திருமந்திரத்தின் மூன்றாம் தந்திரம்

Wednesday, March 17, 2010
திருமந்திரத்தின் மூன்றாம் தந்திரம் (மூன்றாம் பாகம்) முழுக்க முழுக்க “அஷ்டாங்க யோகம்’ என்பதைக் குறித்தே விவரிக்கிறது. பல சூட்சும ரகசியங்களை விளக்குகிறது. “அஷ்டாங்கம்’ என்ற வடமொழிச் சொல்லுக்கு “எட்டு பிரிவுகள்’ என்பது பொருள். முழுமையான யோகக் கலையானது எட்டு அம்சங்களைத் தன்னுள் கொண்டுள்ளது. அவை முறையே-

1. இயமம்

2. நியமம்

3. ஆசனங்கள்

4. பிராணாயாமம்

5. பிரத்தியாகாரம்

6. தாரணை

7. தியானம்

8. சமாதி

இந்த ஒவ்வொன்றையும் குறித்து மிக விரிவாக திருமூலர் தனது திருமந்திரத்தில் விளக்கியுள்ளார். அவை அனைத்தையும் விவரிக்க வேண்டுமென் றால் பல பாகங்கள் கொண்ட ஒரு தனிப் புத்தகமே எழுத வேண்டியதிருக்கும். தற்போது “பிராணாயாமம்’ எனும் மூச்சுப் பயிற்சி குறித்து திருமூலர் கூறியுள்ள சில உண்மைகளையும், சூட்சும ரகசியங்களையும் மட்டும் காணலாம்.

உயிருக்கு ஆதாரமாக இருப்பது மூச்சுதான். எனவேதான் அதை “உயிர் மூச்சு’ என்கிறோம். மனிதன் உணவின்றி பல நாட்கள் உயிர் வாழ முடியும். நீர் இல்லாமற்கூட சில நாட்கள் உயிர் வாழலாம். ஆனால் காற்று (பிராணவாயு) இல்லாமல் போனால் எட்டு நிமிடங்களில் மரணம் நிச்சயம்! உடலின் இயக்கங்கள் அனைத்திற்கும் இந்த மூச்சுக் காற்றே ஆதாரம்.

“ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன்
உய்யக்கொண்டு ஏறும் குதிரைமற்று
ஒன்றுண்டு
மெய்யர்க்கு பற்றுக் கொடுக்கும் கொடாது போய்ப்
பொய்யரைத் துள்ளி விழுந்திடும் தானே.’

No comments:

Post a Comment