யோக வழி 2011

Sunday, January 2, 2011
"கோயில் இல்லாத ஊரில் குடியிருக்காதே
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
சூதாட்டத்தையும், சூதான உள்ளத்தையும் விரும்பாதே"
- ஒளவையார
பக்தி


நாம் உலக வாழ்வில் இன்பகரமாக தொடர்ந்து இருக்கவும், அத்துடன் துன்பத்திலிருந்து தப்பிக்கவும், இறைவன்மேல் நம்பிக்கையை தன் மனதில் வளர்த்துக் கொள்ள முயற்சிப்பதே பக்தி. நம்பிக்கை இல்லாவிட்டால் பக்தி வராது. எதிலாவது ஒன்றில் பக்தி இருந்தால் தான் சக்தியே பிறக்கும்.



நாம் நீந்தவேண்டுமென்றால் நீச்சல்குளமோ, ஏரியோ போக வேண்டுமல்லவா, இதுபோல் பக்தியை வளர்க்க முயற்சிப்பவர் கோயிலுக்குச் செல்லவேண்டும். நல்ல குருமார்களின் பக்திப் பேச்சினையும் கேட்க வேண்டும். அத்துடன் பக்தி தியான, ஞான நூல்களையும் படிக்க வேண்டும்.



நாம் உணர்வுப்பூர்வமாகப் புரிந்து கொள்வதைப் பொருத்திருக்கிறது. பக்தியும், ஞானவிளக்கமும் தெரிந்த வழிகாட்யின் உதவியால் கோயிலுக்குச் சென்றால் உண்மை புரியும், பக்தி கூடும்.

ஒருவர் எப்போது பக்தனாக மாறுகிறார்?

இறைவனை இந்த பூமியில் மனித உருவத்தில் சந்திக்கும்போது.

இறைவனை எப்படிக் கண்டுபிடிப்பது?

முதலில் ஞானகுரு கிடைத்தால் சற்குருவடிவில் இருக்கும் இறைவனை எளிதில் சந்தித்து விடலாம்.

No comments:

Post a Comment