ஓம்

Sunday, October 24, 2010
முதல் எழுத்து:
“ஆதியிலே பராபரத்திற் பிறந்த சத்தம்
அருவுருவாய் நின்ற பாசிவமுமாகி
தோதியென்ற சிவனிடமாய்ச் சத்தியாகித்
தொல்லுலகில் எழுவகையாந் தோற்றமாகி ”
என்னும் சுப்பிரமணிய ஞானத்திலிருந்து அறியலாம்.


சட்டை முனியும் தனதுசூத்திரத்தில் :
” ஒடுக்கமடா ஓங்காரக் கம்பமாச்சு
ஓகோகோ அகாரமங்கே பிறந்ததாச்சு ”
- என்றும் குறிப்பிட்டுள்ளார்.


சிவன், சக்தி , சிவசக்தி மூலத்தைக் குறிக்கும் ஓங்கார மந்திரத்திற்க்கும்
முதல் எழுத்தாகவும் இதுவே ” அ ” உள்ளது. அத்துடன் எழுத்துக்களைக்
குறிக்குங்கால் , தமிழ் , தெலுங்கு , கன்னடம் , மலையாளம் , சமஸ்கிருதம்
முதலிய மொழியிலும் இதுவே முதல் எழுத்து.


” அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு ”
என்ற வள்ளுவர் முதல் குறள் மூலமும் ,
அகஸ்த்திய பெருமான் தனது மெய்ஞான சுத்திரத்தில் ,
” அவ்வாகி உவ்வாகி மவ்வுமாகி ,
- ஐம்பத்தோ ரெழுத்துக்கு தியாகி ”
“அகரமுதல் அவ்வைமுத்தும் தியாகும்


அறிந்தோர்க்கு இதிலேதான் வெளியதாகும் ”
என்று பாடியுள்ளத்தின் மூலம் நன்கு அறியலாம்.

No comments:

Post a Comment