலைமுடி என்ற இவ் ஆறு இடங்களிலும் மனத்தை முறையாக நாட்டிக் குண்டலியை எழுப்பிப் பலபல அனுபவமும் வெற்றியும் கண்டு. அப்பாலிலுள்ள எல்லாம் ஆன பொருளில் நிலைத்துச் சித்தி பெறுபவரே சித்தர் என்ற வழக்கம் பரவுயுள்ளது எனப் பன்மொழிப்புலவர் தெ.பொ. மீனாட்சி சுத்தரனார் கலைக்களஞ்சியத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

ஆகம மாகிய இந்த மனித உடம்பிலே தெய்வப் பக்தி கொண்டு இதனுள் அருட்சக்தியை வளர்த்து ஆன்ம பணாமத்தில் மக்களிடையே வானவர்களாகவும், மனித தெய்வங்களாகவும் உலவி அருவாழ்வு வாழ்ந்து அருளை வழங்கி வருகின்ற பெயோர்களே மகான்களே சித்தர்கள், என்று மீ.ப. சோமசுந்தரனார் தம் சித்தர் இலக்கியம் என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார் (பகுதி 1 பக்கம் 14)

இறையடியார்களுள் பக்தர், பகவர், முனிவர், சித்தர் எனப் பல வகையினர் இருந்தனர் என்பர், பெரியாழ்வார் தம் பாசுரத்தில்



பத்தர்களும் பகவர்களும் பழமொழிவாய்

முனிவர்களும் பரந்த நாடும்

சித்தர்களும் தொழுதிறைஞ்சத் திசை விளக்காய்

நிற்கின்ற திருவரங்கமே



என்று பாடியிருத்தல் மேற்கூறியதற்குச் சான்றாக அமைகிறது. சித்தர் பாடல்களிலும் முனிவர், இருடியர், சித்தர் எனப் பல வகையினர் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. திருவள்ளுவர் ஞானத்தில் (14) காயசித்தி, மாயசித்தி, யோகசித்தி, வாத சித்தி எனப் பல வகைச் சித்திகள் கூறப்பட்டுள்ளன. சித்தரையும் காயசித்தர், யோகசித்தர், ஞானசித்தர் எனச் சிலர் மூவகையினராகக் கூறுவர். இங்ஙனம் சித்தர்களையும் சித்திகளையும் பாகுபடுத்தியும் பாடியுள்ளனர்.

சித்துக்கள் பற்றிய குறிப்புக்கள் பண்டைய இலக்கியங்களிலும் காணக்கிடக்கின்றன.



நிலந்தொட்டுப் புகாஅர் வானம் ஏறார்

விலங்கிடு முந்நீர் காலிற் செல்லார் (130)

என்னும் குறுந்தொகைப் பாடல் அடிகளும்.

நிலத்திற் குளித்து நெடுவிசும் பேறிச்

சலத்தில் தியுமோர் சாரணன்



என்னும் மணிமேகலைத் தொடர்களும் சில சித்துக்களைத் தெவிக்கின்றன.

தாயுமானவர், பாம்பாட்டிச் சித்தர், இராமலிங்க அடிகள் முதலானோர் தத்தம் பாடல்களில் சித்து விளையாடல்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர்.

தாயுமானவர் மதயானையை அடக்குதல், கரடி புலிகளின் வாயைக் கட்டுதல், சிங்கத்தை முதுகின் மேல் ஏற்றுதல், பாம்பைப் பிடித்தாட்டுதல், ஐந்து உலோகப் பொருள்களையும் விலையுயர்ந்த பொருளாக மாற்றுதல் பிறர் கண்ணிற் படாமல் உலாவுதல், தேவரை அடிமை கொள்ளல், எப்பொழுதும் இளமையோடிருத்தல், பிறர் உடலிற் புகுதல், நீர்மேல் நடத்தல், நெருப்பில் அமர்தல், முதலிய சித்துக்களைத் தம் பாடலில் (தேசோ மயானந்தம் 8) குறிப்பிடுகின்றனர்.

பாம்பாட்டி சித்தர் குறிப்பிடும் சில சித்துக்களைக் கீழ்வரும் பாடல்கள் புலப்படுத்துகின்றன.


எட்டுநாகம் தம்மைக் கையால் எடுத்தே ஆட்டுவோம்;

இந்திரனார் உலகத்தை இங்கே காட்டுவோம்;

கட்டுக் கடங்காத பாம்பைக் கட்டி விடுவோம்;

கருவிடந் தன்னைக் கக்கி ஆடு பாம்பேர்

மூண்டெயும் அக்சினிக்குள் மூழ்கி வருவோம்;

முந்நீருள் இருப்பினும் மூச்சடக்குவோம்;

தாண்டிவரும் வன்புலியைத் தாக்கி விடுவோம்;

தார்வேந்தன் முன்பு நீ நின்று ஆடு பாம்பே;

செப்பய மூன்றுலகும் செம்பொன் ஆக்குவோம்;

செங்கதிரைத் தண்கதிராய்ச் செய்து விடுவோம்;

இப்பெய உலகத்தை இல்லாமற் செய்வோம்;

எங்கள் வல்லபம் கண்டு நீ ஆடு பாம்பே



இராமலிங்க அடிகளார் சில சித்துக்களைப் பின் வரும் பாடல் அடிகளில் காட்டுகின்றார்.



''கல்லையும் உருக்கலாம் நார் உத்திடலாம்

கனிந்த கனியாகச் செய்யலாம்;

கடுவிட முண்ணலாம் அமுதாக்கலாம் கொடுங்

கரடி, புலி, சிங்கம் முதலா

வெல்லு மிருகங்களையும் வசமாக்கலாம் அன்றி

வித்தையும் கற்பிக்கலாம்;

மிக்க வாழைத்தண்டை விறகாக்கலாம் மணலை

மேவு தேர் வடமாக்கலாம்;"



இங்ஙனம் சித்தர்கள் பல்வேறு வகையான சித்து விளையாடல்களை செய்தமையை மேற்குறிப்பிட்ட பாடல் வகள் தெவிக்கின்றன.

No comments:

Post a Comment