அடிப்படை நெறி

Saturday, July 2, 2011
சித்தர் பாடல்களின் இயல்பு

சித்தர்கள் எல்லாச் சமயங்களுக்கும் பொதுவான அடிப்படை நெறிகளையே எடுத்துக்கூறியுள்ளனர். சாத்திரக் குப்பையிலும் கோத்திரச் சண்டையிலம் ஈடுபடாமல், மக்களை நன்னெறிப்படுத்த முயன்ற வடநாட்டு நவநாத சித்தர்கள் போலத் தமிழகச் சித்தர்களும் சீர்திருத்தத் கருத்தக்களை வலியுறுத்தி மக்களுக்கு நல்வழி காட்டியுள்ளனர். இராமலிங்க அடிகாளர் தெவித்துள்ள மரணமிலாப் பெருவாழ்வு சித்தர்கள் கூறிய நெறியேயாகும். 'கூற்றம் குதித்தலும் கைகூடும்" (269) என்னும் வள்ளுவர் கருத்தினை வாழ்க்கையில் நிலைநிறுத்திக் காட்டியவர்கள் இச்சித்தர்கள், இவர்கள் ஊழையும் வெல்லலாம் என்பதற்கான வழி முறைகளைத் தம் பாடல்களின் இயம்பியுள்ளனர்.



வைத்தியம், இரசவாதம், ஞானம் மந்திரம் முதலியவை பற்றி எல்லாம் நூல்கள் எழுதியுள்ளனர். மேலும் வானநூல், கணிதம் முதலியவை பற்றிய புலமையையும் இவர்தம் நூல்களில் காணமுடிகிறது.



சித்தர் பாடல்கள் பொதுமக்களும் பாடும் வண்ணம் எளிமையான நடையில் அமைந்தவை. எனினும்அய கருத்துக்கள் அடங்கியவை . கல்லாதவர், கற்றவர் இரு சாராருமே கேட்டு மகிழும் வகையில் அப்பாடல்கள் விளங்குகின்றன.



ஊத்தை குழிதனிலே மண்ணை எடுத்தே

உதிரப் புனலிலே உண்டை சேர்த்தே

வாய்த்த குயவனார் பண்ணும் பாண்டம்

வறையோட்டுக்கும் ஆகாது என்று ஆடுபாம்பே



என்னும் பாம்பாட்டி சித்தன் எளிய பாடல் மானிட யாக்கையின் இழிவைத் தெளிவுபடுத்துகின்றது.



மாங்காய்ப் பால்உண்டு மலைமேல் இருப்போருக்குத்

தேங்காய்ப்ப தால் ஏதுக்கடி-குதம்பாய்

தேங்காய்ப்பால் ஏதுக்கடி.



ஞானப் பாலுண்டு தலை உச்சியலே சிந்தனை கூடி நிலைத்து நிற்கும் ஞானிகளுக்கு உலக இச்சையாகிய பிற இன்பங்கள் வேண்டியதில்லை எனக் குதம்பைச் சித்தன் மேற்காணும் பாடலுக்கு மீ.ப . சோமு விளக்கம் அளிக்கிறார்.

மாங்காய் என்பது பிரமம், பால் என்பது அதன் அனுபவம், அதாவத ஞானப்பால், தேங்காய்ப்பால் உலக இச்சை, மலை என்பது மேலான சமாதி, இ.வ்வாறு உள்ளுறைப் பொருள் அமைத்துப் பாடும் பாடல்களைப் பிறிது மொழிதலணி என்று கூறுவர், சித்தர்கள் தம் கொள்கைகளை மறைவாக வைத்துக் கொள்ள குழுஉக் குறியினைப் படைத்துக் கொண்டனர். திருமந்திரத்திலுள்ள சூனிய சம்பாடணை (உரையாடல்) இதற்குச் சயான சான்றாகும். அவர்களின் மருத்துவ நூல்களும் இவ்வாறு குழுஉக் குறிகளைப் பயன்படுத்தியுள்ளன.

சித்தர் இலக்கியம் சீர்திருத்தம் பேசினாலும் நாத்திகத்தன்மை யுடையதன்று சித்தர்கள் இறைப்பற்று மிகவும் உடையவர்கள். தஹ்நெறி, அட்டாங்கயோகம் முதலியவை கடினமாகத் தோன்றினாலும் அவர்கள் எடுத்துரைக்கும் நெறி சிறந்ததாகும். சயை, கியை, யோகம், ஞானம் என்னும் நான்கு நெறியினையும் சித்தர்கள் பின்பற்றியுள்ளனர். சமயப்பொது நோக்கு, சாதி வேறுபாடின்மை. மூடப் பழக்க வழக்கங்களைச் சாடுதல் முதலானவை அவர்தம் பாடல்களில் காணப்பெறும் சீர்திருத்தங்களாகும்.



கோயிலாவது ஏதுடா? குளங்களாவது ஏதுடா?

கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே

கோயிலும் மனத்துளே, குளங்களும் மனத்துளே

ஆவதும் அழிவதும் இல்லை, இல்லை இல்லையே (சிவவாக்கியர், 34)


சாதி பேதங்கள் சொல்லுகிறீர், தெய்வம்

தானென் றொருஉடல் பேதமுண்டா?

ஓதிய பாலதில் ஒன்றாகி யதிலே

உற்பத்தி நெய்தயிர் மோராச்சு (கொங்கணர் 95)


திருமூலர் பிற சித்தரைப்போல உடம்பை இழித்துக் கூறவில்லை. மாந்தர் உடம்பே இறைவனைக் காண அடிப்படையாக இருத்தலின் அதனைச் சிறப்பித்துப் பாடியுள்ளார்.



உடம்பார் அழியில் உயிரார் அழிவர்;

திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவு மாட்டார்;

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே,

உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த் தேனே (724)



உடம்பினை முன்னம் இழுக்கென றிருந்தேன்;

உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்;

உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்று

உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே (725)



உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்;

வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்;

தௌ;ளத் தெளிவார்க்குச் சீவன் சிவலிங்கம்;

கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே; (1823)



மனிதனுக்கு அவனது உடம்பைக் கொண்டு செய்ய வேண்டிய ஞானச் செயலைக் கற்பிக்கும் அனுபவப் பேரறிவுப் பெருநூல் சித்தர் இலக்கியம் எனச் சிறப்பித்துப் பாராட்டுவர் மீ.ப. சோமு. மேலும் அவ்விலக்கியங்கள் அறக்கருத்துக்களை வலியுறுத்தும் என்றும் மனமாசின்றிக் காக்கவும் தீமைகளை நீக்கி நன்மைகைளைச் செய்யவும் பல அறச் செய்திகளைக் கூறுகின்றன என்றும் மனிதனை மனிதனாக்குவதற்கு வேண்டிய மனப் பயிற்சி தந்து அவனை மனிதனாக்கிப் பின் வானவராக உயர்த்தும்உயய நோக்கங்கள் கொண்டவை என்றும் விளக்கியுரைத்துள்ளார்.



சித்தர்கள் வெளியில் சென்று கோயில் வழிபாடு செய்ய விரும்புவதில்லை. புறச் சடங்குகளையும் அவர்கள் ஏற்பதில்லை. மனக் கோயில் வழிபாடே அவர்கட்கு முதன்மையானதாகும். யோகமுறை மூச்சடக்கிப் பயிற்சி செய்தல் ஆகியவற்றையே அவர்தம் நூல்கள் வித்துரைக்கின்றன. மன்பதைக்கு வேண்டிய சீர்திருத்தக் கருத்துக்களும் அவர்களுடைய பாடல்களில் மிகுதியாக உள்ளன.

No comments:

Post a Comment