சிவன்

Wednesday, October 27, 2010
சிவன்

திராவிடர்களின் கடவுளெனவும், சைவர்களின் தலைவனாகவும் வழிபடக்கூடிய கடவுள் வடிவமே சிவன்.

சிவன் மும்மூர்த்திகளுள் ஒருவர். முதல்வனும் என்றும், மூவரும் அவனே என்றும், மூவரும் அறியாதவர் என்னும் மிக பெரிய தத்துவத்தை சைவ சித்தாந்தம் கூறுகிறது. சிவனை வழிபட்டோர்கள் உமா தேவி, உருத்திரன், திருமால், பிரம்மன், பிள்ளையார், முருகன், தேவர் முதல் இராவணன் வரை. எல்லோரும் அவன் அடிமை. சிவன் உருவாய் (நடராசன்), அருவுருவாய் (சிவலிங்கம்), அல்லுருவாய் நமக்குக் காட்சி அளிக்கிறார். சிவனுக்குப் பிறப்பு இறப்பு இல்லை. இருவினையும் இல்லை,


இந்து சமயத்திலே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றை செய்யும் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரை மும்மூர்த்திகள் எனப் போற்றுவர்.

No comments:

Post a Comment