விநாயகர் வழிபாடு

Sunday, November 14, 2010
விநாயகர் வழிபாடு:-
1. மேடம், கடகம், துலாம், மகரம் ஆகிய சரலக்னங்களில் ஒரு லக்னம் உதிக்க சித்திரை, உத்திராடம், ரேவதி நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் வளர்பிறையில் வரும் சனிக்கிழமைகளில் சூரிய உதயத்திற்கு பின்னர் வரும் 1மணி 30 நிமிடத்திற்குள் அண்ணளவாக காலை 6.00 மணி முதல் 7.30 இற்குள் தேங்காய் பலி கொடுத்து (தேங்காய் உடைத்து), அருகம்புல்லினால் வினாயகரை அர்ச்சனை செய்து சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தேனும் பாலும், உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மோதகமும், ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பாசிப்பயறும் நைவேத்தியம் செய்து வெற்றிலை, பழம், பாக்கு வைத்து வழிபடவேண்டும். மேற்கூறிய லக்னங்கள் உதிக்க மற்றய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் வளர்பிறை செவ்வாய், சனிக் கிழமைகளில் தேங்காய் பலி கொடுத்து, செவ்வரலி புட்பத்தினால் வினாயகரை அர்ச்சனை செய்து, பசும்பால், அப்பம், வடை, அவல், பொரிகடலை நைவேத்தியம் செய்து வெற்றிலை, பழம், பாக்கு வைத்து வழிபடவேண்டும். இதனால் எடுத்த காரியங்களில் இடர் நீங்கி காரிய சித்தி உண்டாகும். சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.


2. ரிசபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய ஸ்திர லக்னங்களில் ஒரு லக்னம் உதிக்க எந்த நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும் வளர்பிறை செவ்வாய், சனிக்கிழமைகளில் விடியற்காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் அதாவது காலை 4.00 மணிமுதல் 6.00 மணி வரையான காலத்தில் தேங்காய் பலி கொடுத்து(தேங்காய் உடைத்து), வெள்ளெருக்கு மலர் அல்லது வெள்ளரலி மலர் அல்லது வெண்தாமரை மலரினால் அர்ச்சனை செய்து, பசும் பால், அவல், கொண்டக்கடலை சுண்டல், பாசிப்பயறு நைவேத்தியம் செய்து வெற்றிலை, பழம், பாக்கு வைத்து வழிபடவேண்டும். இதனால் எடுத்த காரியங்களில் இடர் நீங்கி காரிய சித்தி உண்டாகும். சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.


3. மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய உபய லக்னங்களில் ஒரு லக்னம் உதிக்க எந்த நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும் வளர்பிறை செவ்வாய், சனிக்கிழமைகளில் சந்தியா காலத்தில் அதாவது காலை 5.15மணி முதல் 6.45மணி வரையிலான காலத்தில் தேங்காய் பலி கொடுத்து(தேங்காய் உடைத்து), மல்லகைப் பூ அல்லது முல்லைப் பூ அல்லது செந்தாமரை மலரினால் அர்ச்சனை செய்து பசும் பால், பால்ப்பாயாசம், பானகம் நைவேத்தியம் செய்து வெற்றிலை, பழம், பாக்கு வைத்து வழிபடவேண்டும். இதனால் எடுத்த காரியங்களில் இடர் நீங்கி காரிய சித்தி உண்டாகும். சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனிநுடங்காது பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கையான்
பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலம் செய்
துங்கக்கரி முகத்து தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம் பிறை போலும் மெயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே

வினாயகனே வௌ;வினையை வேரறுக்க வல்லான்
வினாயகனே வேற்கை தணிவிப்பான்
வினாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினால் கண்ணில் பணிமின் கனிந்து

அல்லல் போம் வல்வினை போம் அன்னை வயிற்றில் பிறந்த
தொல்லை போம் போகாத் துயரும் போம் நல்ல
குணம் அதிகமாம அருணை கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கை தொழுதற்க்கால்

No comments:

Post a Comment