கந்த சஷ்டி விரதம்

Sunday, November 14, 2010
முருகன் வழிபாடு

ஆறு நாள் சஷ்டி விரதத்தின் போது முருகனைக் கண்ணார, வாயார, மனமார, உயிர் குளிர வழிபட வேண்டும். விரதத்திற்குரிய அந்த ஆறு நாள்களும் கந்த புராணத்தை முழுமையாகப் படிக்கலாம். கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், சண்முக கவசம் முதலான கவச நூல்களைப் பயிலலாம். திருமுருகாற்றுப்படை, திருப்புகழ், கந்தர் கலிவெண்பா முதலிய நூல்களைப் பாராயணம் செய்யலாம்.

ஆறு நாள்களும், ஆறு காலங்களிலும் ஆறுமுகனுக்குப் பூஜைகள் செய்ய வேண்டும். ஆலயம் சென்று முருகப் பெருமானை வழிபட வேண்டும். ஆறாம் நாளில் முருகனது திருத்தலங்களில் நடைபெறும் சூரசம்ஹாரத்தைத் தரிசிக்கலாம்.

விரதப் பயன்கள்

""ஒரு நியாயமான குறிக்கோளை முன் வைத்து மஹா சஷ்டி விரதமிருந்தால் அந்தக் குறிக்கோள் தொண்ணூறு நாள்களில் நிறைவேறும்'' என்பர்.

சஷ்டி விரத வழிபாடு செய்து முருகனிடம் வேண்டினால், கேட்டதைப் பெறலாம்! கேளாமல் மறந்ததையும் பெறலாம்! கேட்ட அளவைவிடக் கூடுதலாகவும் பெறலாம். எனவே சஷ்டி விரதத்தால் பெறக் கூடிய பயன்களுக்கு ஓர் அளவில்லை.

No comments:

Post a Comment