திருநீறு

Sunday, November 14, 2010
திருநீறானது கிருமி நாசினியும் கூட. இதனை உடலில் பூசினால் துர்நீர்
இழுக்கப்படும் என இயற்கை மருத்துவங்களும் கூறுகின்றன.


ஆன்மீகம் சார்ந்த நன்மைகள் விளைவதுடன், உடல் நலம் சார்ந்த நன்மைகளும் உண்டாகிறது என்பது பெரியோர்களின் கருத்து.


இத்தகையை திறன் கொண்ட திருநீற்றின் ஆன்மீகம், உடல்நலம் மற்றும் மனநலம் சார்ந்த
நன்மைகள் வருமாறு :

* ஆணவம், கர்மம், மாயை ஆகியவை நீங்கச் செய்யும்.
* காலம், பொருள், தேசம் ஆகியவற்றை தரவல்லது.
* இறப்பு, நிகழ்வு, எதிர்வு ஆகியவற்றை தடுக்கும் திறன் கொண்டது.
* வாதம், பித்தம், சிலேத்துமம் ஆகியவற்றை சமநிலைப்படுத்த வல்லது.
* மனம், வாக்கு, காயம் ஆகியவற்றை நல்ல முறையில் தூய்மையாக்கும்.
* சஞ்சிதம் மற்றும் ஆகாமியம் போன்ற தத்துவங்களை உணர்த்தும்.
* சந்தேகம், மயக்கம், விபரீதம் ஆகியவற்றைப் போக்கும்.
* காமம், வெகுளி, மயக்கம் ஆகியவற்றை தீர்த்து வைக்கும்.
* ஆன்ம தத்துவம், வித்யா தத்துவம், சிவ தத்துவம் தெளிவாகக்
கொடுக்க வல்லது.

No comments:

Post a Comment