சித்த அறநெறிகள்

Friday, October 29, 2010
அறநெறிகள் - சைவநெறி இணைப்பு


திருமந்திரம் அறநெறியையும் சைவநெறியையும் இணைக்கிறது. யாக்கை நிலையாமை, இளமை நிலையாமை, செல்வம் நிலையாமை, கொல்லாமை, புலால் உண்ணாமை, பற்றின்மை, பிறருக்கு உதவுதல், கல்விப் பெருமை, புலனடக்கம் என்பன கூறப்படுகின்றன. திருக்குறளின் அதிகாரத் தலைப்புகளையே இட்டு இவ்வறங்களைத் திருமந்திரம் விளக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.


சிவனுடைய படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐந்தொழில்களை இந்நூல் காட்டுகிறது. சைவத்தின் பல்வேறு பிரிவுகளான சுத்த சைவம், அசுத்த சைவம், மார்க்க சைவம், கடும் சுத்த சைவம் என்பனவற்றைக் குறிப்பிடுகிறது. சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன பற்றிக் கூறுகிறது. சன்மார்க்கம், சகமார்க்கம், சத்புத்திர மார்க்கம், தாசமார்க்கம் என்பனவற்றை விளக்குகிறது. சிவனது சிவானந்த நடனம், சுந்தர நடனம், பொன்னம்பல நடனம், ஆசாரிய நடனம் ஆகியவற்றையும் எடுத்துக்காட்டுகிறது.

No comments:

Post a Comment